V ( TELUGU)
– சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்)
நான் ஈ நானி படங்கள் என்றாலே
ஒரு மவுசு உண்டு , ஃபேமிலி ஆடியன்சைக்கவர்ற மாதிரி
டீசண்ட்டான படமாத்தான் கொடுப்பாரு, இது அவரோட 25 வது படம், அதனால
ஆக்சன் மூவியா பண்ணலாம்னு
நினைச்சிருப்பார் போல
ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் , ஏகப்பட்ட சாக்சங்கள்
எல்லாம் பண்ணி பல மெடல்கள் வாங்கி
குவிட்டு வெச்சிருக்காரு , டிபார்ட்மெண்ட்லயும் சரி , மீடியாக்கள்லயும் சரி
, பொது மக்கள் கிட்டேயும் சரி இவருக்கு
நல்ல பேரு
ஹீரோயின் ஒரு க்ரைம் நாவல் ஆசிரியை
( ஆகனும்னு ட்ரை பண்றாங்க )ஹீரோ கூட நடந்த சந்திப்புல
சில
ஐடியாக்கள் கொடுத்து அறிமுகம்
ஆகி, நட்பாகி , காதலாகி, கசிந்துருகி...
ஹீரோவோட நண்பன் ஒரு மிலிட்ரி
ஆஃபீசர் , இவருக்கும் ஒரு காதலி , மிலிட்ரில இவருக்கு
லீவ் கிடைக்க மாட்டேங்குது. அதனால அப்செட்டா இருக்கார் இவரு இங்கே , காதலி
அங்கே. ஒரு கட்டத்துல ஒரு கலவரத்துல ஹீரோவோட நண்பரோட காதலி பலி ஆகறா
ஒரு போலீஸ் ஆஃபீசர் கொலை செய்யப்படறாரு
, கொலைகாரன் ஹீரோவுக்கு க்ளூ எல்லாம் கொடுத்து
சவால் விடறான். இன்னும் 5 கொலை
பாக்கி இருக்கு , முடிஞ்சா கண்டு பிடி அப்டினு
ஓபனா சேலஞ்ச் பண்றான்
ஹீரோ , ஹீரோயின் ,
ஹீரோவோட ஃபிரண்ட் , வில்லன் , சீரியல் கொலைகள்
இவறை எல்லாம் இணைக்கும்
புள்ளியாய் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு
ஹீரோவா, போலீஸ் ஆஃபீசரா சுதீர் பாபு , காக்க காக்க சூர்யா மாதிரி ஆள் கெட்டப்பும் நடிப்பும் ஆக்சனும் அருமை பல இடங்களில் இவர் உடல் மொழி பக்கா
ஹீரோயினா நிவேதா தாமஸ் , சில கோணங்களில் சிட்டிசன் பட வசுந்த்ரா தாஸ் மாதிரி இருக்கிறார். முன் பாதியில் கேஸ்க்கு பெரிய உதவியா இருக்கப்போற மாதிரி ஏகப்பட்ட பில்டப் எல்லாம் கொடுத்தாங்க ...
ஹீரோவோட நண்பரா , மிலிட்ரி ஆஃபீசரா நானி , தயாரிப்பாளரா இருந்தும் கூட இவருக்கான காட்சிகளில் ஓவர் பில்டப் எதுவும் இல்லை . கச்சிதம்
இவருக்கு ஜோடியா வரும் அதிதி ராவ் க்கு அதிக வேலை இல்லைன்னாலும் , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்கு இவர் முக்கியமா துருப்பு சீட்டு
வில்லனைப்பற்றி சொன்னா சஸ்பென்ஸ் போய்டும்
சபாஷ் டைரக்டர்
1 மெயின் கதை , கிளைக்கதை , ஃபிளாஸ்பேக் கதை , ட்விஸ்ட் எல்லாவற்ரையும் குழப்பம் இல்லாம திரைக்கதையில் இணைத்தது குட்
2 ஓப்பனிங்கில் வரும் ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள்
3 காமெடி டிராக் , பாடல்கள் , , டூயட் , குத்து சாங் என எதுவும் இல்லாமல் பர பர ஆக்சன் த்ரில்லராய் தந்தது
நச் டயலாக்ஸ்
1 முட்டாள்கள் தான் கண்மூடித்தனமா ரூல்சை ஃபாலோ பண்ணூவாங்க , என்னை மாதிரி சாமான்யன் பிரேக் த ரூல்ஸ் ஃபார்முலாதான்
2 மிஸ்! என்ன பண்றீங்க?
ம்ம்ம்,உங்க கிட்டே இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்
வாட்?
3 மிஸ்! தண்ணி அடிச்சதாலயோ என்னவோ நீங்க பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க
அதுக்கு தண்ணி காரணம் இல்லை , எங்க வீட்ல கண்னாடி இருக்கு , என் அழகு பற்றி எனக்கு தெரியும்
4 இப்பவெல்லாம் நாம வயலன்சை அதிக,ம் விரும்ப ஆரம்பிச்ட்டோம். பக்கத்து சீட் ஆள் கிட்டே கூட வெறுப்பு
5 உங்களைப்பார்த்தா ஜெனரல் நாலெட்ஜ் அதிகம் உள்ளவர் மாதிரி தெரியுது
ஜெனரலா அப்படி இல்லை , நீங்க பக்கத்துல இருக்கும்போது மட்டும் ..
6 எங்க தான் தப்பு நடக்கலை ? எல்லா சிஸ்டத்துலயும் மிஸ்டேக் இருக்கு ,
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கேசுக்கு முக்கிய சாட்சியான அந்த விடுதி காப்பாளரான லேடி மள மள என ஹீரோவிடம் நடந்ததை ஒப்பிப்பது எப்படி?இவ்ருக்கு எதுவும் தெரியாது, எந்த குறுக்குக்கேள்வியும் கேட்கலை , டைவர் ட் பண்ணி விட்டிருக்கலாம், ஆனா கதை பூரா சொல்லுது
2 நானி பஸ்சில் தன் பக்கத்து சீட் ஆளிடம் தான் ஒரு ப்ரொஃபஷனல் கில்லர் என பயமுறுத்துவது , பின் சும்மா தமாஷ் என்பது முதல் சீனில் ஓக்கே , அதே டைப்பில் இன்னொரு ஆளிடம் இன்னொரு சீனிலும் ரிப்பீட் ஆவது எதுக்கு ? கடுப்படிக்குது அந்த சீன்
3 வில்லன் எதுக்காக க்ளூ எல்லாம் கொடுத்து ஹீரோவுக்கு ஹெல்ப் பண்றான்?
4 கொலை செய்யப்படும் ஒரு ஆள் மரத்தின் அடியில் ஓப்பன் பிளேசில் பெட் எல்லாம் டெக்ரேட் பண்ணி .... என்ன ரசனையோ அது ?
சி.பி ஃபைனல் கமெண்ட் - அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகி இருக்கும் வி சராசரி ஆக்சன் த்ரில்லர் . திரைக்கதை அமைப்பில் காக்க காக்க , இமைக்கா நொடிகள் உட்பட பல படங்கள் கண் முன் வந்து போகுது , போர் அடிக்கலை , பார்க்கலாம் ரேட்டிங் 2 .5 / 5
0 comments:
Post a Comment