வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையைத்தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதைவிட மிக மிக அத்யாவசியம் தோல்வி அடைந்த மனிதனின் வாழ்க்கை வரலாறு. நீர்ப்பறவை தொடங்கி தொடர்ந்து தன் படங்களில் தோல்வி அடைந்த மனதனின் வாழ்வைப்பதிவு செய்யும் சீனு ராமசாமியின் பட்ம் இது. 2019ல் எடுத்த படம் இப்போதான் ரிலீஸ் ஆகி இருக்கு
ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர். தன் ஆட்டோவில் பயணம் செய்த பயணி விட்டுச்சென்ற நகைகளை நாணயமாக ஒப்படைக்கிறார்பயணியின் மகளுடைய திருமணத்துக்காக சேர்த்து வைத்த நகை அது . நகை மிஸ் ஆனதால் திருமணம் நிற்கிறது. சில பல நிகழ்வுக்குப்பின் ஹீரோ அந்தப்பெண்ணையே மணம் முடிக்கிறார்
மண வாழ்க்கையில் ஒரு மகன் ஒரு மகள் . கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்கும் அவங்களை கான்வெண்ட் ஸ்கூல்ல படிக்க வைக்க ஆசைப்படும் ஹீரோ ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்ல புரோக்கரா இறங்கறார். பார்ட்டி ஹீரோவை ஏமாற்ற 10 லட்சம் ரூபாய்க்கு இவர் பதில் சொல்ல நேரிட இவர் ஊரை விட்டு குடும்பத்தை விட்டு கேரளா போறார்
கேரளா போன அவர் அந்த சீட்டிங் பார்ட்டியை கண்டுபிடித்தாரா?தன் குடும்பத்தைக்காப்பாற்றினாரா? இல்லையா? என்பது மிச்ச மீதிக்க்தை
ஹீரோவா த நெக்ஸ்ட் டோர் பாய் விஜய சேதுபதி. மாஸ்டர் , விக்ரம் மாதிரி படங்களில் வில்லனாகப்பார்த்த இவரை கிராமத்து ஹீரோவாகப்பார்க்க பாந்தமாய் இருக்கு . மனைவியிடம் கொஞ்சும் காட்சிகள் , குழந்தைகளிடம் கதை சொல்லும் காட்சிகளில் ஸ்கோர் பண்றார் எனில் க்ளைமாக்ஸ் காட்சியிலும் இன்னொரு சோக காட்சியிலும் நெஞ்சை உருக வைக்கிறார்
ஹீரோயினா நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம் காயத்ரி . இவர் முகம் சோனியா அகர்வால் முகம் மாதிரி மென்சோக முகம் . காதல் காட்சிகளில் அடக்கி வாசித்திருக்கிறார். அப்பவாவது கொஞ்ச சிரிச்சிருக்கலாம்
ஹீரோவின் நண்பராக குரு சோமசுந்தரம் அருமையான நடிப்பு
ஒளிப்பதிவு சுமார் தான் இசை இளையராஜா + யுவன் சங்கர் ராஜா. அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்திவிட வில்லை , மகனின் சொந்தப்படம் புகுந்து விளையாடி இருக்க வேண்டாமா? 2 பாட்டு மட்டும் ஓக்கே ரகம், பிஜிஎம் கூட மீடியம் குவாலிட்டிதான்
பின் பாதி திரைக்கதை தடுமாறுது ஆறு மெழுகுவர்த்திகள் , ஃபைவ் ஸ்டார் போன்ற படங்களில் வருவது போல ஒரு கேரக்டரை தேடும் படலம் கொஞ்சம் போர் தான் . 45 வயசுக்கு மேற்பட்டவர்களுக்குப்பிடிக்கும்
சபாஷ் டைரக்டர்
1 வாழ்வியலை வெளிச்சம் போட்டுக்காட்டும் அருமையான வசனங்கள் படத்தின் பலம் என்றால் வெட்டு குத்து ரத்தம் இல்லாமல் ஒரு கிராமத்துக்கதையைப்பார்ப்பதும் இதம் தான்
2 கேரளாவில் டீக்கடை சேச்சியின் மகளை தன் மகளாக ஹீரோ பார்க்க சேச்சி அவரை முதலில் தப்பாக நினைத்துப்பின் மாறுவது டச்சிங் சீன்
3 ஹீரோவின் ஃபேமிலியை ஹீரோவின் நண்பர்தான் காப்பாற்றுகிறார் என்ற விரக்தியில் ஹீரோயின் இருக்க க்ளைமாக்ஸில் அந்த ட்விஸ்ட்டுக்குப்பின் ஹீரோயின் மனம் பதறுவது கிளாசிக்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹீரோ படிக்காதவர் சரி ஆனா டிரைவிங் லைசென்ஸ், சொந்த ஆட்டோ வெச்சிருக்கறவர் எதுக்கு கேரளா போய் பாத்ரூம் கழுவற வேலைக்குப்போகனும் ? சும்மா அனுதாபம் தேடிக்கவா? டிரைவரா போலாமே?
2 வில்லன் கடைசி வரை ஹீரோவை ஏன் ஏமாற்றினார்? அந்தப்பணத்தை என்ன செஞ்சார் ? என்பதற்குப்பதில் இல்லை
3 முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு நபர் வந்து உங்க பையன் 10 லட்ச ரூபாய் ஏமாற்றிட்டார் என்றதும் உடனே பதறி வில்லனின் அம்மா தன் கைவசம் உள்ள நகைகளைக்கழட்டித்தருவது நம்பகத்தன்மை இல்லை
4 பல காட்சிகளில் நாடகத்தன்மை அல்லது டிவி சீரியல் தன்மை தெரியுது . ஒரு கேரக்டர் வசனம் பேசி முடிச்சதும் சரி நீ பேசு என்பது போல அடுத்த கேரக்டரைப்பார்க்க அந்த கேரக்டர் கொஞ்சம் தயங்கி வசனம் பேச ஆரம்பிக்குது . இது ஏன் ?
5 காசி சம்பந்தப்பட்ட காட்சிகள் இழுவையோ இழுவை ஹீரோ அகோரியா மாறலை நல்ல வேளை அவர் கஞ்சா அடிப்பது ஒரு சோகப்பாட்டுப்பாடுவது எல்லாம் ஓவர்
ரசித்த வசனங்கள்
1 மனசு சரி இல்லைன்னா ஓடனும் , மனசு ஃபிரெஷ் ஆகிடும்
2 ஸ்கூல்ல பெல் அடிச்சதும் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் விட்டாப்போதும்னு வீட்டுக்கு ஓடறாங்களே அது கூட இதன்படிதானா?
3 ஏம்ப்பா ,அவர் வாப்பா-னு கூப்பிடறார் , நிங்களும் வாப்பா-னு கூப்பிடறீங்க ஆனா அவரை விட்டுப்பிரிஞ்சு போறிங்களே?
அய்யோ அது வேற வாப்பா இது வேற வாப்பா
4 அயிரை மீன்களை பால் குண்டாவில் போட்டு வெச்சா அது பாலைக்குடிச்ட்டு தன் வயித்தை க்ளீன் பண்ணி வெச்சிடும். அம்மா அதை க்ளீன் பண்ணி சமைப்பா
5 வீட்ல ஆள் இல்லைன்னா குருவி கூடு கட்டிடும்
அப்படியாவது ஒரு குடும்பம் நல்லாருக்கட்டுமே?
6 தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்கு , இன்னொருத்தருக்கு வர்ற வருமானத்தை நீ தடுத்தா உனக்கு வர வேண்டிய வருமானம் நின்னு போகும்
7 நீங்க அந்தப்பொண்ணை விரும்பறீங்க, ஆனா அந்தப்பொண்ணுக்கு மாப்ளை பார்க்கும் படலத்தில் இருக்கீங்க புரியலையே?
நாம விரும்பற பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கனும்னுதான்
8 நாட்டுல பலருக்கும் மேரேஜ் ஆகலைன்னா அதுக்குக்காரணம் யாரும் மேரேஜ் பண்ணி வைக்க முன் வராததுதான்
9 தெரிஞ்ச வேலையை விட்டவனும் கெட்டான் , தெரியாத வேலையை தொட்டவனும் கெட்டான்
10 மிஸ் , பள பளனு இருக்கீங்களே? பஞ்சாமிர்தமா சாப்பிட்டீங்க
இல்லை பால்கோவா
11 தேவையே இல்லாம யாரையும் பாராட்டக்கூடாது
12 இந்த உலகத்துல பெரிய பெரிய வியாபாரங்கள் , தொழில்கள் எல்லாம் இப்படி சியர்ஸ் சொல்லிதான் ஆரம்பிக்குது
13 எல்லாருக்கும் எல்லா உண்ண்மைகளும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை
14 அப்பா தோத்த ஊருல புள்ளைங்க ஜெயிக்கிறது சாதாரண விஷய்ம் இல்லை
சி பி எஸ் ஃபைன்ல் கமெண்ட் - இளைஞர்களுக்கு இந்தப்படம் பிடிப்பது சிரமம் தான் பெண்களுக்கும் , 45+ வயசுக்காரங்களுக்கும் பிடிக்கும்
மாமனிதன் − தோல்வி அடைந்தவனின் வாழ்க்கையை சொல்லும் சீனு ராமசாமியின் பேமிலி மெலோ டிராமா,முன் பாதி கலகல பின் பாதி இழுவை,விஜய்சேதுபதி,காயத்ரி நடிப்பு பட்டாசு,வசனம் குட் ,விகடன் 41 ரேட்டிங் 2.5 ./5 .
0 comments:
Post a Comment