Tuesday, September 08, 2020

நண்டு 1981– சினிமா விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம், சிவசங்கரி சிறுகதை)

 நண்டு #Nandu Super Hit Tamil Movie -Ilayaraaja,Mahendran#Super Hit Songs -  YouTube

நண்டு – சினிமா  விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம், சிவசங்கரி சிறுகதை)

 

படத்தோட  டைட்டில்  எனக்கு பிடிக்காததால  ரொம்ப நாட்களா  பெண்டிங்க்ல வெச்சிருத  படம் இது, பலரும்  பரிதுரைத்ததால்  இப்பதான்  யூ ட்யூப்ல பார்த்தேன் , ரிலீஸ் ஆன  டைமில்  கமர்ஷியல்  ஹிட் ஆகாத  படம், ஆனாலும் இன்றும் பார்க்கத்தகுந்த , ரசிக்க வைக்கும்  படம் தான் , ஆனா  திரைக்கதை  ஸ்லோ . சூப்பர்  ஹிட்   பாட்டுக்கள்  இளைய ராஜா  இசைல  இருப்பது  பெரிய  பிளஸ்

 

ஹீரோ ஒரு பெரிய  பணக்கார  வீட்டுப்பிள்ளை , ஆனா ஏனோ அப்பாவுக்கு மகனைப்பிடிக்கறதில்லை , அவனைக்கரிச்சுக்கொட்டிட்டே இருப்பார் ஒரு தடவை  மகனுக்குப்பெண்  பார்த்து  அவளைத்தான்  கட்டிக்கனும்னு  கட்டாயப்படுத்தறார். விருப்பம் இல்லாத  ஹீரோ  ஊரை  விட்டு  ஓடிப்போறார்.

 

சொந்த ஊரை  விட்டு  வந்த  ஊரில்  ஒரு சாதா  வீட்டில்  வாடகைக்கு  தங்கறார். அத  காம்பவுண்ட்  வீட்டில்  பல  குடும்பங்கள்  இருக்கு . அதுல  ஒரு பொண்ணு  ஹீரோ மேல  அவர்  உடல்  நலத்தில் அக்கறை  காட்டுது. ஹீரோவுக்குப்பிடிச்சுப்போகுது.  2 பேரும்  காதலிக்கறாங்க

 

அதே  காம்பவுண்டில்  இன்னொரு  பெண்ணும் அவர்  மேல  ஆசை  வைக்குது. ஆனா  ஹீரோவுக்குப்பிடிக்கலை. . ஹீரோயினை  கல்யாணம்  பண்ணிக்கறார். ஒரு குழந்தையும்  பிறக்குது

 

 இப்போ அம்மா, அப்பாவைப்பார்க்க   குடும்பத்தோட  சொந்த  ஊருக்கு  வர்றார்.  அவங்களை  பெற்றோர்  ஏத்துக்கிட்டாங்களா? இல்லையா?  என்பதும் , இன்னொரு   ட்விஸ்ட்டும்  தான்  பின் பாதி  திரைக்கதை

 

ஹீரோவா  புதுமுகம் , இவர்  வாகை  சந்திரசேகர்  போல  தாடியுடன்  கூடிய  முகச்சாயல் .  ஆரம்பத்தில்  நமக்கு  சரியா  அவர்  முகம்  செட்  ஆகல , பின் போகப்போக  பழகிடுது   

ஹீரோயின் புதுமுகம்  அஸ்வினி, பிரமாதமான பங்களிப்பு . இவ்ளோ அமைதியான , அடக்கமான  அழகா? என இந்தக்கால  இளைஞர்கள்  ஆச்சரியப்படும் அள்வு  அற்புதமாக   நடித்திருக்கிறார்

 

ஹீரோவின்  அம்மா , அப்பா ரோல்  எல்லாம் நமக்கு தெரியாத  முகங்கள், கதைப்படி வடக்கு ஏரியா  என்பதால் எல்லாம்  ஹிதி  முகங்கள்

 

 பாடல்கள்   அருமை , இசை  இளையராஜா  என சொன்னால் போதாதா? பின்னணி  இசை  கலக்கலா இருக்குனு தனி வரி வேற  வேணுமா?

 

 ஒளிப்பதிவு  , எடிட்டிங்  கச்சிதம் , திரைக்கதை  மட்டும்  இன்னும் கொஞ்சம்  வேகம் எடுத்திருந்தா  அல்லாருந்து இருக்கும்

 

 

 சபாஷ்  டைரக்டர்

 

1        காம்பவுண்ட்  வீட்டில்  ஏகபப்ட்ட  லேடீஸ். ஹீரோ  பொதுவா  ராக்கி  ஒண்ணைக்குடுத்து  யாராவது  என்னை அண்ணனா  நினைச்சு  இதைக்கட்டி விடுங்க  என சொல்லிட்டு வீட்டுக்குள்  போய்டுவார். வெளீயில்  சொல்லலைன்னாலும் மனசுக்குள்  காதலிக்கும் நாயகி  கையில்  ராக்கியைக்கொடுத்து அவருக்குப்போட்டியாக  ஹீரோவைக்காதலிக்கும்  இன்னொரு பெண்  வம்படியாக  அவரை  ஹீரோ வீட்டுக்கு அனுப்புவார். இதக்காட்சியில்  நாயகி  நாயகன் இடையே  நடக்கும்  உரையாடல், ராக்கியை  ஹீரோ கையில்  கட்டாமல் எப்படி  சமாளித்தார்  என்பதெல்லாம் கவிதை  கவிதை

2  ஹீரோ  நீண்ட  வருடங்களுக்குப்பின்  சொந்த  ஊர்  போறார். தன்னை  வெறுத்த  அப்பாவை  மீறி கல்யாணம்   செஞ்சுக்கிட்ட  நாயகி , குழந்தையுடன்   சொந்த  ஊர்  வர்றார், இதுதான்  சிச்சுவேஷன் . பாட்டு அள்ளித்தந்த  பூமி அன்னை  அல்லவா? சொல்லித்தந்த  வானம்  தந்தை  அல்லவா?  செம  பாட்டு , தாலாட்டு,ம்  தெய்வீக  இசை . இயக்குநர்   மிகப்பிரமாதமா தன்னை  வெளீப்படுத்தும்  சீன் இது

 

3        எல்லாப்படங்களிலும்  வரும் ஒரு காட்சி  நாயகனையோ  நாயகியையோ ஒரு கூட்டம் பாடுங்க என  கெஞ்சும், பிறகு அவர்  பாடுவார் . வடக்கே இருந்து   தெற்கே  வந்த  ஹீரோ  பாஷை  மாறாமல் ஹிந்தியில்  பாடுவார்  அதுக்கு இளையராஜாவின் இசை  ஆஹா.. கைசே  கஹூங்?  ( எப்படி நான் சொல்வேன்?)  பாடல்  பல்லவியை த்தான்  மீண்டும்  வியப்பு வாக்கியமாக  சொல்லனும்

4  சிறுகதையின்  க்ளைமாக்சில்  எழுத்தாளர்  நாயகன்  ஆஸ்துமாவில்  இறப்பது  போலவும் ,  நாயகி  கேன்சர்  நோயால்  இறப்பது போலவும்    வைத்திருந்தாராம் , இயக்குநர்  க்ளைமாக்ஸ்  மட்டும்  மாற்றி இருக்கிறார், மனதைக்கனக்க வைக்கும் முடிவு

 

5         நாயகன  வருகைக்காக  ஒரு மணி  நேரமாக  ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் அம்மாவுக்கு  தரப்பட்ட  வசனங்கள் , பின் நிகழும்  சம்பவங்கள்  உருக்கம்

நச்  டயலாக்ஸ்

 

1        தாடி  வெச்சவங்களைக்கண்டாலே  மத்தவங்களுக்கு  ஒரு பயம்  தான்

2  இங்கே  இருக்கறவங்களுக்கே  வேலை  இல்லை, வடக்கே இருது  ஒருத்தன் வந்து  ஈசியா அப்பாய்ண்ட் மெண்ட்  லெட்டர்  வாங்கிட்டானே?  ( அப்போ  இருந்தே    நம்ம  ஆளுங்களுக்கு வடக்குன்னா கசப்பு தான் போல)

 

3காலத்தோடயும் , கருவாட்டுக்குழம்போடயும் ஒட்டியும் ஒத்தும் போகனும்

4        ஐ ஆம்  எ பாத்ரூம்  சிங்கர்

அப்போ நாங்க  எல்லாரும் பாத்ரூம்  வந்துடறோம், நீங்க  அங்கே  பாடுங்க

 

5        வேலை  இல்லாம  உக்காந்திருந்தா  வாழ்வில் நடந்த வேதனையான  சம்பவங்கள்  நினைவுக்கு  வரும்

6        நீங்க  டூயட்  பாடறதுக்கு  இது இடம்  இல்லை

அப்போ  வேற  இடம்  நீங்களே  ஏற்பாடு பண்ணித்தர்றீங்களா?

 

7        வெ.ஆ. மூர்த்தி =  அவங்க  ஒரு நிமிசம்  பேசுனதுக்கே  சொம்பைக்கீழே  போட்டுட்டியேர்? அஞ்சு  நிமிசம்  பேசி இருந்தா  அண்டாவைக்கீழே போட்டிருப்பியோ?

8  தமிழச்சிக்குப்புருசன்  ஒரு தமிழன்  தான்  வரனுமா? எங்கே  இருந்தோ  இங்கே  வர்ற  குடி தண்ணீர்   பைப் ,மூலம் பல  மாநிலங்களைக்கடந்து  இங்கே  வர்லை?

 

9ஏற்கனவே இருக்கும் அந்தஸ்து  ஒரு மனுசனுக்குத்தேவை இல்லை , அன்பான  மனைவிதான்  தேவை

 

திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 

1        அப்பா , மகன்  இருவருக்கும்  அப்படி என்ன  தீராப்பகை  என்பதை  தெளீவாக  சொல்லவில்லை ( ஒரு வேளை இப்போ நான்  பார்த்த  வெர்சனில்  கட் ஆகி இருக்கலாம்)

2        பேரனை அம்மா  அந்த  அளவு  விழுந்து  விழுந்து  கொஞ்சும்போது  அப்பா  முகத்தைக்கூடப்பார்க்கலை . மகன்  மேல்  கோபம் இருந்தாலும் பேரன்  மேல் அன்பு  இருக்காதா?

3        திரைக்கதையின் க்ளைமாக்சை  யூகிக்க  வைக்கும் டைட்டில்  முக்கிய  எதிரி , மேலும்  இயக்குநரின் மற்ற  படங்களின்  டைட்டில்  கவித்துவம்  இதில் மிஸ்சிங்

சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   பரபர  விறு விறு  பட  ரசிகர்கள் , இயக்குநர்  ஹரி  பட  ரசிகர்கள் , மாமூல்  மசாலாப்பட  ரசிகர்கள்  தவிர்த்து    சோகத்திலும் சுகம் உண்டு என்ற  கருத்து  உள்ளவர்கள்:  பார்க்கலாம் , மனதைக்கனக்க வைக்கும் படம், பெண்களுக்குப்பிடிக்கும்  ,, ரேட்டிங்  2.75  / 5

 

 நண்டு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், அஸ்வினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். Wikipedia

வகைகள்தமிழகத் திரைப்படத்துறை, Musical, உலக சினிமா

 

 

 

0 comments: