மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பிக்கு தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. தொடர்ந்து 5 வெள்ளி விழாப்படங்களைக்கொடுத்தவர் 1 பயணங்கள் முடிவதில்லை (1982) - ஆர் சுந்தர்ராஜன் , இளமைக்காலங்கள் (1983) - மணிவண்ணன், நான் பாடும் பாடல் (1984).ஆர் சுந்தர்ராஜன் , உன்னை நான் சந்தித்தேன் (1984) - கே ரங்கராஜ் , உதயகீதம் (1985)-கே ரங்கராஜ் . இந்த 5 படங்களிலும் மோகன் நாயகன் , இசை இளையராஜா
மணிரத்னம் இயக்கிய முதல் படம் பல்லவி அனுபல்லவி ( கன்னடம்) , 2வது படம் உணரு (மலையாளம்) இந்த 2 படங்களிலும் பிரபல ஹீரோ இருந்தும் கமர்ஷியலா தோல்வி . அப்படிப்பட்டவருக்கு தமிழ்ல முதல் படமா வாய்ப்பு தரவும் ஒரு மனம் வேணும், தைர்யம் வேணும்
படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால சில சுவராஸ்யமான நிகழ்வுகளைப்பார்ப்போம். இந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமா படம் ஆக்கனும்னு இயக்குநர் விரும்ப ஏற்கனவே பட்ஜெட் கை மீறிப்போய்டுச்சு என்பதாலும் இயக்குநர் பர்ஃபெர்க்சனுக்காக ஃபிலிமை வேஸ்ட் பண்றார் என்ற அதிருப்தியும் தயாரிப்பாளருக்கு இருக்கவே கொஞ்சம் லடாய். இளையராஜா கோவைத்தம்பி படத்துக்கு எப்போதும் முதுகெலும்பு. தொடர்ந்து 6 படங்கள் எல்லாப்படங்களிலும் பாட்டு செம ஹிட்டு . இந்தப்படத்தோட இளையராஜா பிரியறார்
மணிரத்னம் இயக்குய இப்படம் மதர்லேண்ட் பிக்சர்சின் 6 வது படம், தோல்விப்படம். என்ன காரணம்னு பார்ப்போம்
நாயகி ஒரு கல்லூரி மாணவி . காலேஜ்ல நடக்கற எலெக்சன்ல பிரபல பாடகர் ஒருவரை பாட வைக்கறதா சொல்றார். ஆனா விழாவுக்கு அந்த பாடகர் வர்லை நாயகி பாடகரோட வீட்டுக்குப்போய் அவரைப்பார்த்து அவரோட மோசமான, சோகமான நிலைமையைப்பார்த்து அவரோட ஃபிளாஸ்பேக்கை சொல்ல வைக்கிறார்
ஒரு கிராமத்தில் ஹீரோ வெட்டியா இருக்கார் , வேலைக்கு எங்கயும் போறதில்லை . முறைப்பெண்ணை கலாட்டா பண்ணிட்டு டைம் பாஸ் பண்றார். பொண்ணோட அப்பா இவங்க காதலுக்கு எதிரி . வேற பக்கம் மாப்ளை பார்க்க ஆரம்பிக்கறார். ஹீரோயின் ஹீரோவை பட்டணம் அனுப்பி நீ நினைச்சபடி பெரிய பாடகனா வரனும்னு அனுப்பறார். ஹீரோ பட்டணம் வந்ததும் அவருக்கு சினிமால பாட வாய்ப்பு கிடைக்குது
இந்த சந்தோஷமான விஷயத்தை தன் முறைப்பெண்ணுக்கு தெரிவிக்கிறார். வீட்ல கல்யாண ஏற்பாடுகள் நடப்பதால் அவசர அவசரமாக முறைப்பெண் பட்டணம் வந்துடறார். பட்டணத்தில் அவரு அட்ரஸ் விசாரிக்கும்போது சில ரவுடிப்பசங்க அவரை துரத்திட்டு வர்றாங்க . அவங்க கிட்டே இருந்து தப்பிக்க வேற வழி இல்லாம தற்கொலை பண்ணிக்கறார்
இறந்த காதலி நினைவா ஹீரோ தாடி விட்டுட்டு சரக்கு அடிச்ட்டு இருக்கார்
ஃபிளாஸ்பேக் முடியுது. நாயகி ஹீரோ மனசை மாத்த முயற்சிக்கிறார். இந்த முயற்சில அவரையும் அறியாம அவர் நாயகன் மேல்க் காதல் வசப்படுக்கிறார். இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்
ஹீரோவா மோகன். அந்தக்காலத்தில்
கமல் , கார்த்திக் இவர்களுக்குப்பின் அதிக
இளம்பெண்களைக்கவர்ந்தவர் , இவரது தெத்துப்பல் சிரிப்பு ஒரு பிளஸ் , இவரது கோவைத்தம்பி
காம்போ படங்களில் 5 படங்களில் ஹீரோவாக
நடித்ததில் கடைசி 3 படங்களிலும்
பாடகராக வந்ததால் இதிலும்
ஹீரோ பாடக்ர் மாதிரி கதை அமைக்கப்பட்டிருக்கனும் என கண்டிசன்
போடப்பட்டதாம் தயாரிப்பு தரப்பில்
ஹீரோயினாக அம்பிகா, ராதா
இருவரும் , கமல் நடிச்ச காதல் பரிசு படம் கூட
இவங்க 2 பேரும்தான் ஜோடி அதுவும்
ஓடலை . அம்பிகாவின் ஹேர் ஸ்டைல் அந்தக்காலத்தில் பெரிதும்
பேசப்பட்டது தலையின் முன் பக்கம்
இருபுறமும் ஒரு அலை வந்தது போல் முடியை ஒதுக்கி
இருப்பார் , இவருக்கு கீழ் உதடு ஒரு
பிளஸ் பாய்ண்ட் நடிப்பு
குட்
ராதா எப்பவும்
கண் இமைகளுக்கு மேக்கப் போடுவதில் அதிக கவனம் செலுத்துவார் இவரது மகள் கார்த்திகாவை கோ விலும் துளசியை கடல் படத்துலயும் கவனிச்சா
அந்த இமை மேக்கப் தொடர்வது
தெரியும்
கவுண்டமணி காமெடி
டிராக் வழக்கம் போல ஹிட்
. செட்டப் பண்ணி பாம்பை மேடைக்கு வரவைப்பது அந்தக்காலத்தில் பரப்ரப்பாக
பேசப்பட்டது
பாடலகள் , இசை படத்திற்கு
பெரிய பலம் . படத்தின் முதல் பாதி பூரா பாட்டுக்கள்
தான்
1 இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல் ( 2 முறை)
2 வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதை எல்லாம்
3 கூட்டத்துல கோயில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
4 நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா?
5 ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
6 பாட்டுத்தலைவன் பாடினான் பாட்டுத்தான்
7 யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ
நச் வசனங்கள்:
1
ஃபோட்டோ எடுத்துக்கிட்டா
ஆயுள் குறையுமாமே?
நெருக்கம் தான் அதிகம் ஆகும்
2
உன் நினைப்புல ஒரு ஜென்மத்தையே ஓட்டிடுவேன்
3
என்ன வேலை பண்றே?
பாட்டுபாடரேன்
சாப்பாட்டுக்கு என்ன
பண்றே/
4
ராமனை ஜானகிராமன்னு சொல்ற மாதிரி சங்கரான
என்னை கவுரிசங்கரா மாத்த நினைக்கறேன்
5
சாபங்களே வரங்கள்
ஆனால் இங்கே தவங்கள் எதற்காக?
6 சிந்தனை செய் மனமே…
பாகவதரே ,
கல்யாணி ராகத்துல ஒரு பாட்டு பாடுங்க
யோவ், இப்ப பாடுனதே அந்த ராகம் தான்யா
7
உலகத்தை விட்டே போனவ என் உள்ளத்தை விட்டு
போயிடக்கூடாதுனுதான் குடிக்க்றேன்
8
நீ அவன் பாட்டை ரசிக்கிறியா? பார்த்து ரசிக்கிறயா?
9
பாடகன் மேல ரசிகைக்கு இருக்கும் அக்கறை மாதிரி தெரியல , காதலன் மேல காதலிக்கு
இருக்கும் அக்கறை மாதிரி தெர்யுது
10 கலைஞனும்,
வெத்தலையும் ஒண்ணு , அப்பப்ப தண்ணில இருக்கனும்
11 எல்லாம்
கொடுப்பினைதான்
குடிப்பினை இல்லையே?
12 காதல்ல வெற்றி அடைஞ்சவங்களை விட தோல்வி
அடைஞ்சவங்க தான் காதலைக்கொண்டாடிட்டு
இருக்காங்க . அதிகம் காதலை அனுபவிப்பவர்களும் தோல்வி அடைஞ்சவங்க தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அம்பிகா பிராப்பரான
அட்ரஸ் இல்லாம சென்னை
வந்து மோகன் ஃபோட்டோவைக்காட்டி அட்ரஸ்
கேட்பது ந்கைக்க வைக்கிறது , பட்டப்பகலில் கோயிலுக்குள்
அவரை ரவுடிகள் சூழ்வது
தற்கொலை செய்வது நம்ப முடியல
2 மோகனின் பாட்டியை
மாடு முட்டிடுச்சுனு ஒரு ஆள் மோகன் கிட்டே சொன்னது,ம் அவர் ஓடி
வர்றார். அப்போ பாட்டி பாடைல அலங்கரிக்கப்பட்டு இருக்கார் . மாடு முட்டி ஹாஸ்பிடல் போய் பின் இறந்த பின் பாடியை கொண்டு வந்து ஆளுங்களுக்கு
சொல்லி அனுப்பி அலங்காரம்
பண்ண எவ்ளோ நேரம் ஆகும்?
3 மோகன் – அம்பிகா
ஸ்டூடியோவில் ஜோடியா
எடுக்கும் ஃபோட்டோவை எதுக்கு ரெண்டா
கட் பண்ணி ஆளுக்கு
பாதி எடுத்துக்கறாங்க . 2 காபி போட்டு
வாங்கி இருக்கலாமே?
4 கிராமத்தில் வளர்ந்த
ஹீரோ பட்டணத்தில் நாயைப்பார்த்து பயந்து
ஓடுவது எப்படி? பொதுவா கிராமத்தான்கள் நாய்களுக்கு
பயப்பட மாட்டாங்க
5 5 காமெடி டிராக்கில் கவுண்டமணியும் , பின்னால் அமர்ந்து
வருபவரும் ஹெல்மெட் போல் சட்டியில் பெயிண்ட்
அடிச்சு ஸ்கூட்டர்ல வர்றாங்க , பின்னால் வருபவர் ஹெல்மெட் கீழே விழுந்து உடையுது , கவுண்டமணி அவர் ஹெல்மெட்டை
அவரே கழ்ட்டி வீசி உடைக்கிறார்
6 வானுயர்ந்த சோலையிலே
பாட்டு சீனில் அம்பிகா தலையில்
பானை யுடன் போவது போலவும் மோகன் கவண்ல கல்லால் அடித்துப்பானையை உடைப்பது
போலவும் சீன், அதில் அம்பிகா பானையை
தலையிலிருந்து அவரே கீழே போட்டு உடைக்கிறார்
7 க்ளைமாக்ஸ் ட்ராஜடியா
முடிச்சது தான் படம் ஃபெய்லியர் ஆக முக்கியக்காரணம் , பின் பாதி
திரைக்கதை இழுவை
8 மோகனின் ஒட்டு தாடி கெட்ட்ப் எடுபடலை
சி.பி ஃபைனல் கமெண்ட்
- பாடல்களுக்காகவே பட ம் பார்க்கலாம்,
மணிரதனம் படங்களிலேயே வெளிச்சத்தில்
முழுப்படமும் இது ஒண்ணுகான் எடுக்கப்பட்டிருக்கு அதுக்காகவும் பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5
Radha
AmbikaMusic byIlaiyaraajaCinematographyRaja RajanEdited byB. Lenin
V. T. Vijayan
company
0 comments:
Post a Comment