ஹீரோவும் அவர் ஃபிரண்டும் ஒரு வீட்ல குடி இருக்காங்க , பேச்சிலர்ஸ். எதிர் வீட்ல ஹீரோயினும் , அவங்க அக்காவும் குடி இருக்காங்க ஹீரோவை ஹீரோயினும், ஹீரோவோட நண்பனை ஹீரோயினோட அக்காவும் லவ் பண்ணி இருந்தா
அப்பவே சுபம் போட்டிருக்கலாம், ஆனா 14 ரீல் படம்
ஆக்க முடியாதே? இயக்குநர் யாரு? கே பாலச்சந்தர் ஆச்சே? உறவுச்சிக்கலை சொல்லி கதை
அமைப்பதில் வித்தகர் ஆச்சே?
நண்பன் நல்லவன் என நம்பும் அப்பாவி ஹீரோ தன் காதலியை
நண்பனும் ரூட் விடறான் என்பதை நம்ப மறுக்கறான், ஹீரோயின் பல டைம் சொல்லியும் அவன் அதை
ஏத்துக்கலை . ஒரு நாள் ஹீரோ , ஹீரோயின், நண்பன் மூணு பேரும் படகு சவாரி போறாங்க ,ஹீரோ, வுக்கு நீச்சல்
தெரியாது , நண்பன் நீச்சல் சாம்பியன். ஹீரோ தண்ணில
தவறி விழறாரு . நண்பன் காப்பாத்தாம வேடிக்கை
பார்க்கறான், இப்போதான் ஹீரோவுக்கு நண்பனோட சுய ரூபம் தெரியுது,
ஆனா என்ன
பிரயோஜனம்? ஆள் அவுட்
ஹீரோயினோட அக்கா சினிமால
துணை நடிகை. ஒரு தீ விபத்துல அவர் முகத்துல தீக்காயம்
பட்டதால இனி சான்ஸ் கிடைக்காது. அதனால ஹீரோயின் தான்
வேலைக்குப்போய் சம்பாதிக்கனும். மணமகள்
தேவை விளம்பரம் பார்த்து ஹீரோயின்
வயசான மாப்ளைக்கு ரெண்டாந்தாரம்னாலும் பரவால்லை-னு
அப்ளை பண்றா
இன்னொரு பக்கம் ஹீரோவின்
நண்பன் உன்னை அடையாம
விடமாட்டேன்னு சவால் விடறான், இங்கே
தான் ஒரு ட்விஸ்ட். யாரை கல்யாணம் பண்ணிக்க
அப்ளை பண்ணாரோ அவரோட மகன் தான் ஹீரோவின் நண்பன். அதாவது இப்போ நண்பனுக்கு ஹீரோயின் சித்தி முறை
இந்த உறவுச்சிக்கல்
எப்படி டீல் செய்யப்பட்டது
என்பதுதான் க்ளைமாக்ஸ்
ஹீரோவா கமல் . அமைதியான நடிப்பு , அப்பாவித்தனமான உடல் மொழி . நண்பன் மேல் வெச்சிருக்கும் நம்பிக்கைல
நாயகியை எடுத்தெறிந்து பேசும் இடம்
அபாரம், அதே போல் நீர் நிலையில் தவறி விழுந்து தத்தளிக்கும்
காட்சியில் அனுதாபம் பெறுகிறார். முறைப்படி கமலுக்கு
இது கெஸ்ட் ரோல் தான்
ஹீரோவின் நண்பனா ரஜினி , அதகளம் பண்ணி இருக்கார் . சிகரெட் தூக்கிப்போடும் ஸ்டைலை வெச்சே கேரளப்பெண் குட்டியை வசீகரிப்பது
அருமை . அந்தக்காலத்தில் எத்தனை இளைஞர்கள்
இவரால் வசீகரிக்கப்பட்டு தம் பழக்கம்
ஆரம்பிச்சாங்களோ பாவம் . கண் முன் நண்பன்
இறக்கும் காட்சியில் அவர் பாட்டு பாடுவது
கொடூரம், முக பாவனைகள்
அம்சம். பின் பாதியில் அவள் ஒரு கதாநாயகி பாடல் காட்சியில் ஆக்சுவலா நாயகிக்குதான் ஸ்கோர் பண்ண சான்ஸ், ஆனா சும்மா மாடிப்படி ஏறுவதிலேயே ஸ்டைல் காட்டி ஸ்கோர் பண்ணும் ரஜினி கலக்கல் நடிப்பு
நாயகியா ஸ்ரீ தேவி
. விக் தான் லைட்டா
உறுத்துது. இந்தபப்டம் நடிக்கும்போது இவருக்கு
13 வயசாம், நம்பவே முடிய்லை . பொங்கும்
இளமை
நாயகியின் அக்காவா ஒய் விஜயா . அளவான நடிப்பு , தீக்காயம் பட்ட பின் முகம் காட்டாமலேயே சிம்பாலிக் ஷாட்களில்
உலா வர்றார்
வசந்த கால நதிகளிலே
அம்சமான பாட்டு . இசை கச்சிதம்
சபாஷ் டைரக்டர்
1 1 பொதுவா ஒரு பொண்ணை
கவர நினைப்பவர்கள் தன்னை நல்லவன்
போல தான் காட்டிக்குவாங்க , ஆனா ரஜினி கேரக்டர் தன்னை கெட்டவன்னு நாயகி கிட்டே காட்டிட்டே
அவரை அடைய நினைப்பது
புதுசு
2 ஒய் விஜயா ஷூட்டிங் ஸ்பாட்டில்
தூக்கில் தொங்கும் காட்சியில் சரியாக
நடிக்காத போது அதைத்தொடர்ந்து வரும் வசனங்கள் டச்சிங்,
பின் ஒரு சமயம் ஒரு சிம்பாலிக் ஷாட்டில்
ஒரு பெண் பொம்மை தூக்கில்
தொங்கும் காட்சியை பயன் படுத்திய விதம்
3 டீக் ஹை ?
என ரஜினி பேசும்
பஞ்ச் டயலாக்கும் அதை பின்னாளில் சித்தி
ஆனபின் ஸ்ரீ தேவி ரிப்பீட்
பூமாரங் ஆக்கும் விதமும்
4 ரஜினியின் மனசாட்சியாக வந்து அடிக்கடி பயம் காட்டும் தாடி கேரக்டர்
நச் வசனங்கள்
1
ஏம்மா? தூக்குல தொங்கத்தெரியாதா? சொதப்பறியே?
முன் அனுபவம் இல்லைங்க
இதெல்லாம் கத்துக்கற வேலை இல்லையே?
2
பயம் கால் பங்கு , மரியாதை முக்கால்
பங்கு , இதுதான் மண வாழ்க்கையின்
த்ரில்
3
மனைவி இல்லாத வீடு மதில் சுவர் இல்லாத
வீடு மாதிரி
4
வில்லன்னா என்னை சொன்னே?
வில்லனுக்கு வாழ்க்கைப்படப்போகும் முதல் கதாநாயகி நீ தான்
5
ஏன் என்னையே சுத்தி
வர்றே?
நாம 2 பேரும்
நெருப்பை எப்போ சுத்தி
வரப்போறோம்?
6 முன் அனுபவம் இருக்கா?னு கேட்காத ஒரே நேர்முகத்தேர்வு மணமகள்
தேவை விளம்பரம் ல தான்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 நாயகன் இறந்த துக்கத்தை விட நாயகிக்கு வில்லன்
மேல் உள்ள கோபம்தான் அதிகமாத்தெரியுது. அடுத்த கல்யாணத்துக்குக்கூட இன்னும் கொஞ்சம் அவகாசம்
எடுத்திருக்கலாம்
2 போலீஸ் விசாரணைல
ரஜினி தனக்கு நீச்சல் தெரியாது
என்பதை நாயகி ஈசியா உடைச்சிருக்கலாம்,
ரஜினி படிச்ச காலேஜ்ல விசாரிச்சா
அவர் நீச்சல் சாம்பியன்னு தெரியும், அது
போக தண்ணில ரஜினியை
தூக்கிப்போட்டா தெரிஞ்சிடும்
3 நாயகி வயசான ஆளுக்கு வாழ்க்கைப்படுவதே அக்காவைக்காப்பாத்தத்தான், ஆனா அந்தக்கேரக்டரை இயக்குநர்
சூசையிட் பண்ண வெச்சது
உறுத்தல்
4 நண்பனைக்கொலை செய்த வில்லன் தன் ஆசைக்கு
எதிராக இருக்கும் அப்பாவை ஏன் எதுவும்
செய்யவில்லை ?
சி.பி ஃபைனல் கமெண்ட்
- ரஜினி – கமல் – ஸ்ரீ தேவி காம்ப்போவில்
கே பி டைரக்சனில் வெளி வந்த அந்தக்கால
சூப்பர் ஹிட் படம், பார்க்காதவங்க பார்க்கலாம்,
வாட்சபிள் . ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment