Monday, November 09, 2020

RAMA RAMA RE - 2016 ( கன்னடம் ) – சினிமா விமர்சனம் ( விருதுகளைக்குவித்த கமர்ஷியல் ஃபிலிம்)

RAMA RAMA RE  - 2016   (  கன்னடம் ) – சினிமா  விமர்சனம்

 


ஒரு  டைரக்டரோட முதல்  படம் எப்பவும்  செம  ஹிட் ஆகிடும். ஏன்னா  தன்னை  நிரூபிச்சாகனும், பல  போராட்டங்களுக்குப்பின் கிடைக்கும் முதல்  வாய்ப்பை  யாரும்  கோட்டை  விட்டுட மாட்டாங்க , வாழ்நாள்  முழுக்க  தான் கத்துக்கிட்ட  மொத்த  வித்தையையும் ஒத்தைப்படத்துல  இறக்கிடனும்னு ஒரு ஆவேசம்  இருக்கும்  ( நன்றி – என் லிங்குசாமி)). அதனால  எந்த  மொழிப்படத்துலயும் ஒரு டைரக்டரின்  முதல்  படத்தை  நீங்க  தைரியமாப்பார்க்கலாம்

 

2016 ஆம்  ஆண்டின்  கர்நாடக  மாநில  அரசின்  சிறந்த  புதுமுக  இயக்குநர்  விருது   பெற்ற  படம்  இது . 2018ல்  தெலுங்கில் AATTAGADHARAA SIVA  ரீமேக்  ஆன  படம், இப்போ மராத்தில  ரீமேக்கிட்டு இருக்காங்க . 2017ஆம் ஆண்டின் பிரின்ஸ்  ஆஃப் பிரெஸ்கே  அகாடமி  அவார்டு  வாங்குன படம்

 

இது  எல்லா  தரப்பினருக்குமான  மாமூல்  மசாலா  படம்  கிடையாது. சிம்பு நடிச்ச  வானம், கார்த்தி  நடிச்ச  பையா , , மணிரத்னம் இயக்கிய திருடா  திருடா  மாதிரி படம்  பூரா  ரோடு  டிராவல்லயே கதை  நகரும்  படம். சிலருக்கு  பிடிக்கலாம், பிடிக்காமயும் போகலாம், ஆனா  அங்கே  இந்தப்படம்  கம்ர்ஷியலாவும் ஜெயிச்சிருக்கு , விமர்சன  ரீதியாவும்  பாராட்டுக்களை  அள்ளிக்குவிச்சிருக்கு

 

ஒரு தூக்கு  தண்டனைக்கைதி  ஜெயில்ல  இருந்து  தப்பிடறான். ஃபிளாஸ்  நியூஸ்ல , பேப்பர்ல ,  எங்கே  பார்த்தாலும்  அந்த  நியூஸ்  தான் ஓடுது. அவன்  ஓடி ஓடி  கடைசில  ஒரு ஜீப் முன் கை காட்டி  லிஃப்ட் கேட்கறான்.  ஒரு வயசான  பெரியவர் ஜீப்பை  ஓட்டிட்டு  வர்றார். அவர்  இவனை  ஏத்திக்கறார். 2  பேருமே  ரிசர்வ்டு டைப் போல, அதிகம்  பேசிக்கறதே  இல்லை

 

மவுனராகம்  படத்துல  மோகன் , ரேவதி  மாதிரி  2 பேருமே  பேசிக்கலைன்னா  கதை  போரடிச்சிடுமே? கார்த்திக்  கேரக்டர்  வரலை? இப்போ  பிதாமகன்ல  விக்ரம்  கேரக்டர்  அமைதியா  இருக்குன்னா சூர்யா  கேரக்டர்  லொட  லொட  டைப்பா  கேரக்டர்  ஸ்கெட்ச்  பண்ணினது  எதுக்கு ? இப்படி  எதிர்  எதிர் துருவங்களா  இருந்தாதான்  சுவராஸ்யம். ஒரு  லவ் ஜோடி   ஓடி வருது. அவங்களும்  ஜீப் ல  லிஃப்ட்  கேட்கறாங்க . அவங்களையும்  ஏத்திக்கறார். தேர்தல்  சமயத்துல  அரசியல்  கட்சிகள்  கூட்டணிக்கு  யார்  வந்தாலும்  சரி  சேர்த்துக்குவோம்னு  கூச்சமே இல்லாம  சொல்ற  மாதிரி  இவரு  எல்லாரையும்  ஏத்திக்கறார்.

 

 அந்த  லவ்  ஜோடியை  இரு தரப்பு  ஆட்களும்  இரு வேறு வாகனங்களில்  தேடி  துரத்திட்டு  வர்றாங்க

 

இந்த   ஜீப்பின்  பயணம்  தான்  கதை . அவங்க  யார் யாரை சந்திச்சாங்க ? என்ன என்ன  பிரச்சனைகளை  எப்படி  சால்வ்  பண்ணாங்க   என்பதை  விறுவிறுப்பான  திரைக்கதைல  சொல்லி இருக்காங்க . க்ளைமாக்ஸ் ல  ஒரு ட்விஸ்ட்  இருக்கு

 

யூ ட்யூப்லயே சப் டைட்டிலோட  கிடைக்குது . முதல்  10 நிமிடங்கள்  சப் டைட்டில்  இல்லை , அதுக்குப்பின்  சப் டைட்டில்  வரும்

 

இதுல  தூக்கு தண்டனைக்கைதியா  நடிச்சவர்  நம்ம  நான்  கடவுள்  ஆர்யா  மாதிரி  ஹேர்  ஸ்டைல் ,  முகத்தோற்றம்  எல்லாம்.   நல்ல  நடிப்பு . குறை  சொல்ல முடியாத  பங்களிப்பு

 

 ஜீப்  ஓட்டி வரும்  பெரியவர்  நடிப்பு  சில  இடங்களில்   டச்சிங்கா  இருக்கு

 

 காதலர்களா  வருபவர்கள்  அருமையான  நடிப்பு . குறிப்பா  காதலன்  சொர்ணமுகி  இரா  பார்த்திபன்  மாதிரி  தொண  தொண  என  பேசிக்கிட்டே  வரும்  காட்சிகள்  கல கலப்பு

 

 காதலியா  வருபவர்   சூரிய  வெளிச்சத்தில்  சுமார் அழகாகவும்,  இரவில்  மெழுகுவர்த்தி  வெளிச்சத்தில்  க்ளோசப்  சீனில்  அழகியாகவும்  தெரிகிறார். அவரது  முக  பாவனைகள்  அம்சம்

 

தன்  மனைவியை  பிரசவ  வலியிலிருந்து  காப்பாற்றியவர்களுக்கு  நன்றி சொல்லும் மிலிட்ரி  வீரர்  நடிப்பு  அற்புதம், அந்த  20  நிமிச  காட்சிகள்  பெண்களின்  மனதை  மிகவும் கவரும்

 

தங்களைத்துரத்தி  வரும்  இரு  கோஷ்டிகளிடம்  கொலையாளியைப்பிடித்துக்கொடுத்தால்  அரசு  தர  இருக்கும்  10 லட்சம்  ரூபா  பரிசை  ஆளுக்குப்பாதியா  பிரிச்சுத்தந்துட்றேன்  என  உதார்  விட்டு  எஸ்  ஆகும் காட்சி  அசத்தல்




 நச்  வசனங்கள்

 

1        உனக்கு  ஜீப்  ஓட்டத்தெரியுமா?

பொண்ணையே ஓட்டிட்டு வர்றேன், ஜீப்  ஓட்ட மாட்டேனா?


2  மிலிட்ரிலயாவது  போர் வந்தாதான்  சண்டை  போடுவீங்க , நாங்க  டெய்லி சண்டை தான் 


3   நாட்டையே  காப்பாத்தும்  மிலிட்ரி  வீரன் நீ ,  உன் குடும்பத்தைக்காப்பாற்ற  ஆள் இருக்காதா? 


4   கடவுள்  ஒவ்வொருத்தர்  உடம்புலயும் வாழறார்.   அவங்கவங்க  காலம் முடிஞ்சதும்  அவர்  கிளம்பிடுவார் . அப்படிக்கிளம்பும்போது   அவருக்கு  எந்த  வலியையும் நாம  கொடுக்காம இருக்கனும், அதுதான் நல்ல வாழ்க்கைக்கான   அடையாளம் . இந்த  உடம்புக்கு  ஏண்டா  வந்தோம்?னு அவரை  ஃபீல் பண்ண  வெச்சுடக்கூடாது 


5  பிரசவம்  பெண்ணுக்கு  2 வது   ஜென்மம்,  நீ குழந்தைக்கு  மட்டும்  உயிர் தர்லை . பெண்ணுக்கும் தான் இன்னொரு பிறப்பு  தந்திருக்கே? 


6   நாம  சுவாசிக்கற   அதே  காத்தைத்தான்  காட்டில் சிங்கம்,  புலி  எல்லாம் சுவாசிக்குது ., அதனாலயோ என்னவோ  நமக்கும் அவங்க  குணம்  வந்திடுது


7     பொண்ணோட  மனசு  பால்  மாதிரி .. நீ  சுக்ரா  இருந்து  அவ வாழ்வை இனிப்பாக்கனும் 


8   நீ குவாட்டரு  அவ வாட்டரு ., 2 பேரும் இனி மிக்ஸ் ஆகிடுங்க 


9   ஒரு குற்றம்  செயுயும்போது  நம்மையும்  அறியாம  ஒரு நல்லதும்  செய்யறோம்


10   எல்லாரும்  நமக்கு  நண்பர்கள்தான்  , உறவினர்கள்  தான்  , ஆனா  போரில்  போர்க்களத்தில்  உறவினர்கள்  கிடையாது 


11  பிறப்பும், இறப்பும்   வலியை  உணர  வைக்கும் 


12   ஒவ்வொரு  இறப்பின்போதும்  ஒரு புதிய  பிறப்புக்கு  வழி  உண்டாகிறது 




 சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   ஒளிப்பதிவு  , இசை , எடிட்டிங், நடிப்பு  எல்லாமே  சராசரி  தரத்துக்கு    பல  படி அதிகமாவே  இருக்கு. ஏ செண்ட்டர்  ரசிகர்களுக்கான படம் , ரேட்டிங்  3 / 5    யூ  ட்யூப்ல  கிடைக்குது


0 comments: