Monday, October 05, 2020

SERIOUS MEN ( HINDI)-2020 – சினிமா விமர்சனம் ( நெட் ஃபிளிக்ஸ் ரிலிஸ்) ( ஃபேமிலி டிராமா)

 


SERIOUS MEN ( HINDI)-2020 – சினிமா விமர்சனம் ( நெட் ஃபிளிக்ஸ்  ரிலிஸ்) (  ஃபேமிலி டிராமா)

 

பொதுவா  நாம  அப்பா  சொல் பேச்சு  கேட்டிருக்க மாட்டோம், அப்பாவோட அருமை அவர் இருக்கும்போது  நமக்குத்தெரியாது . நமக்குன்னு ஒரு கல்யாணம், காட்சி ஆனபின்  ஒரு குழந்தை  பிறந்த பின்  நாம பட்ட கஷ்டம்  நம்ம  வாரிசு  படக்கூடாதுனு தான் ஒவ்வொரு அப்பாவும் நினைப்பாங்க . தன்னை  விட புத்திசாலியா ,சமூகத்துல  தன்னை விட அந்தஸ்தும், பெருமையும், பேரும்  சம்பாதிக்கனும்னு  அதுக்கான  முயற்சி ல  ஈடுபடுவாங்க . அப்படிப்பட்ட  ஒரு அப்பாவின்  கதைதான்  இது

 

வேற்றுக்கிரகத்தில்  ஏலியன்ஸ்  இருக்கா? என ஆராய்ச்சி செய்யும்  ஒரு  ஆராய்ச்சி மையத்தில் ஹீரோ  ஒர்க் பண்றாரு. கிளர்க்  மாதிரி  ஒரு சாதா போஸ்ட்தான். இவருக்கு  ஒரு மனைவி , ஒரு மகன் .

 

மகன்  கொஞ்சம்  பிலோ  ஆவரேஜ்  ஸ்டூடண்ட். அதனால அவங்க  விரும்புன  ஸ்கூல்ல சீட்  கிடைக்கலை . இதனால  ஹீரோ ஒரு  ஐடியா  பண்றாரு , சகுந்தலா  தேவி மாதிரி   கணித  மேதை  ராமானுஜம்  மாதிரி    ஐ க்யூ  லெவல்  இயற்கையாகவே அதிகம்  உள்ளவன்  தன் மகன்  என பொய்யா  ப்ரொஜக்ட்   பண்றாரு

 

சீக்கிரம்  அவன்   மீடியாக்கள் மூலம் புகழ்  அடைகிறான். ஒரு கட்டத்துல  அவன்  வண்டவாளம்  தண்டவாளம்  ஏறிடுது. அதுக்குப்பின்  ஹீரோ  என்ன  முடிவு எடுத்தார்  என்பது  க்ளைமாக்ஸ்

 

கதையோட  ஒன் லைன்  கேட்டா  ரொம்ப  சாதாரணமா  தெரியும் இந்த  சப்ஜெக்ட்  ரொம்ப நுணுக்கமான  உணர்வுகளைப்பதிவு  செய்திருக்கிறது

ஹீரோவா நவாசுதின் சித்திக்  நுணுக்கமான  உணர்வுக்ளை  போற  போக்கில் அசால்ட்டா பண்ணி இருக்கார் . ஒரு பொறுப்புள்ள அப்பாவைக்கண் முன் நிறுத்துகிறார். மனைவியுடனான  கிண்டல்.,  கேலிப்பேச்சுகளில்  குறும்புத்தனமான  நடிப்பும்,  மகனிடம்  நண்பனாகப்பழகும்  விதத்திலும்  மிளிர்கிறார். க்ளைமாக்ஸ்  சீனில்   தன் ஃபிலாஸ்பேக் சொல்லும்போது  உருக்கமான  நடிப்பு

 

 ஹீரோவின் மகனாக  நடித்த  அந்த  சின்னப்பையன்   நேச்சுரல்  ஆக்டிங் . அப்பா சொன்னபடி மனப்பாடம்  செய்ய,முடியவில்லை என்றதும்  கோபமான அப்பாவை சமாதானப்படுத்த  அப்பா நான் படிச்ட்டேன்பா இப்போ சொல்றேன் பாருங்க  என  தட தட  என பேசும்போதும் , பக்  வீட் சிறுமியை சமாதானப்படுத்தும்போதும்  அருமையான  பங்களிப்பு

 

நாசர்  ஒரு முக்கியமான  ரோல் பண்ணி  இருக்கார் . அனுபவம் பேசுது

 

 ஹீரோவின்  மனைவியாக   வருபவர்  கேரக்டர்  ஸ்கெட்ச்  சரியா வடிவமைக்கப்படலையோனு ஒரு டவுட் . ஆனா  அவங்க  நடிப்பில்  குறை இல்ல

 


சபாஷ்  டைரக்டர்

 

1   மனு  ஜோசப்  என்பவர்   எழுதிய சீரியஸ்  மென்  நாவலைத்தழுவி  எடுக்கப்பட்ட  படம். பொதுவாக  சினிமாவில்  இலக்கியம்  நுழைவதை  வரவேற்பவன்  நான், உண்மைக்கு  அருகாமையில் திரைக்கதை  பயணிகும், மசாலா  கம்மியா  இருக்கும்

 

2  ஹீரோ , ஹீரோயின், மகன், நாசர்  இந்த  4  முக்கியமான  கேரக்டர்களுக்கான  நடிகர்கள்  தேர்வு  , அவர்களிடம்  நடிப்பு  வாங்கிய  தன்மை  குட்

 

3   ஹீரோவின்  மகனுக்கு பக்கத்து வீட்டு  சிறுமியின் பெற்றோர்  இவனை  ஒப்பீடு செய்து  அடிப்பது , இவன்  ரகசியத்தை  உடப்பது , அப்பாவிடம்  சீக்ரெட்  அவுட்  பண்னலாமா?  என அவுட்  பண்ணிய  பின்  கேட்பது  எல்லாமே சுவராஸ்யமான  காட்சிகள்

 

4  க்ளைமாக்சில்  சினிமாத்தனம்  இல்லாமல்  இயல்பாக  எடுத்த  காட்சி    அமைப்பு

 

நச்  வசனங்கள்

 

1 அர்த்தம்  இல்லாத  பாட்டு ஹிட்  அடிக்கற  மாதிரி  தான் நம் வாழ்க்கையும், எதுக்காகப்பொறக்கறோம்,  ஏன் இறக்கிறோம்  ஒண்ணும்  தெரியாமயே வாழ்ந்துட்டு இருக்கோம்

 

2   சாதாரண  மக்கள்  அரசாங்கத்திடம்  தண்ணீர் , மின்சாரம் கேட்பாங்க , ஆனா இவங்களை  மாதிரி  ஹை க்ளாஸ்  ஆளுங்க  ஃபண்ட்  கேட்பாங்க , அதான் சர்ர் பணம் தான் எல்லாம்

 

3   கூடல்  முடிந்தபின் இந்த  மாதிரி  கால்க்ளை  மேலே  தூக்கி வெச்சுக்கிட்டா  குழந்தை  கரு  தங்கும்  அப்டினு  இவ ளோட அத்தை  சொன்னாங்களாம், அவங்களுக்கு  புவி ஈர்ப்பு விசை  பற்றி  தெரியலை  போல, ஆனா  எனக்கு தெரியும்

 

4  ஒருத்தன்  தற்கொலை  பண்ணிக்க  முடிவு  எடுத்தா   அந்த  நிமிசமே  செத்துடனும், தள்ளிப்போட்டா  எப்பவும்  அப்டி செய்ய  மாட்டான்

 

 இந்த  விஷயம் உனக்கு எப்டி தெரியும்?

 

 உன்னைக்கல்யாணம்   பண்ணிக்கிட்ட பின் நான் ஒரு டைம் ட்ரை ப ண்ணினேன்

 

5   நீக்ரோ  ஆளுங்களுக்குள்ளே என்ன  வேணா பெசிக்குவாங்க  ஆனா ஒரு அமெரிக்கன்  நீக்ரோவை  நிறம் சம்ப்ந்தமா  எதுவும்  சொல்லக்கூடாது

 

6   சார் , நீங்க  சொன்னது  எனக்குப்புரியல

‘புரிஞ்சிருந்தா  நீ  என் இடத்துல  இருந்திருப்பே இந்நேரம்

 

7   எதுக்கு இவனுக்கு இவ்ளோ மேக்கப்  போட்டு விடறே?

 

 வெள்ளையாத்தெரிய வேணாமா? டிவில?

 

  அவன் என்ன வெள்ளைக்காரன் பையனா? என் பையன் தானே?

 

8   புத்திசாலித்தனமா  கேள்வி   கேட்கத்தெரியலைன்னா  கம்மு னு  இருந்தா  போதும்

 

9   ஒரு சர்வே  என்ன சொல்லுது  தெரியுமா? 85 %  பெண்கள்  அவங்க  வாழ்நாள் பூரா  ராங் சைஸ்  பிரா தான்  யூஸ் பண்றாங்களாம்

 

10   அப்பா, நீங்க  சொன்ன அந்த  ரகசியத்தை  என் க்ளோஸ்  ஃபிரண்ட்  கிட்டேக்கூட சொல்லக்கூடாதா?

 

இப்போ என் க்ளோஸ்  ஃபிரண்ட்  யாரு?  உன் அம்மா,  அவளுக்கே  இந்த ரகசியம் தெரியாது. நான்  சொல்லலை

 

11  இந்த உலகத்துல  ரெண்டே  டைப் ஆளுங்க தான்  1  ஸ்மார்ட்  2  ஸ்லோ

 

12   இதுவரை  நான்  பார்க்காத  எல்லாத்தையும்  கண்டிப்பா  என்  மகனுக்கு  குடுப்பேன், காட்டுவேன்

 

13  நான்  ஆரம்பிச்ச  சர்க்கஸ்ல  என் மகனை  ஜோக்கர்  ஆக்கிட்டேன்

 

14   உன் மகனை  அவன்  போக்கிலே நீ விடலைன்னா அவனை  நீயே அழிச்ச மாதிரி  ஆகிடும்

 

15   என்னோட 30  வாது  வயசு வரை நான் தோல்விகளை    மட்டும் தான் சந்திச்சேன். தோல்விதான்  நமக்கு எல்லாத்தையும்  கத்துக்கொடுக்கும்

 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 

1        ஹீரோ  இருப்பது  ஒரு  சிற்ய  வீட்டில் . மகனிடம்  அப்பா பேசும்  ஒரு ரக்சிய உடன்படிக்கை  அம்மாவுக்கூட  தெரியாது  என்கிறார்.  வாய்ப்பு  ரொம்ப  கம்மி . ஒவ்வொரு நிகழ்ச்சி  நடக்கும்போதும்  ஆடியன்ஸ்  சீட்டில்  மனைவியை  உட்கார வைத்து  விட்டு  இவர் மறைவான  இடத்துக்குப்போய்  ப்ளூ டூத்  மூலம்  மகனின்  இயர்  ஃபோனுக்கு  தகவல்  கொடுக்கிறார்.   மகன்  விழாவில்  பேசும்போது  எப்போதும்  அப்பா  ஏன் உடன்  இருப்பதில்லை  என  மனைவிக்கு  டவுட்  வராதா?

2        மகன்  தன் வயசுக்கு  மீறிப்பேசும்  எல்லா  பேச்சுகளுமே  அப்பா ஒர்க் பண்ற  டிபார்ட்மெண்ட்  சம்பந்தப்பட்டவை  மட்டுமே . அது பற்றி  ஹீரோ  ஆஃபீசில்  ஒர்க் பண்றவங்களுக்கோ, பாஸ்க்கோ ஏன் டவுட்  வர்லை ?

3        பக்கத்து  வீட்டு சிறுமியிடம்  தன் ரகசியத்தை  சொல்லி விடும்  சின்னப்பையன்  தன் சொந்த  அம்மாவிடம் சொல்லாமல் இருப்பது எப்படி ?

4         பையனின் அம்மா  கேர்க்டர்  ஸ்கெட்ச்  குழப்பமா  இருக்கு . உண்மை  தெரிந்ததும்  அவர்  ஹீரோ மேல்  கோபப்படுவதும்  அவரைப்புரிந்து  கொள்ளாமல்  எரிந்து  விழுகிறார், பின் அடுத்த  காட்சியிலேயே  அவர் தோளில்  கை வைத்து  ஆறுதல்  சொல்றார், அதுக்கு  அடுத்த  சீனில்   உன் சுயநலத்துக்காகத்தான் உன் மகன் வாழ்க்கைல விளையாண்டே? என கேள்வி கேட்கிறார்

சி.பி  ஃபைனல்  கமெண்ட் – இந்தப்படத்தை  எல்லா தரப்பு  ரசிகர்களாலும்  ர்சித்து  விட முடியாது , ஒரு குழந்தைக்கு  அப்பாவக இருக்கனும், அல்லது  அப்பா மீது  பாசம்  உள்ள  மகனா  இருக்கனும் . செண்ட்டிமெண்ட்ஸ்  அதிகம் இருப்பதால்  பெண்கள்  ரசிப்பார்கள் , ரேட்டிங்  3 / 5  . இது மாமூல்  மசாலா  கதை  அல்ல, டூயட் ,  காமெடி  டிராக்  போன்ற  அம்சங்கள்  இல்லாத  ஆனா நல்ல படம் ,

0 comments: