நான் சின்ன வயசுல இருந்தே சினிமாக்களை அதிகம் விரும்பிப்பார்ப்பவனாக இருந்த போதிலும் பாடல்களை பெரிதாக ரசித்ததில்லை. 2010ல் ட்விட்டரில் வந்த பிறகு இலங்கைத்தமிழரான கானாப்ரபா வின் றேடியோஸ்பதி பதிவுகள் மூலம் அணு அணுவாக அவர் இசை யை ரசித்துப்போடும் பதிவு பார்த்து மலைத்துப்போனேன். அதுக்குப்பிறகுதான் சினிமா வில் பிஜிஎம் , பாடலுக்கான இசை என்பதை எல்லாம் பிரித்து ரசிக்க ஆரம்பித்தேன்
இந்தப்படத்தோட ஹீரோ கானாப்ரபா மாதிரி ஒரு இசை ரசிகர் . குறிப்பா இளையராஜா ரசிகர் . இளைய்ராஜா ஹிட்ஸ் பாடலகளை ரெக்கார்டு பண்ணி ஆடியோ கேசட்ல பஸ்ல பரப்பி காதலை வளர்க்கிறார். ஊர்ல இருக்கற பல காதல் ஜோடிகளுக்கு இவரால் தான் காதலே செட் ஆகுது. ஹீரோவோட அப்பா ஜாதி வெறியர். அவர் காதுக்கு இந்த தகவல் போகுது.
காதலர்கள் பிரிக்கப்படறாங்க நாயகிக்கு வேற ஒருவருடன் மேரேஜூம் ஆகிடுது, குழந்தையும் உண்டு
18 வருடங்கள் கழித்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நாயகி தன் மகளில்டம் சொல்லி தன் முன்னாள் காதலனை வர வைக்கிறாள். இதுக்குப்பிறகு என்ன ஆச்சு என்ற கவித்துனமான க்ளைமாக்ஸை திரையில் காண்க
ஹீரோவா புதுமுகம் ரங்கராஜ் தெளிவான , அமைதியான , பக்குவமான நடிப்பு . புதுப்புது அர்த்தங்கள் ரகுமான் சாயல். மோகன் சாயல் இருக்கு .
ஹீரோயினா ஸ்வேதா த்ரிபாதி. அழகிய முகம் , மிகச்சில காட்சிகளில் ஜோதிகா போல் ஓவர் ஆக்டிங். ம்ற்றபடி இளமை , குளுமை எல்லாம் பக்கா
சர்ச் பாதிரியாராக வேல ராமமூர்த்தி. வழக்கமா வில்லன் வேடங்களில் பார்த்து இதில் மாறுபட்ட வேடம் ஏற்றிருப்பது மகிழ்ச்சி
ஹீரோவின் அப்பாவாக வரும் ராஜாங்கம் கச்சிதமான நடிப்பு, ஹீரோயின் அப்பாவாக வருபவர் அருமை
இசை , ஒளிப்பதிவு படத்தின் ஜீவ நாடி . ராஜூ முருகன் தான் கதை வசனம். சகோதரன் இயக்கம் என்பதால் வட்டியும் முதலுமாக உழைத்திருக்கிறார்
தமயந்தி எழுதிய விகடன் சிறூகதையை ஒட்டி அவரே இயக்கிய தடயம் 30 நிமிட குறும்பட சாயல் சில காட்சிகளில் தெரியுது
சபாஷ் டைரக்டர்
1 அபூர்வ சகோதரர்கள் மாதிரி மசாலா படங்கள் தவிர்த்து ஒரு காதல் கதையின் கதைக்களமாக சர்க்கஸ் பின் புலமாக காட்டப்படுவது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் , கச்சிதமாக பயன்படுத்தி இருக்காங்க
2 இளையராஜா பாடல்க்ளை பயன்படுத்திய விதம் கதை நடக்கும் காலகட்டத்தை ரசிகன் மனசுக்கு சமீபமாக நெருக்கமாய் சேர்த்திருக்கு. வெரிகுட் ஐடியா
3 நாயகியின் அப்பா காதலை ஏற்க ஒரு கண்டிஷன் போடுவதும் அதை செய்ய இயலாமல் போவதையே காதலின் ஆழத்தை உணர்த்த பயன்படுவதும் அருமையான உத்தி
4 நாயகன - நாயகி காதலை வெளிப்படுத்தும் தருணங்கள் , பின் பழகும் தருணன்ங்கள் எல்லாமே கவித்துவம்
நச் டயலாக்ஸ்
1 தந்தை என்பவன் யார்? தன் மகனை அடிக்க இறைவனால் அனுப்பப்பட்டவன்.. ஆனா உங்கப்பா என்னை ஏண்டா அடிக்கறாரு?தளபதி மம்முட்டி , ரஜினி மாதிரி நம்ம நட்பு
2 டிஎம்ஸ் பாடியே எம் ஜி ஆரை முதல்வர் ஆக்கிட்டாரு , இப்போ எஸ்பிபி பாடி ரஜினியை முதல்வர் ஆக்கப்போறாரு
3 தமிழன் சொத்துக்கள் எல்லாம் எப்படி தேசிய மயமாக்கப்படுதுனு இப்போதான் தெரியுது
4 என்னடா? இத்தனை கதவு?
எத்தனை கதவு இருந்தாலும் தாழ்ப்பாள் மட்டும் போட மாட்டேங்கறாங்க
5 காதல் தான் இந்த உலகத்தை ஆசீர்வதிக்குது
6 நீ சர்க்கஸ்ல கத்திக்குத்துக்கு நிக்கறது எனக்குப்பிடிக்கல’’ ஏன்?
நீ செத்துட்டா?
நான் செத்தா உங்களுக்கு என்ன?
அப்ரம் நானும் தானே சாகனும்?
7 இதெல்லாம் சரியா வராது
இதை சொல்லவா என்னை இங்கே வரச்சொன்னே? அதுவும் இவ்ளோ மேக்கப் போட்டுக்கிட்டு? இதை நான் நம்பனுமா?
8 உங்கப்பன் மறுபடி மறூபடி அடுத்தவன் பிள்ளையை அடிக்கறான், இது நல்லாலை
9 ஊருல ஒருத்தன் காதலிச்சாலே உரிச்சு எடுத்துடுவான். தன் வீட்லயே அப்டி ஒரு சம்பவம் நடந்தா?
10 இந்த உலகமே ஒரு சர்க்கஸ் தான், எல்லார் கைலயும் கத்தி இருக்கு. ஜாதி , மதம் , துவேஷம்
11 நீ எல்லாம் லவ் பண்றதே வன்முறை தான், இதுல வன்முறை
யைத்தாண்டி லவ்வ்வா?
12 நான் எங்கே போனாலும் ஒரு குற்ற உணர்ச்சி என்னை துரத்திட்டே வருது, என்னால தான் எல்லாம்....
12 உங்க அப்பன் உன்னைக்குத்துனா தான் பொண்ணுன்னான், இவங்கப்பா பொண்ணு பின்னால போனா குத்திடுவேன்கறான், இதெல்லாம் சரிப்பட்டு வராது
13 மேய்றது வலமா இருந்தாலும் சேர்வது இடமா இருக்கனும்
14 பொண்ணுங்க மனசு சீக்கிரம் மாறிடும், ஆனா ஆம்பளைங்க மனசு என்னைக்கும் ஒரே மாதிரி...
15 மனசுல இருக்கறவன் தான் புருசன், உடம்பை சொந்தமாக்குனவன் அல்ல
பாடல்கள்
1 வெள்ளாட்டுக்கண்ணழகி. வெண்னெய்க்கட்டிப்பல்லழகி
ஊடால ஊருக்குள்ளே படம் எடுத்தா
2 கோடி அருவி கொட்டுதே அது என் மேலே
அது தேடி உசுரை முட்டுதே உன்னால
3 என்னைத்தேடி வந்த உறவே
என் எதிர்காலம் இனி நீதான் என் உசுரே
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தாலி கட்டிய கணவனை வில்லனாக காட்ட எடுக்கப்பட்ட திருப்பம் செயற்கை . ஒரு குழந்தை பிறந்த பின் ஒரு சராசரிக்கணவன் அப்படி செய்ய துணிவானா என்ன?
2 நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நாயகி நாயகன் வந்ததும் தடலானு அவன் கூட கிளம்பி வெளில போவது காதில் பூ
3 நாயகியின் கணவன் இப்போ கூட இல்லை , அப்பாவும் சம்ம்மதம் தான் ஆனால் க்ளைமாக்சில் அந்த பழைய கண்டிஷனை நாயகன் ஃபாலோ பண்ணி வெற்றி காண்பது சினிமாத்தனம் என்றால் கண்டிஷனில் இல்லாத ஒரு அம்சத்தை ஹீரோ எக்ஸ்ட்ரா பிட்டாக சேர்த்தது சராசரி மசாலா பட நிலைக்கு கொண்டு செல்லுது
சி.பி ஃபைனல் கமெண்ட் - காதலர்கள் , காதலில் தோல்வி அடைந்தவர்கள் , பெண்கள் பார்க்கலாம், கமர்ஷியலா இந்தப்படம் சரியாப்போகலை தான், ஆனாலும் பார்க்கற லெவல்ல தான் இருக்கு . ரேட்டிங் 2. 75 / 5 . நெட் ஃபிளிக்சில் கிடைகுது
0 comments:
Post a Comment