Friday, April 02, 2021

இருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+

 


இருள் (2021)  மலையாளம்-   சினிமா  விமர்சனம்  ( க்ரைம்  த்ரில்லர் ) 18+

 

நெட் ஃபிளிக்சில்  2/4/2021  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  ஒன்றரை  மணி  நேரப்படமான  இருள்  படத்தோட  விமர்சனத்தைப்பார்ப்போம்

 

 ஹீரோ  ஒரு  ரைட்டர் . பொதுவாவே  ரைட்டர், கவிஞர்னாலே  ஏகப்பட்ட  காதலிகள் , கள்ளக்காதலிகள்  இருப்பாங்க  இல்லையா?  இவருக்கு ஒரே  ஒரு  நல்ல  காதலி  உண்டு . அவர்  ஒரு  லாயர் . கடந்த 3  மாதங்களாக  இருவருக்கும்  பழக்கம்

 

 ஹீரோ  கூட  ஹீரோயின்  ஜாலியா  10  நிமிசம்  பேசிட்டு  இருக்க  முடிய்றதில்லை. கஸ்டமர்ஸ்  யாராவது  ஃபோன்  பண்ணிட்டே  இருக்காங்க , இதனால  ஹீரோ  கடுப்பாகறாரு.  வீக்  எண்ட் ல  ஒரு  ஜாலி  ட்ரிப்  போலாம்,  ஃபோனை  ஸ்விட்ச்  ஆஃப்  பண்ணி  வீட்லயே வெச்சுட்டு  வந்துடுங்கறார்

 

அதுக்கு  சம்மதிச்ச  ஹீரோயின்  ஹீரோ  கூட  வீக்  எண்ட்  ட்ரிப்க்கு  ஒரு  இடத்துக்கு  போக  ரெடி  ஆகறாங்க . நைட்    டைம் . மழை  வேற . கார்   ரிப்பேர் .  மெக்கானிக்கைக்கூப்பிடலாம்னா கைல  செல்  ஃபோன்  2  பேர்  கிட்டேயும்  இல்லை

 

 அந்த  ஏரியாவில்  ஒரு  பங்களா  இருக்கு . 2  பேரும்  அங்கே  போறாங்க . அங்கே  தான் நம்ம  வில்லன்  தனியா  இருக்கார் . இவங்க  3  பேர்  தான்  மொத்த  படத்துல  வர்ற  கேரக்டர்சே.  இனி  நடக்க  இருக்கும்  சம்பவங்கள்  தான்  கதை

 

ஹீரோவா  சவுபின் ஜாஹிர்  பிரமாதமா  பண்ணி  இருக்கார் , பேசிக்கலா  இவரு  காமெடி  ரோல்ஸ் தான்  நிறைய  பண்ணி   இருக்காரு , கும்பாளிங்க்  நைட்ஸ் ல  கேரக்டர்  ரோல்  பண்ணினவர்


ஹீரோயினா தர்சனா  ராஜ்ந்திரன்   அழகிய  முகத்துடன்  க்யூட்  எக்ஸ்பிரசன்களுடன் கலக்கி  இருக்கார் 


  வில்லனா  ஃபகத்  ஃபாசில்  பின்னி  பெடல்  எடுத்து  இருக்கார் 



கைதி  ,  மாநகரம்  ,மாதிரி  ஒரே  நைட்ல  எடுக்கப்பட்ட  படங்கள்  ஹிட்    ஆவது  நல்ல விஷயம்  தான்




சபாஷ்  டைரக்டர்


1   ஒரே  ஒரு  பங்களா ,  மூணே  மூணு  கேரக்டர்ஸ்  ஒரே  காஸ்ட்யூய்ம்  என  மினிமம்  பட்ஜெட்டில்  திரைக்கதையை  நம்பி  எடுக்கப்பட்ட  படம்


2   ஒரு  20  நிமிட  குறும்படத்துக்கான  சப்ஜெக்ட்தான். 90  நிமிடப்படமாக  இழுத்துச்சென்ற  விதம்  குட் 


3 குணா படத்தில்;  வருவது  போல்    நீளமான  சிங்கிள்  ஷாட்  ஒன்று  பேசப்படும்  விதத்தில்  எடுத்திருக்காங்க , லைட்டிங் , பிஜிஎம், ஆக்டிங்  எல்லாமே  பக்கா  அந்த  சீனில் 



நச்  வசனங்கள்


1   ஒரு  ஆள்  முழுசுமே  பொய்யே  பேச  முடியாது , அதுல  உண்மைகளும்  கொஞ்சம்  கலந்திருக்கும், ஆனா  ஒரு  ஆள்  முழுக்க  உண்மையைப்பேச  முடியும் 


2  கொலை  கதை  எழுதும்  ரைட்டர்னா  ஒரு  கொலையாவது  பண்ணின  அனுபவம்  இருக்கனுமா?


 அட்லீஸ்ட்  கொலையாளி  மனசையாவது  புரிஞ்சு  வெச்சிருக்கனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  நைட்  டைம்  2  பேரு  லாங்  ட்ரைவ்  போறாங்க . ஹீரோயினுக்கு  அடிக்கடி  கால்  வருவதால்  செல்  ஃபோன்  கொண்டு   வர  வேணாம்கறார்  , ஹீரோ  , அது ஓக்கே,  ஆனா  ஹீரோ  செல்  ஃபோன்  கொண்டு  வர  தடை  இல்லையே?  கார்  ரிப்பேர்னா  மெக்கானிக்கைக்கூப்பிட  ஆக்சிடெண்ட்  ஆனா  ஆம்புலன்ஸ்க்கு  ஃபோன்  பண்ண.. இப்டி ,  லாயரான  நாயகி  அதை  சிந்திக்க  மாட்டாரா?


2  ரைட்டர்  தான்  எழுதிய  நாவலில்  5  கொலைகள்  என  சொல்லும்போது  வில்லன்  6  கொலைகள்  என்கிறார், அப்போ  ஹீரோ  ஹீரோயினுக்கு  டவுட்டே  வர்லையா?


3  முன்  பின்  அறிமுகம் இல்லாத  ஆளைக்கண்டு  ஹீரோ  முகத்தில்  பயம் , அதிர்ச்சி,  எல்லா  உணர்வுகளையும்  கலவையா   காட்றார் , ஆனா  ஹீரோயின்  அலட்டிக்கவே  இல்லையே?சகஜமா  வில்லன்  கிட்டே  பேசறாரே? எப்படி?


4  க்ளைமாக்ஸ்  காட்சி  சொதப்பல். ஒரு  ஜெர்க்  கொடுக்கனும்கறதுக்காக  எடுத்த மாதிரி  இருக்கு 


சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -  ஃபகத்  ஃபாசில்  ரசிகர்களுக்கும் ,  மலையாளப்பட  விரும்பிகளூக்கும் ,  மிஸ்ட்ரி  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களுக்கும்  பிடிக்கும்,  சராசரி  ர்சிகர்களைக்கவர்வது  சிரமம்   ரேட்டிங் 2.5 / 5