3 நண்பர்கள் அவங்களுக்கு இடையேயான நட்பு , கோப தாபங்கள் , உரையாடல்கள் அப்டி ஸ்லோவா போய்க்கிட்டு இருக்கும் திரைக்கதை ஒரு நண்பனின் மனைவியை இன்னொரு நண்பன் கள்ளத்தொடர்பு வெச்சிருக்கான் என்பது தெரிந்தபின் சூடு பிடிக்கிறது . இறுதியில் என்ன ஆச்சு என்பதை திரையில் காண்க
மொத்தமே நாலே கேரக்டர்கள். 100 நிமிடங்கள் தான் படம். ஒயிட் அண்ட் பிளாக்கில் எடுக்கப்பட்ட படம் என்பது பிளஸ்
நடிப்புன்னு பார்த்தா ஹீரோவா நடிச்சவர் பாஸ் மார்க் என்றால் மீதி 2 நண்பர்கள் நடிப்பில் , வசன உச்சரிப்பில் பின்னிப்பெடல் எடுத்துட்டாங்க
ஹீரோ கிட்டே பணம் இருக்கு ,ரூம் மேட்டான நண்பன் வந்தா காசு கேட்பான்னு கைவசம் இருந்த பணத்தை ஒளிச்சு வைக்கும் சீனும் சரி . சரக்கு அடிக 100 ரூபா கேட்டு போராடும் நண்பனின் நடிப்பும் சரி செம
மிட் நைட் ல ஹீரோ பேக்கை செக் பண்ணி பணம் இருப்பதைக்கண்டு பிடிக்கும் நண்பன் அப்பவே ஹீரோவை எழுப்பி நியாயம் கேட்கும் சீன் எல்லாம் அதகளம்
நண்பனின் மனைவி ஹீரோவுக்கு மிஸ்டு கால் கொடுக்கும்போது , அதைப்பார்த்த நண்பன் இவ எதுக்கு உனக்கு மிஸ்டு கால் கொடுக்கறா? என கேட்பதும் இப்போ அவளுக்கு கால் பண்ணி பேசு , ஸ்பீக்கர் ஆன் பண்ணு என கேட்பதும், அதை ஹீரோ சமாளிக்கும் விதமும் குட்
வழக்கமாக இது போன்ற கள்ளக்காதல் கதையில் குறிப்பிட்ட இருவரும் உறவு கொள்வதை புருசன் நேரில் பார்த்து காண்டு ஆகி கொலை செய்வதுதான் நார்மலா எல்லாப்படத்திலும் நாம் பார்க்கும் சீன்
ஆனா அந்த லேடி கேரக்டரை கெஸ்ட் ரோல் மாதிரி ரெண்டு சீன்ல மட்டும் காட்டிட்டு வெறும் கான் வோ மூலமே திரைக்கதையை நகர்த்துவது அபாரம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள் , இயக்குநரிடம் சில ஆலோசனைகள்
1 இந்தப்படம் 100 நிமிடங்கள் ஓடுது. இதை ஷார்ப்பாக 1 மணி நேரப்படமாக எடுத்திருக்கலாம். ஹிரோவும் ,நண்பர்களும் பேசும் கெட்ட வார்த்தை காட்சிகள் மட்டும் 87 தடவை வருது . அதில் ஒரே வார்த்தையை 60 டைம் பேசறாங்க . என்னதான் யதார்த்தமாக எடுப்பது என்றாலும் இப்படியா?
2 குடிகார நண்பன் வீட்டுக்கதவை திறக்கச்சொல்லி ரகளை பண்ணும்போது பக்கத்து வீட்டில் இருந்து வெளி வரும் வயதான தம்பதி போடும் வாக்குவாதம் செயற்கை, சொன்ன டயலாக்கையெ ரிப்பீட் மோடில் வைப்பதை தவிர்த்திருக்கலாம்
3 நண்பனின் மனைவி வீட்டுக்கே போய் ஹீரோ ஜாலியாக இருந்ததாக வசனம் வருது அக்கம் பக்கம் வீடுகளில் பார்க்க மாட்டாங்களா? அவங்க புருசனிடம் போட்டுக்கொடுக்க மாட்டாங்களா? அது ரிஸ்க் ஆச்செ?
4 ஹீரோவின் நண்பன் காலை 9 மணி க்கு ட்யூட்டிக்கு போய்ட்டு மாலை 6 மணிக்கு தான் வீட்டுக்கு வர்றான். ஹீரோ இந்த கேப்ல வீட்டுக்குப்போவதுதான் சேஃப்டி . ஆனா நண்பனை ஹீரோ ரூமுக்கு வரச்சொல்லி சரக்கு வாங்கி ஊத்திக்கொடுத்து அவன் மட்டை ஆனதும் ஹீரோ நண்பனின் வீட்டுக்குப்போய் மனைவியை சந்திப்பது எல்லாம் செம ரிஸ்க் . ஹீரோவும்தானே குடிச்சிருக்கான்?> ட்ரங்கக்கன் டிரைவிங் கேசில் மாட்டிக்க மாட்டானா?
5 நண்பன், ஹீரோ வாக்குவாதத்தில் இப்பவே போய் மனைவியை
கொலை பண்றேன் என ஆவேசமாக சொல்பவன் பின் சிடி யில் கில்மாப்படம் பார்த்துட்டு சாவகாசமாக இருப்பது அயர்ச்சியைத்தருகிறது
6 ஹீரோ பல் துலக்குவது , வாய் கொப்பளிப்பது , தாடியை ட்ரிம் பண்ணுவது , யோசிப்பது இந்த சீன்களை எல்லாம் கட் பண்ணாலே 30 நிமிசம் மிச்சமாகும்
7 ஒரு சம்பவத்தை யதார்த்தமாக அப்படியே நேரில் பார்ப்பது போல கொடுப்பதில் வெற்றி , ஆனா க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என எதுவும் இல்லை
8 மனைவிக்கு புதுசா ஒரு கள்ளக்காதலன் கிடைச்ட்டான் . அதனால வேணும்னே பிளான் பண்ணி கணவன் - கள்ளக்காதலன் மோதலை உருவாக்குகிறாள் என்ற திருப்பத்தை எதிர்பார்த்தேன்
நச் வசனங்கள்
1 !@#$%^&*()_)(*&^%%$##@!
2 !@#$%^&*()_)(*&^%%$##@!
( கெட்ட வார்த்தைகள் தான் )
சி.பி ஃபைனல் கமெண்ட் - இது பெண்களைக்கவர்வது சிரமம், தர லோக்கல் சி செண்ட்டர் ரசிகர்களுக்கான படம் , குறிப்பா சென்னைவாசிகள் ரசிக்கலாம். மூவிவுட் ஓடிடி தளத்தில் இது வெளியாகி உள்ளது . கேபிள் சங்கர் , ரமேஷ் இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஓ டி டி தளம் முதல் 3 மாதம் இலவசம் தான்.
https://play.google.com/store/
0 comments:
Post a Comment