Thursday, November 12, 2020

சூரரைப்போற்று -சினிமா விமர்சனம்


இந்தியாவில் வட  மாநிலங்களை  விட தென் மாநிலங்கள்  முன்னேறியதற்கு முக்கியக்காரணமே  போக்குவரத்தில்   அதன் உள் கட்டமைப்புகள்  தான். தமிழகம்,   கேரளா  உடபட  பல மாநிலங்களில்  கிராமங்களில்  கூட மினி பஸ்  வசதி  உண்டு .அது  சின்ன  ஊருப்பா , அது  ஸ்டாப்பிங் கிடையாது  என சொல்லப்படும்  பல கிராமங்களில்  பஸ்சை , ரயிலை  போராட்டம்  செய்து  நிற்க வைத்தவர்  அப்பா . அவரது  மகன்  கொஞ்சம்  அதிகமா சிந்திச்சு  பனக்காரர்கள்   மட்டுமே  செல்லும்  விமானத்தில்  சாமான்ய  மக்கள் , சராசரி நடுத்தர  குடும்பங்கள்  பயணிக்கனும்  என  கனவு காணும்  ஒரு இளைஞனின்  சுய சரிதைதான்  இது 


விமான  சேவையில்  எளிமை  புரட்சியைக்கொண்டு வந்த  ஜி ஆர்  கோபிநாத்தின்  வாழ்க்கை  வரலாறுதான்  இந்தப்படம் . தமிழ்  சினிமாவில்  பயோ  பிக்சர்கள்  வருவது  மிகக்குறைவு , வந்தாலும்  கமர்ஷியலா  போகாது . அந்த  நியதியை  இது உடைத்திருக்கிறது . கூடவே  தியேட்டரில்  ரிலீஸ்  ஆகாமல்  ஓ டி டி  தளத்தில்  ரிலீஸ்  ஆகி  மக்களின்  ஆதரவைப்பெற்ற  முதல்  படம், முதல்  பெரிய  ஹீரோ  படம்  என்ற  அளவிலும்  இது  கவனம்  பெறுது 


ஹீரோவா  சூர்யா. ஆறு  பட  கெட்டப்பில்  பல  காட்சிகளில்  வருகிறார். விமானியாக  வரும்போது   வாரணம் ஆயிரம்    கெட்டப்  நினைவு வருது . காற்று  வெளியிடை     கார்த்தி  கெட்டப்பும்  நினைவு வருது . சமீபகால  தொடர்  தோல்விகளால்  துவண்டு  கிடந்த  சூர்யாவுக்கு  இது  போராடிக்கிடைத்த  வெற்றி . படம்   முழுக்க  இவர்  நடிப்பு  ராஜ்ஜியம்தான்  , ஆங்காங்கே க்ளீஷேக்கள்  , ஓவர்  ஆக்டிங்கும் உண்டு 


  ஹீரோயினா  அபர்ணா  பாலமுரளி . கேரளத்துக்கிளி .  அருமையான  முக பாவனைகள்  அழகிய  உதடுகள் , மலையாளப்படங்களில்  இவருக்கு  பெரும்பாலும்  கன்னக்கதுப்புகள் , இதழ்கள்  தான் க்ளோசப்  ஷாட்டாக  வைக்கப்படும். இதில்  எனோ  புறமுதுகு காட்டும்  மன்னர்  பரம்பரைப்பெண் போல  ஏகப்பட்ட  முதுகு  க்ளோசப் ஷாட்கள் . சரி  ரசிச்சு  வைப்போம் . இவரது  நடிப்பு  பெரிய  பிளஸ் 


வில்லனாக  பரேஷ்  குட் ஆக்டிங் , ஹீரோவுக்கு  ஹையர்  ஆஃபீசராக  வரும்  மோகன் பாபுவுக்கு  இன்னும் சில  சீன்கள் வைத்திருக்கலாம் 


ஹீரோவின் நண்பனாக  வரும் காளி வெங்கட் , ஹீரோயின்  சித்தப்பாவாக  வரும் கருணாஸ்  கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள்   குட் 


ஒளிப்பதிவு , எடிட்டிங்       எல்லாம்  கனக்ச்சிதம் 




சபாஷ்  டைரக்டர்


1  ஒரு படம்  ஹிட் ஆகனும்னா  படத்தில்  சில  காட்சிகளாவது  உயிரோட்டமா இருக்கனும், ஏதோ ஒரு இடத்தில்  ஆடியன்ஸ்  தன்னை  படத்தின்  ஏதோ  ஒரு காட்சியில்    கனெக்ட்பண்ணி  பார்க்கனும்,  அப்படி ஒரு அருமையான செண்ட்டிமெண்ட்  சீன்  படத்தில்  இருக்கு . அப்பாவின் கடைசி  காலத்தில்  இறக்கும்  தருவாயில்  மகனால்  அங்கே  வர முடியாத  சூழல் .  பிறகு வந்தவனைப்பார்த்து  இப்போ  ஏண்டா  வந்தே  என  அ ம்மா  கதற  , மகன்  கதற  மிக  உருக்கமான  சீன்  அது . நம்மில்  பலரும்  நம்  பெற்றோரில்  யாராவது ஒருவர் மரணத்தருவாயில்  நம்மால்  அருகில்  இருக்க  முடியலை  என்ற  வருத்தம்  இருக்கும் அந்த சீனில்  சூர்யா, ஊர்வசி  இருவர்  நடிப்பும் அற்புதம்


2   நாயகியின் கதாபாத்திர  வடிவமைப்பு  மற்றும் அவர்  இயல்பான நடிப்பு  பெரிய  பிளஸ். நமக்கு  இந்த  மாதிரி  ஒரு மனைவி  அமைஞ்சா  நானும்  வாழ்க்கைல    ஜெயிப்பேன்  என  ஏக்கப்பெருமூச்சு  விட வைக்கும்  அளவுக்கான  கேரக்டர்  ஸ்கெட்ச்


3 /  ஓப்பனிங்கில்  வில்லன் - ஹீரோ  சந்திப்பு   அதற்கான  ஹீரோ மெனக்கெடல்,  வில்லனின்  ரீ ஆக்சன் . ரொம்ப  பாலிசான  சீன் அது 

‘4   பிரமாதமான  3   கொண்டாட்டப்பாடல்கள் , மற்றும்  ஜி வி  பிரகாஷின்  உயிரோட்டமான  பிஜிஎம்


5  எல்லாவற்றையும்  தாண்டி  படம்  சொல்ல வரும்  பாசிட்டிவான  மெசேஜ்.  லட்சியத்தை  அடைய  கடைசி  வரை  போராடு  எனும்  ஒன் லைன்  நல்லா  காட்டி இருக்காங்க 





 நச்  வசனங்கள்

1   மாடு  பார்க்கப்போற  மாதிரி  பொண்ணு  பார்க்க  நான்  போகமாட்டேன்னு  மாப்ளை  சொல்லிட்டாரில்ல? அதான்  நானே  மாப்ளை  பார்க்கப்போறேன்


சீதை  மாதிரி  சுயம்வரத்துக்கு ரெடி  ஆகறயா?


2  இதுவரை  என்னை  20 மாப்ளைங்க  ரிஜெக்ட்  பண்ணி  இருக்காங்க 


 சொந்தமா  பிஸ்னெஸ்  பண்ண  லோன் கேட்டப்போ  இதுவரை  21 பேங்க்  மேனேஜர்ஸ்  என்னை  ரிஜக்ட்  பண்ணி  இருக்காங்க 


3   என்னதான்  புள்ள்ளைகளை  படிக்க  வெச்சாலும்  அவங்கவங்க  அப்பா  செஞ்ச  தொழில்  தானே  பிள்ளைக்கு?


4   அடிக்கறது  தப்பு , வன்முறை  தப்புன்னா என்ன  இதுக்கோசரம்  என்னை  அடிச்சீங்க?


5  மனுசங்க  வேணா  டயர்டு ஆகலாம், மிஷின் ஆகாது 


6  நீங்க  சொல்ற  ஐடியா  எல்லாம்  ஓக்கே  , ஆனா  வழக்கமா  இதெல்லாம்  நாங்க  பண்றதில்லையே?


 வழக்கத்தை  மாத்தலாம் சார். ஒவ்வொரு புதுமையும்  ,மாற்றத்தாலதான் உண்டானவை 


7  இந்த  ஊரைப்பொறுத்தவரை  நீ ஒரு கிறுக்கி , நான் ஒரு கிறுக்க்ன், நம்ம  2 பேருக்கும்  வேற  இடம் கிடைக்காது , பேசாம    நாமே  கல்யாணம்  பண்ணிக்கலாமா? 


8    நேரம்  தான்  ரொம்ப முக்கியம்னு  அடிக்கடி உங்க அப்பா சொல்வாரு, ஆனா அவரோட கடைசி  காலத்துல  நீ  பக்கத்துல  இல்லாம  போய்ட்டியே?


9  பார்க்க  நல்லவன்  மாதிரி   இருக்கான்.. நிச்சயம்  தேற  மாட்டான், நாசமா  போய்டுவான். பாரு 


10  உங்களுக்காக  சட்டத்தை  மாத்த  முடியாது


 ஆனா பணக்காரங்களுக்கு  மாத்துவீங்க?


11   எங்களால புது ரூல்சை  பத்தே நிமிசத்துல  கொண்டு வரவும் முடியும், பழைய  ரூல்சை  செல்லாம  ஆக்கவும் முடியும் 


12    நல்ல  விஷயத்தை  நாளைக்குக்கூட  சொல் ஆனா  கெட்ட  விஷயத்தை , மோசமான செய்தியை  உடனடியா    என் கிட்டே  பாஸ்  பண்ணு


13    சார் , உங்களுக்குதான் என்னை பிடிக்காதே?  எப்படி எனக்கு உதவி செஞ்சீங்க?


  நீ  செய்ய  நினைக்கற   விஷயம்  உன் ஈகோவை விட என் ஈகோவை விட  பெருசு 


14   பணத்தைக்கொடுத்து  நம்மை  விலைக்கு  வாங்க  யாராவது  நினைச்சா  நாம  அவங்களுக்கு  அடிபணியக்கூடாது , அதுதான்  நம்ம  பலம்


 15  உனக்கு  எதிரா  வேலை  செஞ்சும்  அவரை  ஏன்  தண்டிக்காம  விட்டுட்டே?


 அவருக்கு  என்  அப்பா வயசு 


16  நாம  வானத்தை  அண்ணாந்து  பார்த்தே  பழக்கப்பட்டுட்டோம். வானத்துக்குப்போய் அங்கே இருந்து  பூமியை பார்க்க  நினைக்க  தவறிட்டோம்


17   வசதி படைத்தவன்  சாதா  ஆள்  சாதா  ஆளாவே  இருக்கனும்னு  நினைக்கறான்


18 நான்  ஜெயிப்பேனா? இல்லையா?னு ஒரு டவுட்  இருந்தது, எப்போ  என்னை  விலை  பேச  ஆரம்பிச்சாங்களோ  அப்போ  எனக்கு தைரியம்  வந்துடுச்சு 


19   உன்னைப்பற்றி  10  நிமிசம்  தான்  யோசிச்சேன், அதுக்கே  இப்படி  இவ்ளோ  ஆழமா  பாதிக்கப்பட்டிருக்கே... 





லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1  பைலட்டா  ஒர்க்  பண்றவருக்கு   ஏகப்பட்ட  சம்பளம்  வரும்,  சேவிங்ஸ் இருக்கும்  ஆனா  அப்பாவைப்பார்க்க  அவசரமாப்போகனும்கற  டைம்ல  கைல்  15,000  ரூபா  கூட இல்லை  என்பது  நம்பற  மாதிரி  இல்லை ,  கூட ஒர்க் பண்றவங்க  கொடுத்து  உதவ மாட்டாங்களா?  ஏர்போர்ட்டில்  ஹீரோ  பிச்சை  எடுக்காத  குறையாக  பலரிடம்  மன்றாடுவது   ரொம்பவே செயற்கை , அனுதாபம்  பெற  வலிந்து  திணிக்கப்பட்ட  காட்சி 


2   சாப்பாட்ல   விஷம் வெச்ட்டுயா? என   ஹீரோ  கேட்பது  நந்தா  படத்தில்  வந்துடுச்சு.   அந்த  சீனை  நினைவுபடுத்தற  மாதிரி  இருக்கு 


3    ஹீரோ  சந்திக்கும்  பல  பிரச்சனைகளைப்பற்றி  விலாவாரியாக  சொல்லாமல்  மீண்டும்  மீண்டும்  வில்லன்  மூலமாக  மட்டுமே  பிரச்சனை  என  காட்டுவது 


4   முதல்  பாதியில்  ஹீரோ ஹீரோயின்  பெண்  பார்க்கும்  படலம் , காதல்  என கமர்ஷிய்லாக  நகரும்  கதை  வேகம்  பின் பாதியில்    அவரது  போராட்டம்,  தோல்விகள்  என  கொஞ்சம்  பேக்  அடிக்குது  திரைக்கதை  வேகம்


5  தமிழ்  சினிமா  ரசிகர்களுக்கு  ஒரே  பாட்டில்  பணக்காரன்  ஆகும்  ஹீரோ  படையப்பா , அண்ணாமலை , விக்ரமன்  படங்களான  சூரிய  வம்சம்  மாதிரி  பார்த்துட்டு  இதில்  ஹீரோ  க்ளைமாக்சின்  கடைசி  நிமிசம்  வரை  தோல்வியையே மீண்டும்  மீண்டும்  சந்திக்கிறார் என்பது  ஜீரணிக்க  கொஞ்சம்  கஷ்டமா  இருக்கும் 



சி.பி ஃபைனல்  கமெண்ட் -   சூர்யா  ரசிகர்களுக்கு,ம், பெண்களுக்கும் படம்  ரொம்ப பிடிக்கும், மற்றபடி  அனைத்து  தரப்பினருக்கும்  ரொம்பவே  பிடிக்கும்னு  உறுதியா  சொல்லிட  முடியாது . இயக்குநர்  சுதா  கொங்கராவுக்கும்  , சூர்யாவுக்கும் இது  வெற்றிப்பட,ம். ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க்  = 42   , ரேட்டிங்  3 / 5 

0 comments: