Tuesday, August 18, 2020

லாக்கப் ( 2020) –சினிமா விமர்சனம் ( ஓடிடி ரிலீஸ்- ZEE 5) ( க்ரைம் த்ரில்லர் )

 

லாக்கப் ( 2020) –சினிமா விமர்சனம் (  ஓடிடி  ரிலீஸ்- ZEE 5)   ( க்ரைம் த்ரில்லர் )

 Lockup Movie Archives - Kalakkal Cinema

சென்னைல ஒரு ஏரியா போலீஸ்  ஸ்டேஷன்ல  பெண்  சபலிஸ்ட் ஆன ஒரு இன்ஸ்பெக்டர் ,ப்ரமோஷனுக்காக  இன்ஸ்பெக்டருக்கு  எடுபுடி  வேலை  பார்க்கும்  ஒரு சப் இன்ஸ்பெக்டர் ,  அதே  பிரமோஷனுக்காக சப் இன்ஸ்பெக்டரிடம்  எடுபுடியாக  இருக்கும்  போலீஸ்  கான்ஸ்டபிள்  இவங்க  3 பேரும் தான்  கதையின்  மையப்பாத்திரங்கள் . ஒரு நாள் அந்த  ஸ்டேஷன்  இன்ஸ்பெக்டர்  கொலை  செய்யப்படுகிறார். அதைப்பற்றி  விசாரிக்க  ஒரு புது  லேடி  இன்ஸ்பெக்டர்  அங்கே  வர்றாங்க

 

கொலை  செய்யப்பட்ட  இன்ஸ்பெக்டருக்கு  லேடீசை  சப்ளை  செய்யும்  ஒரு ரவுடி  குடி  போதைல   2  பேரும்  ஒண்ணா  சரக்கு  அடிச்ட்டு இருக்கும்போது  தன்  மனைவியையே  அனுப்பக்கேட்டதால்  கோபம்  அடைந்து  இன்ஸ்பெக்டரை  தாக்கியதாகவும் , அதுக்குப்ப்ழி  வாங்கும்   விதமா  ஒரு கேஸ்ல  அவனை  சிக்க  வெச்சு  பேப்பர்ல  ஃபோட்டோ எல்லாம்  போட்டு   ரவுடியை  அவமானப்படுத்தியதால்  பழிக்குப்பழி  வாங்க   தான்  கொலை  செய்ததாகவும்  ஒப்புதல்  வாக்கு மூலம்  தர்றான்

 

 ஆனா  கொலை  செய்யப்பயன்படுத்திய  கத்தி  வேற ,  ரவுடி  கையில் இருந்த  கத்தி வேற . இந்தக்கொலையோட உண்மையான  குற்றவாளி  யார்? என துப்பு துலக்கும்போது   அதே  ஏரியாவில்  ஒரு  பெண்ணோட  டெட்  பாடி  கிடைக்குது. தற்கொலை  மாதிரி  தெரியுது . ரேப்  அட்டெம்ப்ட்  எதும் இல்லை

 

 இந்த  2 மரண  சம்பவங்களுக்கும்  ஏதோ  தொடர்பு இருக்கறதா  லேடி  இன்ஸ்பெக்டர்   நினைக்கறார். அதுக்குப்பின்  அவர்  என்னென்னெ  துப்பு  துலக்கினார்  என்பதே  மிச்ச  மீதி  திரைக்கதை

 

லேடி  இன்ஸ்பெக்டரா  ஈஸ்வரி ராவ்  நல்ல  கம்பீரம் . அவர்  சார்ஜ்  எடுத்துக்கிட்டது,ம்  மொத்த  ஸ்டெஷனையும் தன்  கட்டுப்பாட்டில்  கொண்டுவருவது  அருமை , சப்  இன்ஸ்பெக்டர்  தன்னை  எதிர்த்துப்பேசும்போது  உண்ர்ச்சி  வசப்படாமல்  அவரை  டீல்  செய்யும் விதம் , ரவுடியை  எப்படி  கொலை  செஞ்சே? செஞ்சு  காட்டு  என  டெமோ  கேட்டு  மடக்குவது   எல்லாம்  கன கச்சிதம்

 

 சப்  இன்ஸ்பெக்டராக  வரும்    இயக்குநர்  வெங்கட்  பிரபு  இனி  கவுதம்  வாசுதேவ் மேனன்  வழியில்  பல  படங்களில்  வில்லனாக  மிளிர  வாய்ப்பு நிச்சயம் . நல்லா  பண்ணி  இருக்கார் , ஆனா  அடிக்கடி  தம் அடிப்பதை  குறைத்து  இருக்கலாம். வில்லன்  கேரக்டர் என்றாலே  தம், தண்ணி  ஏதோ  ஒண்ணு கைல  இருக்கனுமா? என்ன? 

 

 போலீசாக  வரும்  வைபவ் தான்  கிட்டத்தட்ட  நாயகன்  மாதிரி . அவரது  போலீஸ்  கம்பீரம் , உயர்  அதிகாரிக்கு  கட்டுப்பட்டு  நடப்பது ,  ப்ரமோஷனுக்காக  ஏங்குவது  , காதலியுடனான  காட்சிகள்  அனைத்திலும் கச்சிதமாக  ஸ்கோர்  செய்கிறார்

 

இன்ஸ்பெக்டராக  வரும் மைம்  கோபி  மப்புலதான்  எல்லா  சீன்களிலும்  வர்றார். பணிப்பெண்ணாக  வரும்  பூரணா   பாந்தமான  நடிப்பு , வைபவின் காதலியாக  வரும்  வாணி  போஜன்  அதிக  வாய்ப்பில்லை

 

பின்னணி  இசை  ஓக்கே ரகம் ,ஒளிப்பதிவு   கச்சிதம். திரைக்கதை  , எடிட்டிங்   குட்

 

 சபாஷ்  டைரக்டர்

 

1   த்ரில்லர்  படங்களில்  டூயட் , செண்ட்டிமெண்ட்  காட்சிகள் , காமெடி  டிராக்  மூன்றும் வேகத்தடை  என்பதை  உணர்ந்து  தவிர்த்த    விதம்

 

2    கனகச்சிதமாக ஒண்ணே முக்கால்  மணி நேரத்தில்  எடிட்டிங்  கட் பண்ண  ஷார்ப்னெஸ்

 

3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அமைத்த  விதம் , அவிழ்த்த  விதம்  கச்சிதம் . முக்கியமான 3  கேரக்டர்களை  வைத்து   கதை  அமைத்த  விதம்

 

4  கைதி  பட  வெற்றிக்குப்பின்  தமிழ்  சினிமா  வில்  ஒரே நாளில்  நடக்கும்  கதைக்கு    மவுசு  கூடியதை  உணர்ந்து  திரைக்கதை  அமைத்தது

  நச்  டயலாக்ஸ்

 

1        யாருய்யா  இது ? உன் ஆளோட அக்காவா?

 அட , அவங்க  வீட்டு வேலைக்காரி   சார்

 

 வேலைக்காரியே  இவ்ளோ  அழகுன்னா..... அப்போ  நீ பெரிய  இடமாத்தான்  பிடிச்சிருக்கே?

 

2        பாழாப்போன  பணம்  ஏழைங்க  கிட்டே  தங்க  மாட்டேங்குதே?

3        ஒரு நாள்  வேலை  செஞ்சாலும்  ட்யூட்டில  கரெக்டா  இருப்பேன்

4        போலீசோட  வேலை  கண்டுபிடிக்கறது  , இன்னொரு போலீசை  கேள்வி    கேட்பது அல்ல

5        பசில  சாம்பார்  சாதம்  கூட் பிரியாணி  மாதிரி  தான்  தெரியுது

6        சார் , வேணாம் சார்  ட்யூட்டி டைம்ல....

 

 ஏன்? யூனிஃபார்ம்  போட்டிருந்தா  பசிக்காதா?

 

7        ஒருத்தர்  நமக்கு  பயப்படனும்னா  அவங்க  வீக்னெஸ்  நம்ம  கைல  இருக்கனும்

8        சாதாரண  பி சி  டா நீ, என்னை  விடப்பெருசா  என்னத்த  யோசிச்சுடப்போறே?

  9  ஒரே  நேரத்தில்  2 போலீஸ்  காரங்க   கிரிமினல்  மாதிரி  யோசிச்சா  ரொம்ப  பிரச்சனைல  போய் முடியும்

10    புத்திசாலித்தனம் , போக்கிரித்தனம்  இந்த  ரெண்டும்  ஒண்ணு  சேர்ந்து  என் கிட்டே இருக்கு

11      நமக்கு  நியாயமாக்கிடைக்க  வேண்டியதைக்கூட  போராடித்தான்  பெற  வேண்டி  இருக்கு

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள்

 

 LockUp' ரிப்போர்ட் - ரெண்டு கொலை... மூணு கில்லாடிகள்... செம சஸ்பென்ஸ்! |  Vaibhav and Venkat Prabhu's Lockup Movie Plus Minus Report

1  தனது  செல் ஃபோனில்  வில்லங்கமான   வீடியோ க்ளிப்  இருந்தும்  எந்த  தைரியத்தில்  ஒரு போலீஸ் இன்னொரு  போலீஸிடம்  தன் ஃபோனை கேலரி  லாக்  பண்ணாமல்  கொடுத்து  மாட்டுகிறது ?

 

2  மஞ்சள்  கலர்  டி சர்ட்  போட்டு  ரத்தக்க்காயம்  பட்ட  போலீஸ்  பின்  அந்த  சட்டையை  மாற்றி  வேறு  சட்டை  போடும்போது  அந்த  ரத்தம்  மீண்டும்  படாதா?  பனியனும்  போடலை . காயத்தின்  ரத்தம்  எங்கே   போகும்?காயத்துக்கு  கட்டும்  போடலை

 

3   போலீஸ்  பணிப்பெண்ணை  பைக்கில்  ஏற்றிக்கொண்டு    போகும்போது  பணிப்பெண்ணின்  மகள்  சைக்கிளில்   அவர்களை ஃபாலோ  பண்ணி  போவது  எப்படி?பைக்கின்  சராசரி  வேகம்  40 கிமீ   ஸ்பீடு என்றாலும்

  சைக்கிள்ல எப்படி  ஃபாலோ  பண்ண முடியும்? 

4  ஈஸ்வரி ராவ்  வெங்கட் பிரபுவின்  பிளட்  க்ரூப்பை அறிய  பிளட்  டெஸ்ட்  எடுக்கச்சொல்வது  நல்ல  காமெடி , போலீஸ்  ஐ டி  கார்டிலேயே  பிளட்  க்ரூப் இருக்குமே?

 

5   வைபவ்  தன் பிளட்  க்ரூப்  என்ன? என்பதை  சிஸ்டத்தில்  நீக்குவது கூட சாத்தியம்  இல்லை , போலீஸ்  ரெக்கார்டுகளில்  பதிவாகி  இருக்குமே?


6   ஒரு சீனில்   வெங்கட் பிரபு  வைபவிடம்  குறிப்பிட்ட  பிராண்ட்  பேரு சொல்லி  சிகரெட்  வாங்கிட்டு  வரச்சொல்றார். பொட்டிக்கடைல  வைபவ் “ சிக்ரெட்  1  குடுங்க  என்று தான்  கேட்கிறார், ஆனா  கரெக்டா  பெட்டிக்கடைக்காரர்  அதே  பிராண்டை  தருவது எபப்டி? 


7   வெங்கட்பிரபு  வைபவின் செல்  ஃபோனில்  இருந்து  ஒரு  வீடியோ க்ளிப்பை தன் ஃபோனுக்கு மாற்றிக்கொண்டது   வைபவ்க்குத்தெரியாது , ஆனா  அது தெரிஞ்ச மாதிரி  ஒரு சீன்ல வசனம்  வருதே ,எப்படி? 

 

 சி.பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நறுக் சுருக்  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு  டைம் பாஸ்  மூவி , பார்க்கலாம் . விறி விறுப்பாகப்போகுது . ஜீ  ஃபைவ் ல ரிலீஸ்  ஆகி இருக்கு . ரேட்டிங்  2. 75  /. 5

 

 

0 comments: