இந்தப்படத்தோட டைட்டிலைப்பார்த்ததும் இது வழக்கமான ஒரு லவ் ஸ்டோரியா இருக்கும்னு நினைச்சேன். அது தப்பாப்போய்டுச்சு . கதையோட ஒன் லைன் கேட்டுட்டு சினிமால ஒரு கதைல தம்பதியா நடிக்க வரும் ஜோடி நிஜ வாழ்விலும் தம்பதியா ஆகப்போறாங்க மாதிரி கதையா இருக்கும்னு நினைச்சேன். ஏன்னா டார்லிங் டார்லிங் டார்லிங் பட ஷூட்டிங்ல தான் கே பாக்யராஜ் , பூர்ணிமா காதல் மலர்ந்தது. பாலுமகேந்திரா- ஷோபா , டி.ராஜேந்தர்- உஷா அமர்க்களம் அஜித் - ஷாலினி இப்டி உதாரணம் சொல்லிட்டே போகலாம், ஆனா அந்த யூகமும் பொய் ஆகிடுச்சு
படத்தோட கதை என்ன? ஒரு முஸ்லீம் சமுதாயத்தைச்சேர்ந்த இருவர் இணைந்து ஒரு நல்ல சினிமாப்படம் எடுக்க விரும்பறாங்க . லோ பட்ஜெட்ல எடுக்கனும். கண்ணியமான படமா இருக்கனும், இதுதான் அவங்க எய்ம்
கதைப்படி ஒரு தம்பதிக்கு இடையே நடக்கும் ஊடல்கள் , பின் சேர்தல் தான் திரைக்கதை சம்பவங்கள் என்பதால் நிஜமான கணவன் , மனைவியே தம்பதியா நடிச்சா தத்ரூபமா இருக்கும்னு நினைக்கறாங்க . அப்படி ஒரு தம்பதி கிடைச்ட்டா சம்பளமும் கம்மியா கொடுத்துக்கலாம் ( ஃபேமிலி பேக்கேஜ் ஆஃபர் )
அவங்க நினைச்சபடி ஒரு தம்பதி சிக்கறாங்க . ஆனா ஷூட்டிங் போகும்போது சில பல தடங்கல்கள் எல்லாம் வருது . ஏன்னா அவங்க யாரும் தொழில் முறை நடிகர்கள் கிடையாது . அதனால நடிப்புல இயக்குநர் எதிர்பார்த்த பர்ஃபெக்சன் வரலை
ஷூட்டிங் நடக்கும்போது ஏற்படும் சில சுவராஸ்யமான சம்பவங்கள் காமெடி ஜர்னர்ல கொஞ்சம் போகுது
ஒரு ட்ரெய்னரை வெச்சு எல்லாருக்கும் நடிப்பு சொல்லித்தரும் கோச்சிங் மாதிரி நடத்தறாங்க
இதுக்கு இடையில் இன்னொரு சிக்கல். படத்தோட இயக்குநர் பர்சனல் வாழ்வில் ஒரு பிரச்சனை , மனைவியை விட்டுப்பிரிந்து வாழும் அவர் தன் மகளைப்பார்க்க மனைவி யின் பெற்றோர் வீட்டுக்குப்போகும்போது அவருக்கு இழைக்கப்படும் அவமரியாதைகள் , அதுக்கு அவரோட ரீ ஆக்சன் அப்டினு கொஞ்சம் செண்ட்டிமெண்ட்டா படம் போகுது
தம்பதியா நடிக்கும் கணவன், மனைவிக்கு இடையே நிஜமாவே சில கருத்து வேறுபாடுகள்
இதை எல்லாத்தையும் தாண்டி சக்சஸ்ஃபுல்லா அவங்க அந்த படத்தை எடுத்தாங்களா? இல்லையா?னு அமேசான் பிரைமில் கண்டு களிக்கவும்
பொதுவா ரெகுலரா மலையாளப்படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை தெரியும், பரபரப்பான காட்சிகள் அதிகம் இருக்காது . ஸ்லோவாதான் படம் போகும், நேட்டிவிட்டி இருக்கும் ., காமெடி டிராக் தனியா இருக்காது , கதையோட இணைந்தே வரும்
இதெல்லாம் இந்தப்படத்துக்கும் பொருந்தும்.
படத்தோட டைரக்டரா வரும் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பு அருமை . ஏற்கனவே லீலா படத்தில் இவர் நடிப்பை ரசித்ஹ்டிருக்கிறேன். ஒரு டைரக்டரின் அஃபிசியல் கோபம், பர்சனல் சோகம் இரண்டையும் நல்லா காட்டி இருந்தார்
கதையில் வரும் ஹீரோவா இந்திரஜித் சுகுமாரன் அமைதியான நடிப்பு . . இவரது மனைவியாக கிரேஸ் ஆண்ட்டனி செமயான பர்ஃபார்மென்ஸ்
காமெடிக்கு ஷோபின். அதெல்லாம் போக பங்களித்த எல்லார் நடிப்பும் குறை சொல்ல முடியாத தரத்தில் இருந்தது
சபாஷ் டைரக்டர்
1 ஒரு படம் எடுக்க எவ்ளோ சிரமப்பட வேண்டி இருக்கு , எத்தனை மாறுபட்ட சூழ்நிலைகளைக்கடந்து வர வேண்டி இருக்கு . இதெல்லாம் தாண்டி படம் எடுத்தா திருட்டு வீடியோல தமிழ் ராக்கர்ஸ் ல வந்து மொத்த உழைப்பையும் சுரண்டிடுது , இதுதான் இயக்குநர் சொல்ல வரும் முதல் மெசேஜ் ., அது நல்லாவே க்ளிக் ஆகி இருக்கு
2 ஷூட்டிங் நடக்கும்போது சைலன்ஸ் என பயங்கரமாக கத்துவது , எல்லோரும் பயப்படுவது எல்லாம் செம காமெடி . துணி துவைக்கும் சத்தம் கேட்பது , அந்த லேடியை சும்மா இருக்கச்சொல்வது அதற்கு அந்த லேடி தரும் பதிலடி எல்லாம் சிச்சுவேஷன் காமெடி . நல்லா எஞ்சாய் பண்ணலாம்
3 கணவன் , மனைவிக்கு இடையேயான புரித்ல் பற்றிய காட்சிகள் எல்லாம் கவிதை , வசனம் கூடுதல் பிளஸ்
4 ஒளிப்பதிவு , லொக்கேஷன் எல்லாம் மலையாளப்படங்களுக்கே உரித்தான தரத்தில் , பின்னணி இசை பல இங்களில் அடக்கி வாசித்தது குட்
நச் வசனங்கள்
1 எல்லாரும் அங்கீகரிக்கக்கூடிய பொது மனிதனா நம்ம புதுப்பட டைரக்டர் இருக்கனும்
அவரு தண்ணி அடிப்பாரு , தம் அடிப்பாரு .. போதுமா?
2 படத்தோட டைட்டில் மூணாவதும் உம்மா
ஓ, ரொமாண்டிக் மூவி?
நோ நோ உம்மா = அம்மா
3 படம் எடுக்க ஃபண்ட் தேவைப்படுது , முதலாளி மனசு வைக்கனும்
அது இருக்கட்டும் , முதலாளின்னா என்ன? முதலாளித்துவம்னா என்ன?
முதலாளின்னா நீங்க , முதலாளித்துவம்னா அமெரிக்கா
4 ஒரு கணவனோட கடமைகளை ந்றைவேற்றுவதில் ஒரு மனைவியோட பங்கு என்ன?
ஏன்?புருசன்காரன் அவன் வேலையை அவனே செஞ்சுக்க மாட்டானா?
5 அங்கே ஏன் எல்லாரும் அசையாம நிற்கறாங்க?
தேசிய கீதம் பாடுதோ என்னவோ?
சவுண்டே வர்லையே?
6 ஷூட்டிங் நடக்கறப்ப என்னய்யா சத்தம்?
முருகா முருகா
பூஜை ரூம் போறேன்
அந்த முருகன் இல்லை , முர்கா = கோழி
7 நீ போய் அவங்களை சரி பண்ணு
ஏன்? நீங்க செய்யலாமே?
ஒரு டைரக்டரா நான் அதை சொன்னா அப்றம் அது படத்தை பாதிக்கும், ஆனா பழகுனவன்கற முறைல நீ சொன்னா அது உங்க ஃபிரண்ட்ஷிப்பை மட்டும் தான் பாதிக்கும்
8 எதிரி ஜெயிப்பதற்கான வாய்ப்பை நாமே உருவாக்கித்தரக்கூடாது
9 உண்மை மட்டுமே பேசி ஒரு கோர்ட் கேசை ஜெயிக்க முடியும்னு நீங்க நினைக்கறீங்களா?
10 க்ரீஸ் , ஆயில் இதெல்லாம் இஞ்சினுக்கோ மெஷினுக்கோ போடுவது எதுக்கு? ஸ்மூத்தா ஓடத்தானே? அதே மாதிரி தான் வாழ்க்கைலையும் , கணவந் மனைவி , அம்மா- மகன் இபடி எல்லா உறவுகளும் பலப்பட உரையாடல் ரொம்ப முக்கியம் அப்பப்ப மனம் விட்டுப்பேசனும்
சி.பி ஃபைனல் கமெண்ட் - யாருக்கெல்லாம் இந்தப்படம் பிடிக்கும் ? தம்பதிகள் , கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் , சினி ஃபீல்டில் ஒர்க் பண்றவங்க அல்லது ஒர்க பண்ண நினைக்கறவங்க , மெலோ டிராமாவை ரசிப்பவர்கள் இவங்க எல்லாருக்கும் படம் ப்டிக்கும் . தயவு செஞ்சு இயக்குநர் ஹரி ரசிகர்கள் , மற்றும் மாமூல் மசாலா ஆக்சன் ப்ரியர்கள் பார்க்க வேண்டாம் . ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment