Saturday, October 17, 2020

DARK DESIRES ( 2020) – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) நெட் ஃபிளிகஸ் ரிலீஸ் 18+

 


DARK DESIRES ( 2020) – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) நெட் ஃபிளிகஸ் ரிலீஸ் 18+

 

ஹீரோ ஒரு ஜட்ஜ்,  வயசு 50 அவருக்கு  ஒரு மனைவி ,  வயசு 40 , ஒரு மகள்  வயசு 20 . எதுக்குடா  சம்பந்தம்  இல்லாம  வயசைச்சொல்றானேனு யோசிக்கறீங்களா?  காரணம் இருக்கு  , பின்னால தெரியும் ஹீரோவோட மனைவிக்கு  அதாவது ஹீரோயினுக்கு ஒரு நெருங்கிய தோழி, அல்ப சொல்பமான  தோழி  இல்லை, சின்ன வயசுல இருந்தே  ஒண்ணா  படிச்ச  களாஸ்மேட், ஸ்கூல் மேட்  எல்லாம். தோழியைப்பார்க்க  வாரம் ஒரு தடவை ஹீரோயின் தோழி வீட்டுக்கு போய்ட்டு வருவது வழக்கம்

 

இந்த  டைம் போகும்போது  ஹீரோயின் , தோழி  இருவரும்  பேசிட்டு இருக்கும்போது  ஹீரோவைப்பற்றி பேச்சு வருது .  அவரு  அவரோட செகரட்டரி கூட  அடிக்கடி  வெளில  போறார், அவங்க  2 பேருக்கும் கனெக்சன் இருக்குமோ?னு டவுட்டா இருக்குனு  சொல்றா  ஹீரோயின்

 

ஹீரோயினோட தோழியோட கணவர்  இப்போ கூட இல்லை. டைவர்ஸ்  ஆகிடுச்சு. தோழிக்கு துரொகம் இழைச்சதால  கட் பண்ணி  விட்டுட்டாப்டி .

 

ஹீரோயினும், தோழியும் ஒரு பார்ட்டிக்குப்போறாங்க. அங்கே ஒரு 30  வயசுப்பையன் அவனா வந்து  அறிமுகம் பண்ணிக்கறான். ஹீரோயினுக்கு அவனைப்பிடிச்சுடுது.

 

பழைய  படங்களிலெல்லாம்    வில்லன்  ஹீரோவோட தங்கையை  ரேப் பண்ணிட்டா உடனே ஹீரோ  வில்லனைக்கொன்னு  பழி  வாங்குவார். நான் சின்னப்பையனா இக்ருக்கும்போது எனக்குத்தோணுனது என்னான்னா எதுக்கு  மெனக்கெட்டு வில்லனைக்கொன்னு  இவரு ஜெயிலுக்குப்போகனும், வில்லனோட தங்கச்சியையோ  அக்காவையோ ஹீரோ  ரேப் பண்ணிட்டா தானிக்கு தீனி சரியாப்போகுமே அப்டினு நினைச்சேன்

 

 நான்  நினைச்சக்து  இந்த ஹாலிவுட்  டைரக்டருக்கு தெரிஞ்சிருக்கு . தன் கணவன் தனக்கு துரோகம் பண்றான்னு தெரிஞ்சுக்கிட்ட   நாயகி  பழிக்குப்பழி வாங்கும் விதமா வோ , ஆசைப்பட்டோ  அந்த  30 வயசுப்பையன் கூட ஏடாகூடமா  இருக்காப்டி .

 

 எல்லாம் முடிஞ்ச பின் நாயகி அந்தப்பையன் கிட்டே “ தம்பி, இது லவ் எல்லாம் கிடையாது,   ஏதோ 2 பேரும் ஆசைப்பட்டோம் , கூடினோம், இப்போ பிரியறோம், இனி நீ உன் வழில போய்க்கோ, நான் என் வழில போய்க்கறேன் அப்டீங்கறா. அதுக்கு  அந்தப்பையன்  எதுவும்   சொல்லலை, சிரிக்கறான்

 

நாயகி  பின் தோழி கிட்டே  இருந்து  விடை பெற்று  வீட்டுக்கு வந்துடறா.அடுத்த நாள்  நாயகியோட தோழி  தற்கொலை  பண்ணிக்கிட்டதா  தகவல் வருது நாயகிக்கு செம  ஷாக். ஏன்னா  டீப்  ஃபிரண்டை இழந்தாச்சு , தற்கொலைக்குமுன் கடைசியா  நாயகி கூட தான்  இருந்தா  என்பதால்  நாளை  போலீஸ் விசாரனைல  சிக்கல்  வரலாம்,

 

போலீஸ்  டிபார்ட்மெண்ட்ல  நாயகியோட கசின்  ஒருத்தர் இருக்காரு, நாயகனுக்கும் ஃபேமிலி ஃபிரண்டு . அவரு  அந்தப்பையனைப்பற்றிய  ஒரு திடுக்கிடும் உண்மையை  நாயகி கிட்டே சொல்றாரு., அதாவது  நாயகனோட அப்பா  ஒரு சைல்டு அப்யூஸ் கேஸ்ல மாட்னவரு . அதுக்கான  தண்டனையும் பெற்ரவரு அந்த  கேஸ்ல  அந்தப்பையனோட அப்பாவுக்கு எதிரா  கோர்ட்ல சாட்சி சொன்ன ஆள் தான் நாயகியோட தோழி . அவதான்  இப்போ செத்துட்டா

 

 அதனால  அந்தப்பைய்ன்  எதேச்சையா  உன்னை சந்திச்ச  மாதிரி  தெரியலை , ஏதோ  பிளான்  பண்ணி  தான் எல்லாம்  பண்றான்,  தோழியைக்கொலை  செஞ்சது கூட அவனா  இருக்கலாம், அல்லது  தற்கொலைக்கு  தூண்டி இருக்கலாம்  அப்டினு சொல்றார்

 

நாயகிக்கு இக்கட்டான  சூழல். ஏன்னா  அவனோட நட்பை விட்டு விலகி வரவும் முடியல. நெருங்கவும்  முடியல . என்ன  முடிவு எடுத்தா? தோழியின்  தற்கொலைக்கு காரணம்  யார்?  இன்னும் பல சுவராஸ்யமான  விஷயங்களுக்கு  இந்த சீரிசை  பார்க்கவும்

 

மொத்தம்  18 எபிசோட்ஸ், தலா  அரை மணி  நேரம்,  தோராயமா 9  மணி நேரம்  ஆகும்

 

இதுல  நாயகி  மட்டும் தான் அழகு . நாயகியின் மகள்  சுமார்  தான். அந்தப்பையன்  நல்ல பர்சனாலிட்டி . நாயகன்  சுமார் தான். ஜட்ஜுக்கு உண்டான  கெத்து  மிஸ்சிங் . நாயகியின் கொலீக்காக வருபவரும்  பெரிய  அளவில்  சோபிக்கவில்லை . நாயகியின்  தோழியாக வருபவர்  கூட பெரிய அழகு   இல்லை . நாயகனின்  செகரட்ரியாக வரும் பெண்  ந்ல்ல அழகு, இளமை  பொங்கும்  முக வசீகரம்

 


சபாஷ் டைரக்டர்

 

1   ஒவ்வொரு எபிசோட்லயும்  அடுத்ஹ்டு  என்ன? என எதிர்பார்க்க வைக்கும் ஒரு முடிவோடு    கொண்டு போனது

 

2   நாயகியின் மகள்   ஆன் லைன் சேட்டிங்கில்  ஒருவனிடம் விழுவது , ஜிபிஎஸ் சை வைத்து அ வன்  இருப்பிடத்தைக்கண்டு பிடிப்பது

 

3   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் . வில்லனின்  ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  படமாக்கப்பட்ட விதம்

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 


1        நாயகியின்  மகள்  ஜிபிஎஸ்  சை  வைத்து  தன்னிடம் சேட்  பண்ணிய ஆளின்  இருப்பிடத்துக்கு  வருவது  ஓக்கே, ஆனா  அங்கே வந்து  ஒரு மெசேஜோ , காலோ  பண்ணி இருக்கலாமே? ட்ரை பண்ணவே இல்லையே?

2        சைக்கோ  கொலைகாரனின்  மகன் +  அம்மா  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  தேவையற்ற நீளம்

3  நாயகியிடம்  போலீஸ்  ஆஃபீசர்  சைக்கோ கொலைகாரனைப்பற்றிய  ஃபைல்  தர்றார். அதை  தன் ஹேண்ட் பேக்கில்  வைத்து  லாக் பண்ணி  நாயகி மடத்தனமாக   அந்த  சைக்கோ   வில்லன் மகன்  இருக்கும் இடத்தில்  பேக்கை  வைத்து  மறதியாக  வைத்துவிட்டு வருவது  நம்பவே முடியலை

 

3        நாயகி  மனநல  மருத்துவரிடம்  கவுன்சிலிங்க்காக  போவது  தேவையற்ற  இழுவை




சி.பி ஃபைனல்  கமெண்ட் – முதல்  6 அத்தியாயங்கள்  டூ 8    நல்லா விறு விறுப்பா போகுது. போகப்போக இழுவை . பொழுது  போகாத  பொம்முகள் பார்க்கலாம். ரேட்டிங் 2.75 / 5 .  18 எபிசோட்கள் வைத்தது 18+  என்பதன்  குறியீடு போல . அடல்ட்ஸ்  கண்ட்டெண்ட்  ஒவ்வொரு எர்பிசோடிலும்  இருப்பதால்  ஃபேமிலியுடன்  பார்ப்பதை  தவிர்க்கவும்

0 comments: