மயங்குகிறாள் ஒரு
மாது (1975)– சினிமா விமர்சனம்
யூ ட்யூப்ல கலைஞானம் பேட்டி பார்க்க நேர்ந்தது. பஞ்சு அருனாசலம் கதைல ஒரு இடத்துல லாக் ஆகி அடுத்து எப்படி கொண்டு போறதுனு தெரில எனும் சிச்சுவேஷன்ல தான் தான் ஐடியா கொடுத்து அடுத்த மூவ் பண்ணதா சொல்லி ஒரு சம்பவம் சொன்னார்.அது என்னைக்கவர்ந்தது. சரி பார்ப்பமேனு யூ ட்யூப்ல தேடி இந்தபப்டம் பார்த்தேன்.இன்னொரு உபரி தகவல் கே பாக்யராஜ் பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்ட்டா சேரும் முன் பாலகுருவிடம் இருந்தார் என்பது நமக்குத்தெரிந்த நியூஸ் , ஆனா கலைஞானம் அவர்களிடம் கொஞ்ச நாட்கள் இருந்து தன் கதை ஞானம் வளர்த்தி இருக்கார் என்பது புது நியூஸ்
பல படங்களுக்கு கதை எழுதிய கலைஞானம் சிவாஜியை வெச்சு சொந்தப்படமா ராஜ ரிஷி எடுத்தப்போ சிவாஜி எச்சரிச்சாராம், இது தமிழ் ஆடியன்சை கவர்வது சிரமம்னு, அதே மாதிரி படம் ஃபிளாப் ஆகி ஏகப்பட்ட நஷ்டம், இது நம்ம ஆளு படத்துல கே பாக்யராஜ் இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து கடனை அடைச்சாராம்
ஹீரோயின் காலேஜ்
ஹாஸ்டல்ல தங்கி படிக்குது. எங்கே படிக்குது? பாதி நேரம் சைட் அடிக்குது. ஹாஸ்டல்ல சக தோழி
ஒருத்தி சரோஜாதேவி , விருந்து, திரைச்சித்ரா மாதிரி வ ட இந்திய இலக்கியப்பத்திரிக்கைகளை வாடகைக்கு
விட்டுட்டு இருக்கு . அதை வாங்கி ஹீரோயின்
படிக்குது
அந்தக்கதைகளை எல்லாம்
படிச்சுப்பார்த்துட்டு பார்க்ல ,
பீச்ல லவ் ஜோடிகளை வேடிக்கை பாக்குது.. இப்போ நாம பிக் பாஸ்ல என்ன
பண்றாங்க?னு கூச்சப்படாம ஆர்வமாப்பார்க்கறமே
அந்த மாதிரி
இதை ஒருத்தன்
பார்த்துடறான். பேச்சுக்குடுக்கறான், கடலை போடறான். திடீர் நு சினிமா க்குப்போலாமானு
கூப்பிடறான்
நல்லா கவனிக்க
வேண்டிய விஷயம், இருவருமே காதலிக்கறதா சொல்லிக்கலை/. சும்மா வயசுக்கோளாறு
தன் வீட்ல யாருமே
இல்லாதப்ப நாயகியை அவன் கூட்டிட்டுப்போறான்.பஞ்சும்,
நெருப்பும் எதேச்சையாவோ, திட்டம் போட்டோ பத்திக்குது
வழக்கம் போல நாயகி கலங்கிடறா
.களங்கம் வந்திடுமோனு அச்சப்பட்டு
பரிதவிக்கிறா
அடுத்த நாள் அவனைத்தேடிப்போனா ஆளைப்பிடிக்க முடியலை
பயந்து போய் தற்கொலைக்கு முயற்சி பண்றா. தோழிகள் காப்பாற்றி
அவரை சமாதானப்படுத்தறாங்க
வீட்ல மாப்ளை
பார்க்கறாங்க , மேரேஜ் ஆகிடுதஉ
முதல் இரவு . கணவன்
ஓப்பனா பேசறான், எனக்கு மேரேஜ்க்குமுன்
ஒரு அஃபர் இருந்தது, ஒரு ஆஃபர் கிடைச்சது,
இருவரும் உடலால் இணைஞ்சுட்டோம், ஆனா பின் பிரிஞ்சுட்டோம் , உனக்கும் இதே போல்
அனுபவம் இருந்தா சொல்லுங்கறான்
நாயகி சொல்லலை
காலம் நகருது. நாயகியின்
முன்னாள் காதலன் இங்கே கார் டிரைவரா
சேருகிறான்/ காதலனும், நாயகியும் நெருக்கமா இருந்ததை
ஃபோட்டோ பிடிச்சு வெச்சிருந்த வில்லன்
பிளாக்மெயில் ப்ண்றான்
நாயகி பிளாக் மெயிலுக்கு
பயந்து என்ன செஞ்சா? கணவனுக்கு விஷயம்
தெரிஞ்சுதா? காதலன் என்ன செஞ்சான்? இவை எல்லாவற்றுக்கும் படத்தின்
பின் பாதியில் விடை இருக்கு
நடிகர்கள் , நடிப்பு மற்ற பங்களிப்புகள் பற்றிப்பேசும் முன் பிரமாதமான 2 பாடல்கள் பற்றி சொல்லிடறேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
தர வேண்டும் வாழ்வினில்
இன்பம்
அருமையான ,மெலோடி
அதை விட கலக்கல்
பாட்டு சம்சாரம் என்பது
வீணை பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன
பாட்டு
நாயகியா சுஜாதா.
விதி படத்துல பெண் புலியா கோர்ட்ல
சீறுனதை ரசிச்ச எனக்கு ஓப்பனிங்ல்
இவர் கேரக்டர் சரியாக
முறையாக வடிவமைக்கப்படாமல் கிட்டத்தட்ட
சபலிஸ்ட் போல் காட்டியது
என்னமோ போல இருந்தது. ஆனா பின் பாதியில்
சமாளிச்ட்டாங்க . நடிப்பு அருமை
நாயகனா , கணவனா
முத்து ராமன், கண்ணியமான
க்ணவன் ரோல், பிரமாதப்படுத்தி இருந்தார். ஆனா நடைமுறை வாழ்வில் லட்சத்தில் ஒருவர் கூட இவ்ளோ நல்லவரா
இருக்க மாட்டாங்க
காதலனா விஜய குமார்
. நாட்டாமையாப்பார்த்துப்பழ்குன நமக்கு அவரை
ஒரு பிளே பாயா பார்க்க தமாஷா இருந்தது
வில்லனாக தேங்காய் சீனிவாசன் , அடிக்கடி அவரே நான் ரொம்ப டீசண்ட்டானவன், சொன்ன பேச்சு மாற மாட்டேன் என சொல்லிக்கொண்டே மாற்றி மாற்றி
மிரட்டுவது கொடூரம்
கணவன் ,மனைவி , காதலன்
, வில்லன் என 4 கேரக்டர்களை மட்டும் மெயினா வெச்சு
திரைக்கதையை சுவராஸ்யமா அமைச்சது குட்
திரைக்கதையில் சில
நெருடல்கள்
1 நாயகி காதல்வசப்படுவது போல காட்டி இருக்கலாம். ஆனா அவர் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு வேணும்னே தப்பு பண்ணுவது போல
காட்டி இருக்கத்தேவை இல்லை லேடீஸ் ஆடியன்சை
நெளிய வைக்கும் ஓப்பனிங் 20 நிமிடக்காட்சிகள் எப்படி சென்சாரை விட்டு வெச்சுதோ? அந்தக்காலத்துலயே அப்படி
2 காதலன் பின்னாளில் அந்த சமயம் நான் ஜெயிலுக்குப்போய்ட்டேன் என சமாளிக்கிறான். நல்லவனான அவன் நாயகியை ஏமாற்று,ம் எண்ணம் இல்லாதவன்
யாரிடமாவது தகவல் சொல்லி விட்டிருக்கலாமே?
3 எந்த அக்காவாவது
தன் தம்பிக்கு ஏற்கனவே கற்பை
இழந்த பெண் என தெரிந்தும்
தம்பிக்கு தகவல் சொல்லாமல்
மணம் முடித்து வைப்பார்களா?
4 நாயகி வில்லன் பிளாக் மெயில் பண்ணும்போது லாக்கரில்
இருந்து பணம் எடுத்துத்தரும் ரிஸ்க் எடுக்கிறார். அதை விட தன்னிடம்
உள்ள நகைகளை தந்திருக்கலாமே? பணக்காரப்பெண்
வந்த இடமும் பணக்கார
இடம். நகை போனால் தெரியாது
சி.பி ஃபைனல் கமெண்ட் – படத்தின் முக்கியமான
பிளஸ் மகிழ்ச்சியான க்ளைமாக்ஸ்.
ஹிட் பாட்டு 2 இவற்றுக்காக பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 /
5 யூ ட்யூப்ல கிடைக்குது
0 comments:
Post a Comment