இருள் (2021) மலையாளம்- சினிமா
விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+
நெட் ஃபிளிக்சில்
2/4/2021 ரிலீஸ் ஆகி இருக்கும் ஒன்றரை
மணி நேரப்படமான இருள் படத்தோட விமர்சனத்தைப்பார்ப்போம்
ஹீரோ ஒரு ரைட்டர்
. பொதுவாவே ரைட்டர், கவிஞர்னாலே ஏகப்பட்ட
காதலிகள் , கள்ளக்காதலிகள் இருப்பாங்க இல்லையா?
இவருக்கு ஒரே ஒரு நல்ல காதலி உண்டு . அவர்
ஒரு லாயர் . கடந்த 3 மாதங்களாக
இருவருக்கும் பழக்கம்
ஹீரோ கூட ஹீரோயின் ஜாலியா
10 நிமிசம் பேசிட்டு
இருக்க முடிய்றதில்லை. கஸ்டமர்ஸ் யாராவது
ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க , இதனால ஹீரோ கடுப்பாகறாரு. வீக் எண்ட்
ல ஒரு
ஜாலி ட்ரிப் போலாம்,
ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வீட்லயே வெச்சுட்டு வந்துடுங்கறார்
அதுக்கு சம்மதிச்ச ஹீரோயின்
ஹீரோ கூட வீக் எண்ட் ட்ரிப்க்கு
ஒரு இடத்துக்கு போக ரெடி ஆகறாங்க . நைட் டைம் . மழை
வேற . கார் ரிப்பேர் . மெக்கானிக்கைக்கூப்பிடலாம்னா கைல செல் ஃபோன் 2 பேர் கிட்டேயும்
இல்லை
அந்த ஏரியாவில்
ஒரு பங்களா இருக்கு . 2
பேரும் அங்கே போறாங்க . அங்கே தான் நம்ம
வில்லன் தனியா இருக்கார் . இவங்க 3 பேர் தான் மொத்த படத்துல
வர்ற கேரக்டர்சே. இனி நடக்க இருக்கும்
சம்பவங்கள் தான் கதை
ஹீரோவா சவுபின் ஜாஹிர் பிரமாதமா பண்ணி இருக்கார் , பேசிக்கலா இவரு காமெடி ரோல்ஸ் தான் நிறைய பண்ணி இருக்காரு , கும்பாளிங்க் நைட்ஸ் ல கேரக்டர் ரோல் பண்ணினவர்
ஹீரோயினா தர்சனா ராஜ்ந்திரன் அழகிய முகத்துடன் க்யூட் எக்ஸ்பிரசன்களுடன் கலக்கி இருக்கார்
வில்லனா ஃபகத் ஃபாசில் பின்னி பெடல் எடுத்து இருக்கார்
கைதி , மாநகரம் ,மாதிரி ஒரே நைட்ல எடுக்கப்பட்ட படங்கள் ஹிட் ஆவது நல்ல விஷயம் தான்
சபாஷ் டைரக்டர்
1 ஒரே ஒரு பங்களா , மூணே மூணு கேரக்டர்ஸ் ஒரே காஸ்ட்யூய்ம் என மினிமம் பட்ஜெட்டில் திரைக்கதையை நம்பி எடுக்கப்பட்ட படம்
2 ஒரு 20 நிமிட குறும்படத்துக்கான சப்ஜெக்ட்தான். 90 நிமிடப்படமாக இழுத்துச்சென்ற விதம் குட்
3 குணா படத்தில்; வருவது போல் நீளமான சிங்கிள் ஷாட் ஒன்று பேசப்படும் விதத்தில் எடுத்திருக்காங்க , லைட்டிங் , பிஜிஎம், ஆக்டிங் எல்லாமே பக்கா அந்த சீனில்
நச் வசனங்கள்
1 ஒரு ஆள் முழுசுமே பொய்யே பேச முடியாது , அதுல உண்மைகளும் கொஞ்சம் கலந்திருக்கும், ஆனா ஒரு ஆள் முழுக்க உண்மையைப்பேச முடியும்
2 கொலை கதை எழுதும் ரைட்டர்னா ஒரு கொலையாவது பண்ணின அனுபவம் இருக்கனுமா?
அட்லீஸ்ட் கொலையாளி மனசையாவது புரிஞ்சு வெச்சிருக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நைட் டைம் 2 பேரு லாங் ட்ரைவ் போறாங்க . ஹீரோயினுக்கு அடிக்கடி கால் வருவதால் செல் ஃபோன் கொண்டு வர வேணாம்கறார் , ஹீரோ , அது ஓக்கே, ஆனா ஹீரோ செல் ஃபோன் கொண்டு வர தடை இல்லையே? கார் ரிப்பேர்னா மெக்கானிக்கைக்கூப்பிட ஆக்சிடெண்ட் ஆனா ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ண.. இப்டி , லாயரான நாயகி அதை சிந்திக்க மாட்டாரா?
2 ரைட்டர் தான் எழுதிய நாவலில் 5 கொலைகள் என சொல்லும்போது வில்லன் 6 கொலைகள் என்கிறார், அப்போ ஹீரோ ஹீரோயினுக்கு டவுட்டே வர்லையா?
3 முன் பின் அறிமுகம் இல்லாத ஆளைக்கண்டு ஹீரோ முகத்தில் பயம் , அதிர்ச்சி, எல்லா உணர்வுகளையும் கலவையா காட்றார் , ஆனா ஹீரோயின் அலட்டிக்கவே இல்லையே?சகஜமா வில்லன் கிட்டே பேசறாரே? எப்படி?
4 க்ளைமாக்ஸ் காட்சி சொதப்பல். ஒரு ஜெர்க் கொடுக்கனும்கறதுக்காக எடுத்த மாதிரி இருக்கு
சி.பி ஃபைனல் கமெண்ட் - ஃபகத் ஃபாசில் ரசிகர்களுக்கும் , மலையாளப்பட விரும்பிகளூக்கும் , மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கும் பிடிக்கும், சராசரி ர்சிகர்களைக்கவர்வது சிரமம் ரேட்டிங் 2.5 / 5
1 comments:
18+ ennanu sollaliye
Post a Comment