Friday, October 16, 2020

புத்தம்புது காலை (2020) -சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட் மூவி) அமேசான் பிரைம் ரிலீஸ்

 


1. இளமை  இதோ இதோ-  டைட்டில்  கடைசில  போட்டதால  இதை இயக்கியது  கவுதம்  வாசுதேவ்மேனன்னு நினைச்சேன்  ஆரம்பத்துல, ஆனா  சூரரைப்போற்று  இயக்குநர்  சுதா கொங்கராவ்  என்றதும்  ஆச்சரியம்  அடைந்தேன். பிரமாதமான  திரைக்கதை  உத்தி , இளமை  பொங்கி  வழிய வழிய  ஒரு காதல்  கதை 

மனைவியை  இழந்த  கணவன்  வீட்டில்  தனியா  இருக்கான். கணவனை  இழந்த  மனைவி தன்  முன்னாள்  காதலனைப்பார்க்க  அவன் வீட்டுக்கு வர்றா. அன்னைக்கு  நைட்  லாக்  டவுன் அறிவிக்கப்படுது . 21 நாட்கள்  2  பேரும்  ஒரே வீட்டில் ... 


 இந்தக்கதைல  இயக்குநர்  பயன்படுத்திய புதுமையான  உத்தி  என்னான்னா இந்நாளில்  இவங்க  சந்திப்பு  நடக்கும்போது  20 வருடங்களுக்கு  முன்   என்ன தோற்றத்துல  இருந்தாங்களோ  அவங்களா  காட்டுனது   நல்ல  டெக்னிக் 


ஹீரோவா  ஜெயராம், ஹீரோயினா  ஊர்வசி  பண்பட்ட  நடிப்பு . இருவரது அந்நாள்  உருவங்களா  காளிதாஸ்  ஜெயராம் ( நடிகர்  ஜெயராம்  மகன் ) , கல்யாணி  ப்ரியத்ர்ஷன் ( இயக்குநர்  ப்ரியதர்ஷன் மகள் )   4  பேருமே  அசத்தல் , குறிப்பா  கல்யாணி  ப்ரியதர்ஷன்    சிவப்பு  சேலையில்  செம  அழகு . நான்  கூட இவர்  ஊர்வசியின் மகளோனு நினைச்சேன் 


நச்  வசனங்கள்


1   யாரை  லவ் பண்றோம்கறது  முக்கியம்  இல்லை , நாம  லவ் பண்றவங்க  நம்மை   எப்படி  ஃபீல் பண்ண  வைக்கறாங்க என்பதுதான் முக்கியம்


2  இந்த  வீட்ல எந்த ரூமை வேனாலும் நீ யூஸ் பண்ணிக்கலாம், எல்லா ரூம்லயும்  பாத்ரூம்  இருக்கு 


 உன் ரூம் எது?

-

3 என்னை  அப்படிப்பார்த்துட்டே இருந்தா  சமையல்ல கோட்டை விட்டுடுவே, அங்கே பார்த்து  சமை 

 சாப்பாடா  முக்கியம், உன்னைப்பார்த்துட்டே  இருந்தா  போதும் 


க்ளைமாக்ஸ்  மட்டும்  கொஞ்சம்  செயற்கையா  இருந்தது , மற்றபடி  இந்த்   தொகுப்புலயே  நெ 1  இதுதான்.  விக்டன்   எதிர்பார்ப்பு மார்க்   12 / 20  


2   அவளும், நானும் -   இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேணனிடம்  இது போன்ற  பூவே பூச்சூடவா  டைப்  கதையை  எதிர்பார்க்கலை  நல்லா  பண்ணி இருக்கார் 


குவாரண்ட்டைம் டைம்ல தனியா  இருக்கும் தாத்தாவைப்பார்க்க  பேத்தி  வர்றா. லவ் மேரேஜ்  பண்ணிக்கிட்ட  அம்மாவை ஏன்  கடைசி  வரை  ஏத்துக்கலை ? என  கேப்பதும்  அதுக்கு  தாத்தா  சொல்லும் காரணமும்  தான் மொத்தப்படமே 


தமிழ்  சினிமாவின் மிக  நல்ல  குணச்சித்திர  நடிகரும் , எட்டு தோட்டாக்கள்  பட  ஹீரோவுமான எம் எஸ்  பாஸ்கரின் பண்பட்ட நடிப்பு அந்த தாத்தா கேரக்டரை  பிரமாதமாக  வடிவைத்திருக்கிறது


கண்ணும்  கண்ணும்  கொள்ளையடித்தால்  புகழ்  ரிது  வர்மா  இதில் பேத்தியாக  நடித்திருக்கிறார். கச்சிதமான  நடிப்பு  அருமையான  ஆடை வடிவமைப்பு 


 நச்   வசனங்கள்


1   அனிமல்  பிளானட்ல மட்டும் தான்  இன்னும் கொரானா நியூஸ் காட்டலை 


2   ஏம்மா, உனக்கு உங்க அப்பாவை மட்டும் தான் தெரியும், உங்கம்மாவைக்கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்பாவைப்பற்றி தெரியாது , எனக்குத்தெரியும் 


3  உங்கம்மா  நல்லா  பாடுவா, கல்யாணம்  பண்ணிக்கிட்ட  ஒரே காரணத்துக்காக  உங்கப்பா அவளைப்பாட விடலை  அதுக்கப்புறம்.. குயிலின் குரலுக்கு பூட்டுப்போடலாமா? 


இதில் ஒரே  ஒரு சீனில்  மட்டும்  கொஞ்சம்  செயற்கை தட்டியது . முதன்முதலாக  தன்னைக்காண  பேத்தி  வருகிறாள்  என்றதும்  முகத்துக்கு  பவுடரை  ஓவர்  லோடு பண்ணும்  பாஸ்கர்  பின் பணிப்பெண்  சொன்ன பின் அதை  சரி செய்வது . பொதுவா  ஆண்கள்   மேக்கப்பில்  இவ்ளோ  ஆர்வம் காட்டிக்க மாட்டாங்க  , குறிப்பா  ஒரு தாத்தா  பேத்தியைப்பார்க்கறப்போ... 


விக்டன்   எதிர்பார்ப்பு மார்க்   11/ 20  


3  காஃபி , எனி ஒன்? -  டைட்டிலில்  இருக்கும்  ஆங்கில  மோகத்தில்  இருந்தே  இயக்கம்  யார்  என தெரிந்திருக்கும். சுஹாசினி  மணிரத்னம் 


ஓப்பனிங் சீன்ல  ஏர்போர்ட்டை  காட்டும்போதே   லாக்டவுன்  லோ பட்ஜெட்  கருத்தில் கொண்டு அதை  கார்ட்டூன்  வடிவில் காட்டியது  புத்திசாலித்தனம் , சித்தப்பா  கமலின் ஆளவந்தான்  டெக்னிக் . அதில்  கொடூரமான  காட்சிகளை  கார்ட்டூன் வடிவில்  காட்டி இருப்பாங்க 


கோமா  ஸ்டேஜில் இருக்கும்  அம்மாவை அப்பா  கூடவே இருந்து  பார்த்துக்கறார் . ஹாஸ்பிடல்  வேணாம். நாம  பக்கத்தில்  இருந்தா  அது தனி  என்பது அவர் வாதம் . மூன்று மகள்களில்  இருவர்  வந்து  பார்க்கறாங்க , ஒரு மகள் வர்லை , அம்மா  மேல  கோபம் 


அக்கா  , தங்கையா   சுஹாசினி , அனுஹாசன்  இருவரும் .. இதில்  இந்திரா  புகழ்  அனுஹாசனை    அனுஷ்கா  சைசுக்கு  பார்க்க  அதிர்ச்சியா  இருந்தாலும் அவரது  நடிப்பு  ஏ ஒன் ரகம் . பிரமாதமான  முக பாவனைகள் 


 சுஹாசினி  வழக்கம்  போல ஓவர் ஆக்டிங் . ஓவர் மேக்கப் . இவரது முதல்  படமான  கிளிஞ்சல்கள்  ,ம் கே பி  யின் மனதில்  உறுதி  வேண்டும், சிந்து  பைரவி  மட்டும் எனக்குப்பிடிக்கும். இவரது  சிரிப்பில், நடிப்பில்  ஒரு செய்ற்கையான பாவனை  இருப்பதாய்  தோன்றும் 


ஸ்ருதி கமல்  ஓக்கே  ரகம், க்லைமாக்சில்  அவர்  திடீர் என மனம்  மாறி  அம்மாவுக்கு பிறந்த  நாள்  வாழ்த்து  சொல்வது  கொஞ்சம்  செயற்கை 


 அதே  போல  அப்பாவின் கவனிப்பால் கோமா  ஸ்டேஜ்ல இருந்து  அம்மா  மீள்வதும்  செய்ற்கை , ஆனா  லேடீசுக்கு  ரொம்பப்பிடிக்கும் 


 அப்பா  அம்மாவை  வீல் சேரில் தள்ளிட்டு வருவது  , அவர்ட்ட  தனியா  அவர்  பாட்டுக்கு பேசுவது எல்லாம்   வசூல் ராஜா எம் பி பிஎஸ்  சை நினைவு படுத்துது . காத்தாடி ராம  மூர்த்தி அப்பா  ரோலை நல்லா  பண்ணி  இருந்தார் ‘

‘அம்மா  ரோல் பண்ணியது  சாருஹாசன்  மனைவி  மாதிரி  தெரியுது . மொத்தத்தில்  இது சுஹாசினியின் குடும்பப்படம் 

விக்டன்   எதிர்பார்ப்பு மார்க்   10 /  20  


4  ரீ  யூனியன் - அம்மாவும் , மகனும்  இருக்கும்  வீட்டில்  அந்தவழியா  போகும்  முன்னாள்   சினேகிதி  பைக்  ரிப்பேர்னு யதேச்சையா  வர  திடீர்னு லாக்டவுன்  அறிவிக்கப்பட்டதால்  அங்கேயே  தங்கறார்.  இவர்  ஒரு போதைப்பொருள்  உபயோகிப்பாளர். அவர்  இந்த   21 நாட்களில்  தன்  பழக்கத்தை  மாத்திக்கிட்டாரா?   இல்லையா? என்பதுதான்  கதை


 தமிழ்  சினிமாவைப்பொறுத்தவரை  போதைப்பொருளுக்கு  அடிமை  ஆகும் பிரதான கதைப்பாத்திரம்  உள்ள  படங்கள்  கமர்ஷியலாகப்போகாது . உதா  கமலின் சூர்சம்ஹாரம்   ( விதி விலக்கு   அதே  கமலின்  தூங்காதே  தம்பி தூங்காதே)


இதில்  ஹீரோவா குருசரண்  அப்டினு ஒரு புதுமுகம்  பண்ணி இருக்கார்  , ஓக்கே ரகம், அம்மா ரோல்ல  லீலா சாம்சன்  செமயான நடிப்பு .  ட்ரக் அடிக்டாக  ஆண்டிரியா.


மொத்தம் உள்ள  5 படங்களில் இதில் தான்  கிளாமர்  அதிகம்.  ஆண்ட்ரியாவின் உடைகள்  எல்லாம் ரொம்ப  தாராளம் . வசனங்களில்  லைட்டா  லைட்  பச்சை  வாசம் 


 நச்  வசனங்கள்


1   எப்படி  இருக்கு 


பிரியாணியா?  அதை  செஞ்ச  ஆளா?


2   உங்க  கணவர்  எப்படிம்மா? நல்லா  பார்த்துக்குவாரா? தாம்பத்ய வாழ்க்கைல எப்படி?


 அவரு   டாக்டர். சதா சர்வ காலமும்  டாக்டர் , பேஷண்ட் , ஹாஸ்பிடல்  நினைப்புதான் . எப்பவாவது  உண்டு .   ஊசி  போடற  மாதிரி  செஞ்சுட்டுப்போய்டுவார் 


பிசி  ஸ்ரீராம்  ஒளிப்பதிவு.  என்பது  பிளஸ் . ஒப்புக்கு  சப்பாணி மாதிரி  இந்தப்படம்


  விக்டன்   எதிர்பார்ப்பு மார்க்  7  /  20  


5  மிராக்கிள் -   இந்த  தொகுப்பில்  உள்ள  எல்லாப்படங்களும் மனித  மன உணர்வுகளின்  வெளிப்பாடான    பட்ங்களா  அமைஞ்சதால  ஒரு மாறுதலா  இருக்கட்டுமேனு   கார்த்திக் சுப்புராஜின்  ஒரு  த்ரில்லர்  படம் இருக்கட்டும்னு  சேர்த்திருப்பாங்க  போல . சராசரி  படம் தான்  , முடிஞ்சவரை  சுவராஸ்யமா  சொல்ல முயன்றிருக்கிறார்


ஒரு சாமியார்  டி வில   சொல்லிட்டு இருக்கார் . நம்ம  வாழ்க்கைல  மிராக்கிளான  சம்பவம்  எப்ப வேணா  நடக்கும்.


அப்போ  அதை  பார்த்துட்டு  இருக்கும்  ஒரு திருடன்  தன் கூட்டாளியுடன்   சேர்ந்து  ஒரு  திருட்டில்  ஈடுபடுகிறான். அதுல  அவன் ஜெயிச்சானா? இல்லையா? என்பது  கதை 


 பாபி சிம்ஹா  ஹீரோ . இவர்  இருட்டான  அந்த  வீட்டில்  செல் ஃபோன் டார்ச்  லைட்  மூலம் தேடுவது  அந்த  லைட்டிங்க்ஸ்  எல்லாம்  அருமை , இதே மாதிரி  பீட்சா  படத்திலும் காட்சிகள்  இருக்கும் 


க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  புன்னகைக்க  வைத்தது 


நச்  வசனங்கள்


1  என்ன  தம்பி.. பிரியாணியா? புளியோதரையா? 


ஒன்றே   பிரியாணி  , நன்றே   ,பிரியாணி  , அதுவும்  இன்றே  பிரியாணி 

  விக்டன்   எதிர்பார்ப்பு மார்க்  6 /  20  


சி.பி  ஃபைனல் கமெண்ட் -  5  குறும்படங்களில் முதல்  2  படங்கள்  ஆஹா  ரகம், 3 வது  ஓக்கே  ரகம்   4  வது  சுமார்  ரகம்  5 வது  சராசரி  ரகம் . ஆனந்த விக்டன்  எதிர்பார்ப்பு  மார்க்   46 / 100    , ரேட்டிங்  3 / 5 . அமேசான்  பிரைம்ல  கிடைக்குது 


0 comments: