Tuesday, September 22, 2020

பாமா ருக்மணி (1980)- சினிமா விமர்சனம் ( டூயல் சிம் ரொமாண்டிக் காமெடி )

 


பாமா ருக்மணி  - சினிமா விமர்சனம்  ( டூயல்  சிம்  ரொமாண்டிக் காமெடி )

 

ஹீரோவுக்கு  ஒரு முறைப்பொண்ணு இருக்கு , அதைக்கட்டிக்கனும்னு அம்மா  ஆசை. ஆனா ஹீரோ வேற ஒரு பொண்ணை  லவ்வறாரு . பொதுவா  இந்த  மாதிரி  2  ஹீரோயின் சப்ஜெக்ட்ல திரைக்கதை  எப்படிப்போகும்னா கடைசி  வரை  இரு நாயகிகளுக்கும்  தன்  ஆள்  நம்மை விட்டுட்டு  இன்னொரு ஆள்  கூட இருக்கார்னு தெரியாது, க்ளைமாக்ஸ்  ல தான்  தெரியும், ஆனா  இதில்   ஓப்பனிங்லயே தெரிஞ்சிடுது. எப்படி  ஹீரோ 2 பேரையும் சமாளிச்சார்? என்பதே  மிச்ச மீதி  திரைக்கதை

 

இந்தப்படத்துக்கு  கதை , திரைக்கதை  ,  வசனம்  மட்டும்  கே பாக்யராஜ் , டைரக்சன்  அவரில்லை . ஆனாலும்  அவர்  டச்  இருக்கு .ஹீரோவா நடிக்க  கமல் மாதிரி  சிகப்பும், ரஜினி மாதிரி  ஸ்டைலும்  இருக்கனும்கற  ஃபார்முலா வை  உடைச்சு  சாமான்ய  முகம் , அப்பாவித்தன  ஆள்  ஹீரோ ஆகலாம்னு  நிரூபிச்ச  கே பாக்யராஜ் நடிப்புக்கு ஒரு ஷொட்டு

 

காதலியா  பிரவீணா. இப்போதான்  முதன் முதலா  இவரைப்பார்க்கிறென். மங்களகரமான  முகம், கச்சிதமான  நடிப்பு .  சிரிப்பு இவர்  + பாய்ண்ட்

 

 முறைப்பெண்னாக , மனைவியாக  ராதிகா . காதல் வசப்படுவதும், சக்களித்திச்சண்டையிலும்  ஜொலிக்கிறார்

 

ஹீரோவின் நண்பனாக , முக்கியமான  கேரக்டரில்  படம்  முழுக்க  நாகேஷ்  வந்து  போகிறார். கலக்கலான  நடிப்பு .   காமெடியிலும்    சரி ,  சோக  நடிப்பிலும்  சரி  மனதைத்தொடுகிறார்.   கே  பா வின் ஆஸ்தான  நடிகரான  கல்லாப்பெட்ச்டி சிங்காரமும் உண்டு 

 

பாட்ல்கள் , இசை  பரவால்ல ரகம். எம் எஸ் வி  இசையில் 4 பாடல்களில் 1 தான்  ஹிட்


 திரைக்கதையில்

  வ்ழக்கம்  போல்  பெண்களைக்கவரும் அம்சங்கள்  இருந்தாலும்  சில  காட்சிகள்  நம்ப முடியாததாக இருப்பது  கண்கூடு

 

 சபாஷ்  டைரக்டர்

1        ஹீரோவுக்கு  திருமணம்  ந்டக்கும்  கோவிலிலேயே  தரிசனத்துக்காக   காதலியும் , அவர்  அம்மாவும்  வரும்போது  நாகேஷ்  சமாளித்து  அனுப்பும் சீன்    நல்ல  காமெடி . இந்த சிச்சுவேஷனை  பல வருடங்களுக்குப்பின்  வீரா  படத்தில்  ரஜினி – மீனா- ரோஜா  காம்போவில்  பார்க்க முடிந்தது

2        சக்களத்தி  சண்டை  வராமல்  இருக்க  இருவருக்குள்ளும்  பொசசிவ்னெசை   தூண்டி விடுவது , இருவர்  வீட்டுக்கும்  மாறி மாறி  போவது

3  கதவைத்தொறடி பாமா என் கால் வலிக்கலாமா?   செம    ஹிட் பாட்டு. சிச்சுவேஷன்  கரெக்டா  செட்  ஆன  பாட்டு

 

4  ஒரு சீரியசான காட்சியை  காமெடியாகக்காட்டுவதில்  கே பாக்யராஜ் விற்பன்னர் , இதற்கு உதா  டார்லிங் டார்;லிங்  க்ளைமாக்ஸ்,  ஒரு கை  ஓசை  ஹீரோ ஓப்பனிங்  சீன். அதே  போல்  இதில்  க்ளைமாக்ஸ்  காட்சி  லாஜிக்  இல்லாமல் இருந்தாலும்  பிரமாதமான  காட்சி . அந்தக்காலத்தில் மிகுந்த  வரவேற்பாம்

 

 

நச்  வசனங்கள்

 

1        பேங்க்  அக்கவுண்ட்ல  ஓ டி  அதனால தான் சிகரெட்  பாக்கெட்ல  பீடி

2        பேசாம என் கூட வீட்டுக்கு வாங்க

 ஏன்,? பேசிக்கிட்டே வரக்கூடாதா?

 

3        பெத்தவங்களால  நீ  வளர்ந்திருதா  உன் இஷ்டப்படி நடக்கலாம்,

மத்தவ்ங்களால  வளர்ந்ததால   அது  முடியாது

 

4        இதை  எல்லாம் நான்  ஏன் சொல்றேன்னா...

ஏன்?

 

 நீ  என் கிட்டே இதைத்தான் சொன்னே..

 

5        எல்லா லவவர்சுக்கும்  தங்கள்  காதல்  தான்  உசத்தினு  ஒரு நினைப்பு வரும்

6        என் கிட்டே  பேசற  பொண்ணுங்க எல்லாம் 6  வயசுக்குக்கீழே அல்லது 60 வயசுக்கு மேலே....

7        மத்தாவங்களுக்காக பெத்தவங்களை  விட்டுக்கொடுக்கவே கூடாது

8          அடிக்கடி கோவிச்சுக்கிட்டாதா நெருக்க,ம்   அதிகம் உண்டாகும்

9        நீயே ஒரு டைப் . உனக்கு 2  ஒயிஃப் , போர்  ஃபேமிலி

லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

1        திருமணம்  ஆன  2 வது நாளே காதலியைத்திருமணம்  செய்வதும்  முதல்  இரவில் பாதி ராத்திரியில்  கிளம்புவதும்  ஓவர்

2        ராதிகாவின்  அம்மா  காந்திமதி  ஒரு சீனில்  கூட பேசாம  என் விருப்பப்படி என் தம்பியைக்கட்டி இருந்தா இப்படி இரு தார  வாழ்க்கை  வாழ வேண்டி  இருந்திருக்காதுனு  சொல்லவே இல்லை . அப்டி ஒரு வசனம் எதிர்பார்த்தேன்

3  யாருக்கும்  தெரியாமல்  ரக்சிய திருமணம்  செய்யும்   ஹீரோ  அன்றே சினிமா தியேட்டருக்கு  வருவதும் , மாமா  விடம்  மாட்டிக்கொள்வதும்  டிராமா . யாராவது  அப்டி  போய் மாட்டுவாங்களா?  மேரேஜ்  ஆகும்  வரை  வேணா  சினிமா, பார்க், பீச்னு  சுத்துவாங்க , ஆன  பின்  பெட் ரூம்  போகத்தானே  ஆசைப்படுவாங்க, அதுவும்  முதல்  நாளே


4   ஏற்கனவே  2 சம்சாரம், இதுல 3 வதா ஒரு பொண்ணு கூட  டான்ஸ்  ஆடறதா செட்  பண்ணி இரு மனைவிகளையும்  பார்க்க வைத்து பொசசிவ்னெசை தூண்டுவது  நம்பவே முடியாத  காட்சி 

 

சி.பி ஃபைனல்  கமெண்ட்  -  ஜாலியா டைம் பாஸ்  காமெடி  பார்க்க  ஆசைப்படறவங்க  பார்க்கலாம், ரேட்டிங்  2.75 / 5

 

 

0 comments: