Monday, July 13, 2020

THE SCORE (2001) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் )



பிரிந்து  சென்ற  காதலியுடனான  கடைசி பார்வை பரிமாறல் எது?னு ஞாபகம் இருக்கா? அல்லது  பிரியப்போறோம்னு தெரிஞ்சு  கடைசியா ஒருக்கா  பார்த்துக்குவோம்னு    நினைச்சிருக்கீங்களா? பெரும்பாலும்  யாருக்கும் அந்த  வாய்ப்பு கிட்டுனதில்லை. தில் சே ஹிந்திப்படத்துல  சுஜாதா  எழுதுன  வசனம்  ரொம்பப்பிரபலம் ( தமிழில்  உயிரே) , நாயகி மணிஷா கொய்ராலா  மனித  வெடிகுண்டா செயல்படப்போகும்  நாள்  அன்று  காலையில் ஒரு டயலாக்  சொல்லும் காட்சி “ நான்  பார்க்கும்  கடைசி  சூர்யோதயம்  இது “  எவ்ளோ  ஸ்ட்ராங்கான  வசனம் ?

2002ல்   ரிலீஸ்  ஆன  வில்லன்  படத்துல  அஜித் குமார்  ஏற்று நடித்த  ஒரு மாற்றுத்திறனாளி   கேரக்டர்   செம   ஃபேமஸ் .. அந்த   கேரக்டரை அவர்  பிரமாதமாப்பண்ணி  இருந்தாலும் அந்த  கேரக்டர் ஒரிஜினல்  எது? அல்லது எந்தப்படத்தில்  இருந்து  இன்ஸ்பையர்  ஆகி எடுத்திருப்பாங்கனு ரொம்ப நாட்களாகவே நான்  யோசிச்சது  உண்டு , எதேச்சையா 18   வருசம்  கழிச்சு  இப்போதான்  அதுக்கு  விடை  கிடைச்சுது . 2001ல்  ரிலீஸ்  ஆன   த  ஸ்கோர்  படம்  தான்  அது

ஹீரோ  ஒரு  லாக்கர்  ஹேக்கர் . அதாவது  எந்த  மாதிரியான  லாக்கரா  இருந்தாலும்   இவர்  கை  வெச்சா திருடன்  தர்ற  மாமூலைக்கண்டு  சிரிக்கும்  போலீஸ்  போல  பல் இளிக்கும். இவரு  எத்தனை நாள்  தான்  இப்டி திருடியே  , போலீசுக்கு பயந்து பயந்தே  காலத்தை  ஓட்டுவது , ஒரு மெகா திருட்டு பண்ணி   லைஃப்ல செட்டில் ஆகிடனும்னு  நினைக்கறாரு  நான்  செய்யும்  கடைசி  திருட்டு  இதுனு சொல்லிட்டு  ஆழம்  தெரியாம  காலை  விட்டு  ஒரு மெகா பிராஜெக்ட்ல   மாட்டிக்கிட்டாரா? இல்லையா?  என்பதே  கதை  ( முதல்  பேரா  வை மீண்டும்  படிக்க )


இன்னொரு  ஹீரோ , இவரோட கேரக்டர்  ஸ்கெட்ச்  அட்டகாசம் , இவர்  ஒரு  கணிணி  வல்லுநர் . செக்யூரிட்டி  சிஸ்டம்  எப்படி இருக்கும்? அதை எப்படி  பிரேக்  பண்ணலாம்? எல்லாம்  இவர் ஃபிங்கர்  டிப்ஸ் ல  வெச்சிருப்பார் . ஒரு இடத்துல  ஆஃபீஸ்  பாய் மாதிரி  வேலைல  சேர்றார். அங்கே  இருக்கற  செக்யூரிட்டி  சிஸ்டத்தை  நோட்டம்  போடுவதுதான்  அவர்  மெயின் ஜாப் . நல்ல  ஜிம்னாஸ்டிக் பாடியான இவர்  மாற்றுத்திறனாளி  கம் மன நிலை  பாதிக்கப்பட்ட   கேரக்டரா   நடித்த  விதம்  அவர்  உடல் மொழி   இதுக்காகவே   நீங்க  இந்தப்படத்தைப்பார்க்கனும்  (  மேலே  2 வது  பேராவை  மீண்டும் காண்க) 

 2  மணி  நேரம்  தான்  படம்  , முதல்  40   நிமிடங்கள்:  கடத்தல்  திட்டம்  போடும் ஆள் ,  செக்யூரிட்டி   சிஸ்ட,ம்  பிரேக்  பண்ற ஆள் , அதுக்கு  ஹெல்ப் பண்ற ஆள் , எக்ஸ்ட்ரா  லக்கேஜ்  காதலி , திட்டத்தை  எக்ஸ்க்யூட்  பண்ற  ஹீரோ  இந்த  அறிமுகங்கள் , விவாதங்கள் , திட்டமிடுதல்  இதுல  கொஞ்சம்  ஸ்லோவாதான்  படம்  போகும்


அடுத்த  40   நிமிடங்கள்  ட்ரையல்  பார்த்தல் , கடத்தப்படும்  பொருளுக்கான வேல்யூ , பேசப்படும்  விலை சரியா?  இன்னும்  அதிகம் வேணும் என  டிமாண்ட்  பண்றது  ,   யாராவது  திட்டத்துல  துரோகம்  பண்ணினா  எப்படி  ஹேண்டில்  பண்றது  இப்டிப்பட்ட  விவாதங்கள்    நடக்குது , இது  மீடியம்  ஸ்பீடுல  இருக்கும்


 திட்டம்  நிகழும்  கடைசி  45  நிமிடங்கள்  படம்  பறக்குது .  செம ஸ்பீடு , ஹீரோ மாட்டிக்குவாரா?   யாராவது  எதிரா  திரும்புவாங்களா?  எப்படி  சாமார்த்தியா சம்பவம்  பண்றாருனு  காட்டுவது    கலக்கல் 


எனக்கு  என்னமோ மெயின்  ஹீரோ  ரோல் பண்ணது  வழக்கமா    எல்லா ஆக்சன் ஹீரோக்களும் பண்ணின  ரோல் தான் , ஆபாவாணனின்  இனைந்த  கைகள்  படத்துல ராம்கி .,  அருண்  பாண்டியன்  உட்பட  பல படங்களில்  பல  ஹீரோக்கள்  பண்ணிட்டாங்க 


 ஆனா  அந்த  வில்லன்  அஜித்  ரோல்  பண்ணினதுதான்  செம  டேலண்ட் , ஹாலிவுட்  தியேட்டர்களில்  எல்லாம்  கை தட்டல்  அள்ளி  இருக்கும் அவர்  வர்ற  காட்சிகள்  எல்லாம் 


 சபாஷ்  டைரக்டர்  


1  ஹீரோ    பாதாள  அறையிலிருந்து  மெயின் ரோட்டின் மேலே  மூடியைத்திறந்து  மேலே  வரும்போது  அவரை மறைக்க  ஏதுவாக  காரை அவர் அருகே  கொண்டு  வந்து  நிறுத்துவதும் ,    செக்யூரிட்டியிடம்  சரியான  சமயத்தில்  பேச்சுக்கொடுத்து  அவ்ரை  டைவர்ட்  செய்வதும்  



2   வில்லன்  அஜித்  ரோல்  பண்ணினவர்  கேரக்டர்  ஸ்கெட்ச்  அபாரம், தான் பணி  செய்யும் இடத்தில்  தனக்குப்பழக்கமான  புரொஃபசரை மிரட்ட  வேண்டிய  சூழலில் அவரை தாக்காமல்  இருப்பதும் , அதே  போல  க்ளைமாக்சில்   வாய்ப்பிருந்தும்  ஹீரோவைக்கொல்லாமல்  விடுவதும்  

3    சிசிடிவி  கேமரா வை  ஏமாற்றும் விதம்   + பாதாள அறையில் ஹீரோ  நிகழ்த்தும்  சாகசங்கள் 

4   க்ளைமாக்சில்  இரு ஹீரோக்களுக்கும்  இடையே  நிகழும்  உரையாடல் , பழைய  சம்பவங்களை ,  ஈகோ கிளாஸ்  ஆனதை  சொல்லிக்காட்டும் விதம் 

5   பார்க்கில் நடக்கும் சந்திப்பில்  ரக்சிய  எண்ணை  பரிமாறும்போது  பக்கா செட்டப்போடு  ஹீரோ இருப்பதும்  வந்த ஆட்களிடம் “ நீங்க  பாட்டுக்கு நெம்பர்  சொன்னதும் அதை  பேப்பர்ல  நோட்  பண்ணிட்டுப்போய்டுவேன்னு  நினைச்சீங்களா? வெய்ட் , என் ஆள் ஆன த  ஸ்பாட்ல  இருக்கான். வெரிஃபை  பண்ணுனதும்  நீங்க  போகலாம்  என தெனாவெட்டாக  பேசுவதும் 


 நச்  டயலாக்ஸ்


1    டியர் , 2 நாட்கள்  முன் என் கிட்டே  ஒரு கேள்வி  கேட்டீங்களே? ...


 ஆமா, அதை  சீரியசா  எடுத்துக்காத , சும்மா  ஜாலிக்கு  சொன்னேன் 


 இல்ல, நீங்க   என்ன  கேட்டீங்கன்னே மறந்துட்டேன்... 

 சுத்தம் 


2  சம்பந்தப்பட்ட இருவருக்குமே   பரவால்லையே  , நமக்கு நன்மை கிடைச்சுதே  என எண்ண  வைப்பதுதான்  ஒரு நல்ல   டீலுக்கான அடையாளம்


3     இரு  தரப்பிலும்  அவங்கவங்க தரப்பில் இருந்து  எதிராளிக்கு எதுனா விட்டுக்கொடுத்திருக்காங்கனு  பரஸ்பரம்  தோணுச்சுன்னா அதுதான் சிறந்த
  டீல்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1  சாதாரணமா  செல் ஃபோன்  சாலையில்  கிடைக்கும்  டவர்  வீட்டுக்குள்  போனாலே  நமக்குக்கிடைப்பதில்லை    வெளில  வந்து  பேசறோம், படத்துல  பாதாள  அறைல  இருந்து  வெளில  இருக்கற  நபருக்கு  செல்  டவர்  பிராப்ள்ம் இல்லாம  க்ளியரா  கேட்குதே? எப்படி? 


2   ஆஃபீஸ்  பாயாக  நடிப்பவர்   தன் கூட பணி புரியும்  ப்ரொஃபசரை  ஒரு  ரூமில்  அடைத்து  வைக்கும்போது  அவர் கிட்டே  இருந்து  செல் ஃபோனை  ரிமூவ் பண்ணவே  இல்லையே?  அவர்  யாருக்காவது   தகவல் அளித்தா  அபாயம் தானே? 

3   ஆஃபீஸ்  பாயாக நடிப்பவர் சம்பவத்துக்குப்பின்  தன்  ஃபோட்டோ  மீடியாவில் காட்டப்படும் என்பதை  யூகிக்க மாட்டாரா?  மாறு வேஷத்தில்  வராமல்  உள்ளது உள்ளபடி  வருவது   ஏன்? 



 சி.பி ஃபைனல்  கமெண்ட் = படம்  பூரா  கேம்ரா  பர பரனு ஆட்டிட்டே   இருக்கனும் என  எதிர்பார்க்கும் இயக்குநர்  ஹரி  ரசிகர்கள்  இதை  ரசிக்க  முடியாது . முதல்  பாதி மெதுவாகத்தான்  நகரும் , கடைசி  45 நிமிடங்கள்  ஸ்பீடா இருக்கு,  ஓக்கே எனில் பார்க்கலாம்.,  ரேட்டிங்  3  /. 5  இது  ஜியோ   சினிமாவில்  கிடைக்குது , ஜியோ ஃபோன் நெம்பர்  கனெக்சன்  உள்ளவங்க  ஓசிலயே பார்க்கலாம்

0 comments: