சில்லுக்கருப்பட்டி -
சினிமா விமர்சனம் ( எ ஃபீல் குட்
மூவி)
கொரோனாவால எனக்கு நிகழ்ந்த
முக்கியமான நன்மை சினிமா
தியேட்டர்களுக்கு தந்த தண்டச்செலவு
குறைஞ்சதும் , பார்க்கத்தவறிய நல்ல படங்களை
ஓ டி டி தளங்களில் பார்க்க
நேர்ந்ததும் தான் சில நல்ல படங்கள் சில தியேட்டர்களில் சில ஏரியாக்களில் ரிலீஸ் ஆவதில்லை, அப்படியே ஆனாலும் மினிமம்
ஆடியன்ஸ் 18 பேர் வராததால் ஷோ கேன்சல் ஆவதும்
உண்டு . , மசாலாக்குப்பைகளை பிளாக்கில்
டிக்கெட் வாங்கிப்பார்க்கும் ரசிகர்கள் தரமான படங்களைக்கண்டு கொள்ளாதது அவர்களுக்கும் இழப்பு , நல்ல
படைப்பாளிக்கான முன்னேற்றத்துக்கும் தடை
4 அழகிய கவிதைகள்
ஒரே பேக்கிங்கில் . தர வரிசைப்படி
அவர்களே தலைகீழாக தொகுத்து
வழங்கிய பாங்கும் அருமை. இப்போ
நாம் விமர்சனத்துக்குள்ளே போகும்போது
தரவரிசைப்படி பார்ப்போம்
1
. கதை 1 ( படத்தில் 4 வது கதை ) = ஒரு மிடில் கிளாஸ்
ஃபேமிலி , கணவன் , மனைவி , 3 குழந்தைகள் கொண்ட குருவிக்கூடு.
வாழ்க்கை நல்லா தான் போய்க்கிட்டு இருக்கு ஆண்களுக்கு மனசில்
இருக்கும் அன்பை வெளிப்படுத்தத்தெரியாது.
பெண்களுக்கு சின்னச்சின்ன விஷயங்களைக்கூட தன் துணை
கவனிக்கனும், பாராட்டனும், அன்பு செலுத்தனும் அப்டினு
நினைப்பாங்க . இந்த முரண்பாடான நிலைகளால்
ஒரு தம்பதி அடையும் மனக்கிலேசங்கள் எப்படி
சரி ஆகுது?அல்லது சரி ஆச்சா?
இல்லையா? என்பதை சொல்லும் கதை தான் இது
சமுத்திரக்கனி தான் இதில் ஹீரோ.
இவர் எப்பவுமே சமுதாயத்துக்கு புரட்சிகரமான கருத்துக்கள்
சொல்லும் நாயகனகாத்தான் தன்னை முன்னிலைப்படுத்தி
வந்திருக்கிறார், ஒரு காலத்தில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் செய்தது
போல . ஆனா அவரை இந்த மாதிரி ஒரு ஃபேமிலிமேனாக காட்ட நினைத்த இயக்குநருக்கு
ஒரு ஷொட்டு . பிரமாதமான நடிப்பு . வசனங்கள் கலக்கல்
ரகம். சின்ன சின்ன சீன்களில் எல்லாம் இயக்குநரின் முத்திரைகள்: நாயகியா வரும் சுனைனா தரமான பங்களிப்பு
இந்தக்கதையை நான்காவதாக அதாவது
கடைசிக்கதையாக வைக்க ஸ்டார்
வேல்யூ உள்ள ஒரே கதை என்பதும் , வேகமான, விறுவிறுப்பான திரைக்கதை
அமைப்பு என்பதாலும் என நினைக்கிறேன்
நான் கூட தம்பதிகள்
மன வேறுபாட்டால் கள்ளக்காதல்
விவகாரம் நுழையும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆணின் எண்ண ஓட்டத்துக்கு மாறாக எப்போதும் பெண் தனித்து நிற்பார்
என்பதற்குக்கட்டியம் கூறும் விதமாய்
பெண் இயக்குநர் இந்தக்கதையைக்கொண்டு போன விதம் அழகு
கதை 2 ( படத்தில் 3 வது கதை )- நாயகி
60+ வயசு ஆகியும் சில காரணங்களால் மேரேஜே
பண்ணிக்காம வாழும் முதிய முதிர்கன்னி
. சின்னக்குழந்தையோட சறுக்கு விளையாடிட்டு
இவர் ஜாலியா இருக்கறதை
ஃபைனாகுலர் மூலமா நாயகன் பார்க்கறார். இவருக்கும் அதே வயசுதான்
ஆனா மேரேஜ் ஆகி பேரன் எல்லாம் எடுத்தாச்சு , மனைவி இல்லை
இவங்க 2 பேருக்கும்
இடையே நிகழும் சந்திப்புகள் , அரும்பும் நட்பு தொடரும்போது
ஆணின் அவசரபுத்தி காரணமா நாயகன்
நாயகியிடம் முத்தம் கேட்பது
மாதிரி ஒரு மறைமுகமான சமிக்ஞை
கொடுத்ததும் நாயகி கோவிச்ட்டு
வீட்டுக்குக்கிளம்பிடறார்.
ஒரு சின்ன விபத்தில்
மாட்டிக்கிட்ட நாயகி சில காலம் பெட் ரெஸ்ட் எடுக்க
நாயகனுக்கு விபரம் தெரியாம
தடுமாற பிறகு இருவரும் சந்திச்சாங்களா? அவங்க நட்பு தொடர்ந்ததா?
என்பதை இது வரை வந்த எந்த ஒரு
தமிழ் சினிமாவும் சொல்லாத
ஒரு கோணத்தில் கலக்கலாகப்படம் ஆக்கப்பட்டிருக்கு
3 கதை 3 ( படத்தில் 2 வது கதை ) நாயகன் , நாயகி
இருவரும் கேன்சர் பேஷண்ட்ஸ்.
இதயத்தை திருடாதே படம் மாதிரி தான் என்றாலும்
சம்பவங்கள் , காட்சி அமைப்புகள்
வேற . ஓலா டாக்சியில்
ரெகுலராக இருவரும் பயணிப்பதும்
, பின் நட்பு துளிர் விடுவதும் . நாயகனின் நோய் பற்றி அறிந்து
அவரது முதல் காதலி அவரை தவிர்ப்பதும்
அதனால் மனம் கலங்கும் நாயகனுக்கு
ஆறுதலாக வரும் நாயகியின் அணுகுமுறையால் நாயகன்
மனம் மாறுவதும் தான் கதை
4 கதை 4 ( படத்தில் முதல் கதை ) நாயகன் ஒரு சிறுவன் . சேரி யில் வசிப்பவன்.
இவனது அன்றாடப்பணியே குப்பையில் இருந்து
கிடைப்பதை சேகரிப்பது. ரோஸ் கலர் கேரி பேக்கில் ரெகுலரா
சில பொருட்கள் உபயோகமா
கிடைப்பதை அறிகிறான், அதைத்தொடர்ந்து அவன் அந்த கலர் பேக்கை மட்டும்
தினசரி கண்காணித்து எடுத்துப்பார்க்கறான், உபயோகப்படுத்தப்பட்ட ஷாம்பு
பாக்கெட்ல கொஞ்சம் மிச்சம் , கேக் மிச்சம்
இப்படி எதுனா கிடைக்கும். ஒரு நாள்: அந்த பேக்கில் விலை உயர்ந்த
ஒரு மோதிரம் கிடைக்குது.
ஆக்சுவலா ஒரு பணக்கார வீட்டு சிறுமி
தன் அப்பா தனக்கு பரிசாத்தந்த மோதிரத்தை தவறுதலாக தொலைத்தது
அது . அந்த மோதிரத்தை அந்தப்பையன் என்ன் செய்தான் ? என்பது க்ளைமாக்ஸ்
இந்தக்கதைக்களம்
நமக்கு ரொம்பவே புதுசு .
சேரி ஜனங்களின் வாழ்க்கை பற்றி பல படங்களில் பார்த்திருந்தாலும் குப்பையிலிருந்து பொருட்கள்
சேகரிக்கும் விபரமான ஒரு கதையை
இப்போதான் பார்க்கிறேன்
சபாஷ் இயக்குநர்
இப்போ சொல்லும் வரிசை படத்தில் வரும் வரிசைப்படி
1 இயக்குநர் ஒரு பெண்
என்பதால் ஆண்கள் அனைவருமே
அயோக்கியர்கள் அவங்க பண்றது
எல்;லாமே தப்பு என்றெல்லாம்
கருத்து சொல்லாமல் முடிஞ்ச வரை
ஆண், பெண் 2 சைடும்
பேலன்ஸ் பண்ணி கதை , வசனம்
அமைத்த விதம் . நான்கு கதைகளில்
முதல் கதை மட்டுமே
ஆணுக்கு ஆதரவான கதை அமைப்பு , மீதி மூன்றுமே
பெண்ணுக்கு ஆதரவான பெண்களை
ஒரு தூக்கு தூக்கி வெச்சு அமைக்கப்பட்ட
கதைகளே , இருந்தாலும் ஆண்களும் ரசிக்கும் வண்ணம்
தான் இருக்கு . முதல் கதையில்
ஏழையாக இருந்தாலும் ஆண் அடுத்தவங்க காசுக்கு
ஆசைப்படறதில்லை, பெண் தனக்குத்தேவையான பரிசுகளைப்பெற
ஆண் நட்பை உபயோகப்படுத்திக்கொள்கிறாள் என்ற கருத்துகளை சொன்ன விதம் குட்
2 கேன்சரால்
சிறுநீரகம் ஒன்றை இழந்த நாயகன் நாயகியிடம்
பேசும் ஒரு வசனம் தமிழில்
அமைத்தால் கொஞ்சம் கொச்சையாக
வரும் என உணர்ந்து
ஆங்கிலத்தில் அமைத்த விதம்
2 3 வயதான பாட்டி ( லீலா சாம்சன்) வெட்கப்படும்
விதம் அழகு , காட்சிப்படுத்திய விதமும் கிளாஸ் . பாட்டியின் நடிப்பு
ஏ ஒன் ரகம் . பாட்டிக்கு தலையில் அடிபட்டதும்
ஹாஸ்பிடல் , பழைய நினைவு தவறுதல் என திரைக்கதை திரும்பும் என
தவறாக யூகித்தேன், ஆனா சரியான
பாதையில் சென்றது
4 லைட்ஸ் ஆஃப் ஆனதும் நாயகன்
3 குழந்தைகளுக்கு அப்பால் படுத்திருக்கும் நாயகி மீது கை வைப்பதும்
ஒரு வாண்டு அப்பா நான் இன்னும் தூங்கலை என்ற குறும்பு டயலாக்
தழுவாத கைகள் பட குடும்பத்தை உருவாக்கச்சொன்னா பாடல் காட்சியில் வருவது
போல இருந்தாலும் ரசிக்க வைத்தது
திரைக்கதையில் சில
ஆலோசனைகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 பாடும் வானம்பாடி
படத்தில் வரும் நான் ஒரு
டிஸ்கோ டான்சர் பாடலில் வரும் சரண வரிகளான
“ மாடி வீட்டு ஜன்னல் கூட சட்டையைப்போட்டிருக்கு.. எனும் பாடல் வரி ஹம்மிங்கை படத்தின்
முதல் கதையாக வரும் சேரிக்கதையில் நுழைத்திருக்கலாம் .அந்த மாடி வீட்டு
சிறுமி மோதிரத்தை தவற விடுவதும் அது குப்பைக்குப்போகும் விதமும்
இன்னும் நம்பும்படி படம் ஆக்கி
இருக்கலாம்
3 2 ரெண்டாவது கதைல நாயகி கொஞ்சம்
ஓவர் ஆக்டிங் மாதிரியும், நாயகன் கொஞ்சம் அண்டர்ப்ளே ஆக்டிங் போலவும்
தோன்றியது, இருவரின் முகங்களும் மனதில்
பதிய கொஞ்சம் டைம் எடுக்குது , ஏன்?னு
தெரியல. மத்த 3 கதைகள்ல
இந்த மாதிரி ஃபீலிங்
வர்லை
3 இந்த் 3 வது கதைல
நாயகன் நாயகியிடம் முத்தம்
பற்றி பேசுவதால் பிரச்சனை
வருது. பொதுவா ஆண் எப்பவும் பெண்ணிடம்
ஒரு தொடுகை , ஸ்பரிசம் , இப்படித்தான்
தன் முதல் மூவ் வைப்பான். சம்பாஷைனைகள் மூலம் குறிப்பால் உணர்த்துவது
பெண்கள் தான். அவரோட கேரக்டர்
ஸ்கெட்ச் ல அது மட்டும் அதாவது கிஸ் பற்றிய
வசனம் மட்டும் ஒட்டாம இருந்தது
உறுத்தலா இருந்தது
4 நாயகன் ஆரம்பத்தில்
இருந்தே சிடு சிடு முகமாக
காட்ட்ப்படுவது என்னமோ மாதிரி இருக்கு . அவர் நார்மலான
ஆள் , மனைவியிடம் மட்டும் அன்பு செலுத்தத்தெரியலை என்று தான்
இயக்குநர் சொல்ல நினைப்பது , ஆனா அவர் கேரக்டரே சிடு சிடு உம்மணாம்ம்மூஞ்சி என்பது
போல் காட்டப்பட்டிருக்கு
நச் டயலாக்ஸ்
1
அடுத்தவன் சம்சாரத்தை ரசிப்பவன் / கவனிப்பவன் எல்லாம்
ஒரு மனுசன் , அவனுக்கு நீ வக்காலத்து
வாங்கறியா? ( காவடி தூக்கறியா? )
2
தாம்பத்யம் கொள்வதை அவர் என்னுடன் நிகழ்த்தும்போது ஒரு தூக்க
மாத்திரையாதான் அணுகறார்
3
இத்தனை வயசாகியுமா உங்களுக்கு
மேரேஜ் ஆகலை? இந்த சமூகம்
இன்னுமா உங்களை விட்டு வெச்சிருக்கு?
4
நாங்க சந்தோஷமா இருந்தது
போதும்னு கடவுள் நினைச்ட்டார் போல
5 எல்லாத்தையும் அப்கிரேடு ஆகறதுல எல்லாரும்
முனைப்பா இருக்காங்க , அடுத்த மாடல்
ஃபோன் , அடுத்த கட்டம்னு எல்லாரும்
அடுத்தடுத்து முன்னேறும்போது நாம மட்டும் இன்னும் ஒரே மாதிரி இருக்கோம்
6 இந்தியாவில் எல்லாருமே சர்க்கரை
வியாதியாளர்கள் தான் , குடிக்கற பால் கூட விஷம் ஆகிட்டு வருது
7 உங்க நிழலுக்கு
முத்தம் குடுத்தேன் இப்போ, இதை
விட தூய்மையா முத்தம்
கொடுக்க முடியாது
8 ஆமை மாதிரி
வாழனும்
அப்டின்னா நீண்ட காலம் வாழனும்?
அவங்க தாம்பத்ய
வாழ்க்கையையே 50 வயசில் தானே தொடங்கறாங்க? ?
9 இந்தக்காலத்து ஆளுங்களுக்கு
நம்மை மாதிரி வயசானவங்க
ஒரு பொருட்டே இல்லை. நாம நிக்கறது கூட அவங்க கண்ணுக்கு
தெரியாது
அப்போ நான் உங்களுக்கு
முத்தம் கொடுத்தாக்கூட யாரும் கண்டுக்க
மாட்டாங்க ?
10 எல்லாருக்கும் எல்லாமும்
தெரியாது , கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்,
எல்லாம் பிடிக்காது , கொஞ்சம் பிடிக்கும், ஒருத்தரை முழுசா
பிடிச்சா அதான் லவ்
11 எல்லா நாட்களும்
ஒரே ,மாதிரி இல்லை
12 உனக்கு கேன்ச்ர்ங்கற விஷயத்தை அம்மா, அப்பா கிட்டே சொல்லிட்டியா?
சாதா காய்ச்சல்னாலே
பரிதவிச்சுப்போய்டுவாங்க
13 காதலனுக்கு கேன்சர்
இருக்கு என்பதை அறிந்த காதலி
அனுப்பும் மெசேஜ்
கட்டி இருக்கற
உனக்கு எப்படி கட்டிக்கொடுப்பாங்க? ( பொதுவா
கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜால காமெடியில்
இது போல வசனங்கள் வரும், ஆனா ஒரு செண்ட்டிமெண்ட் சீன்ல இப்போதான் பார்க்கறேன்)
14 எவ்ளோ பெரிய கையா இருந்தாலும் அக்குள் இருக்கும்தானே?
15 ஐ ஹேவ் ஒன்லி
ஒன் பால்
பட் திஸ் வோர்ல்ட்
ஆல்சோ ஒன் பால்
16 நான் உங்களைக்காக்கா பிடிக்கறதுக்காக இதை சொல்லலை
, ஆனா காக்காக்கே உங்களைப்பிடிச்சிருக்கே?
சி.பி ஃபைனல் கமெண்ட்= படம்
ரிலீஸ் ஆன புதுசில்
முதல் இரு கதைகள் மட்டுமே
பார்த்து இடைவேளையோட வந்துட்டேன்னு
சிலர் ஸ்டேட்டஸ் போட்டிருந்தாங்க , அவங்களும் சரி , இதுவரை
பார்க்காதவங்களும் சரி மிஸ் பண்ணாம பார்த்துடுங்க .மயிலிறகால் மென்மையாய்
வருடுவது போன்ற படம். விகடன் மார்க், நான் யூகித்தது 50, அவங்க போட்டது 48 ரேட்டிங்
3.5 / 5. நெட் ஃபிளிக்சில் கிடைக்குது Sillu karuppatti என தேடவும்
வெளியீட்டு தேதி: 27 டிசம்பர், 2019 (இந்தியா)
வகைகள்: Anthology, காதல், நாடகம்
0 comments:
Post a Comment