ஹீரோவும் அவர் நண்பரும் ஒரு வீட்ல
வாடகைக்கு இருக்காங்க . ஹவுஸ் ஓனரும் அவர் குடும்பமும் மேலே மாடில இருக்கு
ஹவுஸ் ஓனர் உடம்புக்கு
முடியாம படுத்த படுக்கையா
இருக்கார், அவங்களுக்கு விழி ஒளி இழந்த ஒரு பொண்ணு
இருக்கு . நார்மலான சினிமான்னா இப்போ
ஹீரோ அந்தப்பொண்ணை லவ் பண்ணுவாரு, ஆனா இது மாறுபட்ட க்ரைம்
த்ரில்லர் ஆச்சே? அதனால வேற ஒரு
பிளான்
ஹவுஸ் ஓனர் மகளுக்கு
மேரேஜுக்காக சேர்த்து வெச்சிருக்கற
நகைகள் வீட்டில் பீரோல இருக்கு ஹீரோ அடிகக்டி க்ரைம்
ஸ்டோரி, சட்டப்புத்தகங்கள் எல்லாம்
படிச்சு கிரிமினல் ப்ரெய்ன் உள்ளவரா இருக்காரு . இவரு அந்த நகைகளை
கொள்ளை அடிச்சு போலீஸ்க்கு தன் மேல சந்தேகம்
வராத படி மாடில குடி இருக்கற இன்னொரு
ஆள் மேல
பழி விழற மாதிரி
செட் பண்ண திட்டம் போடறார்.
இங்கே தான் திரைகக்தைல ஒரு திருப்பம். ஹீரோ குடும்பத்துல இதுக்கு முன்னால என்ன என்ன விஷயங்கள்
எல்லாம் நடந்ததோ அதெல்லாம் ஹவுஸ் ஓனர் வீட்லயும் நடக்குது. முக்கோண இயல் , தொடர்பியல்னு அதுக்கு
ஒரு விளக்கம் கொடுக்கறாரு
ஹீரோ தன் வீட்டு நிகழ்வுக்கும் ஹவுஸ் ஓனர் வீட்டு நிகழ்வுக்கும் நடந்த நடக்கற
தொடர்புகளை கண்டு பிடிச்சாரா?
அந்த நகைத்திருட்டு கேஸ் என்ன
ஆச்சு? இதெல்லாம் பின் பாதி
திரைக்கதையில் சொல்லபப்டுது
ஹீரோவா வெற்றி .
இவருக்கு அமைந்த 2 படங்களுமே
நல்ல திரைக்கதை கொண்ட படங்கள் , லக்
தானிவருக்கு ஓரளவு இப்போ நடிப்பு வருது
ஹீரோ நண்பனா கருணா . இவர்
மொக்கை ஜோக் அடிச்சு காமெடி பண்றதை விட இந்த மாதிரி கேரக்டர்
ரோல் பண்ணா படம் பூராவும் வரலாம், மக்கள்
மனசிலும்நிக்கலாம்
ஹீரோ வேலை செய்யற ஜூஸ் கடைக்கு
எதிரே நாயகி கடை வெச்சிருக்கு , உன்னை நினைத்து
லைலா கேரக்டர் ஸ்கெட்ச். அதாவது காதலிக்கும், ஆனா வசதியான இன்னொருத்தன் சிக்குனா இவனைக்கழட்டி விட்டுடும். அதனால இந்த கேர்கடர் எனக்குப்பிடிக்கல.
ஹவுஸ் ஓனர் மனைவியா
ரோகினி ரகுவரன் நல்ல நடிப்பு
ஆக்சுவலா இந்தக்கதை
ஏ செண்ட்டர் ஆடியன்சுக்கானது. ஆனா ஆல்செண்ட்டர்
ஆடியன்சுக்கும் ரீச் ஆகற மாதிரி புரிய் வைக்க
மெனக்கெடும் இயக்குநர் உழைப்பு அபாரம்
இசை . ஒளிப்பதிவு
கச்சிதம்
சபாஷ் டைரக்டர்
1 கொள்ளை அடிக்கப்பட்ட நகையை ஹீரோ தன் வீட்டில்
வைக்காமல் பஸ் ஸ்டேண்ட் லக்கேஜ் செக்சனில் வைத்து
பாஸ் வாங்கி வைப்பது
2 வீட்டில் மேலே சுற்றும்
பழைய கால
லொட லொட ஃபேன் பற்றி அடிக்கடி
பேசி க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆக
ஹீரோ அல்லது நண்பர் இருவரில் ஒருவர் அந்த ஃபேன்
கீழே விழுந்து அவங்க இறப்பாங்க என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது
3 ரோகினியின் தாய்மாமா நாயகனின்
திருமணத்துக்கு சம்மதிப்பாரா? என சந்தேகம் எழுப்பும் ரோகினியிடம் ஃபோனை அ
வர் கிட்டேக்குடுங்க என கெத்து காட்டுவதும்
பின் ஜமீன் ரக்சியம்
சொல்லி அவரை பணிய வைப்பதும்
4 நண்பனிடம் ஃபோனை வாங்கி
அதை சைலண்ட் மோடில்
வைத்து பஸ் ஸ்டேண்டிலேயே சார்ஜ் போட்டு விட்டு
ஊருக்குப்போவதும் பின்னாளில் அது போலீஸ்
சாட்சியாக உருவாவதும் பிரில்லியண்ட் ஐடியா
நெஞ்சில் தில் இருந்தா
எதிர்ப்பும், வீரமும்தானா வரும்
சில பழக்கங்களை நாம விட நினைச்சாலும் நம்மை அது விடாது
செய்முறைதான் படிப்பு,
அதை எத்தனை தடவை வேணா கத்துக்கலாம்
தெரியாத விஷயங்களைத்தெரிஞ்சுக்க
எனக்குப்பிடிக்கும்
காசை விட நமக்கு
உதவி செய்யற மனுஷா தான் முக்கியம்
பணம் இருக்கறவங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு
மனுஷனுக்கு வரக்கூடாத ஒரு வியாதி விரக்தி
நீ பயந்துட்டே
பதடத்தோட யோசிக்கறதை நான் நிதானமா
, பொறுமையா யோசிக்கப்போறேன்
எதுக்கெடுத்தாலும் பயந்துட்டே இருக்கறவன்
வாழ முடியாது . தலை மேல ஓடற ஃபேன்
கீழே விழுந்தா என்னாகும்?னு பயந்துக்கிட்டே படுத்தா அன்னைக்கு நைட் தூங்க முடியாது
நம்மை மாதிரி ஏழைங்க எல்லாம் வெறும் பொம்மைகள் தான், பணக்காரங்க தான் உருவ
பொம்மைகள்
நாம வாழும் வாழ்க்கைல
நாம தான் ஹீரோ
லைஃப்ல ஒருத்தன் பெரிய ஆள் ஆகறவரை அவனை சாதாரணமாதான்
பார்ப்பாங்க , பெரிய ஆள் ஆனதும்தான் அவன் ஜாதி என்ன? மதம் என்ன?னு பார்ப்பாங்க
நான் அப்படிப்பட்டவன்
இல்லை
நான் எப்படிப்பட்டவன்னு காட்றேன்
அவன் ஃபோன்ல நிஜமா
சரவனன் கிட்டேதான் பேசறானா? சரஸ்வதி கிட்டே பேசறானா?
இவ்ளோ நேரம் ஆகுது?
மாட்டிக்கறதுக்கு
லிமிட் இருக்கு , தப்பிக்கறதுக்கு லிமிட்டே
இல்லை
கோபக்காரனால எப்பவும்
எதுவும் செய்ய முடியாது
பொண்ணுங்க வாழ்க்கை
அடுத்தடுத்த கட்டத்துக்கு போய்க்கிட்டே இருக்கும்
எப்போ எப்போ எல்லாம்
அவங்களுக்கு தேவைப்படுதோ அப்போ எல்லாம் ஜாதி ம் மதத்தை
ஆயுதமா எடுத்துக்கறாங்க
முட்டாள்தனமான கேள்வி
கேட்கரதுக்கும் ஒரு புத்திசாலித்தனம் வேணும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோ தன் ஃபோனிலிருந்து நண்பன்
ஃபோனுக்கு ரிங் விட்டு
ஒரு அலிபி உண்டாக்குகிறார். ஆனா லொக்கேஷன்
காட்டிக்கொடுத்துடுமே? ஹீரோ ஊரில் இருந்து நண்பனுக்கு
ஃபோன் பண்ணி அலிபி ஏற்படுத்துவதாகத்தான் திட்டம், ஆனா
அப்டி நடக்கலை , மாட்டிக்க மாட்டாரா?
2 நகை கொள்ளை கேசில் போலீஸ்
நாய் இல்லாமல் வர்றாங்களே? நாய் மோப்பம்
பிடிச்சு ஈசியா கண்டு பிடிக்குமே?
3 பொதுவாக ஒரு விபத்து நடந்தால் ஆண்கள் அலட்டிக்க மாட்டாங்க , ஆனா பெண்கள் தன் பொருட்கள்
எல்லாம் பத்திரமா இருக்கா?னு செக் பண்ணுவாங்க , ரோகினி
தன் பர்ஸ் சாவி எல்லாம் பத்திரமா
இருக்கா?ன்னு ஏன் செக் பண்னலை?
4 ஹீரோ கை ரேகை
படாமல் இருக்க கையில் கர்ச்சீஃப் வெச்சு
நகையைக்கொள்ளை அடிப்பது சரி , ஆனா கால் ரேகை அல்லது செருப்பு தடம்
இருக்கே? காட்டிக்கொடுக்காதா?
5 நாயகனை ஆரம்பத்தில்
லவ்வும் நாயகி வீட்டில் வசதியான
மாப்பிள்ளை பார்த்ததும் கழட்டி விடுடு
ஓக்கே, ஆனா மாப்ளை ஓடிப்போய்ட்டார் என்றதும்
நாயகி அதை மறைத்து
நாயகனிடம் பொய் சொல்லி சேர்ந்திருக்கலாமே? உங்க நினைப்பை மறக்க முடியல அதனால நான்
ஓடி வந்துட்டேன்னு பிளேட்டை திருப்பிப்போட்டிருக்கலாமே? அதை விட்டு நடந்த
உண்மையை சொன்னா யாராவது ஏத்துக்குவாங்களா?
என்பதை பெண் சிந்திக்க மாட்டாங்கலா? இந்த மாதிரி
கிரிமினலா பெண்கள் சிந்திப்பாங்களே?
சி.பி. ஃபைனல் கமெண்ட் சாதா
கதை தான் . ஆனா பிரமாத,மான
திரைக்கதை ., வித்டிஹ்யாசமான க்ரைம்
த்ரில்லர் பார்க்க விரும்புபவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க ., விக்டன்
யூக மார்க் 48 ரேட்டிங்
3.25 / 5
0 comments:
Post a Comment