Wednesday, June 29, 2022

உன்னைக் கண் தேடுதே ( 2000) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 



ஒரு  கல்யாண  மண்டபம்  அங்கே  ஹீரோ    சமையல்காரரா  வேலைக்கு  அப்போதான்  சேர்கிறார், அவரது  வாட்டசாட்டமான  உருவம்  கேலி  கிண்டல்  பேச்சு  கண்டு  மண்டபத்தில்  இருக்கற  கல்யாணப்பெண்  தவிர  அனைத்துக்கன்னிப்பெண்களும்  ஆண்ட்டிகளும்  அவரை  அடைய  முயற்சி  செய்கின்றனர் 

ஒரே  ஜாலி  கேலி  கலாட்டாவா  இடைவேளை  வரை  படம்  கதையே  இல்லாம  நகருது , இடைவேளை  அப்போதான்  ஒரு  ட்விஸ்ட்   ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  அன்னைக்கு  விடியற்காலை  நடந்த  ஒரு  கொலை  வழக்கு  சம்பந்தமா  கொலையாளி  அந்த  மண்டபத்தில்  இருக்கார்னு  துப்பு  கிடைச்சு  வந்திருக்கார் 


கொலையான  டெட்  பாடி  கைல  ஒரு  தாலி  அந்த  தாலி  யார்துனு  கேட்டுட்டே  வர்றார்  ஹீரோ . எல்லாரும்  எங்களுது  இல்லைனு  சொல்றப்போ  கல்யானப்பொண்ணோட  அண்ணன்    மனைவி  அதாவது  அண்ணி  மட்டும்  அது  தன்னோடதுதான்  அப்டிங்கறார். சும்மா  ஓசில  கிடைக்குதேனு  தங்கத்துக்கு  ஆசைப்பட்டு  அப்படிப்பொய்  சொன்னாரா?  அல்லது  நிஜமாவே  அவர்  தான்  கொலையாளீயா ?  என்பது   க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  சத்யராஜ்.  அசால்ட்  ஆன  நடிப்பு  . லொள்ளு  நடிப்புக்கு  அவருக்கு  சொல்லித்தர  வேண்டுமா?   கச்சிதம்   ஆனா  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் 

 ஹீரோயினா  ரவளி  ஆண்களையே  பார்த்திராதவர்  போல  அலையும்  கேரக்டர் . அப்பா  அப்பா  இவரையே  எனக்குக்கட்டி  வைங்க  என   நச்சரிக்கும்போது  நமக்கு  அழுவதா ? சிரிப்பதா?  என  தெரியவில்லை 


 ஹீரோயினின்  அப்பாவாக  மணிவண்ணன்   இவரும்  நக்கல்  நையாண்டில  ஸ்பெஷலிஸ்ட்  கேப்  கிடைச்ச  இடத்தில்  எல்லாம்  கிடா  வெட்றார் 


  கல்யாணப்பொண்ணோட  அண்ணியா  குஷ்பூ  அண்ணனா  லிவிங்க்ஸடன்  சராசரியான  நடிப்பு 


இசை  தேவா  -  வாடா  வாடா  சீக்கிரம்  வாடா  பாட்டு மட்டும்  செம  ஹிட்டு


திரைகக்தை  இயக்கம்  சுந்தர்  சி  ,  கதை  பி  கலைமணி  இயக்குநருக்கு  இந்த  மாதிரி  கல்யாணக்கூட்டத்தை  வெச்சு  கதை  சொல்வது  அல்வா  சாப்பிடுவது   போல   கச்சிதமா  பண்ணி  இருக்கார்  


  சபாஷ்  டைரக்டர் 


1   இடைவேளை  வரை  கதை  இல்லை  அதனால  சும்மா  காமெடி  பண்ணிட்டு  இருந்தா  போதும்கற  நிலை. ,அதனால  ரொம்ப  சிரமப்படாம  திரைக்கதை  அமைச்சிருக்கார்  சுந்தர்  சி \


2  குஷ்பூ  சத்யராஜைப்பார்த்து  பம்முவது   பயந்து  போய்  ஒளிவது  என  சுவராஸ்யமான  காட்சிகள்  ஓக்கே  ரகம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஒரு  பெண்ணை  வன் கொடுமை  செய்ய  முயலும்  ஒரு  ஆளை  தற்காப்புக்காக  ஆந்தப்பெண்  தாக்குவது  அல்லது  கொலை  செய்வது  தண்டனைக்குரிய  குற்றம்  இல்லை . இந்த  உண்மை  கூட  தெரியாம  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  இருப்பாரா ?  குற்றவாளியை  இவர்  என்னவோ  காப்பாத்தற  மாதிரி  காட்றது   அதுக்காக  வேலையை  ரிசைன்  பண்றது  எல்லாம்  செம  காமெடி 


2 விடிகாலை  அஞ்சரை  மணிக்கு  கல்யாண  முகூர்த்தம்  ஆனா  விடிகாலை  4  மணிக்கு  அதே  கல்யாண  மாப்ள மேரேஜ்  நடக்கும்  அதே  ஊரில்  கல்யாணப்பெண்ணின்  அண்ணி  என  தெரிந்தும்  ரேப்  பண்ண  முயற்சிப்பாரா? 


3  வில்லன்  ஹெல்மெட்  போட்டபடியே  தான்   ஒரு  பெண்ணை  ரேப்  பண்ண  முயற்சிக்கிறார்  அவர்  முகம்  தெரியக்கூடாதாம்  ஆனா  கண்  பார்வை  வாசனை  உதடு  முத்தம்  எதுவும்  இல்லாமல்  ஹெல்மெட்  போட்டு  அபப்டி  எல்லாம்  சிரமப்பட்டு  ரேப்  பண்ணுவாங்களா?


4 கல்யாணப்பெண்ணின்  அண்ணி  கல்யாண  மண்டபத்துக்கு  திருமண  முகூர்த்தத்துக்கு  முந்தின  தினமே  வந்துடுவாரா?  வராம  அன்னைக்கு   ஒரு  மூட்டை  துணியை  துவைச்சு   வீட்டு  மொட்டை   மாடில  காயப்போட்டுட்டு  இருப்பாரா?


5    பெண்ணின்  வீட்டில்  சொந்தக்காரங்க  முன்  தினமே  டேரா  போட்டுடுவாங்க  ஆனா  வீட்டில்  அண்ணி  தவிர  யாருமே  இல்லையே?  கல்யாண  வீட்டில்  இப்படி  ஆள்  நடமாட்டமே  இல்லாமயா  இருக்கும் ? 

சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சுந்தர்  சி  ரசிகர்கள்  சத்யராஜ்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம் ,  மத்த  பொது  ஆடியன்சுக்கு  படம்  பிடிக்காது  , சுமார்  ரகம்  தான்    யூ  ட்யூப்ல  கிடைக்குது   ரேட்டிங்  2 / 5 

ஜன கண மன - JANAGANAMANA 2022 மலையாளம் - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா) / பொலிடிக்கல் த்ரில்லர் @ நெட் ஃபிளிகஸ்



நாம  சின்னப்பையனா   இருந்தப்போ   கேட்ட  புதிர்.  நம்  கண்  முன்  ஒரு  10  செமீ  நீளம்  உள்ள  கோடு  இருக்கு  இதை  ரப்பரால்  அழிக்காமல்  சின்னக்கோடாக  மாற்றனும்.  என்ன வழி?  மண்டையை  உடைச்சுக்கிட்டதில்  பதில்  தெரியல ,ஆனா  பதில்  ரொம்ப    ஈசி .  பக்கத்துலயே  அதை  விட  பெரிய  கோடா  போடனும் . அப்போ  பழைய   கோடு  சின்னக்கோடா  மாறிடும்
இப்போ  இருக்கும்  அரசியல்வாதிகள்  அப்படித்தான்  நாட்டில்  ஏதாவது  பிரச்சனை  ஓடுச்சுன்னா  அதை  டைவர்ட்  பண்ண  வேற  ஒரு  புதுப்பிரச்சனையைக்கிளப்பி  விடுவாங்க    நம்ம  மக்களும்  பழசை  மறந்துடுவாங்க . இதை  பேஸ்  பண்ணி  எழுதபப்ட்ட  ஒரு  பொலிடிக்கல்    த்ரில்லர்   அல்லது  க்ரைம்  த்ரில்லர்  அல்லது  கோர்ட்  ரூம்  டிராமா  எப்படி  வேணாலும்  சொ9ல்லலாம்
ஸ்பாய்;லர்  அலெர்ட்
கேரளாவில்  நடந்த  ஒரு  உண்மை  சம்பவம்  இது  . காலேஜில்  ஒரு  லெக்சரர்  மர்மமான  முறையில்  சாலையில்  இறந்து  கிடக்கிறார்.  அது  சாலை  விபத்தா ?  ஹிட்  அண்ட்  ரன்  கேசா?  என்று  தெரியாது   ஆனா  மீடியாக்கள்  ரேப்  அண்ட்  மர்டர்னு  அடிச்சு  விடறாங்க . பரபரப்புக்காக  ஏதாவது  எழுதுவது  அவங்க  வழக்கம்  தானே?  இதனால  காலேஜில்  ஸ்ட்ரைக்  வருது  போலீஸ்  வந்து  காலேஜில்  கலவரம்  வெடிக்குது
கொலையை  நேரில்  பார்த்த  சாட்சி  கொடுத்த  தகவல்  அடிப்படையில்  இந்தக்கேசை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசர்  நாலு  பேரை   கைது  செய்கிறார் . அவங்க  என்னடான்னா  எகத்தாளம்  பேசறானுங்க . சாதா  கான்ஸ்டபிள்ட்ட  நக்கல்  பண்ணாலே  பொளந்து  கட்டிடுவார்  , ஹையர்  ஆஃபீசர்னா  சும்மாவா? செம  கடுப்பாகி  என்கவுண்ட்டர்ல  4  பேரையும்  போட்டுத்தள்ளறார்
மீடியாக்களும்  பொதுமக்களும்  போலீஸ்  ஆஃபீசரைக்கொண்டாடறாங்க
கோர்ட்ல  கேஸ்  நடக்குது . அப்போதான்  பெரிய  ட்விஸ்ட். இதுவரை  நாம  பார்த்த  கேட்ட  கதையே  வேற  அதுக்குப்பின்   ஹீரோவான  லாயர்    எடுத்து  வைக்கும்  உண்மை  நிலையே  வேற  ஷாக்  அண்ட்  சர்ப்பரைஸ்
காலேஜில்  நடக்கும்  பாலிடிக்ஸ்  ,  பாலியல்  வன்கொடுமை , அதிகார  துஷ்பிரயோகம்  பற்றி  விலாவாரியாக  விளக்குகிறது
போலீஸ்  ஆஃபீசரா சுராஜ்.  என்னா  ஒரு  ஆக்டிங் .  அதிகம்  பேசாத  உணர்ச்சிகளை  முகத்தில்  காட்டாத  இறுக்கமான  நடிப்பு  சபாஷ்   ஆக்டிங் .  மகன்  மீது  பாசம்  காட்டும்  போதும்  சரி  , ட்யூட்டியில்  காட்டும்  விறைப்பும்  சரி  , பின்  பாதியில்  கில்ட்டி  ஃபீலிங்கில்  தவிப்பதும்  சரி  அபாரமான  நடிப்பு
ஹீரோவா , லாயரா  பிரித்விராஜ் .  ஒற்றை  ஆளாக  கோர்ட்  வளாகத்தையே  லீசுக்கு  எடுத்தவர்  போல்  அவர்  கர்ஜிக்கும்போது  மிரட்டலான  நடிப்பு .  கொலை  செய்யப்படும்  பேராசிரியை  ஆக   மம்தா  மோகன்  தாஸ்,  போராட்ட  வீராங்கனையாக  புரட்சி  பேசும்  வசனங்கள் ல  மின்னுகிறார்
ஒளிப்பதிவு  , இசை, எடிட்டிங்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  முதல்  தரம்,
சபாஷ்  டைரக்டர்
1   ஓப்பனிங்கில்  வரும்  காலேஜ்  ஸ்ட்ரைக்  கொஞ்சம்  ஓவர்  டோசோ  என  எண்ண  வைத்து   பின்  பாதியில்  அதற்கு  நியாயம்  கற்பிக்கும்  திரைக்கதையில்  சபாஷ்  வாங்குகிறார்
2    சுராஜ்  , பிருத்விராஜ்  இருவரின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  அபாரம் ,  டிரைவிங்  லைசென்ஸ்  படத்தில்  பிரமாதமாக  ஒர்க்  அவுட்  ஆன  ஜோடியை  மீண்டும்  இனைத்தது  அதை ஓவர்  டேக்  பண்ணியது  எல்லாம்  அருமை
3   எடிட்டரின்  உதவியோடு  இயக்குநர்  செய்த  நான்  லீனியர்  கட்  திரைக்கதையின்  சுவராஸ்யத்தை  அதிகப்படுத்துது
4   ஆளும்  கட்சி  அரசியல்  விவகாரத்தை  எந்த  விதமான     மேல்  பூச்சுகளும்  இல்லாமல்  போல்டாக  காட்டிய  விதம்
5  முக்கியமான  கதாபாத்திரங்களின்  நடிப்பு ,  கோர்ட்    சீன்கள்   அடிபொலி
ரசித்த  வசனங்கள்
1    சில  முக்கியமான  சந்தர்ப்பங்கள் , அரிதிலும்  அரிதான  வாய்ப்புகள்  ரெண்டு  தடவை  கதவைத்தட்டாது
2   காக்கி  டிரசை  மானத்தை  மறைக்க  உடுத்தலை  சட்டத்தைக்காப்பாற்ற
3   உண்மையை  சொல்லும்  மீடியா , மீடியா  சொல்றதுதான்  உண்மை   இந்த  ரெண்டுக்கும்  வித்தியாசம்  இருக்கு
4  அரசியல்வாதிகளின்  ஆயுதம்  எது  தெரியுமா?  சாமான்ய  மக்களின்  உணர்ச்சிகள்
5  ஒரு  நாயைக்கொன்னாக்கூட  கேள்வி கேட்க  நாலு  பேரு  வருவாங்க , ஆனா  மனுசங்க  நாலு  பேரைக்கொலை செஞ்சா  கேள்வி  கேட்க  ஒரு  நாயும்  வர்றதில்லை
6  கேலரில  உக்காந்து  கமெண்ட்  அடிக்கறது  ஈசி  , களத்துல   இறங்கி  போராடுவதுதான்  கஷ்டம்
லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் \\
1   க்ளைமாக்ஸில்  ஏகப்பட்ட  ட்விஸ்ட்கள் . அதை  எல்லாம்  ஒரேயடியாக  கடைசி  20  நிமிடத்தில்  தருவது  ஓவர்  ஃப்ளோவா  பட்டுது
2   ஒரு  ஹையர்  ஆஃபீசர்  சாதா  கான்ஸ்டபிள்  ஒட்டுக்கேட்பது  போல  அவளோ  அசால்ட்டாகவா  மேலிட  ஃபோன்  உரையாடலை  வெச்சுக்குவார் ?
3   என்கவுண்ட்டர்ல  சுடறவங்களை  முதுகில்  பின்னந்தலைல  தான்  சுடுவாங்க  , நெஞ்சில்  சுடுவாங்களா?
4  கோர்ட்டில்  பிரித்விராஜ்  கொஞ்சம்  ஓவர்  டோசாக  ஆர்க்யூ  பண்ணுவது  மாதிரி  தான்  தோணுது . ஜட்ஜ்  முன்  அப்படி  எல்லாம்  குரலை  உயர்த்திப்பேச  முடியாது . யதார்த்த  சினிமா  எடுக்கும்  கேரளா  இண்டஸ்ட்ரிலயா  இப்படி ?  ரஜினி , சிரஞ்சீவி  படங்களில்னா  யாரும்  கண்டுக்க  மாட்டாங்க
5     ஆளும்  கட்சி  தலைவரின்  அரசியல்  செல்வாக்கை  நிலை  நிறுத்த  ஒரு  என்கவுண்ட்டர்  எப்படி  பயன்படும் ? பொலீஸ்  இலாகா  முதல்வர்  கைல தானே  இருக்கு ? அவங்க  மேல  ஒரு  தப்புன்னா  அது  முதல்வருக்கு  கெட்ட  பேருதானே ?
சிபி எஸ்  ஃபைனல்  கமெண்ட் = ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  போர்  அடிக்காமல்  பர  பரப்பான  ஒரு  த்ரில்லர்  படம்  பார்க்க  விரும்புபவர்கள்  பார்க்கலாம்,  நெட்  ஃபிளிக்சில்  கிடைக்குது   ரேட்டிங்  3.25 / 5 .இந்தப்படம்  தமிழில்  ரீமேக்காகி  இதே  மாதிரி  எடுத்தால்  விக்டன்  மார்க்  50

Tuesday, June 28, 2022

தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (1983) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)


 ஹீரோ புகழ் பெற்ற  மூளை  மற்றும்  நரம்பியல்  மருத்துவர். இந்தியா  பூரா  பேசப்படும் ஆபரேஷனை  வெற்றிகரமா  நிகழ்த்தியவர் . இவருக்கு எல்லாமே  பர்ஃபெக்டா  இருக்கனும், ஒரு  சின்ன  தூசி  ஒட்டி  இருந்தாக்கூட  அந்த  டிரசைப்போட  மாட்டார் . இவருக்கு  ஒரு  சம்சாரம் , இவங்க  ரொம்ப  கூச்ச  சுபாவம்  , தனிமையில்  தம்பதிகள்  இருக்கும்போது கணவன்  எதிரே  கூட  புடவை  மாற்ற  மாட்டார்.. இவங்களுக்கு  ஒரு  பெண்  குழந்தை.  ரொம்ப  அழகா  இவங்க  ஃபேமிலி  ரன்  ஆகிட்டு  இருக்கு 


 வில்லன் ஒரு  மாடர்ன்  ஆர்ட்  ஓவியர் . இவர்  கலைக்கண்ணோடவோ வேற  ஏதோ  கண்ணோடவோ  பெண்களோட நிர்வாண  ஓவியம்  வரைவது  இவரோட  சம்சாரத்துக்குப்பிடிக்கலை , கருத்து  வேற்றுமையால  டைவர்ஸ்  வாங்கிட்டுப்போய்ட்டாங்க . ஜீவனாம்சம்  கொடுத்து  செட்டில்  பண்ணிட்டார் .


 ஓரு  ஓவியக்கண்காட்சில  வில்லனை  ஹீரோ  மீட்  பண்றார். இவங்க  ரெண்டு  பேரும்  பால்யகால  நண்பர்கள்.  ஹீரோ  சின்ன  வயசுல  படிக்கும்போது  வில்லன்  தான்  உதவி  பண்ணி  இருக்கார் .. அந்த  நன்றிக்கடன்  ஹீரோவுக்கு  உண்டு .  கண் காட்சில  வில்லன்  வரைந்த  ஓவியங்களை   ஹீரோவும்  , குழந்தையும்  ஆஹா  ஓஹோ  அபாரம்  பரிமளா    ரேஞ்சுக்குப்பாராட்றாங்க . ஆனா  ஹீரோயின்  அய்யோ அபச்சாரம்  நாராசம்  ரேஞ்சுக்கு  கரிச்சுக்கொட்றாங்க 


 வில்லனுக்கு  உடல்  நிலை  சரி  இல்லாம  போகுது. தன்   நன்றிக்கடனை  இப்படியாவது  செலுத்தலாம்னு  ஹீரோ  வில்லனை  தன்  வீட்டுக்குக்கூட்டிட்டு  வந்து  தங்க  வைக்கிறார்

 இதுக்குப்பின்  நடக்கும்  விபரீதங்களும்  அதுக்குப்பின்  நடக்கும்  சம்பவங்களும்  தான்  மிச்ச  மீதிக்கதை 


ஹீரோவா  சிவக்குமார். இவர்  டாக்டரா  ஆபரேஷன்  பண்ணும்  காட்சிகளை  விட  வீட்டில் மனைவியுடன்  செய்யும்  குறும்பில்  நல்ல  ஈடுபாட்டுடன்  நடித்திரு்க்கிறார். பிற்பகுதியில்    சீரியஸ்  நடிப்பிலும்  முத்திரை  பதிக்கிறார்


 ஹீரோயினா  லட்சுமி .  கணவன்  முன்பே  கூச்சப்படுவது  ட்ரீட்மெண்ட்  தரும்போது  வில்லன்  கையைத்தொடவே  அருவெறுப்புக்காட்டுவது  என  கலக்கல்  நடிப்பு 


  குழந்தையா   நடிச்சவர்  அப்பாவித்தனமான  நடிப்பு   வில்லனாக  சிவச்சந்திரன்.  நறுவிசான   நடிப்பு . 


 மகள்  பெரியவள்  ஆனதும்  ரோகினி  பங்களிப்பு  பாந்தம் 


 கதைக்கு  சம்பந்தம்  இல்லாம  ஒரு  காமெடி  டிராக்  அதுல  ஒய்  ஜி  மகேந்திரன்  வெண்ணீற  ஆடை  மூர்த்தி    நொக்கை  ஜோக்ஸ்


 இசை  சங்கர்  கணேஷ்  பாடல்கள்  ஓக்கே  ரகம் 


 ஒளிப்பதிவு  எடிட்டிங்  ஓக்கே . பின்  பாதி  திரைக்கதை  தடுமாறுது 


சபாஷ்  டைரக்டர்   ( எம்  பாஸ்கர் )


1    ஹீரோ  , ஹீரோயின் , வில்லன்  மூவரின்  கேரக்டர்  ஸ்கெட்ச்சும்  பக்காவா  வடிவமைக்கப்பட்டு  எக்சிக்யூட்  பண்ணப்பட்டிருக்கு .ஓப்பனிங்கிலேயே  வசனங்கள்  மூலம்  இவரிவர்  இன்னின்ன  கேரக்டர் என  விளக்கியது  அருமை 


2  ஹீரோ  ஹீரோயின்  இருவருக்குமிடையேயான  தம்பதி  ஊடல்கள்  செம  கிளுகிளுப்பு , இருவருக்கும்  கெமிஸ்ட்ரி  பயாலஜி  ஒத்துப்போனது  சிறப்பு 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   புகழ்  பெற்ர  டாக்டர்  நண்பனை  ஹாஸ்பிடலிலேயே  தனி  நர்ஸ்   வெச்சு  நண்பனைக்கவனிக்கலாம், அல்லது  ஒரு  நர்சை  அப்பாயிண்ட்  பண்ணி  வீட்டில்  நர்சை  வரச்சொல்லி  கவனிக்கலாம்,


2   வில்லன்  வீட்டில்  மயங்கி  விழறான்  . கையைத்தொடவே  கூச்சப்படும்  நாயகி  வில்லனை  அரவணைத்து  கட்டிலில்  ஏன்  கிடத்தனும்  அவன்  என்ன  சாக்கடைலயா  விழுந்துட்டான். தரைல  தானே?  தண்ணீர்  மட்டும்  தெளிச்சா  வேலை  முடிஞ்சது . அந்தக்காட்சி  நம்பகத்தன்மை  இல்லை 


3  ஹீரோயின்  பாத்ரூமில்  குளீக்கும்போது  ஈரக்கையில் பிளக்  போடுவது  ஷாக்  அடிப்பது  அப்போ  வில்லன்  ஓடிவந்து  காப்பாற்றுவது  தப்பு  நடப்பது  செம  காமெடி  ,. கணவன்  வீட்டில்  இல்லாதப்ப  பாத்ரூமில் தாழ்  போடாமல்  தான்  மனைவி  குளிப்பாளா? 


4    பின்  பாதியில்  விழி  ஒளி  இழந்த  நாயகிக்கு  மூக்கு  நல்லாதானே  இருக்கு? அருகில்  இருப்பது  புருசன் தான்  என்பது  வாசனைலயே  தெரியாதா? 


5 நண்பனின்  மனைவியைக்கெடுத்து  விட்டு  வில்லன்  தற்கொலை  செய்துகொள்ளும்  காட்சி  மனதில்  ஒட்டவே  இல்லை 


6   பின்  பாதியில்  ஹீரோ  பரதேசி  மாதிரி  ஆவது  ஊர்  மக்கள்  அவரை  பாபா  பாபா  என  அழைப்பது  படு  செயற்கை 


7  டாக்டராக  இருக்கும்  ஹீரோ  தன்  மனைவியை  மன்னிக்கத்தயார்  இல்லாதது  ஆச்சரியம்,


8  க்ளைமாக்சில்  நாயகி  கடலில்  சாகறேன்னு  கடல்  ஆழத்துக்கு  செல்லாமல்  கரையோரமாகவே  நடப்பது  செம  காமெடி . அம்மாவைக்காப்பாற்ற  மகள்  ஓடி  வரும்போது  மாப்பிள்ளை  ஏன்  அவ்ளோ  பின்  தங்குகிறார்?   டிராமா  பார்ப்பது  போல  இருக்கு 



ரசித்த  வசனங்கள் 


இடிவிழுந்த வீட்டுக்கு யாருமே குடிபோக மாட்டாங்க


2  இது மாடு மேஞ்ச துளசி இனி மாடத்துல வைக்க முடியாது


3  இது அப்பா மீனு, இது அம்மா மீனு, இது நானு மீனு ( குட்டி  மீன்) 


4  பால் பாயசம் செம . ‘இந்த ருசியை மாத்திரம் என்னால் வரைய முடிஞ்சிருந்தா நான் வரைந்த ஓவியங்கள்லேயே இதுதான் நம்பர் ஒன்னா இருக்கும்


5  ஊருக்கே  பூ  விற்றாலும்  தன்  கூந்தலில்  ஒரு  முழம்  பூ  கூட  வைக்காதவதான்  இந்த  ஏழைப்பூக்காரி 


சி பி  ஃபைனல்  கமெண்ட்  - பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும்  வகையிலான  திரைக்கதை  யூ  ட்யூப்ல  ஜீ ஃபைவ்ல  ஜியோ  சினிமாஸ்ல  கிடைக்குது  ரேட்டிங்  2.5 / 5 

டிசம்பர் பூக்கள் (1986) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் த்ரில்லர் )


ஆண்: அழகாக சிரித்தது அந்த நிலவு
பெண்: அதுதான் இதுவோ
ஆண்: அனலாக கொதித்தது இந்த மனது
பெண்: இதுதான் வயதோ
ஆண்: மழைக்காலத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: நிழல் மேகங்கள்
பெண்: லல லல லலா
ஆண்: மலையோரத்தில்
பெண்: லல லல லலா
ஆண்: சிறு தூறல்கள்
பெண்: லல லல லலா
ஆண்: இளவேனிற்காலம் ஆரம்பம்

பெண்: லல லல லல லல 

இந்தப்பாட்டைக்கேட்டதும்  ரொம்பவே  மனம்  கவரப்பட்டு  கூகுள்  சர்ச்ல  என்ன  படம்?னு  தேடிப்பார்த்தேன்.ரொமாண்டிக்  டிராமாவா  எடுத்துட்டு  கடைசில  சம்பந்தமே  இல்லாம  க்ரைம்  த்ரில்லரா  மாத்தி  இருக்காங்க 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

  ஹீரோ  ஒரு  ஓவியர் .தத்ரூபமா  வரைபவர் . ஹீரோயின்  ஒரு  மீடியா ரிப்போர்ட்டர். அவங்க  மேகசின்ல  வர்ற  ஒரு  பேட்டிக்காக  ஹீரோ  கிட்ட  டைம்  கேட்டு  பழகறார், பேசறார்.  லவ்  ப்ரப்போஸ்  பண்றார்


 கட்  பண்ணா  ஹீரோ க்கு  ஒரு  ஃபிளாஸ்பேக் ஒரு  பொண்ணு  ரொம்ப  ஏழ்மையான  குடும்பத்துல  இருக்கு. அம்மாவுக்கு  உடம்பு  சரி  இல்லை . மாடலிங்கா  போஸ்  கொடுத்தா  தேவையான  பணம்  கிடைக்கும்னு  மாடலிங்க்கு  வருது . ஹீரோதான்  அந்தப்பெண்ணை  வரையறார். ஆனாலும்  அம்மாவைக்காப்பாத்த  முடியல 


அந்தப்பொண்ணுக்கு    ஒரு  குற்ற  உணர்ச்சி , அம்மாவையும்  காப்பாத்த  முடியல , நிர்வாணமா  போஸ்  வேற  கொடுத்துட்டோம். இனி  நம்ம  வாழ்க்கை  என்ன  ஆகறது ?னு.. இந்தக்குணம்  பிடிச்சோ  அல்லது  அழகுல  மயங்கியோ  ஹீரோ  அந்தப்பொண்ணுக்கு  ப்ரப்போஸ்  பண்றார்,  ஓக்கே  சொல்லிடுது  ரெண்டு  பேருக்கும்  மேரேஜ்  ஆகுது 


லைஃப்  நல்லாப்போய்க்கிட்டு  இருக்கு . ஒரு  கார்  விபத்துல  அந்தப்பொண்ணு  இறந்துடுது. அதனால  ஹீரோ  சோகமா  ஆகிடறார்


இதுதான்  ஹீரோவோட  ரெண்டு  லவ்  ஸ்டோரிஸ்


 இப்போ  ஊர்ல  வரிசையா  கொலைகள்  நடக்குது. கொலை  செய்யப்படும்  நபர்கள்  எல்லாம் பெண்கள் . அவங்களுக்குள்ளே  எந்த  தொடர்பும்  இல்லை . இந்த  சீரியல்  கில்லர்  யார்?னு  போலீஸ்  ஒரு  பக்கம்  தேடுது


நாயகன்  ஓவியர்  என்பதால்  சாட்சிகள்  அடையாளம்  சொன்னபடி  கொலைகாரன்  உருவத்தை  வரைஞ்சு  தர்றார். இது;ல  ட்விஸ்ட்  என்னான்னான்  கொலைகாரனின்  லேட்டஸ்ட்  டார்கெட்  ஹீரோவின்  தற்போதைய  காதலி 


 ஹீரோவும்  , போலீசும்  காதலியைக்காப்பாத்துனாங்களா?  சீரியல்  கில்லரை உயிரோட பிடிச்சாங்களா? என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  மோகன் . அந்தக்காலத்துல  மோகன்  பாடகரா  நடிச்சா  படம்  வெள்ளி  விழா  என்ற  ஒரு  செண்ட்டிமெண்ட்டை   மதர்லேண்ட்  பிக்சர்சின்  கோவைத்தம்பி  உருவாக்கி  வெச்சிருந்தார் ( உதய கீதம் ,  நான்  பாடும்  பாடல் , உன்னை  நான்  சந்தித்தேன்). தைரியமா  ஓவியரா  நடிச்சதுக்கு  ஒரு  ஷொட்டு . இவரது  டிரஸ்சிங்  சென்ஸ்  அபாரமா  இருக்கும் . தெற்றுப்பல்;  சிரிப்[பு  இவரது  ஸ்பெஷல்


 ஹீரோயினா  ரேவதி. இவரது  துடுக்குத்தனம் ,  காதல்  வயப்படுதல்  எல்லாம்  ஒக்கே  ஆனா  ஹேர்  ஸ்டைல்  இதுல  நல்லாலை 


இன்னொரு  ஹீரோயினா  மனைவியா  நளினி  இவருக்கு  நடிக்க  அதிக  வாய்ப்பு . இவரு  யார்  படத்தின்  மூலம்  பயம்  காட்டுவதில்  ஸ்பெஷலிஸ்ட்டா  ஆனார் . இதில்  நடிக்க நல்ல  ஸ்கோப்  உள்ள  கேரக்டர் .  போலீஸ்  ஆஃபீசரா  நிழல்கள்  ரவி   ஓக்கே ரகம் 


 இசை  இளையராஜா

 , பாடல்களூம்  ஹிட்  பிஜிஎம்மும்  குட் .   மொத்தப்பாடல்கள்  5  அதில்  3  பாடல்கள்  செம  ஹிட் 


சபாஷ்  டைரக்டர்  ( எம்  ஆர்  பூபதி ) 


1    ஹீரோவின்  இரண்டு  காதல்  கதைகளையும்  ரசமாக  படம்  ஆக்கியது ,  சூப்பர்  ஹிட்  பாடல்களை  தந்தது ( தர  வைத்தது )


2  கவுண்டமணி யின்  செம  ஹிட்  காமெடி  டிராக்  ஆன  “   அடிச்சேன்னா  உயிர்  மேலே  போய்டும் ,  டெட்  பாடி  கீழே  விழுந்திடும்”  அமைத்த  விதம் 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ரத்த  தானம்  கொடுப்பது  அவரவர்  விருப்பம் . அதை  யாரும்  கட்டாயப்படுத்த  முடியாது.. ஆபத்தான  டைமில்  பிளட்  டொனேஷன்  பண்ணலை  என  கொலைகாரன்  டார்கெட்  வைத்து  கொல்வது  ஓவர் 


2  பொதுவா  பொண்டாட்டின்னா  புருசன்  குடிப்பதை  அனுமதிக்க  மாட்டா , ஆனா  இதில்  சம்சாரமே  குடிங்க  கொஞ்சமா  குடிங்க  என  பார்ட்டியில்  அனுமதிப்பது  நெருடுது 


3   ஒய்  விஜயா  வீட்டு  வேலைக்காரி  தன்  கள்ளக்காதலன்    உடன்  ஜாலியாக  இருக்கும்போது  அங்கே  வரும்  விஜயா  அவளை  வெளீயே  அனுப்பி  விட்டு  கள்ளக்காதலனுக்கு   பணம்  கொடுத்து  ஆஃபர்  கொடுப்பது  கரும்பு  தின்னகூலி  எதுக்கு ? என  கேட்க  வைக்குது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஜாலியான  ரொமாண்டிக்  ஃபிலிம்  பார்ப்பவர்கள்  இதைப்பார்க்கலாம், யூ  ட்யூப்ல  கிடைக்குது. செம  ஹிட்  சாங்க்ஸ்  வேற . ரேட்டிங்  2.25 / 5 




























  

























Monday, June 27, 2022

பவுர்ணமி அலைகள் 1985 - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா)

 ஸ்பாய்லர்  அலெர்ட் 



ஹீரோ , ஹீரோயின் , ஹீரோயினோட அப்பா  மூவரும்  வக்கீல்.நல்ல  வேளை  மாமியார்  ஜட்ஜ் இல்லை . இதுல  ஹீரோ  வீட்டோட  மாப்ளையா  இருக்கார். ஹீரோயின்  ரொம்ப  வசதி . வாழ்க்கைல  முன்னேறனும், பிரபல  வக்கீலா  ஆகனுகறதுதான்  ஹீரோவோட  ஆசை , லட்சியம்  எல்லாம், ஆனா  ஹீரோயின்  அவரை  ஒரு  எடுபுடியா் அதாவது  பாய் பெஸ்டியா  புருசனை  நடத்துது . ஒரு  முக்கியமான  கேசை  எடுத்து  நடத்தி  ஃபேமஸ்  ஆகனும்னு  ஹீரோ  துடிக்கிறார்


வில்லன்  ஊர்ல  ஒரு  பிரபல  தொழில்  அதிபர்  , அவரை  ஒரு  பொண்ணு  ஒரு  வீழாவில்    பொதுமக்கள்  முன்னிலையில் துப்பாக்கியால்  சுட்டு  கொலை  பண்ணி  போலீசில்  ச்ரண்டர்  ஆகுது. ஸ்கோப்பே  இல்லாத  இந்த  கேசை  எடுத்து  வாதாட  ஹீரோ  ரெடி  ஆகறார்


இது  ஹீரோயினுக்கு  பிடிக்கல . இதனால  ஹீரோ வீட்டை  விட்டு  வெளில  போய்டறார்.இப்போ ஹீரோ  வெட்டி  ஹீரோயின்  வாழா வெட்டி 

இந்த  கேசை  எடுத்து  நடத்தி  ஜெயிச்சாரா? மீண்டும்  ஹீரோயின்  கூட  இணைஞ்சாரா? அல்லது அந்த  கொலைக்குற்ற்வாளி  கூட  இணைஞ்சாரா? என்பதே க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  சிவக்குமார். இவருக்குன்னே  தைச்ச  ரெடி மேடு சட்டை  மாதிரி  ரோல், அசால்ட்டா  பண்ணி  இருக்கார் தன்மானத்துக்கு  பங்கம்  வரும்போது  பொங்கும்போதும் சரி , இன்னொரு  பெண்ணுடன்  அன்பு  காட்டும்போதும் சரி  அருமையான  நடிப்பு , ஆனா  கோர்ட்  காட்சிகளீல்  கலக்கி  இருக்கனும். ஓக்கே  ரகம்  தான் 


 ஹீரோயினா   அம்பிகா . கணவனை  மட்டம்  தட்டும்  நடிப்பு  பிரமாதம் . பிற்பகுதியில்   கணவனே  கண் கண்ட  தெய்வம்  ரேஞ்சுக்கு  இறங்கி  வருவது   சரியா  ஒட்டலை . கணவன்  இன்னொரு  பெண்ணுடன்  அன்பு  செய்கிறான்  எனும்போது  பொறாமை  கொள்வது  செம  நடிப்பு 


 கொலைக்குற்றவாளீயாக  ரேவதி   சோக  நடிப்பில்  ஜொலிக்கிறார். காதல்  கொள்ளும்போது  மிளிர்கிறார்


  ரேவதியின்  கணவராக  நிழல்கள்  ரவி  ஜஸ்ட்  லைக்  தட்  வந்துட்டுப்போறார்


ஹீரோவின்  மாமனாராக  மேஜர்  சுந்தர்ராஜன்  செமயான  நடிப்பு . வில்லனாக  சிவச்சந்திரன்  .  மிரட்டலான  நடிப்பு 


 இசை    சங்கர்  கணேஷ். 3  பாட்டு  தேறுது   திரைக்கதை  வசனம்  இயக்கம்  தயாரிப்பு  எல்லாமே  எம்  பாஸ்கர்  குட்  கோர்ட்  சீன்களில்  இன்னும்  நல்லா  வசனம்  எழுதி  இருக்கலாம், 


  கதையுடன்  ஒட்டாமல்  வியாபாரத்துக்காக  கவுண்டமணி  செந்தில்  காமெடி  டிராக் 


சபாஷ்  டைரக்டர் 


1 ஹீரோ  ஹீரோயின்  கேரக்டர்  ஸ்கெட்ச்  பக்காவா  செட்  பண்ணி  இருப்பார்  அதுக்கு  ஒரு  சபாஷ் . பட  ஓப்பனிங்ல்யே  ஆடியன்சை  கதைக்குள்  இழுத்து  விடுவார் 


2  ரேவதிக்கான  ஃபிளாஷ் பேக்  காட்சிகளை  ப்ளேஸ்  பண்ணிய  விதம்   அருமை 


3  தேவை  இல்லாத  காட்சிகள்  இல்லாமல்   திரைக்கதையை  கோர்ட்  ரூம்  டிராமாவாக  அமைத்தது. க்ளைமாக்சில்  ஹீரோ  ஹீரோயின்  சேர்வார்களா?  மாட்டார்களா?  என  டெம்போ ஏற்றியது 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   ஹீரோ  வெட்டி  ஆஃபீஸ். கோவிச்சுட்டு வீட்டை  விட்டு  வெளில  போறார். பூவாவுக்கே  வழி  இல்லை , தங்கறதே  சர்ச்ல தான்  தங்கறார், ஆனா  ஃபீசே  தராத  தர  வழி  இல்லாத  அவரது  கட்சிக்காரர்  ரேவதிக்கு  புடவை  அது  இதுனு  வாங்கித்தர்றார்  ஏது  காசு ? அவருக்கு  நண்பர்களும்  இல்லை 


2  ரேவதிக்கு சேலை  வாங்கித்தர்றது  ஓக்கே  பிரா  பேண்ட்டீஸ்  எல்லாம்  வாங்கறார்  சைஸ்  எப்படி  தெரியும் ? அவர்  கூட  நெருக்கமான  பழக்கமும்  இல்லை , அவரது  கணவர்  அனுப்பியதாக  பொய்  சொல்லித்தான்  அதெல்லாம்  தர்றார்.  இது  எப்படி  சாத்தியம் ? 


3   நிழல்கள்  ரவி  -  ரேவதி  தம்பதிக்கு  மேரேஜ்  ஆகி  4  வருடங்கள்  வரை  அவங்களுக்குள்  தாம்பத்யமே  நடக்கலை . அப்போ  எல்லாம்  அது  பற்றிக்கவலைப்படாதவர்  கோர்ட்ல  கேஸ்  நடக்கும்போது மட்டும்  ரேவதி  மீது  குறை  சொல்றார்


4  ரேவதியின்  14  வருட  லட்சியமே  வில்லனைக்கொலை  செய்வதுதான். ஆனா  எப்படி  ஒருவரை  மேரேஜ்  பண்ண  ஒத்துக்கறார் ?   எப்படியும்  தூக்கில்  தொங்கப்போறோம்னு  தெரியும்தானே? 

5  ரேவதிக்குக்கணவர் மீது  பெரிய  அட்டாச்மெண்ட்  இல்லை , இருவருக்கும்  நெருங்கிய  உறவு  இல்லை  ஆனா  கோர்ட்ல  டைவர்ஸ்  நியூஸ்  கேட்டதும்  மயங்கி  விழறார். அவரை  வக்கீல்  ஹீரோ  தூக்கிட்டுப்போறார்.  லேடி  கான்ஸ்டபிள்  இருக்காங்களே? 


6   வில்லன்  ரேப்    பண்ணப்போறப்ப  கார்  டிரைவரை  பக்கத்துலயே  வெச்சு  இருப்பது  எதுக்கு ?  க்ளைமாக்சில்  சாட்சி  சொல்லவா? 


7  வில்லன்  ரேப்  செஞ்ச  பெண்ணைக்கொலை  செய்வது  ஓக்கே  நேரில்  கொலையைப்பார்த்த  சாட்சியை  உயிரோடு  விட்டு  வருவது  ஏன் ?


8 ரேவதிக்கும்  , சிவக்குமாருக்கும்  நெருக்கம்  ஏற்படும்  காட்சிகள்  நம்பகத்தன்மை  இல்லை 


9   அம்பிகா  மன்னிப்புக்கேட்ட  பின்னும்  சிவக்குமார்  பிகு  பண்ணுவது  ஓவர். அதைத்தொடர்ந்து  வரும்  வசனங்கள்  மேல்சாவனிசம் 


10     அம்பிகா  வீட்டில்  வேலை  செய்யும்  பணீப்பெண்  அம்பிகா  தரும்  சுமங்க்லி  பூஜை  சேலை  பரிசை  வாங்க  மறுத்து  விட்டு  அவர்  ஒரு  வாழாவெட்டி  அவர்  கையால  புடவை  வாங்க  மாட்டேன்  என்பதெல்லாம்  ஓவரோ  ஓவர்  சம்பளம்  மட்டும்  எப்படி  வாங்குவார் ?


11  ரேவதி  ப்ப்ளிக்  விழாவில்  கொலை  செய்வதை  அத்தனை  பேரு  பார்க்கறாங்க , ஆனா  யாரும்  கண்டுக்கலை. அவரா ஸ்டேஷன் ல  போய்  சரண்டர்  ஆகறார்.  விஐபி  விழாவுக்கு  வந்த  போலீஸ்  எல்லாம்  வேடிக்கை  பார்க்குமா? 


 சிபி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  சுவராஸ்யமான  கோர்ட்  ரூம்  டிராமா . ரெண்டு  மணி  நேரபப்டம் தான்  ஜீ  ஃபைவில், அமேசான்  பிரைமில், யூ  ட்யூப் ல  கிடைக்குது  பார்க்கறவங்க  பார்க்கலாம்  ரேட்டிங் 2.5  / 5   இது  ஒரு  வெள்ளி  விழா  ஹிட்  படம் 









































































Saturday, June 25, 2022

தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1982)- சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )


ஹீரோ சட்டம்  படிச்ச  வக்கீல் . ஒரு  கம்பெனில லீகல்  அட்வைசரா  ஒர்க்  பண்றாரு. அவருக்கு  ஒரு  சம்சாரம், ஒரு  குழந்தை . ஹீரோ  வேலை  விஷயமா  ஆஃபீஸ்ல  ஒர்க்  பண்ணிட்டு  வீட்டுக்கு  லேட்டா  வ்ந்தா மனைவிக்கு  சந்தேகம். கணவருக்கு  வேறு  பெண்கள்  கூட  தொடர்பு  இருக்கோ?னு  , அடிக்கடி  இதனால  குடும்பத்துல  சண்டை  வருது . இதனால்  ஹீரோ  ஒரு  மனநல  மருத்துவரிடம்  மனைவியை  சிகிச்சைக்கு  அனுப்ப  முடிவு  பண்றாரு 


வில்லன்  ஒரு  எலக்ட்ரானிக்ஸ் கடை  வெச்சிருக்கான் ,. அவன்  கடைக்கு  அடிக்கடி  ஹீரோயின்  போனதுண்டு  டேப்  ரிக்கார்டர்  மாதிரி  பொருட்கள்  வாங்கி  இருக்கா . வில்லனுக்கும்  மேரேஜ்  ஆகி  ஒரு  குழந்தை  இருக்கு . வில்லன்  லேடிஸ்  விஷயத்துல  அப்டி  இப்டி இருக்கற  ஆள்  தான் , இது  அவன்  மனைவிக்கும்  தெரியும் 


ஒரு  நாள்  ஹீரோ  நைட்  லேட்டா  வீட்டுக்கு வரும்போது  பெட்ரூமில்  ஆடை  விலகிய  நிலையில்  நெற்றிப்பொட்டு அழிந்த  நிலையில்  தூக்கக்கலக்க்கத்தில்  மனைவி  இருக்க   வில்லன்  அங்கே  கழுத்தில் ரத்தக்காய்த்துடன்  இறந்து  கிடக்கிறான். ஹீரோ  டெட் பாடியை  அப்புறப்படுத்தி  விடுகிறான்


இப்போ  போலீஸ்க்கு  ரெண்டு  சந்தேகம் ., கொலையான  வில்லன்  அவனால்  பாதிக்கப்பட்ட  பெண்கள்  அல்லது  பெண்ணின்  கணவரால்  கொலை  செய்யப்பட்டு  இருக்கலாம்  அல்லது  வில்லனின்  மனைவியே  கொன்று  இருக்கலாம்


இதுக்குப்பின்  இந்தக்கேஸ்  என்ன  ஆச்சு ? என்பதே  கதை 


 ஹீரோவா  சிவக்குமார் .  மனைவி  மீது  பாச்மும்  இருக்கு  சந்தேகமும்  இருக்கு  சராசரிக்கணவனாக  நல்ல  நடிப்பு  போலீசைப்பார்த்து  பம்மும்போது  நல்ல  நடிப்பு 


 ஹீரோயினாக  அம்பிகா . இவரது   ஹேர்  ஸ்டைல்  அந்தக்காலத்தில்  மிகவும்  சிலாகிக்கப்பட்டது. மனநோய்  மிக்க  மனைவியாக  சரியான  நடிப்பு 


வில்லனாக  சத்யராஜ் அதிக  வாய்ப்பில்லை . வில்லியாக  ஐ  மீன்  வில்லனின்  மனைவியாக  சத்யகலா  தேர்ந்த  நடிப்பு    ஹீரோவை  பணம்  கேட்டு  பிளாக்மெயில்  பண்ணுவதெல்லாம்  சரியான  வில்லித்தனம் . கணவர்  இழந்த  சோகநடிப்பை  விட  ஹீரோவை  மிரட்டும்  வில்லி  நடிப்பில்  ஸ்கோர்  பண்றார்


பேபி  மீனா  நல்ல  நடிப்பு . 


வெண்ணிற  ஆடை  மூர்த்தி , ஒய்  ஜி  மகேந்திரன் ,  வனிதா  காமெடி  டிராக்  படத்தின்  கதையோடு  ஒட்டாமல்  தனியா  தெரியுது . அந்த  டிராக்  30  நிமிடம் .  மீதி  மெயின்  கதை  ஒன்றரை  மணி  நேரம்   ஆக  மொத்தம்  2  மணி  நேரப்படம் 


இசை  சங்கர்  கணேஷ் . பாடல்கள்  பெரிய  அளவில்  ஹிட்  இல்லை . இது  மாதிரி  திரில்ல்ர்  படங்களில்  பாட்டை  விட  பிஜிஎம்  முக்கியம். அது  ஓக்கே  ரகம் 



சபாஷ்  டைரக்டர்


1  எடுத்துக்கொண்ட  கதையை  குழப்பாமல்  நேர்த்தியாக  சொன்ன  விதம்  குட் . ஹீரோ  ஹீரோயின்  வில்லன்,  வில்லி  இவர்கள்  கேரக்ட்ர்  ஸ்கெட்ச்  பக்காவா  இருக்கு .கதை  இவ்ர்களைச்சுற்றியே  நடக்குது. அதனால  திரைக்கத்கைல  குழப்பம்  இல்லை 


2   இருக்க்ற  4  கேரக்டரில்  ஒரு  ஆள்  கொலை  செய்யப்படுவதால்  மீதி  இருக்கும்  மூவரில்  ஒருவர்  தான்  கொலையாளி  என்பதில்  டவுட்  இல்லை  என்றாலும்  கொலைக்கான  காரணம்  கொலை  நடந்த  விதம்  அங்கெ  டெட்  பாடி  எப்படி  வந்தது ? என்ற  சஸ்பென்ஸ்  மிகச்சரியாக  காப்பாற்றப்பட்டிருக்கு 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   ஹீரோயின்  பகலில்  2 மணிக்கு  தூக்க  மாத்திரை  சாப்ட்டுட்டு  நைட்  7  வரை  தூங்கிட்டதா  சொல்றாங்க .ஆனா  ஸ்கூலுக்குப்போன  குழந்தை 4  அல்லது  5  மணிக்கு  வந்துடும்  அதை  யார்  பார்த்துக்குவாங்க ? வேலையாள்  வீட்டில்  பெரியவங்க  யாரும்  இல்லை . குழந்தை  இருக்குனு  தெரிஞ்சும்  ஹீரோயின்  ஏன்  ஸ்லீப்பிங்  டேப்லெட்  எடுக்கனும்? 


2    அன்னைக்கு நைட்  ஹீரோ  வந்து  ஹீரோயின்  கிட்டெ  நீ  ரொம்ப  களைப்பா  இருப்பே, போய்  தூங்கு  அப்டிங்கறார். மதியம்  2  டூ 7  வரை  ஆல்ரெடி  5  மணி  நேரம்  தான்  தூங்கிடுச்சே? மறுபடி  என்ன  களைப்பு ? 


3  அறிமுகம்  இல்லாத  ஆள்  வீட்டில்  ஹாலில்  உட்கார  வைத்து  விட்டு  யாராவது  ஒரு  லேடி  பெட்ரூம்  கதவைத்தாழ்போடாம  பெப்பெரப்பேனு  தூங்குவாங்களா? 


4  டெட் பாடியை  ஹீரோ  அப்புறப்படுத்தும்போது  காரின் டிக்கியிலோ  பின்  சீட்டிலோ  டெட்பாடியை  வைக்காமல்   முன்  சீட்டிலேயே  வெச்சுக்கிட்டு  தெனாவெட்டா  போறார் . வ்ழில போலிஸ்  பார்க்காதா?


5 ஹீரோ  ப்ங்களாவில்  வசிக்கிறார். கார்  வெச்சிருக்கார் , ஆனா  மனைவியின்  சிகிச்சைக்கு  மாமனாரிடம்  ப்ணம்  கேட்கிறார்.  வில்லி  பிளாக் மெயில்  பண்ணும்போது  மாமனாரிடம்  ஒரு  டைம்  10.000  ரூபா  அடுத்த  டைம்  15,000  ரூபா  கேட்கிறார்  அவர்  கிட்டே  சேவிங்க்சே  இருக்காதா? 


6   வில்லன்  ஹீரோயினை  ரேப்  பண்ன  முடிவெடுத்தால்  வீட்டுக்கதவை  பெட்ரூம்  கதவை  தாழ்  போட்டுக்க  மாட்டாரா? 


7  ஹீரோ , வில்லி  இருவர்  மீதும்  போலீஸ்க்கு  டவுட்  வந்துடுச்சு  என்பது  இருவருக்கும்  தெரியுது , அவங்க  ஃபோன்  ஒட்டுக்கேட்கப்படும்னு  அவங்களுக்குத்தெரியாதா?


 ரசித்த வசனங்கள்


1  செத்துப் போனவனுக்கு ஜாதகம் பாக்குறதும் கெட்டுப் போன என் கணவனைப் பத்திப் பேசுறதும் ஒண்ணுதான்.


2  நாய்  எப்போக்கடிக்கும் ? நோய் எப்போப்பிடிக்கும்?னு யாராலும்  சொல்ல  முடியாது


3  என்  கணவர்  கடனைத்தவிர  வேற  எதையும் எனக்காக  வெச்சுட்டுப்போகலை 

மாங்கல்யம் பறிபோயிடுச்சு தாங்கிக்கிட்டேன் ஆனா என் மானம் பறிபோனா என்னால தாங்கிக்கவே முடியாது.


5   சந்தேகம்கறது  புற்று  நோய்  மாதிரி..அது  தொற்றிக்கிட்டா  உயிரை  எடுக்கற  வரைக்கும்  கூடவே  இருக்கும் 


6  இந்த  கத்தி   ரொம்பக்கூர்மையா  இருக்கே? இதை  ஏன்  வீட்ல  வெச்சிருக்கீங்க? 


கொலைப்பொருளா இல்ல கலைப் பொருளா வச்சிருக்கேன்.”

7    உங்க  பொண்ணு  ரொம்ப  வெட்கப்படுதே?

அவளுக்கு  இதுதான்  முதல்  கல்யாண,ம், போகப்போக  சரி  ஆகிடும் 

8 ஒரு  பொண்ணு  தன்  புருசனோட  எச்சில்  பட்ட பானத்தை  குடிக்கும்போதும்  என்றாவது  எக்குத்தப்பா  அவன்  கிட்டே  மாட்டிக்கிட்டு  இன்ப  வேதனைல மூழ்கும்போதும்  அவ  அடையற  சந்தோச்த்துக்கு  அளவே  இல்லை 


9   வீட்டுச்சாப்பாடு  .. உங்களுக்குப்பிடிக்குதோ  இல்லையோ?

10  என் குணம் துளசி மாதிரி மத்தவங்களுக்கு மருந்தா இருப்பேனே ஒழிய விருந்தா இருக்க மாட்டேன்”


11 குறுக்குவிசாரணை பண்ணுங்க குருட்டு விசாரணை பண்ணாதீங்க”


சி பிஎஸ்   ஃபைன்ல்  கமெண்ட் - ஆஸ்கார்  மூவிஸ்  தயாரிப்பில்  எம்  பாஸ்கர்  இயக்கத்தில்   உருவான  நல்ல சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படம்   யூ  ட்யூப்பில்  அமேசான்  பிரைமில்  கிடைக்குது . பார்க்கலாம், இது  ரிலீஸ்  டைமில்  வெள்ளி விழா  கொண்டாடிய  படம்  ரேட்டிங்  2.75  /5   . இது  ஏதோ  ஃபாரீன்  படத்தை  பட்டி  டிங்கரிங்  செய்தது  போல  இருக்கு






















7  













Friday, June 24, 2022

மாமனிதன் 2022 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி வெரி வெரி ஸ்லோ மெலோ டிராமா)

வெற்றி  பெற்ற   மனிதர்களின்  வாழ்க்கையைத்தெரிந்து  கொள்வது  எவ்வளவு  அவசியமோ  அதைவிட  மிக  மிக  அத்யாவசியம்  தோல்வி  அடைந்த  மனிதனின்    வாழ்க்கை  வரலாறு.   நீர்ப்பறவை தொடங்கி  தொடர்ந்து  தன்  படங்களில்  தோல்வி  அடைந்த மனதனின்  வாழ்வைப்பதிவு  செய்யும்  சீனு ராமசாமியின்  பட்ம்  இது. 2019ல்  எடுத்த  படம்  இப்போதான்  ரிலீஸ்  ஆகி  இருக்கு 


ஹீரோ  ஒரு  ஆட்டோ  டிரைவர். தன்  ஆட்டோவில்  பயணம்  செய்த  பயணி  விட்டுச்சென்ற  நகைகளை  நாணயமாக  ஒப்படைக்கிறார்பயணியின்  மகளுடைய  திருமணத்துக்காக  சேர்த்து  வைத்த  நகை  அது . நகை  மிஸ்  ஆனதால்  திருமணம்  நிற்கிறது. சில  பல  நிகழ்வுக்குப்பின்  ஹீரோ  அந்தப்பெண்ணையே  மணம்  முடிக்கிறார்


மண  வாழ்க்கையில்  ஒரு  மகன்  ஒரு  மகள் . கார்ப்பரேஷன்  ஸ்கூல்ல  படிக்கும்  அவங்களை  கான்வெண்ட்  ஸ்கூல்ல  படிக்க  வைக்க  ஆசைப்படும்  ஹீரோ  ரியல்  எஸ்டேட்  பிஸ்னெஸ்ல  புரோக்கரா  இறங்கறார். பார்ட்டி  ஹீரோவை  ஏமாற்ற  10  லட்சம்   ரூபாய்க்கு  இவர்  பதில்  சொல்ல  நேரிட  இவர்  ஊரை  விட்டு  குடும்பத்தை  விட்டு  கேரளா  போறார்


கேரளா  போன  அவர்  அந்த  சீட்டிங்  பார்ட்டியை  கண்டுபிடித்தாரா?தன்  குடும்பத்தைக்காப்பாற்றினாரா? இல்லையா? என்பது  மிச்ச  மீதிக்க்தை 


ஹீரோவா  த  நெக்ஸ்ட்  டோர்  பாய்  விஜய  சேதுபதி. மாஸ்டர் , விக்ரம்  மாதிரி  படங்களில்  வில்லனாகப்பார்த்த  இவரை  கிராமத்து  ஹீரோவாகப்பார்க்க  பாந்தமாய்  இருக்கு .  மனைவியிடம்   கொஞ்சும்  காட்சிகள்  , குழந்தைகளிடம்  கதை  சொல்லும்  காட்சிகளில்   ஸ்கோர்  பண்றார்  எனில்  க்ளைமாக்ஸ்  காட்சியிலும்  இன்னொரு  சோக  காட்சியிலும்  நெஞ்சை  உருக  வைக்கிறார்


ஹீரோயினா  நடுவுல  கொஞ்சம்  பக்கத்தைக்காணோம்  காயத்ரி . இவர்  முகம்  சோனியா  அகர்வால்  முகம்  மாதிரி  மென்சோக  முகம் . காதல்  காட்சிகளில்  அடக்கி  வாசித்திருக்கிறார். அப்பவாவது  கொஞ்ச  சிரிச்சிருக்கலாம் 


ஹீரோவின்  நண்பராக  குரு  சோமசுந்தரம்  அருமையான  நடிப்பு 


ஒளிப்பதிவு  சுமார்  தான்  இசை  இளையராஜா  + யுவன்  சங்கர்  ராஜா. அப்படி  ஒன்றும்  பிரமாதப்படுத்திவிட வில்லை , மகனின்  சொந்தப்படம்  புகுந்து  விளையாடி  இருக்க  வேண்டாமா?  2 பாட்டு  மட்டும்  ஓக்கே  ரகம், பிஜிஎம்  கூட  மீடியம்  குவாலிட்டிதான்


பின்  பாதி  திரைக்கதை  தடுமாறுது  ஆறு  மெழுகுவர்த்திகள் , ஃபைவ்  ஸ்டார்  போன்ற  படங்களில்  வருவது  போல  ஒரு  கேரக்டரை  தேடும்  படலம்  கொஞ்சம்  போர் தான் .  45  வயசுக்கு  மேற்பட்டவர்களுக்குப்பிடிக்கும்



சபாஷ்  டைரக்டர் 


1   வாழ்வியலை  வெளிச்சம்  போட்டுக்காட்டும்  அருமையான  வசனங்கள்  படத்தின்  பலம்   என்றால்  வெட்டு  குத்து  ரத்தம்  இல்லாமல்  ஒரு  கிராமத்துக்கதையைப்பார்ப்பதும்  இதம்  தான்


2 கேரளாவில்  டீக்கடை  சேச்சியின்  மகளை  தன்  மகளாக  ஹீரோ  பார்க்க  சேச்சி  அவரை  முதலில்  தப்பாக  நினைத்துப்பின்  மாறுவது  டச்சிங்  சீன்


3   ஹீரோவின்  ஃபேமிலியை  ஹீரோவின்  நண்பர்தான்  காப்பாற்றுகிறார்  என்ற  விரக்தியில்  ஹீரோயின்  இருக்க  க்ளைமாக்ஸில்  அந்த  ட்விஸ்ட்டுக்குப்பின்  ஹீரோயின் மனம்  பதறுவது  கிளாசிக்


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஹீரோ  படிக்காதவர்  சரி  ஆனா  டிரைவிங்  லைசென்ஸ், சொந்த  ஆட்டோ  வெச்சிருக்கறவர்  எதுக்கு  கேரளா  போய்  பாத்ரூம்  கழுவற  வேலைக்குப்போகனும் ? சும்மா  அனுதாபம்  தேடிக்கவா?  டிரைவரா  போலாமே? 


2  வில்லன்  கடைசி வரை  ஹீரோவை  ஏன்  ஏமாற்றினார்? அந்தப்பணத்தை  என்ன  செஞ்சார் ?  என்பதற்குப்பதில்  இல்லை 


3  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  ஒரு  நபர்  வந்து  உங்க  பையன்  10  லட்ச  ரூபாய்  ஏமாற்றிட்டார்  என்றதும்  உடனே  பதறி  வில்லனின்  அம்மா  தன்  கைவசம்  உள்ள  நகைகளைக்கழட்டித்தருவது  நம்பகத்தன்மை  இல்லை 


4  பல  காட்சிகளில்  நாடகத்தன்மை  அல்லது  டிவி  சீரியல்  தன்மை  தெரியுது . ஒரு  கேரக்டர்  வசனம்  பேசி  முடிச்சதும்  சரி  நீ  பேசு  என்பது  போல  அடுத்த  கேரக்டரைப்பார்க்க  அந்த  கேரக்டர்  கொஞ்சம்  தயங்கி  வசனம்  பேச  ஆரம்பிக்குது . இது  ஏன் ? 


5  காசி  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  இழுவையோ  இழுவை  ஹீரோ  அகோரியா  மாறலை  நல்ல  வேளை  அவர்  கஞ்சா  அடிப்பது  ஒரு   சோகப்பாட்டுப்பாடுவது  எல்லாம்  ஓவர் 


 ரசித்த  வசனங்கள் 


1  மனசு  சரி  இல்லைன்னா  ஓடனும் , மனசு  ஃபிரெஷ்  ஆகிடும் 


2   ஸ்கூல்ல  பெல்  அடிச்சதும்  ஸ்டூடண்ட்ஸ்  எல்லாம்  விட்டாப்போதும்னு  வீட்டுக்கு ஓடறாங்களே  அது  கூட  இதன்படிதானா?


3   ஏம்ப்பா ,அவர் வாப்பா-னு  கூப்பிடறார் , நிங்களும்  வாப்பா-னு  கூப்பிடறீங்க  ஆனா  அவரை  விட்டுப்பிரிஞ்சு  போறிங்களே?  


 அய்யோ  அது  வேற  வாப்பா  இது  வேற  வாப்பா 


4  அயிரை  மீன்களை  பால்  குண்டாவில்  போட்டு  வெச்சா  அது  பாலைக்குடிச்ட்டு  தன் வயித்தை  க்ளீன்  பண்ணி  வெச்சிடும். அம்மா அதை  க்ளீன் பண்ணி  சமைப்பா 


5   வீட்ல  ஆள்  இல்லைன்னா  குருவி  கூடு  கட்டிடும்


 அப்படியாவது  ஒரு  குடும்பம்  நல்லாருக்கட்டுமே?


6   தொழில்  தர்மம்னு  ஒண்ணு  இருக்கு , இன்னொருத்தருக்கு  வர்ற  வருமானத்தை  நீ  தடுத்தா  உனக்கு  வர  வேண்டிய  வருமானம்  நின்னு  போகும்

7   நீங்க  அந்தப்பொண்ணை  விரும்பறீங்க, ஆனா  அந்தப்பொண்ணுக்கு  மாப்ளை  பார்க்கும்  படலத்தில்  இருக்கீங்க  புரியலையே?


 நாம  விரும்பற  பொண்ணுக்கு  நல்ல  வாழ்க்கை  கிடைக்கனும்னுதான்


8   நாட்டுல  பலருக்கும்  மேரேஜ்  ஆகலைன்னா  அதுக்குக்காரணம்  யாரும்  மேரேஜ்  பண்ணி  வைக்க  முன்  வராததுதான் 


9   தெரிஞ்ச  வேலையை  விட்டவனும்  கெட்டான் , தெரியாத  வேலையை  தொட்டவனும்  கெட்டான் 


10   மிஸ் , பள  பளனு  இருக்கீங்களே? பஞ்சாமிர்தமா  சாப்பிட்டீங்க 


 இல்லை  பால்கோவா


11   தேவையே  இல்லாம  யாரையும்  பாராட்டக்கூடாது 


12   இந்த  உலகத்துல  பெரிய  பெரிய   வியாபாரங்கள்  , தொழில்கள்  எல்லாம்  இப்படி  சியர்ஸ்  சொல்லிதான்  ஆரம்பிக்குது 


13  எல்லாருக்கும்  எல்லா  உண்ண்மைகளும்  தெரிய  வேண்டிய  அவசியம்  இல்லை 


14   அப்பா  தோத்த  ஊருல  புள்ளைங்க  ஜெயிக்கிறது  சாதாரண  விஷய்ம்  இல்லை 



 சி பி எஸ்  ஃபைன்ல்  கமெண்ட் -  இளைஞர்களுக்கு  இந்தப்படம்  பிடிப்பது  சிரமம்  தான்  பெண்களுக்கும் ,  45+  வயசுக்காரங்களுக்கும்  பிடிக்கும்  


மாமனிதன் − தோல்வி அடைந்தவனின் வாழ்க்கையை சொல்லும் சீனு ராமசாமியின் பேமிலி மெலோ டிராமா,முன் பாதி கலகல பின் பாதி இழுவை,விஜய்சேதுபதி,காயத்ரி நடிப்பு பட்டாசு,வசனம் குட் ,விகடன் 41 ரேட்டிங் 2.5 ./5 .