படத்தோட டைட்டில்ல எதுனா ட்விஸ்ட் இருக்கும், என்ன அர்த்தமா இருக்கும்னு நானும் சில பல யோசனைகள் செஞ்சு வெச்சிருந்தேன், கடைசிலபார்த்தா ஹீரோ பேரு ராஜா , ஹீரோயின் பேரு ரங்குஸ்கி . சப்புனு போய்டுச்சு எனக்கு , அப்பதான் நம்ம இளையதளதி நடிச்ச கத்தி பட டைட்டில்க்கான ஏ ஆர் முருகதாசின் விளக்கம் நினைவு வந்தது , சீமானை விட பெரிய வடைசுடும் திலகம் உலகில் யாரும் இல்லைனு நினைச்சிருந்தேன். ஹீரோ பேரு கதிரேசன் , அவரை சுருக்கமா எல்லாரும் கத்தின்னுதான் கூப்பிடுவாங்களாம், கதிரேசனை கதிர்னு கூப்பிடலாம், ரேஷன்னு கூப்பிடலாம் ,கத்தின்னு யாராவது கூப்ட்டு பார்த்திருக்கமா?
ஆனா டைட்டில்ல வந்த ஏமாற்றம்
ஹீரோ ஹீரோயினை ப்ரப்போஸ் பண்ண எடுத்துக்கிட்ட ஐடியாவில் சரியா போய்டுச்சு , வாலி படம்தான்
தமிழ் சினிமா உலகிலேயே ஹீரோ ஹீரோயினை கரெக்ட்
பண்ண லவ் ஃபெய்லியர் மாதிரி
பொய்யா ஒரு கதையை ரெடி பண்ணி
சொல்லும் மாறுபட்ட காட்சி
கொண்டது.
அதே டைப்ல இது வேற மாதிரி
. அதாவது ஹீரோயின் கேரக்டர்
யாராவது செய் அப்டின்னா அதை செய்ய மாட்டாப்டி செய்யாதே
அப்டின்னா செய்வாப்டி . இந்த அரிய தகவலை பக் வீட் ஆண்ட்டி
மூலமா தெரிஞ்சுக்கிட்ட ஹீரோ குரலை மாற்றி
ஹீரோயினுக்கு ஃபோன் செஞ்சு நீ அவன் கூட சுத்திட்டிருக்காதே , எனக்கு
பிடிக்கல அப்டினு ஒரு பிட்டைப்போடறாரு, அந்த பேக்கு
ஹீரோயின் உடனே நீ என்ன சொல்றது
நான் அப்டிதான் சுத்துவேன்னு ஹீரோவை லவ்வ
ஆரம்பிச்சிடுது
இப்போ ஹீரோ ஹீரோயின் கூட பேசிட்டு இருக்கும்போது ஹீரோயின்க்கு ஒரு ஃபோன் கால் வருது . ஹீரோயின் சொல்லுது . அவன் தான் , உன் கூட பேசக்கூடாதுனு சொல்வானே அவன் தான் லைன்ல . அப்டினதும் ஹீரோக்கு தூக்கி வாரிப்போடுது. இதென்னடா நாம உருவாக்குன கற்பனை கேரக்டர் நம்ம கண் முன் உலா வருதே? என்ன மர்மம்?னு திகைக்கறார்
ஹீரோ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் . அவருக்கு இந்த லவ் ஐடியா
கொடுத்த ஆண்ட்டி திடீர்னு ஒரு நாள் கொலை செய்யப்பட்டு அவர் வீட்லயே கிடக்கறாங்க . அந்த டெலிஃபோன் குரல் வேற அப்பப்ப ஹீரோவை மிரட்டிட்டு இருக்கு அந்த ஆண்ட்டியை
அடிக்கடி சந்திச்சது ஹீரோ தான்
, போலீஸ்க்கு ஹீரோ மேல சந்தேகம்.இதுக்குப்பின் நிகழ்ந்த சுவராஸ்யமான சம்பவங்கள்
தான் படம், இது ஜீ 5 ஓ டி
டி ல கிடைக்குது
ஹீரோவா நடிச்சவர் சிரீஷ் முகம் எல்லாம்
நல்லாதான் இருக்கு , ஆனா முக பாவனைகளை தேட வேண்டியதா இருக்கு .மெட்ரோ படத்தில் நல்லா நடிச்சவர் இதுல ஏன் சொதப்பிட்டார்னு தெரில
ஹீரோயினா வருபவர் சாந்தினி முகம் ஓவல் ஷேப்ல இருந்தாலும் நல்லாதான் இருக்கு . பொதுவா பெண்களை
நான் குறை சொல்வதே இல்லை , இருக்கறதை ரசிச்சுட்டுப்போய்டறது
சொல்றதுக்குக்கொஞ்சம் கூச்சமா
இருந்தாலும் மனசுல பட்டதை சொல்லிடறேன். ஹீரோயினை விட பொதுவா
ஹீரோயின் தோழி நல்லாருப்பாங்க , ஆனா இந்தப்படத்துல ஹீரோயினை
கரெக்ட் பண்ண ஹீரோவுக்கு ஐடியா கொடுக்கும் ஆண்ட்டி
அட்டகாசம். பேரு அனுபமாவாம். குட் ஒன்
ஹீரோவுக்கு நண்பனா வருபவர் ஏதோ டி வி ஆர்டிஸ்ட் அல்லது ஸ்டேண்ட் அப் காமெடியன்னு நினைக்கறேன். குட் ஆக்டிங் , நல்ல பாடி லேங்க்வேஜ். கல்லூரி புகழ் வினோத் , சில கவுண்ட்டர்கள் நல்லா செட் ஆகி இருக்கு
கேசை டீல் பண்ணும் ஆஃபீசர்
மனசில் நடந்த சம்பவங்கள்
கண் முன் ஓடுவது
எப்படினு விளக்கலை . ஆனா அந்த கேரக்டர் ஸ்கெட்ச்
நல்லாருக்கு, வெல்டன் ஜெயக்குமார் . இன்ஸ்பெக்டராக வரும் ஜானகிராமன் கூட நல்ல ஆக்டிங் . ஓவராலா பார்த்தா ஹீரோவைத்தவிர எல்லாருமே நல்ல பர்ஃபார்மென்ஸ்
சபாஷ் டைரக்டர்
1 கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி இந்தப்படத்துல யூஸ் பண்ணிய வித்கம் அருமை
2 பின்னணி இசையில் கலக்கி இருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் அவரிடம் பிஜிஎம் வாங்கிய இயக்குநர் ந் தரணி தரனும் குட்
3 ஒளிப்பதிவும் , எடிட்டிங்கும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி
நச் டயலாக்ஸ்
1 ரைட்டர் இப்படித்தான் லவ்வை சொல்வாங்களா?
பின்னே? ஒரு போலீஸ் கிட்டே எப்படி லவ்வை சொல்ல?
2 லவ் பண்ண மூணு முக்கியமான விதிகள் பொய் சொல்லக்கூடாது , ஏமாத்தக்கூடாது , நடிக்கக்கூடாது. ஆனா இந்த மூணையுமே நான் மீறி இருக்கேன்
3 ஐ லவ் யூ டா...
என்ன ஏமாந்துட்டியா? நான் எது சொன்னாலும் நம்பிடற?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹீரோவான போலீஸ் தன் நண்பனுடன் ஜாலியா பப்ளிக் ரோட்ல டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கார், ஆனா அவரை போலீஸ் வலை போட்டு தேடுது
2 க்ளைமாக்ஸ்ல அவ்ளோ பெரிய டீலிங்கை ஒரு பெரிய கேங் கிட்டே தனி ஒரு ஆளா ஒரு பெண் அசால்ட்டா டீல் பண்றது எப்படி? அவங்க தேவையான பொருளை வாங்கிட்டு பணம் தராம ஷூட் பண்ணி இருந்தா?
3 கொலை செய்வதற்கான வலுவான காரணங்கள் இல்லை. அந்தக்கொலைகளை செய்யாமலேயே ஈசியா அந்த வேலைகளை செய்திருக்க முடியும்
4 ஹீரோ வை மாட்டி விடவே இத்தனை பிளான் என்பதும் ஏத்துக்கற மாதிரி இல்லை
சி.பி ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான படம்னு சொல்ல முடியலைன்னாலும் சராசரி த்ரில்லர் மூவி என்ற அளவில் பார்க்கலாம், குறிப்பா நாயகியின் நடிப்புக்காகவும் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காகவும் . ரேட்டிங் 2.5 / 5 , ஜீ 5 ஓ டி டி ல கிடைக்குது , 2 மணி நேரப்படம் தான்
0 comments:
Post a Comment