ஹீரோ ஒரு டாக்டர் , அவருக்கு ஒரு அம்மா , பங்களா வில் வேற யாரும் இல்லை , ஹீரோக்கு சாப்பிடக்கூட நேரம் இல்லை. ஹாஸ்பிடலை விட்டு வீட்டுக்கு சாப்பிட வந்தா உடனே ஹாஸ்பிடல்ல இருந்து கால் வரும், உடனே போய்டுவார்.இவரோட வாழ்க்கைல 4 வித்தியாசமான சம்பவங்கள் நடக்குது
சம்பவம் 1 - ஹீரோ ஒரு ராத்திரி நேரத்துல மழை நாளில் காரில் போய்க்கிட்டு இருக்காரு . அப்போ நடு ரோட்ல அமைச்சர் ஜெயக்குமார் மாதிரி மெயின் ரோடு க்யூன் மாதிரி ஒரு பொண்ணு நிக்குது, இவரு காரை நிறுத்தி அந்தப்பொண்ணுக்கு லிஃப்ட் தர்றாரு . அந்தப்பொண்ணு சுடுகாட்டு வாசலில் காரை நிறுத்தச்சொல்லி இறங்கிக்குது. சுடுகாட்டு கேட் ஆட்டோமெடிக்கா ஓப்பன் ஆக அது உள்ளே போய் மறைஞ்சிடுது , ஹீரோக்கு அல்லு இல்ல .
சம்பவம் 2 ஹீரோக்கு ஒரு ஃபோன் வருது . பெண்ணின் குரல். அந்தப்பெண்ணின் வழிகாட்டல் படி அந்த பங்களாவுக்குப்போனா அங்கே அந்தப்பொண்ணு டெட்பாடியா கிடக்குது. அது வேற யாருமில்ல . அந்த சுடுகாட்டுப்பொண்ணுதான். அப்போ போலீஸ் கேங் அங்கே வருது . இந்த மாதிரி சம்பவம் அடிக்கடி இங்கே நடக்கறதாவும் நாங்க தகவல் தெரிஞ்சு ஸ்பாட்டுக்கு வந்தா டெட் பாடி இங்கே இருக்கறதில்லை எனவும் சொல்லுது, ஹீரோ பார்த்த டெட் பாடியை இப்போக்காணோம்
சம்பவம் -3 ஹீரோக்கு ஒரு காதலி இருக்கா . திடீர்னு ஒரு விபத்துல இறந்து போறா ,அந்த சோகத்துல ஹீரோ வேலைல கவனம் இல்லாம இருந்தப்போ அம்மாவோட வற்புறுததலால அம்மாவோட சொந்தத்துல் இருக்கும் ஒரு பொண்ணை மேரெஜ் பண்ணிக்கறார். அவ முகத்தைக்கூட பாக்கலை , சாந்தி முகூர்த்த அறைல முதன் முதலா அவ முகத்தை பார்த்ததும் ஜெர்க் ஆகறார். சம்பவம் 1 , சம்பவம் 2 ல அவர் சுடுகாட்டு லேடியா , டெட்பாடியா பார்த்தாரே அந்த லேடிதான் இந்த புது மனைவி
சம்பவம் 4 . ஹீரோ தன் மனைவியை தொடக்கூட இல்லை . பேய் , பிசாசுனு நம்பறார். . போன ஜென்மத்துல அவங்க 2 பேரும் காதலிச்சதாவும் ஒரு விபத்துல அந்தப்பொண்ணு இறந்துட்டதாவும் இப்போ ஹீரோவும் தற்கொலை பண்ணிக்கிட்டா 2 ஆத்மாவும் ஒண்ணு சேரலம்னும் அந்த மனைவி சொல்றாப்டி
ஹாரர் த்ரில்லர் மாதிரி போற இந்தக்கதை கடைசி ல எப்படி க்ரைம் த்ரில்லரா மாறுது என்பதுதான் மிச்ச மீதிக்கதை
ஹீரோவா ஜெய் சங்கர் . ஆள் ஜம்முனு இருக்கார் . டிரஸ்ஸிங் எல்லாம் செம , எம்ஜியாரையே பொறாமை கொள்ள வைத்தவர்னா சும்மாவா ? க்ளைமாக்ஸில் ஒரு ஃபைட் சீன் இருக்கு குட் ஆக்சன்
ஹீரோயினா , மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெ ஜெ . பேயாக டெட் பாடியாக மனைவியாக 3 வேவ்வேறு நிலைல அசத்தல் நடிப்பு ( விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத தகவல் , இந்தப்பட ஷூட்டிங்க் ல இருந்துதான் ஜெய் - ஜெ ஜெ நெருக்கம் அதிகம் ஆனதாவும், எம்ஜியார் செம காண்ட் ஆனதாகவும் அதிரை புகாரி தகவல்
மனோரமா வேலைக்காரியா காமெடி டிராக்ல வர்றாப்டி
நச் வசனங்கள்
1 அதிர்ஷ்டம் நமக்காக காத்திருக்கலாம் , ஆனா நம்மைப்பார்க்க நம்மைத்தேடி வந்தவங்களை நாம காக்க வைக்கக்கூடாது
2 என்னை விட்டுட்டு வேற ஒருத்தியை மேரேஜ் பண்ணி பண்ணிக்கப்போறீங்களா?
சரி , உன்னை மேரேஜ் பண்ணிக்கறேன், வேற ஒருத்தியை லவ் பண்ணிக்கறேன்
3 அய்யா ஏதாவது வேலை இருந்தா போட்டுக்குடுங்க
ஒயிஃப் வேலை காலியா இருக்கு செய்யறியா?
வாட்?
டாக்டருக்கு , நர்சுக்கு ஹெல்ப் பண்றா மிட் ஒயிஃப் வேலை
4 பதில் பேசாம பாதிலயே போனா பாதி சம்மதம்னு அர்த்தம்
5 வாழ்க்கைல சிலர் எதிர்காலத்தைப்பற்றியே நினைச்சுட்டு இருப்பாங்க , சிலர் கடந்த கால வாழ்க்கையைப்பற்றி நினைச்ட்டு இருப்பாங்க
ஒயிட் அண்ட் பிளாக் படம் தான் 6 பாட்டு இருக்கு அதுல நானே வருவேன்னு ஒரு பாட்டு 3 டைம் வரும் . எல்லா பாட்டையும் ஓட விட்டு பார்த்தா போதும் . மொத்த ட்யூரேசன் 2.36 மணி நேரம் 6 பாட்டு , மனோரமா காமெடி டிராக் , க்ளைமாக்ஸ் ஃபைட் இதை எல்லாம் ஓட விட்டு பார்த்தா ஒண்ணே முக்கால் மணி நேரப்படம் தான் . யூ ட்யூப் ல அவெய்லபிள்
சி.பி கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் ஹாரர் த்ரில்லர் ரசிகர்கள் எல்லாருமே பார்க்கலாம், . ரேட்டிங் 2.75 / 5
0 comments:
Post a Comment