Friday, July 10, 2020

THE MAID -2020 (தைவான்) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+ நெட் ஃபிளிகஸ் நியூ ரிலீஸ்

அறிஞர் அண்ணா  எழுதிய  வேலைக்காரி  என்னும்  நாவல்  90 பக்கங்கள் கொண்ட  சுவராஸ்யமான  கதை. அது நாடகம் ஆக அரங்கேற்றப்பட்டு  வெற்றிகரமாக  ஓடியது.வ்ழக்கமான  அடுக்கு மொழி  வசனங்கள் இதில் கிடையாது. நாடக உலகத்தில்  ஒரு திருப்பு முனையை இது  ஏற்படுத்தியது .தமிழக  அரசியலிலும். பல  மாநிலங்களிலும்   வேலைக்காரியாக  வந்து எஜமானி ஆன  கதைகள்  நிறைய  உண்டு .  ஒரு வீட்டின் ரகசியங்கள்  வேலைக்காரி  மூலமாகத்தான் வெளியே  போகும் என  கிராமத்து  சொலவடை உண்டு . வேலைக்காரி  என்ற சொல்லுக்கு கவுரவமான  பதம்  பணிப்பெண் 

சரி , விமர்சனத்துக்குள்ளே  போவோம்.  ஒரு பங்களா , அங்கே  கணவன் ,மனைவி , ஒரு குழந்தை , சில  பணிப்பெண்கள்  இருக்காங்க , அங்கே  ஒரு பணிப்பெண் “ நமக்கு  இந்த  வேலை செட் ஆகாதுங்க , சில அமானுஷயமான  விஷயங்கள்  நடக்குது , என் கண்ணுக்கு என்னென்னமோ தெரியுது, நைட்  பயமா  இருக்குங்க  அப்டினு  சொல்லிட்டு  கிளம்பிடுது

தன் அக்கா  பணிப்பெண்ணா   வேலை  செஞ்ச  இடத்துல  இருந்து  திடீர்னு ஆள்  காணாம  போய்டுது, ரெகுலரா  லெட்டர்  போடும் , அதையும் காணோம், அந்த  மர்மத்தைக்கண்டுபிடிக்க  அந்த  பங்களாவுக்கு பணிப்பெண்ணா   வேலைக்கு  சேரும்  கதாநாயகி

நாயகி  அந்த  மர்மத்தைஎப்படிக்கண்டுபிடிச்சா? என்ன செஞ்சா? என்பதே  மிச்ச மீதிக்கதை 

ஒரு க்ரைம்  த்ரில்லர்  படத்தை  கோஸ்ட் த்ரில்லர் , ஹாரர்  த்ரில்லர்  என  விளம்பரம் கொடுப்பதும்  , போஸ்டர்   டிசைன்  , ட்ரெய்லர் , எல்லாத்துலயும்  அதை மெயிண்ட்டெய்ன்  பண்ணுவதும்  பேய்ப்படத்துக்கு உண்டான  மார்க்கெட்டைக்காட்டுது , இது பேய்ப்படமோ அமானுஷ்யப்படமோ அல்ல , 

 க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம் , அடல்ட்   கண்ட்டென்ட்    லைட்டா  2 இடங்கள்ல யும் ஸ்ட்ராங்கா 1 இடத்துலயும் இருப்பதால்  குழந்தைகளுடன்  பார்ப்பதைத்தவிர்க்கவும்

 சபாஷ்  டைரக்டர் 


1   திடீர் திடீர்  என   ஒரு திகில்  உருவம்  தோன்றுவ்து, பயப்படுத்துவது என்ற  ஓப்பனிங்  பில்டப்கள்  பக்கா 


2  ஒளிப்பதிவு  , பின்னணி  இசை  இரண்டும்  சராசரிக்கும்  மேலே 

3    அக்கா , தங்கை , நாயகி  கம் வில்லி   , ஹீரோ கம் வில்லன்  நால்வர்  நடிப்பும் கனகச்சிதம் 

 நச்  டயலாக்ஸ்


1  என் பர்த்டேக்கு ரெட்  கலர்  டிரஸ்  கிஃப்ட் பண்ணதற்கு நன்றி, எனக்கு ரெட் டிரஸ்  தான்  பிடிக்கும்னு உங்களுக்கு  எப்படித்தெரியும்?

 நீ  சிவப்பா  இருக்கே , உனக்கு  சிவப்புக்கலர்  பிடிக்கும்னு  ஒரு யூகம் தான் 


2   ஒரு  கெட்டவனோட  நண்பர்கள் , உறவினர்க்ள்  , அவனைச்சார்ந்தவர்கள்  எல்லாருமே  கெட்டவனாத்தான்  இருப்பாங்க 


3  ரசிக்கப்படவேண்டியவங்களால  கவனிக்கப்படாத  அழ்கு  வீண்


4  நம்ம அழகை  நாம நேசிச்சவங்க   ரசிக்கலைன்னா  நம்ம  அழகை ஆராதிக்கறவங்களை  நாம  நேசிக்கலாம், தப்பில்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

‘1   நாயகியை  விட  பணிப்பெண்  அபார  அழகுடன்  இருப்பது  உறுத்துது , நாயகி அதை கவனிக்கலையா? பொதுவா  மனைவிகள்  இந்த  விஷயத்துல  ஜாக்கிரதையா  இருப்பாங்களே?

2   நீ அக்காவுக்குப்போட்ட  லெட்டர்ஸ்  எல்லாம்  நான்  பார்த்துட்டேன், அதுல  உங்க ஃபேமிலி ஃபோட்டோஸ்  இருந்தது  என்ற  நாயகி   சொல்ற  டயலாக்ஸ் வருது . அப்போ  பணிக்கு  சேர்ந்ததுமே தான் எழுதிய கடிதங்கள் , ஃபோடொக்கள், ஆதாரங்களை  அகற்றும் முயற்சியில் ஈடுபடவே இல்லையே?


3   க்ளைமேக்ஸ்  பார்சைட்  பட  க்ளைமாக்ஸ்  தழுவல்  போல உள்ளது , கமாண்டோ  படத்துல , கைதி  படத்துல  க்ளைமாக்ஸ்  மிஷின் கன்னால   அத்தனை  பேரை  போட்டுத்தள்ளுவது  போல ஒரே  ஒரு கத்தி  கொண்டு   ஒரு பெண்  அத்தனை  பேரை   போட்டுத்தள்ளுவது  நம்ப முடியல 


4  பழி  வாங்க  வேண்டிய  நபர்கள்  2 பேருதான் . ஆனா பார்ட்டிக்கு  வந்த  ஆட்களைப்பழி  வாங்க  சொல்லும் காரணம்  ஏத்துக்கற  மாதிரி இல்லை 

5   கழுத்தை  வெட்டிக்கொலை  செய்யும்  காட்சியில்   சும்மா  ரத்தம்  வந்ததைக்கட்னா  போதாதா? போரிங்  பைப்ல  தண்ணி  வர்ற  மாதிரி  பீறிட்டுக்கிள்மபுவது  எல்லாம் ஓவர் 


சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -  ஒன்றரை  மணி நேர  த்ரில்லர்  படம் , பிரமாதமும் இல்லை , மோசமும்  இல்லை ,  ஓகே   ரகம் ,  பார்ப்பவர்கள்  பார்க்கலாம், ரேட்டிங்   2. 5  /  5 




0 comments: