விசாரணை என்ற பிரமாதமான படம் இயக்கிய வெற்றி மாறன் அதே சாயலில் அதே பாணியில் அதே கதைக்கருவில் கொஞ்சம் சுத்தி அடிச்சு ஒரு கதை ரெடி பண்ணி இருக்காங்க. இதுக்கு உதாரணமா மலையாளத்தில் பிருத்விராஜ் நடிச்ச 2 படங்களை சொல்லலாம், டிரைவிங் லைசென்ஸ், அய்யப்பனும் கோஷியும். இரண்டும் ஈகோ கிளாஸ்தான் கதை , திரைக்கதை வேற. அதே மாதிரி தான் இதுவும்.. ஆனா விசாரணை தந்த தாகமோ நம்பகத்தன்மையோ , பதைபதைப்போ இது தர்ல , ஆனாலும் எடுத்துகொண்ட கதைக்கருவுக்கு நல்லா உழைசிருக்காங்க
ஹீரோ ஒரு சாதாரண உணவு டெலிவரிபாய். லவ் மேரேஜ் பண்ணி இருக்கார். பைக்ல ஒய்ஃப் கூட ஒரு பக்கம் போய்க்கிட்டு இருக்கும்போது போலீஸ் செக்கிங். வழக்கமா 100 ரூபா பிச்சை எடுக்குமே டிராஃபிக் போலீஸ் அதே மாதிரி ஒரு சிச்சுவேஷன், இன்ஸ்பெக்டர் கொஞ்சம் கெத்தா பிச்சை கேட்கறாரு, ஹீரோ கொஞ்சம் தெனாவெட்டா பதில் சொல்ல இன்ஸ்பெக்டருக்கு ஈகோ டச் ஆகுது. எப்படி எல்லாம் அவரை பழி எடுக்கறார் , அலைய வைக்கிறார் என்பதே கதை
ஹீரோவும் , தயாரிப்பாளரும் ஒருவரே ரமேஷ் ரவி. இவருக்கு முக பாவனைகள் ஒத்துழைக்கலை. விஜய் ஆண்ட்டனி மாதிரி எல்லாத்துக்கும் ஒரே பாவனை தான்
ஹீரோயினா ரவீனா ரவி. கலக்கலான நடிப்பு. கலங்க வைக்கும் ஆத்மபூர்வமான பங்களிப்பு’
வில்லனா போலீஸா மைம் கோபி. எகத்தாளமான நடிப்பு . செம
பாடல்கள் 2 தேவையே இல்லை. ஸ்பீடு பிரேக்கர்
ஒளிப்பதிவு எடிட்டிங் ஓக்கே ரகம்
நச் டயலாக்ஸ்
1 ஆஃபீஸ்ல உன்னை டிராப் பண்ணவா?
எதுக்கு? தடுக்கி விழுந்தா ஆஃபீஸ் பக்கத்துலயே இருக்கு
அப்போ தூக்கிட்டு வந்துடவா?
2 போலீஸ்ல காட்டக்கூடாத 2 விஷயங்கள்
1 முகத்துல பயம் 2 பாக்கெட்ல பணம்
3 நைட் டைம்ல மட்டும் போலீஸ் கிட்டே மாட்டிக்கவே கூடாது.திருடன் கிட்டே மாட்டிக்கிட்டா கூட அண்டர்வேராவது மிஞ்சும்
4சட்டம்கறது பணம் இருக்கறவங்களுக்கு வாலாட்ற நாய்
5 போலீஸ் யூனிஃபார்மோட வாட்ச்மேனைப்பார்த்தாலே ஜனங்க ஒரு அடி தள்ளி நிக்கக்காரணம் போலீஸ் மேல வெச்சிருக்கும் பயம், அதை சுத்தமா காலி பண்ணினது சோசியல் மீடியாக்கள் தான்
6 ஒரு கிரிமினல் போலீஸ் மாதிரி யோசிக முடியாது, ஆனா ஒரு போலீஸ் கிரிமினல் மாதிரி யோசிக்க முடியும்
7 போலீஸ் ஸ்டேசஹனுக்கு ஒரு பிரச்சனையோட ஒருத்தன் வந்தா அவன் வாழ்நாள் பூரா நிம்மதியாவே இருக்க முடியாது
8 போலீசான நாங்க பப்ளிக் சர்வண்ட் தான், ஆனா நிஜத்துல பப்ளிக் தான் எங்க சர்வண்ட்
லாஜிக் சொதப்பல்கள்
1 போலீஸ் ஸ்டேஷனுக்கு முதல் முறை போய் மாட்டிக்கிட்ட ஹீரோ மீண்டும் தனியாவே என்ன தைரியத்தில் போறார்? வக்கீலோட போலாமே?
2 கணவன் 3 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை என்றதும் மனைவி பதற வேண்டாமா? சும்மா ஃபோன் மட்டும் பண்ணிட்டு இருக்கு
3 போலீஸ் கைதியை அடிப்பதை போலீசே வீடியோ எடுத்து வாட்சப்பில் பரப்புவது ஓவர். அவருக்குதான் ஆபத்து
4 ஹீரோயின் மேல் கடைசி வரை போலீஸ் கை வைக்காதது..
5 வக்கீலோடு ஹீரோயின் போலீஸ் ஸ்டேஷன் போகும்போது வக்கீல் எதிரிலேயே வில்லன் தெனாவெட்டாக பேசுவது
சி.பி ஃபைனல் கமெண்ட்- விறுவிறுப்பாக 2 மணி நேரம் எடுத்துக்கொண்ட கதையை நல்லாதான் சொல்லி இருக்காங்க, ஆனா நம்பகத்தன்மை சுத்தமா இல்லை . ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் 41, ரேட்டிங் 2.75 / 5
0 comments:
Post a Comment