Tuesday, February 01, 2022

BRO DADDY 2022 (MALAYALAM) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி காமெடி மெலோ டிராமா)

 50  வயசான  மாமியாரும் , 25  வயசான  மருமகளும்  ஒரே  சமயத்தில்  மாசமானா?... இதுதான்  படத்தின்  ஒன்  லைன்.  இந்த  கதைக்கருவை  வைத்து  குடும்பப்பாங்கான  காமெடி  மெலோடிராமாவை  உருவாக்கி  இருக்கும்  இயக்குநர்  பிரிதிவ்ராஜ்  சபாஷ்  போட  வைக்கிறார்


ஹீரோவோட அப்பாவும்  ,  ஹீரோயினோட  அப்பாவும்  ஃபேமிலி  ஃபிரண்ட்ஸ் மட்டுமல்ல  திக்  ஃபிரண்ட்ஸ்... 2  பேரும்  சம்பந்தி  ஆகிடலாம்னு  முடிவு  பண்றாங்க . ஆனா  மகன், மகள்  இருவரும்  அதில்  பெரிய  ஆர்வம்  இருப்பதா  காட்டிக்கலை 


 இங்கே தான்  ஒரு  ட்விஸ்ட் .  இவங்க  ஆல்ரெடி  அலை பாயுதே  பட  ஹீரோ  ஹீரோயின்  மாதிரி  4  வருசமா  லிவிங்  டுகெதரா  வாழ்க்கை  நடத்திட்டு  தான்  இருக்காங்க  , வீட்டுக்கு  தெரியாம 


 இப்போ  இன்னொரு  ட்விஸ்ட் .25  வயசு  மகன்  இருக்கும்போது   எதிர்  பாராத  வுதமா  ஹீரோவோட  அம்மா  மாசம்  ஆகிடுது . லிவ்விங்  டுகெதரா  வாழும்  ஹீரோயினும்  மாசம்  ஆகிடுது


 இதுக்குப்பின் நடக்கும்  காமெடி  களேபரங்கள்  தான்  மிச்ச  மீதி  திரைக்கதை 


ஹீரோவா  பிருதிவ் ராஜ். அசால்ட்டாக  நடித்திருக்கார் .. அப்பாவுடனான  காட்சிகளில்   கூடுதல்  அசத்தல்.கிரேசி  மோகன்  டைப்  வார்த்தை  விளையாட்டுக்காமெடிகளில்  சோபிக்கிறார்


 ஹீரோவோட  அப்பாவா  த  கம்ப்ளீட்  ஆக்டர்  மோகன் லால் . காமெடியில்  கலக்கி  இருக்கார் , அம்மாவிடம்  வெட்கப்  பட்டுட்டே  மனைவி  கர்ப்ப  விஷயத்தை  ஓப்பன்  பண்ணும்  சீன்  அசத்தல் 


ஹீரோயினா  கல்யாணி  பிரியதர்சன். மாடர்ன்  டிரசில் சிக்  சிம்ரனாகவும் ,  சேலையில்  மகாலட்சுமியாகவும்  மிளிர்கிறார். ஓப்பனிங்  சீன்களில்  ஹீரோவுடன்  மல்லுக்கட்டுவது  ஊடல்  கொள்வது  என  பல  இடங்களில்  ஸ்கோர்  பண்றார்


ஹீரோவோட  அம்மாவா   மீனா. எஜமான்ல இளமையா  பார்த்துட்டு  இதுல   கொஞ்சம் புஷ்டியான  கன்னங்களுடன்  பார்க்க  கஷ்டமா  இருந்தாலும்  கொஞ்சம்  இஷ்டமாவும்  இருக்கு,  மாமியார்  முன் கணவன்  முன்    மகன்  முன்  வெட்கப்படும்  காட்சிகளில்  கொள்ளை  அழகு 


ஹீரோயினோட  அம்மாவா  ஃபைவ்  ஸ்டார்  திரு  திருடா  பாட்டு  புகழ்  கனிகா. ஹீரோயினை  விட  இவர்தான்  அழகு (  ஆண்ட்டி  இண்டியன் ஒழிக  என  கோஷம்  கேட்குது. ஆனா  நிஜமாவே  அப்டித்தான்  அழகா  காட்டி இருக்காங்க )


ஹீரோயினோட  அப்பாவா  லாலு  அலெக்ஸ்.  குறை  சொல்ல  முடியாத  நடிப்பு  என்  தனிப்பட்ட  கருத்து  இந்த  கேரக்டருக்கு  ஜெயராம் பெஸ்ட்  சாய்ஸ் 


இவர்களெல்லாம்  போக  சார்லி ,  சவுபின்  சாஹிர்  பர்ஃபார்மென்சும்  உண்டு 


 சபாஷ்  டைரக்டர்


1   ஹீரோ  பிரிதிவ்ராஜின்  நிஜ  அம்மாவான   மல்லிகா  சுகுமாரனை  ஹீரோவுக்கு பாட்டியாக  நடிக்க  வைத்தது /  அந்தக்காட்சிகளில்  இருக்கும் எள்ளல்  , குடும்பப்பாங்கான  நடிப்பு  அப்ளாஸ்  அள்ளுது 


2   ஹீரோவின்  அம்மாவான  மீனாவை  ஹீரோயினின்  அப்பாவான   லாலு   சின்ன  வயசிலேயெ  பெண்  கேட்டுப்போனதும்  அதற்கு  அவர்கள்  வீட்டில்  மறுத்ததும்  அதைத்தொடர்ந்து  இருவரும்  20  வருடங்கள்  கழித்து  சந்திக்கும்  ஒவ்வொரு  காட்சியிலும் வெட்கப்புன்னகை  சிந்த  விடுவது  கவிதை  இவர்கள்  இருவரும்  சந்திக்கும்  காட்சிகளில்  எல்லாம்  பிஜிஎம்மாக  96  பட  பிஜிஎம்  ஒலிப்பது  அழகான  கற்பனை 


3   மீனாவுக்கு  இஞ்சி  ஊறுகாய்  மாங்கா  ஊறுகாய்  இஷ்டம்  என்றதும்  மாமியார்  அவரை  சந்தேகப்படுவது அதைத்தொடர்ந்து  வரும்  காட்சிகள்  காமெடி  பட்டாசு 


  லாஜிக்  மிஸ்டே க்ஸ் ,  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   மகளை  பெங்களூரில்  வேலைக்கு  அனுப்பும் பெற்றோர்  அப்பப்ப  மகள்  தங்கி  இருக்கும் வீட்டுக்கு  வந்து  பாக்க  மாட்டாங்களா?  நாலு  வருடங்களில்  ஒரு  நாள்  கூட  வராமயா  இருப்பாங்க ?  அக்கம்  பக்கம்  விசாரிக்கவும்  இல்லை 


2   இந்தியாவின்  திரைக்கதை  மன்னன்  கே  பாக்யராஜ்  பல  பேட்டிகளில்  கூறி  இருப்பது  போல  ஹீரோவுக்கும்  ஹீரோயினுக்கும்  திருமணம்  ஆகுமா>  ஆகாதா?  என்பதுதான்  படத்தில்  ரசிகர்களின் ஆவலைத்தூண்டுவதாக  இருக்கும்,அவர்களுக்கு  திருமணம்  ஆகி  இருந்தால்  சுவராஸ்யம்  குறையும்  ( விதி   விலக்கு -  ஆராரோ ஆரிராரோ) 


3  பொதுவாக  பெண்ணின்  அப்பா  கொஞ்சம்  பயந்தவராக  விட்டுக்கொடுப்பவாராத்தான்  இருப்பாங்க ,  மகள்  கர்ப்பம்  என்பது  தெரிந்தும்  அவர்  பிடிவாதமாக  இருப்பது  நம்பும்படி  இல்லை 

4  படம்  ரொம்ப  நீளம்  ரெண்டெ  கால்  மணி  நேரத்தில்  கட்  பண்ணி  இருக்கலாம்,   ஹீரோயினின்  அப்பாவுக்கு  விஷயம்  தெரிவதோடு  படம்  எண்ட்  கார்ட்  போட்டிருக்கலாம், அதுக்குப்பின்   20  நிமிசம்  இழுத்துட்டாங்க 


5    க்ளைமாக்சில்  மேடையில்  மைக்  போட்டு  மோகன்  லால்  மீனா  கர்ப்பம்  என  அறிவிப்பது  நாடகத்தனம்.


6   காதலி  அல்லது  மனைவியின் அப்பாவிடம்  அவர்  தொழிலை  கிண்டல்  பண்ணுவது  ஓவர் . இதே  அவர்  தர  லோக்கல்  ஆள்  ஆக  இருந்தால்  ஓக்கே , ஆனா ஏ  செண்ட்டர்  ஆடியன்ஸ்  மாதிரி  இருப்பவர்  சி  செண்ட்டர்  ஆள்  போல்  கமெண்ட்டுவது  நெருடல்


நச்  டயலாக்ஸ் 


1  ஒரு  குழந்தை  பிறக்கும்போது   ஒரு  அம்மாவும்  அப்பாவும்  கூடவே  பிறக்கறாங்க 


2   இது  என்  மகளே  போட்ட  காஃபி 

 அய்யய்யோ  எனக்கு  வேணாம்  எனக்கு  வயிறும்  சரி இல்லை  டைமும்  சரி  இல்லை 


3   எக்ஸ்க்யூஸ்மீ  சார்  இங்கே  ரூஃப்  டாப்  பார்  எங்கே  இருக்கு?


   ரூஃப்  டாப் ல 


அடேங்கப்பா 


4   என்னது?  மருமக   மாசமா  இருக்காளா? எல்லாம்  ஈஸ்வரனோட  மகிமை  தான் 


 கரெக்ட் ,  என் பையன்  பேரும் ஈஸ்வரன்  தான்


5   ஏம்மா.. மேரேஜ்  ஃபங்க்சனுக்குப்போறொம் . போய்  பிராண்டட்  சாரி  எதுனா  போட்டுட்டு  வா


 சாரில  பிராண்டட்  சாரியா?


 ஏன்?  இல்லையா?

6   உனக்கு  விஷயம்  தெரியுமா?  எங்கம்மா  மாசமா  இருக்காங்க 


 எண்ட  அம்மே


உண்ட  அம்மே  இல்ல  எண்ட  அம்மே 


ஈஸ்வரா


 ஈஸ்வர்  , உன்னைத்தான்


7    ஹலோ  அப்பாவைபார்த்தீங்களா?  அவருக்கு  சோப் போட்டீங்களா? 


அவரு  டிரஸ்  மேல  லிக்விட்  கொட்டிட்டென்,  இப்போ நிஜமாவே  அவருக்கு  சோப்  தான்  தேவை  கொண்டு  போய்ட்டு  இருக்கேன்


8    என்  முத  மருமக  இஞ்சி  ஊறுகா  மாங்கா  ஊறுகா  சாப்பிடறா 


  இது  என்ன  பிரமாதம்    2வது  மருமக  கூட த்தான்  சாப்பிடுவா


 அதுக்கு  மருமகன்  டேலண்ட்டா  இருக்கனுமெ?


9   அப்பா  கங்க்ராட்ஸ்,  நீங்க  அப்பா  ஆகிட்டீங்க  உங்களுக்கு  குழந்தை  பிறந்திருக்கு


  சேம்  டூ யூ


10    மேரெஜுக்கு  அவசரம்  இல்லை  , இந்த  வாரமோ  அடுத்த  வாரமோ வெச்சா  போதும் 


11   டேய்  அவன்  சொல்றது  நிஜமா?  3  வருசமாவா  நீங்க  ரெண்டு  பேரும்  லிவ்விங்  டுகதரா  வாழ்றீங்க ?


  நோ  நோ  4  வருசமா



சி பி  ஃபைனல்  கமெண்ட் =  கேரளா  வில்  இது  சூப்பர்  ஹிட்  ஆகிடுச்சு .  ஃபேமிலி  ஆடியன்சுக்கு  பிடிக்கும் , முதல்  படத்தை  பொலிடிக்கல்  ஆக்சன்  ஃபிலிமாக  எடுத்த  இயக்குநர்  2  வது  படத்தை  ஃபேமிலி  டிராமாவாக  எடுத்தது  சிறப்பு .  ரேட்டிங்  3 / 5 

டிஸ்னி  ஹாட்  ஸ்டார்;ல  கிடைக்குது .  

0 comments: