3 வெவ்வேறு சிறுகதைகள் , ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை அமேசான் பிரைம் லயும் நீம் ஸ்ட்ரீம்லயும் ரிலீஸ் ஆகி இருக்கு. முதல் கதைலயும், மூணாவது கதைலயும் அடல்ட் கண்ட்டெண்ட் இருப்பதால் ஃபேமிலியோட பார்க்க முடியாது , அதனால் ஃபேமிலில இருக்கற எல்லாரும் பேசி வெச்சுக்கிட்டு தனித்தனியாக பார்க்கவும்
1 சாவித்திரி - ஹீரோயின் போலீசால் தேடப்படும் ஒரு கம்யூனிஸ்ட் போராளி. படத்தோட ஓப்பனிங் சீன்லயே போலீஸார் அவரை துரத்தறாங்க , அவங்க எஸ் ஆகி ஒரு கிராமத்துல ஒரு குடும்பத்துல பணிப்பெண்ணா ஜாயின் பண்றாங்க , கதை நடக்கும் கால கட்டம் 1948-1949 ஆனா ஒயிட் அண்ட் பிளாக் இல்லை கலர் தான்.
அந்த குடும்பத்துல நாயகி மேல 2 பேரு கண் வைக்கறாங்க , நெஞ்சம் மறப்பதில்லைல செல்வராகவன் ரெண்டரை மணி நேரம் இழுத்த திரைக்கதையை இவங்க 40 நிமிசத்துல சொல்லி இருக்காங்க தன்னை வேட்டையாடத்துடிக்கும் 2 ஆண் மிருகங்களை பக்காவா பிளான் பண்ணி நாயகி எப்ப்டி வேட்டையாடுறா என்பதே கதை , இது போக நாயகி காதலிக்கும் ரொமாண்டிக் போர்சனும் உண்டு
நாயகியா சனீப்தா மேனன் கேரளத்து வனப்புடன் போனாப்போகுதுனு கொஞ்சம் நல்ல நடிப்பையும் காட்டி இருக்கிறார்
இது போக பாஞ்சாலி சபதம் தர்மன் அர்ஜூனன் குறியீடுகளும் படம் நெடுக உண்டு
2 ராச்சியம்மா
ஹீரோயின் ஒரு பால்காரி, ஆனா இவரோட கேரக்டர் ஸ்கெட்ச் பிரமாதமா வடிவமைக்கபப்ட்டிருக்கு , யாருக்கும் பயப்படாத ஆனா எந்த ஆணும் நெருங்க முடியாத துணிச்சலான பெண். இவருக்கு நாயகன் கூட மலரும் அன்பு நட்பு காதல் தான் கதை
நாயகியா பார்வதி அதகளம் பண்ணி இருக்காங்க வெரிகுட் ஆக்டிங். அவரோட வாய்ஸ் மாடுலேசன் , பாடி லேங்குவேஜ் இரண்டும் செம
அம்மை நோய் வந்தபின் நாயகனை தாயாக கவனிக்கும்போதும் சரி , நாயகன் தன்னை விட்டுப்பிரிந்து போய் வேறு ஒருவளை ,மணந்து குழந்தை பெற்றுக்கொண்டபோதும் அந்தக்குழந்தை பேர்ல தன் சொத்துக்களை டெபாசிட் பண்ணி வைத்ததாக சொல்லும்போது சரி உருக்கமான நடிப்பு . மொத்தம் 35 நிமிசம் படம்
3 ராணி
ஹீரோ , ஹீரோயின் இருவரும் ஓப்பனிங் சீன்லயே லவ்வர்சாதான் காட்டப்படறாங்க. ஹீரோவோட ஒரு ஃபிரண்ட் ஒரு தனிமையான இடத்தைப்பத்தி சொல்லி அங்கே நாயகியை தள்ளிட்டுப்போடா என ஐடியா குடுக்கறார் ( ஆர்கானிக் ஆர்காசம் சாக்சம் )
நாயகியை நாயகன் நைசா பேசி ஒதுக்குப்புறமான அந்த இடத்துக்கு அழைத்து செல்ல தாஜா பண்ணுவதுதான் பாதிக்கதை
ஹீரோயின் சம்மதிச்சு ஹீரோ கூட அந்த பிரைவேட் பிளேஸ்க்குப்போனபின் ஏற்படும் சம்பவங்களே பின் பாதி திரைக்கதை
நாயகியா தர்சனா ராஜேந்திரன் கலக்கலான முக பாவங்கள் , குறும்பு கொப்புளிக்கும் நடிப்பு ( அதெப்பிடி குறும்பை கொப்பளிப்பது?னு கேட்கக்கூடாது ) இந்த தொகுப்புலயே மிகவும் ரசிக்க வைக்கும் கதை இதுதான் ஆனா அநியாயத்துக்கு நீளம் கம்மி , நீலம் அதிகம் வெறும் 18 நிமிசம் தான்
சபாஷ் டைரக்டர்
1 கேரக்டர்ஸ்கெட்ச் , ஒளிப்பதிவு ( 3 வெவ்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் மாறுபட்ட ஷேடுகள் ) இரண்டும் அருமை
2 படத்தில் வரும் 3 கதைகளிலுமே நாயகியை முன்னிலைப்படுத்தியது , நாயக்ர்களை டம்மி ஆக்கியது . வில்லனுக்கும் வேலை இல்லை
3 கேரளாவின் வனப்பை அள்ளி எடுக்க லொக்கேஷன் செலக்சன் , முதல் கதையின் நைட் சீக்வன்ஸ் , மூன்றாவது கதையில் காஸ்ட்யூம் டிசைனருக்கே அதிக வேலை இல்லாமல் செய்தது , இரண்டாவது கதையில் ரொமான்ஸ் என கமர்ஷியல் அம்சங்கள் நிறைய
நச் வசனங்கள்
1 நீ தனியாவே இருக்கியே? உனக்குன்னு யருமே இல்லையா?
ஏன் இல்லை ? கடவுள் இருக்காரே?
உனக்கு ஏதாவது உடம்பு சரி ஆகாம போனா யார் உன்னை பார்த்துப்பா?
கடவுள் பார்த்துப்பார்
2 என்னய்யா? ஆளே மாறிட்டே? உடம்பு குண்டாகிடுச்சு ?
வயசாகுதில்ல? நீ மட்டும் அப்படியே இருக்கே? ரைட் ரைட் உனக்குதான் வயசே ஆகாதே?
3 ஏன் என்னை விட்டு போய்ட்டே?
தப்பு செய்யறது தப்புனு நீதானே சொன்னே?
ஓ, அதனாலதான் வர்லையா? நாமும் மனுசங்கதானே? தப்பு செய்யாம இருக்க கடவுள் இல்லையே?
4 ரூம்ல தனியா இருப்பதும் ஜெயில்ல இருப்பதைப்போலத்தான்
5 டேய் .. இதெல்லாம் மேரேஜூக்குப்பின் வெச்சுக்கலாமே?
அது ஓல்டு ஃபேஷன். முன்னமே பண்றதுதான் லேட்டஸ்ட் ஃபேசன்
சரி நாம பழமை விரும்பிகளாவே இருப்பமே?
6 உன் கூட லாங்க் ட்ரிப் வர தயக்கமா இருக்கு . வேணா தியேட்டருக்குப்போலாமா? நீ என்னென்ன பண்ண நினைக்கறியோ அதை எல்லாம் செஞ்சுக்கோ
அய்யோ , வீட்ல பார்த்தா வம்பு
டேய், உன் ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் நமக்கு பேக் ரோல உக்காந்தா இருக்கப்போறாங்க ?
7 இந்தக்காலப்பசங்களுக்கு சேகுவாரா படம் டி சர்ட்ல இருக்கனும், ஆனா ரோமியோ மனசு
8 குருவாயூரப்பன் சத்தியமா உன்னை ஏதும் செய்ய மாட்டேன்
சரி , குருவாயூரப்பனுக்கு பணி கிட்டும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 முதல் கதைல வர்ற வில்லன் நாயகியை அடைய முயற்சிக்கிறான். அவ சம்மதம் சொல்றாளா? எதிர்க்கறாளா? என்பதை உணராமலேயே எப்படி நாள் நட்சத்திரம் , இடம் எல்லாம் சொல்லி அங்கே வரச்சொல்றான்?
2 அரண்மனை மாதிரி பங்களா 3 ஏக்கர் கணக்கில் இருக்கும்போது அங்கேயே தன் விருப்பத்தை நிறைவேத்திக்காம பேக்கு மாதிரி தனியா போய் மாட்டிக்குவது எப்படி ?
3 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெரியவர் நடக்கவே முடியாம கை காலை அசைக்க முடியாம இருக்கார் , அவர் கூட நாயகியை தப்பா பார்க்கிறார் என காட்டுவது ஓவர் . பாக்கத்தான் முடியும்?
4 2வது கதைல நாயகன் நாயகியை விட்டுச்செல்ல வலுவான காரணங்கள் இல்லை
5 3 வது கதைல தனிமையான இடத்துக்கு செல்லும் ஜோடிகள் தங்கள் உடைகளை கழட்டி பக்கத்துலயே வெச்சுக்காம அரை பர்லாங் தூரத்தில் நிற்க வைத்திருக்கும் பைக்ல எல்லா டிரஸ்சையும் கழட்டி வெச்சுட்டு போவது நம்பும்படி இல்லை
6 டிரஸ்சை சும்மா விளையாட்டுக்குத்தான் ஒளிச்சு வெச்சேன் என அந்த பெருசு சொல்லும்போது அந்த லேடி கண்டிக்காமல் இருப்பது ஆச்சரியம்
சி.பி ஃபைனல் கமெண்ட் - ரொமாண்டிக் ஸ்டோரீஸ் விரும்பிப்பார்க்கும் யூத்களுக்கான படம். பிரமாதம் எல்லாம் இல்லை , மொக்கையும் இல்லை . பார்க்கலாம் ரகம் , ரேட்டிங் 2. 5 / 5
0 comments:
Post a Comment