Thondimuth
( மலையாளம்) – சினிமா விமர்சனம்
இந்தப்படத்தோட ரிலீஸ் டைம்ல கேரளாவில் தான் இருந்தேன் ஆனா அப்போ பார்க்கலை, ஏன்னா கதையோட
ஒன் லைன் ரொம்ப சாதாரணமா இருந்தது . 2 மணி நேரப்படத்துக்கு அந்த ஒன்
லைன் பெரிய அளவில் என்னைக்கவரலை. அசால்ட்டா விட்டுட்டேன், ஆனா படம் செம ஹிட் , ஃபக்த்
பாசில் இதில் நெகடிவ் ரோல் பண்ணி இருக்கார்
என்பதும் என் தயக்கத்துக்கு முக்கியக்காரணம். இப்போ ஓ டி டி
ல வந்திருக்கு , பார்த்தாச்சு
ஹீரோயினோட அக்கா
மேரேஜ் ஆன பொண்ணு. பிரெக்னெண்ட் டெஸ்ட்
எடுக்கும் சாதனம் வாங்க மெடிக்கல் ஷாப் போகுது.
அதை ஹீரோ
பார்க்க்றாரு. இந்தக்காலப்பொண்ணுங்க
சின்ன வயசுலயே தடம் மாறுதுனு கடுப்புல அப்பா கிட்டே போட்டு விட்டுடறார்
அப்ரமா விஷயம்
தெரிஞ்சு ஹீரோ ஹீரோயின்
மோதல் வழக்கம் போல் காதலில்
முடியுது. இது சும்மா ஓப்பனிங்
க்கு மட்டும் தான் மெயின் கதை
வேற
ஹீரோயின் பஸ்ல போகும்போது
அசந்து தூங்கிடுது. அப்போ பேக் சீட்ல
இருக்கும் வில்லன் நைசா கழுத்து
செயினை ஆட்டையைப்போட்டுடறான். டக்னு திரும்பிப்பார்த்த ஹீரோயின்
ஆளைப்பிடிச்சுடறா. வில்லன் டக்னு செயினை விழுங்கிட்றான். பஸ் போலீஸ்
ஸ்டேஷன் போகுது. இதுக்குப்பின் திரைக்கதை
எந்த திசைல பயணிக்கும்?னு நீங்க கற்பனையே
பண்ணி இருக்க மாட்டீங்க . பிரமாதமான திரைக்கதை
ஹீரோவா . பாந்தமான நடிப்பு , பின் பாதியில் ஆக்சன்
காட்சிகளில் ஆக்ரோசம் காட்டி இருக்கிறார்
ஹீரோயினாக நிமிஷா.
நிமிசத்துக்கு நிமிசம் மாறுபட்ட
முக பாவனைகளைத்தர வல்லவர் என்று தான் நிமிஷானு பேர் வெச்சாங்க போல . உம்முனு
இருக்கும் முகம் திடீர்னு உதய சூரியனைக்கண்ட தாமரை போல
மலர்வது அபாரம் . திடீர் என கோபப்படுவது, சுணங்குவது என நடிப்பில் பின்றார்
வில்லனாக ஃபகத் ஃபாசில்
. என்னமா ஒரு நடிப்பு ? கமல் கூட இந்த
மாதிரி கேர்கடர் நடிக்க
தயங்குவார் . போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கும்போதும் அடி வாங்கிய
பின் ஜம்ப் பண்ணுவதும்
நமக்கே அடி விழுந்தது
போல பொறி கலங்குது
போலீஸ் ஸ்டேஷனில்
அனைவர் நடிப்பும் மிக யதார்த்தம்.
ஒரு சாதாரண திருட்டுக்கேசை பிரமோஷனுக்காக
கொள்ளைக்கேஸ் போல திரிப்பதும் அதுக்கு
போலீஸ் எடுக்கும் முயற்சிகளும்
அருமை
ஒளிப்பதிவு மிக அருமை . வில்லனைத்துரத்தும் கேமரா
நம்மை காட்டுக்குள் கூட்டிச்செல்கிறது
ஹீரோ – ஹீரோயின் இருவருக்கும் இடையேயான லவ் போர்சன்
படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தம்
இல்லை என்றாலும் அது கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணிக்க உதவுது
இசை , பின்னணி இசை இரண்டும் பக்கா . எடிட்டிங் கனகச்சிதம்
திரைக்கதை அமைத்தவரின் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 கேரளாவின் இயற்கை
வனப்பை கேமரா அள்ளி எடுத்துக்காட்டிய
விதம், குறிப்பாக வைக்கம் டூ சேர்த்தலா படகுப்பயணத்தை ஓப்பனிங்கில்
காட்டும் அழகு அற்புதம்
2 ஹீரோ – ஹீரோயின் லவ் போர்சன்
பொதுவாக சினிமாக்களில் சினிமாத்தனமாக இருக்கும், செயற்கை தட்டும், இதில் மிக அழகான யதார்த்தக்காதலை வெளிப்படுத்திய விதம்
3 லாக்கப் ரூமில்
வில்லன் சக கைதியிடம்
தன் செயின் அபேஸ் சம்பவத்தை ரசித்து
ருசித்து வர்ணிக்கும் லாவகம்
அபாரம்
4 வில்லன் எஸ் ஆகி பின் மாட்டிய பின் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மேலேயே பழி சுமத்துவது
, உயர் அதிகாரிகளுக்கு எஸ் ஐ மேல் சந்தேகம்
வர வைப்பது . திருடு கொடுத்த நாயகியிடமே
டீல் பேசுவது என வில்லன் சாமார்த்தியம்
கனா கண்டேன் வில்லன் போல அபாயகரமான அபூர்வன்
5 வில்லன் தப்பிக்கும்
ஆக்சன் சேசிங் காட்சிகள் அருமை . ஓடிக்களைத்த வில்லன்
பேண்ட் சர்ட் போட்ட வாக்கிலேயே குளிப்பதும் , சர்ட் மேலேயே
சோப் போடுவதும் ஒரு அவசரக்காக்கா குளியலின்
யதார்த்தம் பளிச்
6 நாயகியின் அம்மா நாயகியைத்துரத்தி வரும்போது
பாத்ரூமில் நுழைந்து தாழிட்டுக்கொள்ளும் நாயகியின் முகத்துக்கு அளிக்கப்படும் லைட்டிங் அதைத்தொடரும் காட்சி அமைப்பு சபாஷ்
நச் டயலாக்ஸ்
1
லவ் ,மேரேஜ் பண்ணற
லேடீசுக்கு தனி கட்ஸ் வேண்டும்
2
பாஸ் , இவ்ளோ விபரமா
பேசறீங்க, ஆனா எப்படி மாட்னீங்க?
நாம எதிர்பார்க்காத சில தருணங்கள்
ந்ம்மையும் மீறி அமைஞ்சிடும்
3 இவன் பொறக்கும்போதே
கிரிமினலா இருந்திருக்கனும், போலீஸ் கண்லயே
விரல் விட்டு ஆட்டறான். நம்மையே நமக்கு
எதிரா திருப்பி விடறான், குழப்பி விடறான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1
செயினைக்கொள்ளை அடித்தவனை கை விலங்கிடாமல் பொது வெளியில்
அழைத்துச்செல்வது எப்படி?
2
போலீஸ் ஸ்டேஷன் அருகே ஒரு
கலவரம் உருவாகும்போது ஸ்டேஷனில் எல்லா போலீசும் செல்வது எப்படி?
3
அந்த தங்க தருணத்தை
தப்பிக்கும் வாய்ப்பாக வில்லன்
பயன்படுத்திக்காதது ஏன்?
4
செயினை விழுங்கிய திருடனுக்கு
10 பூவன் பழம் கொடுத்து தின்ன வைத்தால் அப்போவே கேஸ்
க்ளோஸ் ஆகி இருக்கும் , செயினை
வெளியே எடுத்திருக்கலாம்
5
தன்னிடம் ஐடி கார்டு
உட்பட எதுவுமே இல்லை என
வில்லன் சொல்லும்போது அவனை ஃபோட்டோ எடுக்கும் போலீஸ் அந்த ஃபோட்டோவை
தேடுதல் வேட்டையின்போது பயன்படுத்திக்கொள்ளவே இல்லையே?
சி.பி ஃபைனல் கமெண்ட் – ஒரு மாறுபட்ட த்ரில்லர்
மூவி பார்க்க விரும்புபவர்கள். ஃபகத்
பாசிலை ரசிப்பவர்கள் பார்க்கலாம்,
நிச்சயம் உங்களை ஏமாற்றாது .
ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment