Monday, June 06, 2022

JO & JO ( மலையாளம்) 2022 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி மெலோ டிராமா)

 


கொரோனா  லாக் டவுன் டைம்ல  ஒரு  கிராமத்தில்  ஒரு  குடும்பத்தில்  நடக்கும்  காமெடி  அதகளங்கள்  தான்  கதைக்கரு 


ஒரு  ஃபேமிலி  அம்மா  , அப்பா,  மகன் , மகள் ,  பாட்டி   ஜாலியான  லைஃப். இதுல  அக்காவும், தம்பியும்  அடிக்கடி  எலியும் , பூனையும்  போல  அடிச்சுக்குவாங்க பின்  சேர்ந்துக்குவாங்க 


அக்கா  வீட்லயே  ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ்க்கு  ட்யூஷன்  எடுக்கறா/ தம்பி  வெட்டியா  ஃபிரண்ட்ஸ்  கூட  சேர்ந்து  மீன்  பிடிப்பது , ஊர்  சுற்றுவதுனு  பொழுது  போக்கிட்டு  இருக்கான் 


இப்படி  ஜாலியா  போய்க்கிட்டு  இருக்கும்போது  இவங்க  விட்டு  கேட்ல  இருக்கற   லெட்டர்  பாக்ஸ்ல  ஒரு  லவ்  லெட்டர்  இருக்கு. அது  யார்   யாருக்காக  எழுதுனது  தெரில  அக்கா  பேரும்  ஜோ  தம்பி  பேரும்  ஜோ 


இதனால  அக்காவுக்குத்தான்  அந்த  லெட்டர்  வந்திருக்கும்னு  தம்பி  நினைக்கறான், தன்  நண்பர்கள்  கூட  சேர்ந்து  அக்கா  ஃபோனை     வாட்சப்  மெசேஜை  உளவு  பார்க்கிறான் . இது  அக்காவுக்குத்தெரிஞ்சு  ரெண்டு  பேரும்  சண்டைபோட்டுக்கிறாங்க 


அக்காவோ  தம்பிக்குதான்  அந்த  லெட்டர்  வந்திருக்கும்னு  நினைச்சு  அவ  ட்யூஷன்  எடுக்கற  பொண்ணுங்களுக்கு சிக்னேச்சர்  டெஸ்ட்  வெச்சு  உளவு  பார்க்கிறா, ஆனா  அவளால  கண்டு  பிடிக்க  முடியல , 



 இந்த  லெட்டரால  ஏற்பட்ட  குழப்பங்கள்  ஜாலி  கலாட்டாக்கள்  தான்  படம்  ஜாலியான  கலகலப்;பான  திரைக்கதை 


அடிதடி  , வெட்டு  குத்து  துப்பாக்கி  சண்டைகள்  எதுவும்  இல்லாம  அமைதியான   குடும்பப்படம்  அதுவும்  ஜாலியா  பார்க்க  நல்ல  படம் 


தம்பியா  மேத்யூ  தாமஸ்  அளவான  நடிப்பு   நல்ல  எதிர்காலம்  இருக்கு .அக்காவா  வரும்   நிகிலா  விமல் செமயான  நடிப்பு   தம்பியுடன்  சண்டை  போடும்  குறும்புத்தன்ம்  அருமை  என்றால்  தன்னைப்பற்றி  தவறாகப்பேசியவனிடம்  கண்  கலங்கிப்பேசும்  வசனம்  உருக்கம்


 தம்பியின்  நண்பர்களுடன்    அக்கா  பேசும்  உரையாடலகள்  அவ்ளோ  யதார்த்தம் 


 தம்பியின்  நண்பனான  மனோஜ்  சுந்தரனை  எல்லாரும்  சுந்தரா  என  கூப்பிடும்போது  அக்கா  மட்டும்  மனோஜ்  என  கூப்பிட  ஏன்  எனக்கேட்பவனிடம்  நி  ஏற்கனவே    சுந்தரன்  தான்  தனியா  சுந்தரான்னு  வேற  கூப்பிடனுமா?  மனோஜ்னே  கூப்பிடறேன்  என  சொல்லும்  குறும்பு  க்ளாஸ்  ரகம் 


நண்பர்கள்  மூவரும்  அடிக்கும்  லூட்டிகள்  கல கல 


 க்ளைமாக்ஸில்  யார்  கடிதம்  எழுதியது  என்ற  சஸ்பென்ஸ்  உடைபடும்போது  நடக்கும்  கலாட்டாக்கள்  செம 




படத்தில்  எல்லா  கேரக்டர்களும்  ஆண்ட்ராய்டு  செல்  ஃபோன்  யூஸ்  பண்றாங்க , ஆனா   காதல்  கோட்டை  காலத்து  காதல்  கடிதம்  படத்தின்  மெயின்   பிராப்ளமாக  வருவது  நெருடுது. செல்  ஃபோன்கள்  இல்லாத  கால  கட்டத்தில்  கதை  நடந்தால்  கச்சிதமா  இருந்திருக்கும் , ஆனால்  திரைக்கதையின்  ஓட்டத்தில்  அது  பெரிய  குறையாகத்தெரில 


ஃபைனல்  கமெண்ட் -  ஃபேமிலியோடு  பார்க்க  நல்ல  கலகலப்பான  ஒரு  படம் டைம் பாஸ்க்கு  கேரண்டி  ரேட்டிங்  3 / 5       

0 comments: