கேப்டன் பிரபாகரன் படத்தின்
2 ம் பாகம் என பொய்யாக விளம்பரம்
செய்து அசுரன் எடுத்து
கையை சுட்டுக்கிட்டாங்க . புலன்
விசார்ணை மெகா ஹிட், அதன்
2 ம் பாகம் என சொல்லிக்கிட்டு வந்த பிரசாந்த்தின் புலன் விசாரணை
2 வந்த
சுவடே தெரியலை. ஆபாவாணனின்
ஊமை விழிகள் ட்ரெண்ட்
செட்டர் படமாக அமைந்ததால்
அதன் 2 ம் பாகமான
மூங்கில் கோட்டைக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது , ஆனா படம் எடுக்கவே இல்லை
சந்தானம் ஹீரோவாக நடிச்ச
தில்லுக்கு துட்டு முதல் பாகம் ஹிட் , 2ம்
பாகம் சுமார் ஹிட் . ஜி வி
பிரகாஷின் டார்லிங் மெகா ஹிட் அதன் 2
ம் பாகம்
மீடியம் ஹிட் பொலிட்டிக்கல் சட்டயர் படங்களின் மைல் கல் என சொல்லப்படும் அமைதிப்படை அதிரி புதிரி ஹிட் , அதன் 2ம் பாகமான நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அட்டர் ஃபிளாப்
மேலே சொன்ன தகவல்களில்
இருந்து நமக்கு தெரிய வரும் விஷயம்
என்னன்னா பொதுவா ஒரு ப்டம் ஹிட் ஆகிட்டா அதன் 2ம் பாகம் முதல் பாகம் அளவுக்கு ஹிட் ஆகாது என்பதே .
மலையாளத்தில் விதிவிலக்குகள் உண்டு .
சிபிஐ டைரி குறிப்பு
பல பாகங்கள் வெளியாகி
ஹிட் அடிச்சுது.
க்ரைம் கதை ட்விஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்
ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம்
கேரள இண்டஸ்ட்ரியையே புரட்டிப்போட்ட படம், அதன்
2 ம் பாகம் அமேசான்
பிரைமில் வெளியாகி ரசிகர்களின்
ஏகோபித்த பாராட்டுக்களுடன் செம ஹிட் அடிச்சு இருக்கு
கட்டுமானப்பணி நடந்துட்டு இருக்கற
போலீஸ் ஸ்டேஷன்லயே டெட்பாடியை
புதைச்சுட்டு அசால்ட்டா வந்த ஹீரோ அதைப்பார்த்த
ஒரு சாட்சி 2ம் பாகத்தில் கிளம்பி
வர எப்படி அதை ஹேண்டில் பண்றார்? தப்பிச்சாரா? இல்லையா? என்பதே கதை
இந்தப்பட விமர்சனங்கள்
பல வந்துக்கிட்டு இருந்தப்போ பலரும்
முதல் 30 நிமிடங்கள் டெட் ஸ்லோ, தேவை இல்லாத காட்சிகள் , அதை எடிட் பண்ணி இருக்கலாம், என கருத்து
தெரிவிச்சாங்க . அதே போல் முதல் பாகத்துல் இல்லாத
கெட்ட பழக்கமான தண்ணி
அடிக்கும் பழக்கம் ஹீரோவுக்கு
இருக்கு என்பது தேவை இல்லாதது என்றார்கள்.
ஆனா இயக்குநர் எல்லாத்தையும்
ஒரு காரணத்தோடதான் வெச்சிருக்கார்.
ஹீரோவா கம்ப்ளீட் ஆக்டர்
மோகன்லால் . பிரமாதமா பண்ணி இருக்கார் . கமலுக்கும், இவருக்கும் என்ன வித்தியாசம்னா கமல் நடிப்பில் இந்தா பாத்துக்க என் நடிப்பை என கெத்து காட்டுவார். ஆனா மோகன் லால் அந்த கேரக்டராவே மாறிடுவார் . சில கண் அசைவுகளிலேயே அப்ளாஸ்
அள்ளறார்
ஹீரோயினா மீனா. உ
டம்பு கொஞ்சம் பூசி இருந்தாலும் இன்னமும் நாம
என் ராசாவின் மனசுலே , எஜமான் மீனாவையே
நினைச்சுக்கிட்டு இருந்தா எப்படி? அவரது
முக பாவனைகள் , கண்கள் , கன்னக்கதுப்புகள் எல்லாமே
பதட்டத்தை அருமையா வெளிப்படுத்தி
இருக்கு , தமிழ் சினிமாவில் இதுபோல
பயத்தை , பதட்டத்தை
வெளிப்படுத்துவதில் விற்பன்னர்கள் நளினி
( 100 வது நாள்
) , ஜீவிதா
( ஹலோ யார் பேசறது?) கார்த்திகா
( பூ விழி வாசலிலே
செம கட்டை என சி செண்ட்டர் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ஆஷா சரத் முதல் பாகம் அளவுக்கு அதிக காட்சிகள் இல்லாமல் போனது ஏமாற்றமே!
மகள்களாக இருவர் பரவாயில்லை
ரக நடிப்பு , ஐ ஜி ஆக வரும் முரளி கோபி நடிப்பு பக்கா ரகம்
அனில் ஜான்சனின் பின்னணி இசை குட் , இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம், எடிட்டிங், ஒளிப்பதிவு இரண்டும் கனக்ச்சிதம்
திரைக்கதை எழுதிய ஜீத்து ஜோசப்தான் ரியல் ஹீரோ
ஸ்பாய்லர் அலெர்ட்
சபாஷ் டைரக்டர் & திரைக்கதை ஆசிரியர்
1 டெட் பாடியை சப்போஸ் போலீஸ் கண்டுபிடிச்சா என்ன ஆகும்? என்ன பண்ணலாம்? என ஹீரோ ஒரு சினிமாவாக ஸ்கிரிப்ட் எழுதி அதை புத்தமாக வெளியிட்டு துருப்புச்சீட்டாக வைத்துக்கொள்லும் ஐடியா அபாரம்
2 கடைசி 45 நிமிடங்கள் பல்சை எகிற வைக்கும் காட்சி அமைப்பு
3 முதல் பாகத்துக்கும் இரண்டாம பாகத்துக்கும் உண்டான கால இடைவெளியான ஆறு வருடங்களில் ஹீரோ பணக்காரராக ஆகி விட்டதால் அந்த ஊர் மக்களாலேயே பொறாமையாக பார்க்கப்படுகிறார் என்ற பாய்ண்ட் கச்சிதம்
திரைக்கதையில் சில நெருடல்கள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்
லாஜிக் மிஸ்டேக் 1= ராஜிவ் காந்தி,இந்திராகாந்தி மாதிரி பெரிய தலைவர்கள் அல்லாத ஒரு சாதா"கொலை வழக்கில் துப்பு"துலக்க போலீஸ்காரர்கள் இருவர் 2 வருடங்கள் ட்யூட்டிக்கே போகாமல் ஸ்பையாக ஹீரோ"வீட்டருகே வசித்து"உளவு"பார்த்தார்கள்"என்பது.சட்டத்தில் அதுக்கு"இடம்"இல்லை
லாஜிக் மிஸ்டேக் 2= தில்லாலங்கடியான ஹீரோ"தன்"வீட்டில்" போலீஸ் ஒட்டுக்கேட்கும் கருவி வைத்திருக்கும் என்பது"தெரியாமலா இருப்பார்?மனைவி மகளுடன்"அவுட்டோர்"போறப்ப"ஓப்பன்"ஸ்பேசில் மட்டும் அது"பற்றி டிஸ்கஸ் பண்ணுவோம்,வீட்டில் ஏதும் பேச"வேணாம்னு சொல்ல மாட்டாரா?
லாஜிக் மிஸ்டேக் 3− கொலை காரணமாக"மனோரீதியாக பாதிக்கப்பட்ட மகளை அதே ஊரில் அதே வீட்டில் யாராவது"வைத்திருப்பார்களா?மன மாறுதலுக்காக வேறு ஊர் அனுப்ப"மாட்டார்களா? மகள்களிடம் ஹீரோ காலேஜில் ,நண்பர்களிடம் இது"பற்றி டிஸ்கஸ்"பண்ண"வேணாம்"என"வார்ன் பண்ணி இருக்க"மாட்டாரா?
லாஜிக்"மிஸ்டேக் 4− ஹீரோவை மாட்டி விடும் சாட்சி ஒருவர் அதற்கு"விலையாக"பிசாத்து"5
லட்சம் கேட்பதும் அதுக்கு" போலீஸ் டைம் குடுங்க என கேட்பதும் ஓவர்.போலீசை"நம்புவதை விட ஹீரோவை"நம்பி"அவரையே மிரட்டி வாங்குவதுதான் "சாட்சிக்கு"சேப்டி?
லாஜிக்"மிஸ்டேக்"6− பொதுவா குற்றவாளிகளிடம் அடித்து உண்மையை கக்க வைப்பதை விட உண்மை கண்டறியும் சோதனை,ஹிப்னாடிசம் மாதிரிதான் போலீஸ் ட்ரை பண்ணுவாங்க.ஆனா இரு"பாகங்களிலுமே அது முயற்சிக்கப்படவே இல்லையே?ஏன்?
7 ஆறு வருட சிரமங்களுக்குப்பிறகு கிடைச்ச டெட்பாடியை எலும்புக்கூடுகளை ஃபாரன்சிக் ஆஃபீசுக்கு பத்திரமாக பக்கத்தில் இருந்தே ரிப்போர்ட் வாங்காமல் ரொம்ப அசால்ட்டாக விட்டுட்டு வருவதும் அது ஹீரோவால் மாற்றப்படலாம்
என்பதையும் யூகிக்க மாட்டாங்களா?
த்ரிஷ்யம் 2 லாஜிக் மிஸ்டேக்ஸ் 8 - கொலையாளியைப்பற்றி, டெட் பாடி இருக்கும் இடம் பற்றி துப்புக்கொடுத்தால் ரூ 25 லட்சம் பரிசு என போலீஸ் அறிவித்தும் அந்த சாட்சி 5 லட்சம் ரூபா குடுங்க என இறங்கி வருவது ஏன்? வழக்கமா ரேட்டை ஏத்துவாங்களா? குறைப்பாங்களா?
சிபி ஃபைனல் கமெண்ட் - த்ரிஷ்யம்"2− கற்பனையில் கூட யூகிக்க முடியாத"திருப்பங்கள்" கொண்ட"கடைசி 50 நிமிடங்கள்.ஸ்லோவாகத்தோன்றும் முதல் 30 நிமிடங்களைக்கூட ஸ்கிப்"பண்ணினால் படம் புரியாத விதமாக"அபாரமான"திரைக்கதை,மோகன்லாலின் நுணுக்கமான விழி அசைவு நடிப்பு,ஜீத்து ஜோசப்பின் ராக்கிங் இயக்கம். ரேட்டிங் 3.75 / 5 அமேசான் பிரைம்ல சப்டைட்டிலுடன் கிடைக்குது