வெற்றி பெற்ற ஒரு படைப்பாளனின் ஜனரஞ்சக வெற்றிப்படத்தில் நாம் கற்றுக்கொள்ள , ரசிக்க எத்தனை விஷயங்கள் இருக்கிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் ஜனரஞ்சக ரீதியாக தோல்வியை சந்தித்த படத்திலும் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.,தொடர்ந்து 5 வெற்றிப்படங்களைத்தந்த இயக்குநர் பாரதிராஜா தந்த முதல் தோல்விப்படம் இது . பதினாறு வயதினிலே ( 1977), சிகப்பு ரோஜாக்கள் ( 1978) , கிழக்கே போகும் ரயில் (1978) , புதிய வார்ப்புகள் (1979), நிறம் மாறாத பூக்கள் (1979) என்ற பட்டியலில் இயக்குநர் கே பாக்யராஜ் அவருக்கு உதவி உ= இயக்குநராக , வசனகர்த்தாவாக பணி ஆற்றியது கண் கூடு. கே பா இல்லாமல் பாரதிராஜ இயக்கிய முதல் படம் இது . அதனால்தான் தோல்வி என்று அந்தக்காலத்தில் பேசினர்
இயக்குநர் மணிவண்ணன் கதை , வசனத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பாரதிராஜா இதில் சறுக்கினாலும் , மீண்டும் இதே மணிவண்ணனின் கதை வ்சனத்தில் அலைகள் ஓய்வதில்லை எனும் வெள்ளி விழாக்காவியத்தைத்தந்தது வரலாறு
1980 தீபாவளிக்கு பல படங்கள் வந்தாலும் கே பாலச்சந்தரின் வறுமையின் நிறம் சிகப்பு , நிழல்கள் இரண்டும் ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரே கதை அம்சத்துடன் வந்த படங்கள் , இதில் கே பா வெற்றி , பா,ராஜா தோல்வி
இந்தப்படத்துக்குஇன்னொரு சிறப்பு உண்டு . வைரமுத்து + பாரதிராஜா கூட்டணி இதில் தான் ஆரம்பம். தீபன் சக்ரவர்த்தி இதில் அறிமுகம். ஒளிப்பதிவாலர் கண்ணன் இதில் பாரதிராஜாவுடன் இணைகிறார் ( நான் படப்பிடிக்கு என் கண்களை எடுத்து செல்வதில்லை . கண்ணனின் இரு கண்களைத்தான் அழைத்துச்செல்கிறேந்பா.ரா)
படத்தோட கதை என்ன? எம் ஏ இங்க்லீஷ் லிட்டரேச்சர் படிச்சு முடிச்சிருந்தாலும் வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் இளைஞாகவும், சமூகத்தில் மேல் மிகவும் கோபம் உள்ள இளஞனாகவும் இருக்கும் நிழல்கள் ரவி , இன்றில்லச விட்டாலும் என்றாவது ஒரு நாள் தமிழகம் போற்றும் இசை அமைப்பாளராக உருவாகி விடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கும் சந்திரசேகர் , சராசரி மனிதர்கள் வாழ்வது போல் வாழாமல் வித்தியாசமாக வாழ ஆசைப்படும் கல்லூரி மாணவன் ராஜசேகரன் , ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி யில் இருக்கும் மகளாக ரேணுகா இவங்க 4 பேரைச்சுற்றி நடக்கும் கதை தான் இது
நிழல்கள் ரவி ஹீரோயினுக்கு வீட்டுக்கே வந்து ட்யூஷன் எடுக்கும் ஆளாக வந்து ஆரம்பத்தில் அவரது வெறுப்பை , தவறான புரிதலை சம்பாதித்து பின் பரஸ்பரம் காதலிக்கும் கேரக்டர்
ராஜசேகரன் தன்னிடம் நட்பாகப்பழகிய ரேணுகாவை காதல் என தவறாகப்புரிந்து கொள்லும் கேரக்டர்
சந்திர சேகர் இந்த ஆட்டத்துக்கே வராம தனி ஆவர்த்தனம் செய்யும் கேரக்டர்
இந்த 4 பேரில் முக்கியமாக சொல்ல வேண்டியது நாயகியின் தோற்றமும், நடிப்பும். குடும்பப்பாங்கான முகம், இயற்கையான நடிப்பு . இன்னொரு ரேவதியாகவோ , சுஹாசினியாகவோ , நதியாவாகவோ கண்ணியமான கதாநாயகியாய் வந்திருக்க வேண்டியவர் காலத்தின் கோலத்தால் சினிமாவில் தொடராமல் பரத நாட்டிய ஆசிரியையாக மாறி விட்டாராம்
ராஜசேகரன் கிட்ட்டத்தட்ட வைரமுத்துவின் ஹேர் ஸ்டைல் , மோகனின் முகச்சாயல் கொண்டு நல்லா நடிச்சிருக்கார்
சந்திர சேகர் வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பு
ஜனக்ராஜ் இதில் வில்லனாக வருகிறார். காஜா ஷெரீப் கவனிக்க வைக்கும் ரோல்
சபாஷ் டைரக்டர்
1 இது ஒரு பொன்மாலைப்பொழுது பாடல் படமாக்கப்பட்ட விதம் கவிதை பூங்கதவே தாழ் திறவாய் மறக்கவே முடியாத பாடல் . . மடை திறந்து பாட்டு ஒரு உற்சாக ஊற்று
2 நிழல்கள் - ரவி - ரேணுகா காதல் வெளிப்படுத்தும் விதம் , அதைத்தொடர்ந்த காதல் காட்சிகள் கண்ணியம் கலந்த கவிதை
3 சமூக அவலங்களை மணிவண்னனின் கம்யூனிச பார்வையில் சொன்ன விதம்
நச் டயலாக்ஸ்
1 எதை அடையப்போறோம், எப்படி அடையப்போறோம்னு ஒரு இலக்குடன் பயணிச்சா நம்மா வெற்றி நிச்சயம்
2 பெத்தவங்க பிரச்ச்னையையே தீர்க்க முடியாத நம நாட்டின் பிரச்சனையை எப்படி தீர்க்கப்போறோம்?
3 என் உலகம் உங்களுக்குப்புரியாது ப், அது தனி
உன்னையே எங்களால புரிஞ்சுக்க முடியாத போது உன் உலகத்தை எப்படி புரிஞ்சுக்க?
4 உறக்கம் இல்லாத இரவுகள் , இரக்கம் இல்லாத இரவுகள்
5 அடி வயத்துல அடுப்பு எரிஞ்சாலும், அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படாத ஜாதி சார் நாங்க
6 வேலை கிடைக்காத எல்லாருமே ஆத்திரப்பட்டா உலகில் கண்னாடி ஜன்னலே யாரும் வைக்க முடியாது
7 பெத்தவங்களை சந்தோஷப்படுத்தினா மத்ததெல்லாம் தன்னால சரி ஆகிடும்
8 நீ என் பிரதி பிம்பம், உன் கிட்டே பேசறது என் கிட்டே நானே பேசுவது மாதிரி ‘
9 மாத்தி மாத்தி நீங்க 2 பேரும் பேசுவதால் என் மன்சை மாத்திட முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தில் முக்கியமான கேரக்டர்கள் எல்லாமே நெகடிவான முடிவை அடைவது பார்வையாளர்களால் ஏத்துக்கவே முடியாது . அட்லீஸ்ட் அஞ்சு பேரில் மூன்று பேருக்கு நெகடிவ் முடிவு , 2 பேருக்கு பாசிட்டிவ் முடிவு என காட்டி இருக்கலாம்
2 பாரதிராஜாவின் கவித்துவம் வாய்ந்த காதல் ரசனை , மணிவண்ணனின் கம்யூனிச சித்தாந்தங்கள் கரெக்டான அளவில் மிக்ஸ் ஆகலை . படத்தின் கதை முன்னிறுத்துவது காதலையா? புரட்சியையா? என்ற குழப்பம்
3 தான் விரும்பிய காதலி தனக்குக்கிடைக்க வில்லை என்றதும் ரேப் பண்ணத்துணியும் கேரக்டரை ஏத்துக்க முடியலை .அதுவும் அந்தக்காலத்தில் அது அசாத்தியம்
4 ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் பார்வை துல்லியமாக தெரிந்து விடும் , நாயகிக்கு ராஜசேகரன் தன்னைக்காதலிப்பது கடைசி வரை தெரியாது என்பது ஏத்துக்க முடியல
சி.பி ஃபைனல் கமெண்ட் - பாரதிராஜாவின் ரசிகர்கள் தாராளமாகப்பார்க்கலாம். க்ளைமாக்ஸ் மட்டும் ஜீரணிக்கக்கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இது கவனிக்கத்தக்க ஒரு படைப்பே . ரேட்டிங் 2. 75 / 5
0 comments:
Post a Comment