Monday, May 31, 2021

EK MINI KATHA - 2021 (TELUGU ) -சினிமா விமர்சனம் ( கில்மா காமெடி ரொமாண்டிக் டிராமா)

 இந்தப்படத்துக்கு  நான்  டைரக்டரா இருந்திருந்தா   படத்துக்கு  டைட்டிலா  “ சின்னத்தம்பி  , அல்லது  சின்ன  தம்பி   பெரிய  தம்பி   ,  சின்ன  சின்ன  ஆசை  ,  சின்னவர் ,  சின்னவரு  மன்னவரு ,   இந்த  மாதிரி  டைட்டில்   வெச்சிருப்பேன். இதுல இருந்தே  படத்தோட  கான்செப்ட்  உங்களுக்குப்புரிஞ்சிருக்கும், கொஞ்சம்  கவனம்  பிசகி இருந்தாக்கூட  இது  இருட்டு  அறையில்  முரட்டுக்குத்து  மாதிரி தர  லோக்கல்    கில்மாப்படமா  ஆகி  இருக்கும், ஆனா  இயக்குநர்  பேசிக்காவே  விக்ரமன் , ராதா மோகன்  மாதிரி  டீசண்ட்டான  ஆள்  என்பதால்  ஏ  செண்ட்டர்  ஆடியன்சுக்கான  கண்ணியமான  கில்மா  ரொமாண்டிக்  ஃபிலிமா  எடுத்திருக்கார்


ஹீரோவுக்கு   அது  ரொம்ப  சின்னதா  இருக்கு. சின்ன  வயசுல  இருந்தே  சக  நண்பர்களால்  அவன்  கேலி  செய்யப்பட்டு  மைக்ரோ பெனிஸ்  சிண்ட்ரோம்     மன நோயால  பாதிக்கப்படறான்.  சேலம்  சித்த  வைத்தியர்  மாதிரி  ஆளுங்க  டார்கெட்டே  இந்த  மாதிரி  பாலியல்  அறிவு கம்மியா   இருக்கும்  இளைஞர்களை  ஏமாத்தி  பணம்  சம்பாதிக்கறதுதான்.


முதல்  அரை  மணி  நேரம்  ஃபிளாஸ் பேக்ல  ஹீரோ வோட  பிரச்சனைகளை  காமெடியா  காட்டுறாங்க . அதுக்குப்பின்  ஹீரோ  சேலம்  சித்த  வைத்தியர்  மாதிரி  ஒரு  டுபாக்கூர்  டாக்டர்  கிட்டே  போறான்


 15 லட்சம்  ரூபா   ஃபீஸ்  தந்தா   பெருசாக்கி  ஆபரேஷன்  பண்றேன், அல்லது  ஆபரேஷன் பண்ணி  பெருசாக்கறேன்னு  பீலா  விடறார்  டுபாக்கூர்  டாக்டர் .  ஆபரேஷன்  தியேட்டர்ல  ஹீரோ . இங்கே  ஒரு  ட்விஸ்ட்  ..  இடை  வேளை 


ஹீரோவுக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகுது. அரேஞ்ஜ்டு  மேரேஜ்தான். ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  தன்  குறை  பற்றி  ஓப்பனா பேசிடலாம்னு  நினைக்கறான், ஆனா  சொல்லலை . லேடி  நித்யானந்தி  மாதிரி  ஒரு கில்மா  டுபாக்கூர்  சாமியாரினி  இருக்கு  . அதை  அப்பாயிண்ட்  பண்றாங்க .  டெய்லி  காலைல  பிரம்ம  முகூர்த்தத்துல  அவர்  ஒரு  ட்ரீட்மெண்ட்  தருவார்.  யாரும்  கண்டபடி  கற்பனை  பண்ண   வேணாம், ஒரு  கசாயம்  மாதிரி   தருவார்  , அதை ஹீரோ  குடிக்கனும் 


வீட்லயே  அந்த  கில்மா  சாமியாரினி  தங்க  வைக்கப்படறார்..  சுந்தர்  சி  பட  பாணில  அந்த  சாமியாரினி ,  ஹீரோ ,  ஹீரோயின்,  ஃபிரண்ட்  இவங்களை  வெச்சு  கொஞ்சம்  காமெடி  டிராக்  ஓடுது


இதுக்குப்பின்  இவங்க  வாழ்வில்  நடக்கும் சில  திருப்பங்கள் , சம்பவங்கள்  தான்  மிச்ச  மீதி  திரைக்கதை 


ஹீரோவா  யாரோ  சந்தோஷ்  சோபனாம், ஓக்கே    ரகம்,  ஆம்பளைங்களைப்பற்றி  நமக்கு  என்ன   பேச்சு . ஹீரோயின்  கிட்டே  வருவோம்


 நாயகி  பேரு  காவ்யா  தப்பார் .  காவ்யா  மாதவன்  மாதிரி  கொழுக்  மொழுக்  ஃபிகர்  இல்லைன்னாலும்  பார்ட்டி  ஒரு   எபவ்  ஆவரெஜ்  ஃபிகர்  தான். ஒரு  முக்கியமான  க்ளூ  தர்றேன்  படம்  போட்டு  48 வது  நிமிசத்துல  அப்புறம்  1.57  வது  நிமிசத்துல  அப்டினு   படத்துல  நாயகிக்கான    சீன்கள்  2  இடத்துல இருக்கு  (  இந்த  சமுக  சேவைக்காக  யாராவது  ஏதாவது  விருது  கொடுக்கற  மாதிரி  இருந்தா  அதை  திருப்பித்தர  தயாரா  இருக்கேன் . யாருமே  தராத  ஒரு  விருதை  திருப்பித்தர்றது  ரிஜக்ட்  பண்றதுதான்  இப்போ ஃபேஷன் ) 


ஹீரோவுக்கு  ஃபிரண்டா  வர்றவர்  நல்ல  காமெடி  சென்ஸ் .


 கில்மா சாமியாரிணியா  ஸ்ரெத்தா  தாஸ். அநியாயத்துக்கு  டீசண்ட்டான  ஆடை  வடிவமைப்பு  இவருக்கு .  நான்  ரொமப  எதிர்பார்த்தேன்


இத்தனை  வர்ணனைகள்  , விபரங்கள்  படிச்ட்டு இது  லேடீஸ்  பார்க்கத் தகுதி  அற்ற படம்னு  நினைக்க  வெணாம்.  டீசண்ட்  மேக்கிங்  தான்


ஒளிப்பதிவு  , இசை   நல்ல  தரம் 


நச்  டயலாக்ஸ்  


1   சார்  , உங்க  பையனோட  பிராப்ளம்,ஸ்   என்ன?னு  சொல்றதா  சொன்னீங்க   ஆனா  50  வருசம்  முன்னாடி  அப்டினு  உங்க  ஃபிளாஸ்பேக்  சொல்லிட்டு  இருக்கீங்க ?


 டாக்டர்  சார் , நீங்க  தானே  சொன்னீங்க ?  ஃப்ரீயாதான்  இருக்கேன்  அப்டினு  அதான்  விலாவாரியா  சொல்லலாம்னு... 


2    சூரியனை  சுற்றும்  கிரகங்களில்  ரொம்ப  சின்னது  எது ?


 டீச்சர் , சந்தோஷ்  கிட்டே  கேட்கலாம்  டீச்சர் 


 ஏன்? 


 அவனுக்குதான் சின்னது  பற்றி  கரெக்டா  தெரியும்  ,  ஸ்மால்  ,  ஸ்மாலெர்  , ஸ்மாலெஸ்ட்  எல்லாம்  தெரியும் 


3  மிஸ் , எதுக்காக  என்னை  உங்க  வீட்டுக்கு  வரச்சொன்னீங்க ?


 எங்க  வீட்ல  அம்மா, அப்பா  எல்லாரும்  வெளில  போய்  இருக்காங்க , வர  இன்னும்  2  மணி  நேரம்  ஆகும்


 அப்போ  நான்  போய்ட்டு  2  மணி    நேரம்  கழிச்சு  வரவா?


4  நான்  ஒரு  முக்கியமான  க்ரூப்ல  இருக்கேன்  SDG


அப்டின்ன?

    SMALL  DIG   GROUP


5     டோண்ட்  கால்  மீ  “  சின்னா”


6  இஞ்சினியர்  சார் , சைஸ்  பற்றி  கவலைப்படாதீங்க ,..


7   சார் ,  இந்தக்கல்லை  3  இஞ்ச்   4  இஞ்ச்  ஆக  சின்ன சின்னதா  கட்  பண்ணனும்   எப்படி  கட்  பண்ண ?


8   பொதுவா  சின்னதா  இருந்தா  பிரச்சனை  பெருசா  இருக்கும் 


9    சாரி   மிஸ் .. இது  எல்லாம்  பெரிய  மேட்டரே  இல்லை . யார் மேல  தப்பு ,  யார்  செஞ்சது  சரி  அது எல்லாம்  ஒரு  விஷயமே  இல்லை , பொது  இடத்துல  பொண்ணுங்களை தரக்குறைவா  யாரும் பேசிடக்கூடாது ,  மரியாதைக்குறைவா  நடத்திடக்கூடாது 


10   சார் , நம்மைப்பற்றி  தெரியாம  பேசறீங்க , பொதுவா  எல்லாரும்  அனக்கோண்டாவை  அமேசான்  காட்டுல  தானே  பார்த்திருப்பாங்க ?ஆனா  நீங்க  இப்போ


 இப்போ


 ஹைதராபாத்    நேரு  பார்க்லயே  பார்க்கலாம்னு  சொல்ல  வந்தேன்.. பயந்துட்டீங்களா?


11   நான்  இதுவரை   வெட்டிங்  ஆல்பம்,   பர்த் டே  பார்ட்டி  ஆல்பம்  தான்  பார்த்திருக்கேன் ,இந்த  டாக்டர்  என்ன     டெட்  பாடி  ஆல்பம்  எல்லாம்  காட்றாரு ?  ஆபரெஷன்ல  இவ்ளோ  ஃபெய்லியரா?


12  இந்த  போலீஸ் க்கு  பிளம்ப்பர்க்கும், பாத்ரூம்  க்ளீனருக்கும்  வித்யாசமே   தெரியாதா?  என்னை  105  டாய்லட்சை  க்ளீன்  பண்ண  வெச்ட்டாங்க 


13   எந்த  ஓ டி  டி  ல  மெம்பர்  ஆனாலும்   உன்  தாய்மொழி  என்ன?னு  தான்  கேட்கறாங்க , தந்தை  மொழி  பற்றி  கேட்கறதே  இல்லை 


14   யோவ்,  எத்தனை  தடவை  தேய்ப்பே? அது  என்ன  டெபிட்  கார்டா?  அலாவுதீன்  விளக்கா?


15    மிஸ் !  உங்களுக்கும்  எனக்கும்  செட்  ஆகாதுனு  நினைக்கறேன்


 ஏன்?


 உங்களுக்குப்பிடிச்ச  டி வி  ப்ரோக்ராம்  பிக்  பாஸ் ,   பிடிச்ச  நடிகர்  பிக்  மேன் அமிதாப்.... எல்லாமே  பெருசாவே  இருக்கே ?


16    உங்க  லக்கி  நெம்பர்  என்ன?


 2  


 அதுலயும் சின்ன  நெம்பர் தானா?   உனக்கு  சின்னதா இருக்கு  ஓக்கே  உன்  லக்கி  நெம்பரும்  சின்னதாதான்   இருக்கனுமா?      உனக்கு  ?


 ஜீரோ 


 ஏன்?


 ஜீரோல இருந்து  தொடங்குனாதான்  ஹீரோ  ஆக  முடியும்  


17    ப்ராப்பர்  பேப்பர்ஸ்  இருந்தாதான்  லோன்  தருவோம்


 தினத்தந்தி  ,    தினமலர் ?


  யோவ் .. பாண்ட்  பேப்பர்  , சொத்து   டாக்குமெண்ட்ஸ்



18    அய்யரே. இந்தாங்க  5000  ரூபா.. ஃபர்ஸ்ட்  நைட்டை...


  முன்  கூட்டியே  வைக்க  டைம்  குறிக்கனுமா?


  நோ . தள்ளிப்போடனும்


19     சின்ன  பொருள்கள்  எல்லாம்  நல்லதுதான்  , முருங்கைக்காயையே  எடுத்துக்குங்க , சின்னதாதான்    இருக்கு  ஆனா  அது  பண்ற  வேலைகள்  பெருசு...



  சபாஷ்  டைரக்டர் 


1   ஹீரோவின்  அப்பா  ,  சைக்யாட்ரிக்  டாக்டர்  சம்பந்தப்பட்ட  காட்சிகள் 


2    ஹீரோ  ,  போலி  டாக்டர்  இருவருக்குமான   காட்சி  அமைப்பு  மற்றும்  இடைவேளை  ட்விஸ்ட் 


3    ஹீரோ -  சாமியாரினி ,  நாயகி  காம்ப்போ  காட்சிகள் , அதில்  வரும் டீசெண்ட்  காமெடி


4  க்ளைமாக்ஸ்    காட்சி  ,  மற்றும்   நாயகிக்கான  2   பாடல்  காட்சிகள் 

5    ஒளிப்பதிவு   ,  வசனம் , எடிட்டிங் ,  பின்னணி  இசை 



 திரைக்கதையில்  சில  நெருடல்கள்  ,  லாஜிக்  மிஸ்டே க்ஸ் 


1   ஹீரோ  ஹீரோயின்  ஓப்பனிங்  சந்திப்பு  சீனில்  ஹீரோயின்  ஸ்கூட்டி  ஓட்டிட்டு  வருது ,  ஆனா  அவ்ளோ  பெரிய  பங்களா வாசியான  நாயகி  பின்  வரும்  எந்தக்காட்சியிலுமே  ஸ்கூட்டில  வர்லை  .  கார் தான்


2   ஆபரேஷன்  பண்றதுக்கு  முன்  ஒரு  பேப்பர்ல  சைன் வாங்குபவர்கள்  இவ்ளோ  டீட்டெய்லா  மிரட்டுவாங்களா?  எப்படி  சைன்  பண்ணுவான்  பேஷண்ட்?


3   லீகலாக  நடக்கும்  ஹாஸ்பிடலில்  ஆபரேசன்  ஃபீஸ்  15  லட்சம்  ரூபாயை  கேஷாக  கட்டச்சொல்வது  ஏன்?  டிடி அல்லது  நெஃப்ட்   , ஆர்டிஜிஎஸ்  தானே  சேஃப்டி ?


4   ஹீரோ  கூச்ச சுபாவி  , நாயகியிடம்  நண்பனிடம்  தன்  பிரச்சனைனை  தனிமையில்  சொல்வதற்கே  குரல்  கம்முது , க்ளைமாக்ஸில்  லவுடு  ஸ்பீக்கர்  வெச்சு  பேசுவது  , தன்  குறையை  ஓப்பனாக    சத்தம் போட்டு பேசுவது  நாடகத்தனம்




  சி. பி  ஃபைனல்  கமெண்ட் -    ஏ செண்ட்டர்  ரசிகர்களுக்கான  கண்ணியமான  கில்மா  காமெடி  ஃபேமிலி  மெலோ  ட்ராமா.   அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கு  , ஃபேமிலியோட  பார்க்க  முடியாது  ( அபுறம்  எப்படி  அது  ஃபேமிலி மெலோ டிராம?)   ரேட்டிங்   2.75 / 5  அமேசான்  பிரைம்ல  கிடைக்குது

   

Friday, May 28, 2021

மலேசியா TO அம்னீஷியா (2021 ) - சினிமா விமர்சனம் @ ஜீ5 ( காமெடி மெலோ டிராமா-தமிழ் )

 இயக்குநர்  ராதா மோகன் இயக்குநர்  விக்ரமன்  டைப். அவரது  படத்தில்  எல்லாரும்  நல்லவங்களா  இருப்பாங்க , ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன்  ஓடிட்டே  இருக்கும். 2004ல்  அவரது  முதல்  படமான  அழகிய  தீயே  கவனிக்க  வைத்த  படம். 2005ல்  வந்த  பொன்னியின்  செல்வன்  சுமார்  ரகம்  தான். 2007ல்  வந்த  அவரது  “மொழி’  படம்  விமர்சகர்களால்  கொண்டாடப்பட்டது .  ஆனந்த  விகடனில்  50 மார்க்  அள்ளியது ..2008 ல்  வந்த  அபியும் நானும்  குடும்பங்களால்  கொண்டாடப்பட்டு  தமிழக  அரசின்  சிறந்த  இயக்குநருக்கான  விருதைப்பெற்றது.  2011 ல்  வந்த  பயணம்  சிறந்த  கதாசிரியருக்கான  தமிழக  அரசின்  விருதைப்பெற்றது.



 தொடர்ந்து  அவர்  கவுரவம் (2013) , உப்புக்கருவாடு (2016) , பிருந்தாவனம் ( 2017)  , 60 வயது  மாநிறம்  ( 2018)  காற்றின்  மொழி  ( 2018)  படங்களை  இயக்கி  மக்கள்  மத்தியில் மிக  நல்ல  பெயரை  சம்பாதித்தார்.. காட்சிகள்  , வசனங்கள்  மிக  கண்ணியமாக  இருக்கும்.ஆண்களின்  கண்களையும் ஈரமாக்கும்  திரைக்கதை  அமைப்பு  இவரது  பலம் . யதார்த்தமான  வசனங்கள்  இவரது  சிறப்புத்தகுதி. இவர்  இயக்கிய  பொம்மை  என்ற  படம்  முடிஞ்சு  இன்னும்  ரிலீஸ்  ஆகாம  பெண்டிங்ல  இருக்கு 


அப்பேர்ப்பட்ட  இவர் முதல்  முறையாக  காமெடி  மெலோ  டிராமா  எடுத்திருக்கார் .  படம்  எப்படினு  பார்ப்போம்


ஹீரோ ,ஹீரோயின்  இருவரும்   தம்பதிகள் , ஒரு  பெண்  குழந்தை  (  இவரது  கதைகளில்  பெரும்பாலும்  ஹீரோவுக்கு  பெண்  குழந்தையாகத்தான்  இருக்கும் ) ரொம்ப  ஜாலியா  லைஃப்  போய்க்கிட்டு இருக்கு 


 ஒரு நாள்  மலேசியா  போறேன்னு  பொய்  சொல்லிட்டு  ஹீரோ  பெங்களூர்  போய்  அவரது காதலியை  சந்திக்கிறார்.மலேசியா  போன  ஃபிளைட்  ஹைஜாக்  செய்யப்படுது. ஹீரோவின் குடும்பமே பதறுது .ஹீரோவுக்கு  என்ன  ஆச்சோ ?   ஏது  ஆச்சோ?னு  மனைவியும் , நண்பனும்  துடிக்க ஹீரோ  கூலா நண்பன்  வீட்டுக்கு  வந்து  நடந்ததை  சொல்றார்


ஹீரோவும்  , நண்பனும்  ஒரு பிளான்  போட்டு  ஹீரோயினை  ஏமாத்தறாங்க . பழசெல்லாம்  மறந்துடுச்சு  என்ன  நடந்ததுன்னே  தெரியலைனு  ரீல்  விட்டு  சமாளிக்கறாங்க 


 ஹீரோயினோட  தாய் மாமாவுக்கு  இவங்க  மேல  டவுட்,அவர்  என்னென்ன  வேலை  எல்லாம்  பண்ணார் ?  ஹீரோ  எப்படி  சமாளிச்சார்?  என்பதே  மிச்ச  மீதி  திரைக்கதை 


 பஞ்ச  தந்திரம், ரெட்டை  வால்  குருவி   மாதிரி  முழுக்க  முழுக்க  காமெடியா  பண்ணாம  முதல்  பாதி காமெடி  பின்   பாதி  இயக்குநரின்  ஃபேவரைட்டான  செண்ட்டிமெண்ட்  என  பிரிச்சு  பண்ணி  இருக்கார் 


 ஹீரோவா  வைபவ்.அவருக்குன்னே   தெச்சு  வெச்ச  சட்டை  மாதிரி  ஒரு ரெடிமேட் கேரக்டர். நல்லா  உள்  வாங்கி  நடிச்சிருக்கார் .ஹீரோவின்  நண்பனா  கருணகரன். கேரக்டர்  ரோல்  கம் காமெடியன்  ரோல்.  ஹீரோயினாக   வாணி  போஜன்    சீரியலில்  வருவது  போலவே...இவங்க   3  பேரை  விட  எம்  எஸ்  பாஸ்கர்  ரோல்  கேரக்டர்  ஸ்கெட்ச்  நல்லாருக்கு  , அதிக  வாய்ப்பு . இன்னுமே  அவரது  கேரக்டரை  டெவலப்   பண்ணி  இருக்கலாம்.  காதலியா  ரியா  சுமன்.  கிளாமர்    ரோல். மயில்சாமி , சச்சு   சின்ன  கேரக்டர்கள்.


மொத்தமே 8  கேரக்டர்கள்  மட்டுமே  வெச்சுக்கிட்டு  ஒரு  டீசண்ட்டான  படம்  கொடுத்திருக்கார். ஆங்காங்கே  சீரியல் டைப்  காட்சிகள்  எட்டிப்பார்க்குது.  முதல்  45  நிமிடங்கள்  நல்ல  காமெடி  ரைட்டப்.  பிறகு  கொஞ்சம்  போர்  அடிக்கும்  காட்சிகள்.  கடைசி  20  நிமிடங்கள்  ரசிக்க   வைக்கிறது  . க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஓக்கே 


 




நச்  டயலாக்ஸ்  -


1    எனக்கு வலிச்சா இன்னொருத்தருக்கும் வலிக்கும்னு தெரிஞ்சதும் மனசை என்னவோ பண்ணுது , ஒரு வகைல அது எனக்குப்பிடிச்சும் இருக்குது #MalaysiaToAmnesia


2 எல்லாத்தையும் மறந்துட்டதா நடிச்சுட்டு இருக்கேன், ஆனா ஞாபகங்கள் என்னை துரத்திட்டு இருக்கு


3 ஒரு குழந்தைக்கு அப்பாங்கற எண்ணம் மனசுல இருக்கா?


நீ ஓக்கேன்னு சொன்னா இன்னொரு குழந்தைக்கு ரெடி பண்ணிடலாம்


4 ஆட்டோகிராஃப் வாங்கறது பெருசில்லை , ஆட்டோகிராஃப் போடற அளவு முன்னேறனும்


5 எதுக்காக என்னைக்கேட்காம ஃபாலோ பண்றீங்க ? என் கிட்ட சொல்லி இருக்கலாமில்ல?


யாராவது சொல்லிட்டு , பர்மிஷன் வாங்கிட்டு ஃபாலோ பண்ணுவாங்களா?


உங்களை யாராவது ஃபாலோ பண்ணினா உங்களுக்கு கோபம் வராதா?


என்னை சோஷியல் மீடியாவுல என் மனைவி , குழந்தை 2 பேர்தான் ஃபாலோ பண்றாங்க


6 ஒரு நிமிசம் தலையைக்காட்டிட்டுப்போய் இருக்கலாம்


டைம் வரட்டும், தல தளபதி எல்லாரையும் காட்றேன்


7 உன் ஒயிஃப் அர்விந்த்சாமியைத்தவிர எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு இருக்கா


8 ஒரு நல்ல ஐடியா. எல்லாத்தையும் மறைக்கனும்னா எல்லாத்தையும் நீ மறக்கனும்


9 நாந்தான் உங்க ஒயிஃப் , ஞாபகம் இருக்கா?


ஆதார் கார்டு இருக்கா?


10 மெடுல்லா ஆப்ள கேட்டா ல அடிபட்டா மறந்துடுமா


என்னப்பா ஆம்பள கேட்டா பொம்ப்ள கேட்டான்னுட்டு...


11 நான் சொல்றதை நல்லா ஞாபகம் வெச்சுக்கோ , உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை


12 நான் சும்மா இல்லை டெய்லி வீட்ல இருந்து விசிஆர் வரை ஜாகிங் போவென்


ஓஹோ வீடு எங்கே இருக்கு?


விசிஆர் ல

13 சார் , ஒரு என்கொயரி , அவங்க ரெண்டு பேரும் எந்தப்பக்கம் இருந்து வந்தாங்க ?


வெளிப்பக்கத்துல இருந்துதான் வந்தாங்க


14 கார் வாங்கறது , இ எம் ஐ கட்றதை விட காரை துடைக்கறது, கழுவறதுதான் ரொம்ப கஷ்டம்


15 சார், காரைக்கழுவுபதுக்கு 100 ரூபாயா?


சாரை கழுவி ஊத்துனதுக்காக...


16 வேலைக்காரினு நினைச்சு ஒயிஃபை கட்டிப்பிடிச்ட்டேன்


17 இந்த ரூம்ல தான் சம்பவம் நடந்ததா சம்பந்தப்பட்ட நபர் சம்பந்தமே இல்லாம சொன்னாரெ?


18 சும்மா இர்றா சுடுகாட்ல பிறந்தவனே


அது எப்டி உங்களுக்கு தெரியும் ?

நீ என்ன மைசூர் மகாராஜா பேலஸ்லயா பிறந்திருப்பே?


19 நீங்க பேசுனது கால் ரெக்கார்டர்ல இருக்கு , போடவா?


வேணாம், மத்தவங்க பேசுனதைக்கேட்கற பழக்கம் எனக்கில்லை


20 என்னது ? ஒய்ஃப் 2 வா? கில்லாடி மாமா நீங்க


யோவ் என் ஒய்ஃபோட 2 வது செல் ஃபோன் நெம்பர்


சி.பி ஃபைனல் கமெண்ட் - மலேசியா டூ அம்னீசியா 2021 தமிழ் @Zee5 - முதல் பாதி காமெடி மெலோ டிராமா ,பின் பாதி சுமார்தான்.ராதா மோகன் எழுத்து இயக்கம் ok. பஞ்ச தந்திரம் டைப் கதை .

எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 40.

அட்ராசக்க ரேட்டிங் 2.75 / 5.

வைபவ்,வாணிபோஜன்,எம்எஸ் பாஸ்கர்,கருணாகரன் நடிப்பு குட்