Saturday, October 03, 2020

க/பெ ரணசிங்கம் (2020)- சினிமா விமர்சனம்


 


தமிழ்  சினிமாவில்  இதுவரை  யாருமே  தொடாத  ஒரு  கதைக்கருவை , சமூக  விழிப்புணர்வுடன் கூடிய  ஜனரஞ்சகப்படமாக  அதுவும் ஒரு இயக்குநர்  தன் முதல்  படமாக  தந்ததில்  கவனிக்க  வைக்கும்  ஒரு படம்   தியேட்டரில்  ரிலீஸ்  ஆகாமல்  ஓடி  டி  இணையதளத்தில்  ஜீ ஃபைவ் / ஜிபிளக்ஸ்  சில்  வெளீயானது வருத்தமே .பலரின்  ஏகோபித்த   வரவேற்புடன்  வெளியாகி இருக்கும்  இந்தப்படத்தைப்பற்றிப்பார்ப்போம் 

 

வெளிநாட்டில்  வேலை  செய்து  வரும்  கணவன் திடீர்  என  இறந்து  விட  கணவனின்  பிணத்தை  சொந்த  ஊருக்குக்கொண்டு வர  போராடும்  மனைவியின்  கதை  தான்  இது

 

ஹீரோ  ஒரு போராளி , சொந்த  ஊர்ல நடக்கும்  எல்லாப்பிரச்சனைகளுக்கும் போராட்டம்  பண்ணி  மக்களை  விழிப்புணர்வுக்குள்ளாக்கி  பல  நல்லது  பண்றார். அவருக்கும் , நாயகிக்கும்  இடையே   நடக்கும் காதல் , கல்யாணம் , இதை எல்லாம் வெச்சு  ஒரு மணி  நேரம்  ஓடுது

 

மீதி  2  மணி  நேரம்   டெட் பாடியை  வர  வைக்க நாயகி  போராடுவதுதான்  திரைக்கதை

 

படத்தின்  மிகப்பெரிய  பலம்  கூர்மையான  வசனங்கள் . இது  ஏ சி  ரூம்  போட்டு  உக்காந்து  எழுதுன  வசனம்  மாதிரி  தெரில . பாதிக்கப்பட்ட  ஆளே  எழுதுன  மாதிரி  இருக்கு

 

 இசை  ஓக்கே ரகம், ஆனா பாட்ல்கள்  ஹிட் ஆகி இருந்தால் இன்னும்   படத்துக்கு பக்கபலமாகி இருக்கும்,ஒளிப்பதிவு  குட், எடிட்டிங்  மட்டும்  இன்னும் க்ரிஸ்ப் ஆக பண்ணி இருந்திருக்கலாம்


 எப்படியோ தமிழ்  சினிமாவில்  இது ஒரு முக்கியமான  படம். 16  வயதினிலே - 61  1/2  , விசார்ணை - 61 ,உதிரிப்பூக்கள், மகாநதி   50  என  ஆனந்த விகடனில்  அதிக பட்ச மதிப்பெண்கள் வாங்கிய  படங்கள் பட்டியலில்   இதுவும் சேர வேண்டியது , நூலிழையில்  மிஸ்  ஆகி விட்டது

 

சபாஷ்  டைரக்டர் 

 

சமீபத்தில்  பரபரப்பாக பேசபப்ட்ட   அறம் , அருவி  மாதிரி  மாறுபட்ட  ஒரு படத்தை  இயக்கிய  அறிமுக   இயக்குநர்   விருமாண்டிக்கு  ஸ்பெஷல்  பாராட்டு

 

 

2 மொத்தப்படத்தையும்  தன் ஒத்தைத்தோளில்  தாங்கி  மிகப்பிரமாதமான நடிப்பை வழங்கி இருக்கும்  ஐஸ்வர்யா ராஜேஷ்  பங்களிப்பு , அவரது  கேரக்டர்  ஸ்கெட்ச்

 

கதையை விட்டு  விலகாமல் பயணிக்கும்  திரைக்கதை, மற்றும் ஆழமான  வசனங்கள்


4   ரங்கராஜ்  பாண்டே , முனீஷ்காந்த்  உட்பட  பலரது  நடிப்பும். ஹீரோயின் ஓரியண்ட்டட்  சப்ஜெக்ட்  என  தெரிந்தும்  இதில்  ஹீரோவாக   நடிக்க ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதியின் நல்ல மனசும், அவர்  நல்ல நடிப்பும்

 

 

 

 


நச்   வசனங்கள்

 

1  எல்லாமே  இருக்குன்னு  ஆடுனவனும்  இல்லை , எதுவுமே இல்லைனு அடங்குனவனும் இல்லை 

 

2   அவன்  தலைவன்  கிடையாது , ஆனா  அவன்  சொன்னா  ஊரே  கட்டுப்பட்டு  இருக்கும்

 

3   நம்ம  பிரச்சனையை  தீர்க்க  நாம  அதிகாரத்துக்கு  வரனும்னு  இல்லைஅதிகாரத்துல  இருக்கறவங்களை  போய்  கேட்போம்

 

 

4   கண்ணீர்  ஒண்ணுதான் , ஆனா  அது  சந்தோஷத்துல விடறமாதுக்கத்துல விடறமா?னு நாம தான்  முடிவு  பண்ணனும்

 

5  ஏன்  டான்ஸ்  ஆடறாரு?

 

 உயிரோட்டம்  பார்க்கறாரு 

 

இங்கே  நிச்சயம்  தண்ணி  வரும் .டவுட்னா  இங்கே  பசு மாட்டை  விட்டுப்பாருங்க

 

 அப்போ  மாட்டுக்கே தெரியுமாஇதுக்கு ஏன் துபாய்ல இருந்து  வர்றாரு?

 

 

6    திடீர்னு  முன் அறிவிப்பில்லாம  இத்தனை  பேரு  கூட்டம்  கூடறது  தப்பு 

 

 

மக்கள்  ஒற்றுமையா இருக்கனும்ஆனா  அவங்க  ஒண்ணா  இருக்கக்கூடாது ?

 

7    என்னநாம  2 பேரும்  பேசிக்கிட்டு  இருக்கும்போது  இங்கிதமே  இல்லாம  உங்கப்பா  கூப்பிடறார்

 

 நீயே  அவர்ட்ட  கேளு

 

எதைஇங்கிதத்தையா?

 

8  யோவ் , என்னைக்கவுத்துட்டே , சரி , எங்கப்பாவை எப்படிய்யா கவுத்தே?

 

 நான் முதல்ல  உங்கப்பாவைத்தான்  கரெக்ட்  பண்ணினேன்

 

9  நமக்கே  தெரியாம  நாம  வேணாம்னு  சொன்ன திட்டங்களை  அரசாங்கம்  நம்ம பிள்ளைங்க தலைல  கட்டிடுவாங்க 

 

10  நல்லவனோ , கெட்டவனோ  செத்தா  சொந்த  ஊர்ல   கெத்தா சாவனும்என்னத்தை  சம்பாதிச்சு?... 

 

11  கம்பெனிக்காரன்  சொல்றதையும் , கவர்மெண்ட்  சொல்றதையும்  என்னைக்கும் நம்பாதீங்க 

 

12   குடுக்காத  சாமியை  விட குடுக்கற  பேய் எவ்வளவோ  மேல்

 

13  அரசியல்வாதிங்களைக்கூட புரிஞ்சுக்கலாம்ஆனா வியாபாரிங்க  போடற  கணக்கை  புரிஞ்சுக்கவே முடியாது 

 

14   இந்த  உலகத்தையே  அனுபவிச்சு  தின்னு  தீர்த்துடலாம்னு  யாராவது  நினைச்சா  அவன் பைத்தியக்காரன்

 

15   உலகத்துலயே பெரிய  நோய்  பசிதான்

 

16     கையை  வெட்டிட்டு  கண்ல இருந்து  ஏன் கண்ணீர்  வருது?னு கேட்கற  மாதிரி  இருக்கு

 

 

17    இந்த  உலகத்துல  பசி  இருக்கும்  வரை  விவசாயம்  தான் பெரிய  தொழில்

 

18   நீங்க  2000  பேருக்கு  வேலை  தந்துட்டு  50,000   பேரை  நடுத்தெருவில்  நிறுத்தப்பார்க்கறீங்க

 

19  கவர்மெண்ட்  உண்மையைத்தான்  சொல்லும்னா   எதுக்கு  லட்சக்கணக்கான  பேர்  அரசாங்கத்தை  எதிர்த்து  அவங்க  மேல  கேஸ்  போட்டிருப்பாங்க ?

 

 20  சம்பிரதாயத்தை  கண்டுபிடிச்சவன்  செத்தபின்  இத்தனை பிரச்சனை வரும் நினைச்சுப்பார்த்திருக்கமாட்டான்



21  சட்டப்படி   வாழ  முடியும், சட்டப்படி சாக முடியுமா



22   ஆளே  மாறிட்டியே?



இந்த  நகரம்  ஆளோட உருவத்தை  மட்டும்  மாத்திட்டு   விட்டுடுச்சேனு சந்தோசப்பட வேண்டியதுதான்



23   எனக்கு  வாழ்க்கை கொடுத்தவர்  கூட வாழ  எனக்கு கொடுத்து வைக்கலை

 

24   சக  மனுசங்க வலியைப்புரிஞ்சுக்காத  மனுசங்களும் இருக்காங்களேனு நினைக்கும்போது  …..

25    அதிகாரத்தின்  உச்சாணிக்கொம்பில் இருக்கறவங்களுக்கு  நாம படற  வலியை  அப்படியே  உணர  வைக்கனும்

 

26  நாம  உண்மையா  செய்யற  ஒரு வேலையை இந்த  உலகத்துல  யாராவது  கவனிச்ட்டே  இருப்பாங்க

 

27    நம்ம   குரல்ல  உண்மை இருந்தாலும்  கூட்டத்துல ஒலிப்பதால்  காணாம போய்டக்கூடாது

 

 


 

 

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

1  படம்  போட்டு  10  நிமிஷத்துலயே  ஹீரோ  இறந்துட்டார்  என்ற  தகவல்  வரும்போது  நமக்கு  ஒரு பதட்டமோ , பதைபதைப்போ வர்லை , அதுக்குக்காரணம்  அவர்  யாருஎன்ன  மாதிரி  ஆளு  எதுவுமே  தெரியாதுஃபிளாஸ்பேக்  உத்தியில்   பிறகு  சொல்றாங்க  என்றாலும்  அது  சரியா கனெக்ட்  ஆகலை 

 

 

2   சொந்த  ஊருக்காக  போராடும் போராளி , தன்  ஊர்  மக்கள்  மேல்  அபரித  பாசம்  வைத்திருக்கும்  ஒரு ஆள்  வேலைக்காக  வெளிநாடு  போவதை  ஏத்துக்க  முடியலை 

 

3   போலீஸ்  ஸ்டேஷனில்  இன்ஸ்பெக்டர்   ஹீரோ  மேல்  கடுப்பில்  இருக்கும்  காட்சியில்  இவனுக்கு  பாஸ்போர்ட்  இருக்காஎன  வன்மத்துடன் கேட்கும்  காட்சி  இருக்கு . அப்படி  பகையுடன்  இருக்கும்  போலீஸ்  எப்படி  அவனுக்கு  பாஸ்போர்ட்  கிடைக்க  விட்டது ? இது  போக  ஹீரோ மேல ஆல்ரெடி ஏகப்பட்ட போலீஸ்  கேஸ் இருக்கு , எப்படி பாஸ்போர்ட் கிடைக்கும்?

 

4  பெற்றோர்  நிச்சயித்து  நடந்த  ஒரு கல்யாணத்தில் மண்டப  ரசீது ,  மேரேஜ்  ஃபோட்டோ  எதுவுமே  இல்லை  என்பது  நம்பற  மாதிரி  இல்லையே/?

 

5  ஹீரோயின்  செண்ட்ரல்  மினிஸ்டர் , பிரைம்  மினிஸ்டர்  எல்லாரையும்  சந்திப்பது  கொஞ்சம்  செயற்கை

 

6  படத்தின்  நீளம்  கொஞ்சம்  அதிகம், கிட்டத்தட்ட  3 மணி  நேரம் . ரெண்டரை  மணி  நேரமாக  க்ரிஸ்பா  கொடுத்திருந்தா  இன்னும்  நல்லா  ரீச்  ஆகும்

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட் – மாறுபட்ட  படங்களை  விரும்புபவர்கள் , சமூக  அக்கறை  கொண்டவர்கள்  விரும்பிப்பார்க்க  வேண்டிய  படம் , பெண்களுக்கும் பிடிக்கும். எதிர்பார்க்கும்   ஆனந்த  விகடன் மார்க் – 50  , ரேட்டிங் 3.75 / 5  . இது  ஒரு உண்மை  சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்ட   படம்  என்பது  கூடுதல்  பிளஸ், ஜீ 5  , ஜீபிளக்ஸ்  ல கிடைக்குது, ரூ 199. ஒர்த் தான்


0 comments: