பூட்டாத பூட்டுகள் _ சினிமா
விமர்சனம் ( எ மகேந்திரன் ஃபிலிம்)
உதிரிப்பூக்கள் அளவு ஹிட்டாகலைன்னாலும் அந்த கதைக்கு கிட்டே
நிக்கும் தகுதி படைத்த
கதை , இத்தனை நாட்களா மிஸ் பண்ணிட்டேன்
, இப்போதான் யூ ட்யூப்ல பார்த்தேன்
படத்தோட ஓப்பனிங் ஷாட்லயே
கதைக்கு நேரடியா வந்துடறாரு. கிராமத்தில் இருக்கும் தம்பதிக்கு கல்யாணம் ஆகி பல
வருடங்கள் ஆகியும் குழந்தை
பாக்கியம் இல்லை . ஹீரோவுக்கு தான்
ஒரு குழந்தைக்கு தந்தை ஆக மாட்டோம்னு ஒரு டாக்டர் மூலமா ஆல்ரெடி தெரியும், ஆனா மனைவி கிட்டே
சொல்லலை , சொன்னா கேவலம்னோ, வேற என்னமோ காரணமோ
சொல்லலை
ஹீரோ ஊர்ல இருக்கற
பொண்ணுங்க கிட்டே வம்பிழுக்கும்
ப்ளே பாயா இருக்காரு . அந்தக்காலத்துல எல்லாம்
கிராமங்கள்ல பேயிங் கெஸ்ட் ஆக
சிலர் இருப்பாங்க. அதாவது சாப்பாடு மட்டும்
ஒரு வீட்ல சாப்டுட்டு
அதுக்கு உண்டான பணம் கொடுத்துடறது
. ஹோட்டல்ல , மெஸ் ல சாப்பிடறதை
விட இது கொஞ்சம் நல்லது , உடம்புக்கும் , பர்சுக்கும்
அந்த மாதிரி
ஒரு ஆள் ஹீரோ வீட்டுக்கு
சாப்பிட வர்றாரு . அந்த ஆளுக்கும் ஹீரோயினுக்கும் ஒரு கனெக்சன்
உருவாகிடுது. ஒரு தருணத்துல ஹீரோயின்
அந்த ஆளோட ஊருக்கு
போய் அவரோட வாழ நினைக்கறாரு
. ஆனா அவன் அதுக்கெல்லாம் தயார் இல்லை
, அப்பப்ப சாப்பாடு வேணா சாப்பிடறேன், கல்யாணச்சாப்பாடு போட மாட்டேன்கறான்
இப்போ ஹீரோயினுக்கு
சிக்கல், திரும்பிப்போகவும் முடியாது , இங்கேயும் இவன் கூட வாழ
முடியாது. சாதா டைரக்டர் படம்னா
ஹீரோயின் தற்கொலை பண்ணிக்கற
மாதிரி காட்டி இருப்பாரு , இயக்குநர் இயல் நிலை
வித்தகர் மகேந்திரன் ஆச்சே? என்ன
முடிவு எடுத்தா என்பதுதான்
படத்தின்ன் க்ளைமாக்ஸ்
ஹீரோவா மலையாள நடிகர்
ஜெகன். இவர்தான் ஒரு படத்துல ஹெலிகாப்டர்
ஃபைட் சீன்ல தத்ரூபமா
நடிக்கறேன் பேர்வழினு துர் அதிர்ஷ்டவசமா
மேல இருந்து கீழே விழுந்து விபத்தில்
இறந்தவர் .நல்ல நடிப்பு . நம்ம ஊரு சிவச்சந்திரன் முகச்சாயல். குழந்தை பாக்யம்
இல்லாமல் ஏங்கும் மனைவியைப்பார்க்கும்போது தனக்குள்
ஏற்படும் குற்ற உணர்ச்சியை
நன்கு வெளிப்படுத்தி இருக்கார்
. ஓடிப்போன மனைவி என ஊரார் பேசுமே
என புழுங்கும்போதும் அடர்த்தியான
நடிப்பு
ஹீரோயினாக சாருலதா பிரமாதமான நடிப்பு, அடக்கமான அழகு.சாப்பிட
வரும் ஆளிடம் மனதைப்பறி கொடுக்கும் காட்சிகள் கவிதை .தன்னிடம் அவன் நேரடியாகப்பேசாமல் குறிப்பால்
உணர்ந்த்தும் காட்சிகளை அவர் மனதுக்குள் ரசிப்பது
அருமை
சாப்பிடும் ஆளாக வருபவர்
கச்சிதமான நடிப்பு . சராசரி ஆண்களின் மனசை
வெட்ட வெளிச்சம் ஆக்குகிறார். பின் பாதி காட்சிகளில் , க்ளைமாக்ஸ் காட்சியில்
இவர் நடிப்பு யதார்த்தம்
இந்த 3 பாத்திரங்கள்
தவிர உடல் ஊனமுற்ற நபர் / மாற்றுத்திறனாளி , அவர்
மனைவி இருவரும் பங்களிப்பும்
அருமை . நாயகி ஊரை விட்டு ஓடிப்போகும்போது இவர் தன்
மனைவியை நினைத்து பெருமிதம் கொள்வது
அருமை என்றால். ஹீரோவுக்குப்பண உதவி தர தன்
மனைவியின் நகைகளை தந்து உதவுவது அசத்தல்
ரகம்
மகேந்திரன் படங்களில்
எப்போதும் முக்கியப்பாத்திரங்கள் தவிர சின்ன
சின்ன கதாபாத்திர்ங்கள்:உம் யதார்த்தமான வசனங்கள்
பேசி மனதில் நிற்பார்கள் , இந்தப்படத்திலும் டிட்டோ
இசை இளையராஜா , சொல்லவே வேணாம், பின்னணி இசையில்
ஒரு ப்டத்துக்கு எந்த அளவு மெருகூட்ட முடியும்
எனும் செப்படி வித்தையைக்கற்றவர்
ஒளிப்பதிவு அருமை
. எடிட்டிங் குட்
சபாஷ் டைரக்டர்
1
ஓப்பனிங் சீன்லயே என்னமோ
மந்திரவாதியிடம் பேய் ஜோசியம்
கேட்பது போல் பில்டப் கொடுக்கும் காட்சியும் , அதற்கான லைட்டிங்கும்
2 தம்பதியர் இரவில்
தனிமையில் இருக்கும்போது பரணில் பூனைகளின் கலவிக்கான
அழைப்பு ஒலிக்குறிப்பை கேட்டு
மருகுவது
3
நாயகிக்கு கள்ளக்காதல்
தொடர்பு ஏற்படும் காட்சியில்
தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து சந்தோசமாக
வீட்டில் இருப்பதும், அதைக்கனவன் காண்பதும்
4
ஹீரோயின் க்ளைமாக்ஸில் என்ன ஆனார் என்பதை
கொஞ்ச நேரம் சஸ்பென்சாக இழுத்தது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 கள்ளக்காதலன்
மனம் முழுசாக அறியாத
நிலையில், சரிவர இருவரும் கலந்துரையாடாத நிலையில் எந்த நம்பிக்கையில் அவன் ஊருக்கு நாயகி கிளம்பறா?
2
நாயகிக்கும் , கள்ளக்காதலனுக்கும் உடல் ரீதியான தொடர்பு
ஏற்பட்டதா? இல்லையா? என்பதை தெளிவாக இயக்குநர்
சொல்லவே இல்லை ,அ தை பார்வையாளர் யூகத்துக்கே
விட்டு விட்டார் போல , ஆனா அதை வைத்து பல லாஜிக்
நிரடல்கள் எழுகின்றன
3
நாயகி ஓப்பனாக கிராமத்தில்
பலர் பார்க்கும்படி ஆற்றங்கரையில் கள்ளக்காதலனை சந்திப்பது எப்படி?கணவனுக்கு தெரிஞ்சுடும்
என்ற பயம் இருக்காதா? அட்லீஸ்ட் ஊரார் பேச்சுக்குக்கூடவா பயப்படலை ?
சி.பி ஃபைனல் கமெண்ட் -
கம்ர்ஷியல் ஹிட் அடிக்கலைன்னாலும் ஜனரஞ்சகமா வெற்றி
பெறாத , மக்களை அதிகம் போய்ச்சேராத
ஒரு நல்ல கவிதை என்ற அளவில் இதை ரசிக்கலாம்
. ரேட்டிங் 3 / 5
பூட்டாத பூட்டுகள் | |
---|---|
இயக்கம் | மகேந்திரன் |
தயாரிப்பு | கே. என். லக்ஸ்மனன் ஸ்ரீ சரசாலயா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெயன் சாருலதா |
வெளியீடு | மே 9, 1980 |
நீளம் | 3934 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
0 comments:
Post a Comment