வெப் சீரிஸ் அதிகம் பார்க்கறதில்லை.ஆட்டோசங்கர் தான் தமிழில் வந்த ஓரளவு நல்ல வெப் சீரிஸ்னு எல்லாரும் சொன்னாங்கனு லேட்டாதான் பார்த்தேன். 30 மொழிகளில் எடுக்கப்பட்ட படம் , விக்ரம் வேதா இயக்குநர் படம்னு பிரமோசன் எல்லாம் வேற லெவல்ல இருந்ததால் இதைப்பார்த்தேன்.
மொத்தம் 8 எபிசோட்ஸ் தலா 40 அல்லது 45 நிமிடங்கள் . கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் . முதல் 4 எபிசோட்ஸ் ஒரு டைரக்டரும் அடுத்த 4 எபிசோட்ஸ் வேற டைரக்டரும் பண்ணி இருக்காங்க . இதுல முதல் எப்பிசோட்ல எல்லா கேரக்டர்களும் கதையும் அறிமுகம் ஆகுது , 2 வது 3 வது எபிசோட்ஸ் கொஞ்சம் இழுவை 4 வது எபிசோட் க்ரைம் சப்ஜெக்ட்க்கு சம்பந்தமே இல்லாம ரொமாண்டிக் மெலோ டிராமா . 5 வது எபிசோட் ல இருந்து 8 வரை நல்ல வேகம் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யூகிக்க முடியாதது , திருப்தி
Spoiler alert
ஒரு கிராமம் அங்கே ஒரு சிமெண்ட் ஃபேக்டரி . சில காரணங்களால் லாஸ் ல ஓடிட்டு இருக்கு . லேபர்ஸ் ஸ்ட்ரைக் பண்றாங்க அவங்க கேட்ட சம்பளம் தர்லைன்னா ( ஊதிய உயர்வு ) அன்னைக்கு நைட்டே ஃபேக்டரியை தீ வெச்சு கொளுத்திடுவேன்னு யூனியன் லீடர் ஒரு கோபத்துல சொல்றார். அவருக்கு கரி நாக்கு போல நிஜமவே அன்னைக்கு நைட் தீ விபத்து ஏற்பட்டு ஃபேக்டரி எரியுது . போலீஸ் யூனியன் லீடரை அரெஸ்ட் பண்றாங்க
\
தீ விபத்து நடந்த அதே நேரத்தில் யூனியன் லீடரின் 2 வது மகள் ( வயசு 15) காணாம போறா . இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும்னு போலீஸ் நினைக்குது. இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் ஆகுது .
யூனியன் லீடரோட பொண்ணு காணாம போனதுல சந்தேகத்துக்கு உரிய நபர்கள்
1 ஸ்கூல்ல அந்தப்பொண்ணு பின்னாடியே சுத்திட்டு அடிக்கடி அவளை டார்ச்சர் பண்ணுன ஒரு பொறுக்கிப்பையன் ,. இவன் போலீஸ் ஆஃபீசரோட மகன்
2 அதே ஸ்கூல்ல படிக்கும் இன்னொரு மாணவன் அவனும் லவ் பிரப்போஸ்
பண்ண நினைச்சவன், ஆனா சாஃப்ட்டான பையன்
3 அந்த ஊர்ல நடக்கும் கோவில் திருவிழால நர பலி கொடுக்கும் பூசாரி
4 பள்ளி மாணவிகளிடம் தொட்டுத்தொட்டுப்பேசும் அந்த ஊர் ஃபேகடரி ஓனர் மகன்
5 காணாமப்போன பொண்ணு ட்யூஷன் படிகக்ற ட்யூஷன் வாத்தியார்
மேலே சொன்ன 5 நபர்கள் மேல அடுத்தடுத்து சந்தேகமும் விசாரணையும் தெளிவும் வருது . இந்த 5 பேர்ல ஒருவர் தான் குற்றவாளியா? வேற யாரோவா? என்பதை அமேசான் ல காண்க
ஹீரோவா போலீஸ் இன்ஸ்பெக்டரா கதிர் , கச்சிதமான நடிப்பு .சபரிமலைக்கு மாலை போட்ட மாதிரி ஏன் படம் பூரா அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி லைட் தாடியோட வர்றார் தெரில .
அவரோட ஹையர் ஆஃபிசரா திமிரு நாயகி ஸ்ரேயா ஷெட்டி கம்பீரமான நடிப்பு . சில இடங்களில் செண்ட்டிமெண்ட் அழுகை எல்லாம் ஓக்கே \
யூனியன் லீடரா இரா பார்த்திபன் . பொதுவா இவர் படங்களில் இவரது கேரக்டர் நக்கல் நையாண்டி கேலி கிண்டல் பேசற மாதிரி தான் இருக்கும் . ஹவுச்ஃபுல் சுகமான சுமைகள் வரிசையில் இதில் அடக்கி வாசிக்கும் பாத்திரம் , நீட்டா பண்ணி இருக்கார்
பார்த்திபனின் முதல் மகளா ஐஸ்வர்யா ராஜேஷ் . படம் நெடுக வரும் கேரக்டர் . இவரும் கனகச்சிதமான நடிப்புதான்
சபாஷ் டைரக்டர்
1 ஊர்த்திருவிழாவை நேரில் பார்ப்பது போல 10 நாட்கள் வைபவத்தை ஆங்காங்கே அதகளப்படுத்தியது அபாரம் அந்தக்காட்சிகளில் பிஜிஎம் பக்கா
2 பொறுக்கி மாதிரி தெரியும் பையனைப்பற்றிய ஒரு ட்விஸ்ட் நல்லா செட் ஆகி இருந்தது . விருமாண்டி பட பாணியில் ரோஸ்மான் எஃபக்டில் சொல்லபப்ட்ட கதை ரசிக்கும்படி இருந்தது
3 கதைக்கரு ஒரு மாதிரியா இருந்தாலும் திரைக்கதை எந்த வித விரசமும் இல்லாமல் குடும்பத்துடன் காணத்தக்க வகையில் கண்ணியமாக எடுக்கப்பட்டது சிறப்பு
4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டோடு கடைசியில் சொல்லப்பட்ட மெசேஜூம் குட்
ரசித்த வசனங்கள்
1 போராட்டமும் புரட்சியும் என்னைக்குதான் முடிஞ்சிருக்கு ?
2 எப்பவும் ஒரு பிரச்சனை முடிஞ்சாதான் இன்னொரு பிரச்சனை உருவாகும்
3 ஊர்ல 4 பேர் மதிக்கனும்னா ஒண்ணு பணம் இருக்கனும், இல்ல , பெரிய பதவில இருக்கனும்
4 ஃபையர் ஆக்சிடெண்ட்ல என்ன பிரச்சனைன்னா தீயோட சேர்ந்து தடயமும் எரிஞ்சிடும்
5 மரியாதைங்கறது கேட்டு வாங்கிக்கறதில்லை
6 யார் பொய் சொன்னாலும் அதுல கொஞ்சமாவது உண்மையும் கலந்திருக்கும்
7 நாம சின்சியரா ஒரு பொருள் மேல ஆசைப்பட்டா இந்த உலகமே அந்த ஆசையை நிறைவேற்றுமாமே?
8 பொண்ணுங்க கொக்கோ ஆடினாலும் சரி கபடி விளையாடினாலும் சரி பசங்க பொண்ண்உங்க கை , காலைப்பார்க்க கொத்து கொத்தா வருவீங்கனு தெரியும்
9 உங்களுக்குப்பிடிச்சவங்களோட எல்லாம் சிரிச்சுப்பேசி பிடிக்காதவங்களோட எல்லாம் சண்டைப்போட்டு வாழ்க்கையை வேஸ்ட் பண்ணச்சொல்றீங்களா?
10 மாம்பழம் பழுக்கறதுக்கு முன்னே மாங்கா , வாழைப்பழம் பழுக்கும் முன் வாழைக்காய் ஆனா அவ இளநி மாதிரி , காயா? ப்ழமா?ன்னே தெரில
11 சில சமயம் நாம முட்டாளாதான் நடிக்க வேண்டி இருக்கு நம்மை முட்டாள்னு நினைக்கற முட்டாள்களை முட்டாள் ஆக்க அதுதான் ஒரே வழி
12 ஏன் எல்லா லவ் ஸ்டோரிகளும் உச்சக்கட்ட சோகத்துலயே முடியுது ?
13 நான் உன் கூட இருக்கும்போதுதான் சேஃபா ஃபீல் ப்ண்றேன்
14 அஃபிஷியலாவோ அன் அஃபிஷியலாவோ யாரையாவது நீ காப்பாத்திட்டே இருக்கனும், உன் கேரக்டர் எனக்குத்தெரிஞ்சிடுச்சு
15 பாஷை தெரியாத ஜப்பான்காரனுக்குக்கூட எப்படியாவது பேசி புரியவெச்சுடக்லாம், ஆனா ஜம்பம் பண்ற மேல் அதிகாரிகளுக்கு நம்ம நிலைமையை புரிய வைக்க முடியாது
16 பல்லி தன் வாலை ஒரு ஆபத்தான தருணம் வரும்போது தானே துண்டிச்சுக்கும், இதுக்கு டிஃபன்சிவ் மெக்கானிசம்னு பேரு அது மாதிரிதான் மனுசனும் தனக்குப்பிடிக்காத அசூயையான விஷயம் நடக்கும்போது அதுல இருந்து தப்பிச்சுக்க ஒரு வழி வெச்சிருப்பான், திடீர்னு மயக்கம் போட்டு விழறது , தூக்கத்துல நடக்கறது
17 செய்யற காரியம் சரியா இருக்கலாம் அல்லது தப்பா இருக்கலாம், ஆனா நீங்க தப்பான ஆள் கிடையாது
18 வாழ்க்கைல நாம எல்லாருமே ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோட தான் வாழ்ந்துட்டு இருக்கோம்,, அது நம்ம அனுபவத்துக்கான அடையாளம
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஐஸ்வர்யா ராஜேஷ் கைப்பற்றும் குற்றவாள்யின் செல்ஃபோன் எப்படி லாக் இல்லாமல் இருக்கு ? ஈசியா ஓப்பன் ப்ண்றாங்களே?
2 ஓப்பனிங்ல சிசிடிவி ல காட்ற சிவப்புக்கலர் வேன் நெம்பர் பிளேட் நெம்பர் தெரியாம புழுதியோட இருக்கு ( பிளான் பண்ணி செஞ்ச மாதிரி ) ஆனா கடைசில மீண்டும் காட்டும்போது தெளிவா நெம்பர் தெரியுது . மீண்டும் போலீஸ் ஷெட் ல வேனை பார்க்கும்போது மிண்டும் புழுதியோட இருக்கு
3 பொதுவா ஒரு வீடியோ க்ளிப் அல்லது ஒரு ஃபோட்டோ காட்டி மிரட்றவங்க பிளாக்மெய்ல் பண்ணி பணம் கேட்கறப்போ முதல்ல இந்தக்கைல ஆதாரம் அந்தக்கைல பணம் அப்படித்தான் கை மாறும், இதுல எந்த அடிப்படைல முதல்ல பணத்தைக்கொடுத்துட்டு அதுக்குப்பின் ஆதாரத்தை சாவகாசமா எடுக்க நினைக்கறாப்டி ?
4 பொதுவா ஒரு கைதிக்கு கை விலங்கு போட்டு அழைச்ட்டுப்போகனும்னா அவன் தப்பிச்சுடுவான்கற ஜாக்கிரதை உணர்வா இருக்கலாம், ஆனா சரண்டர் ஆக தானாக முன் வரும் ஆட்களுக்கு கை விலங்கு எதுக்கு ?
5 கதைக்கு சம்பந்தம் இல்லாம ஒரு கள்ளக்காதல் கதை வருது . அதுல ஒரு டவுட் . கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணின் அக்கா கணவர் துணை இல்லாமல் தனியாக இருக்கார் . அவர் கூட தொடர்பில் இருப்பதுதானே சேஃப்டி ? அதை விட்டு புது ஆளுடன் தொடர்பில் இருப்பது அபாயம் ஆச்சே?
6 கதையின் மெசேஜ் எந்த அளவு பாராட்ட வைக்குதோ அதே அளவு 15 வயசு ஸ்கூல் இன்ஃபேச்சுவேஷன் லவ்வை அவ்ளோ டீட்டெய்லாக காட்டி இருக்க வேணாம்னு சொல்லத்தோணுது
7 க்ளைமாக்சில் இவன் தான் கொலையாளி என தவறாக ஒருவரை இருவர் கடுமையாக தாக்குவது அவங்க அளவில் சரி ஆனா எந்த தப்புமே பண்னாத அவருக்கு ஏன் அந்த தண்டனை ?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - ஃபேமிலியோடு பார்க்கத்தகுந்த குறிப்பா பெண் குழந்தைகள் வைத்திருப்பவர் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம். . க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும் ரேட்டிங் 3/ 5
0 comments:
Post a Comment