ஃபாஸ்ட் ஃபுட் கடைல ஹீரோயின் ஒர்க் பண்றா. அந்த கடைல மேனேஜர் ஒரு லேடி .ஒரு நாள் எல்லாரும் வேலை செஞ்சுக்கிட்டே பேசிக்கிட்டு இருக்காங்க . அப்போ லேடி மேனேஜருக்கு ஒரு ஃபோன் கால் வருது. பேசுனவன் அந்த ஃபாஸ்ட் ஃபுட் கடை ரீஜனல் மேனேஜரோட ஃபிரண்டு எனவும் , தான் ஒரு போலீஸ் ஆஃபீசர்னும் சொல்றான்
அந்த கடைக்கு வந்த ஒரு கஸ்டமர் ஹீரோயின் மேல புகார் கொடுத்திருக்கான். ஏதோ பணம் திருடு போய்டுச்சு, அதை செக் பண்ணனும் , கண்டு பிடிக்கனும், அப்டிங்கறான்
ஃபோன்லயே நம்ம ஜி மாநில சி எம் களுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுக்கற மாதிரி அவன் மேனேஜருக்கு சில இன்ஸ்ட்ரக்சன் எல்லாம் தர்றான்
அந்த லேடி மேனேஜர் மம்தா பேனர்ஜி மாதிரி ஏதாவது எதிர்த்துப்பேசுவாங்கனு பார்த்தா ஓபிஎஸ் மாதிரி பம்மிக்கிட்டே அவன் சொல்றபடி கேட்கறா
ஹீரொயினை செக்கப் பண்றா , ஹேண்ட் பேக்கை ஓப்பன் பண்ணிப்பார்க்கறா. எதுவும் சிக்கலை.
அதுக்குள்ளே ஃபாஸ்ட் ஃபுட் கடைல நிறைய கஸ்டமர்ஸ் வந்துடறதல மேனேஜர் அவர் வேலைல பிசி ஆகிடறார். ஹீரோயினை வேற ஒரு ஆள் கிட்டே ஹேண்ட் ஓவர் பண்ணீடறார்.
இப்போ அந்த ஆளுக்கு வர்ற இன்ஸ்ட்ரக்சன் படி ஹீரோயினை எல்லா டிரசையும் ரிமுவ் பண்ணி செக் பண்ணச்சொல்றான்.
ஹிரோயின் அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கறா
இதுக்குப்பிறகு நடக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் தான் கதை
பெண்களுக்கு எதிராக நடக்கும்கொடுமைகளை அவருக்கு இழைக்கபடும் அநீதிகளைப்பற்றி படம் பேசுது
இது உண்மையில் நடந்த சமபவமாம், இது போல 70 சம்பவங்கள் ஒரே வருடத்தில் நடந்ததா க்ளைமாக்ஸ்ல போடறாங்க
படம் ரொம்ப ஸ்லோதான். கரெக்டா ஒன்றரை மணி நேரம் ஓடுது , அமேசான் பிரைம்ல கிடைக்குது. அடலட் கண்ட்டெண்ட் இருப்பதால் ஃபேமிலியோட பார்க்க முடியாது
ஹீரோயினா நடிச்சவர் நல்ல நடிப்பு , இந்தப்படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணுனா எடுபடும். ஏன்னா தமிழ்நாட்டில் பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஒரு சென்சேஷனல் மேட்டர். அதையே ஃபாரினல பார்க்கும்போது நமக்கு பெரிய பதட்டம் வர்லை . அங்கெல்லாம் இது சகஜம் தானே அப்டிங்கற எண்ணம் வருது
லேடி மேனேஜரா நடிச்சவர் கச்சிதம். வில்லன் மிரட்டி இருக்கார்
சி.பி ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான , விறுவிறுப்பான த்ரில்லர் விரும்பிகளுக்கு இது செட் ஆகாது. ஸ்லோவா போனாலும் பரவால்லைனு நினைக்கறவங்க பார்க்கலாம்., இது பாக்ஸ் ஆஃபீசில் 592 மில்லியன் டாலர் வசூலை குவிச்சிருக்கு. இது ஒரு லோ பட்ஜெட் படம். ஒரே ஒரு ரெஸ்ட்டாரண்ட்ல முழுப்படமும். மொத்த கேரக்டர்களே 7 பேர்தான்
0 comments:
Post a Comment