THE
LODGE –சினிமா விமர்சனம்
ஒரு பிரபலமான
ஹீரோ அவர் இதுவரை 3 பேரை திருமணம்
செய்து 3 பேரையும் பிரிந்து
வாழ்கிறார். இதுல ஒரு
ஆச்சரியமான விஷயம் அவங்க
3 பேருமே வேற யாரையும்
திருமணம் செஞ்சுக்கலை . இவர் மட்டும்
ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்குவார் , சரி வர்லைன்னா பிரிஞ்சு அடுத்த
ஜோடியை தேடிப்போய்டுவார். ஆனா அவங்க
அப்டி இல்லை . இதுல இருந்து தப்பு
யார் ,மேல?னு ஈசியா தெரியுது
நம்ம சமூகத்துல
நல்லா கவனிச்சுப்பார்த்தா மணவிலக்கு பெற்றோ பெறாமலோ ஆண்
டக்னு அடுத்த துணையை தேடிக்கறான், பெண் அப்டி
உடனே தேடுவதில்லை , அல்லது கொஞ்சம்
டைம் எடுத்துக்கறா , காரணம்
குழந்தை. அவளுக்கு குழந்தையை
வளர்க்கும் பொறுப்பு இருக்கு . அதுக்காக ஆணுக்கு
பொறுப்பே இல்லைனு சொல்லிட முடியாது. ஆனா
சதவீத கணக்குப்பார்த்தா இந்த
பிரிந்து வாழ்வதால் பெண்ணுக்கு தான் இழப்பு
அதிகம்
சரி ,
நம்ம விமர்சனத்துக்குள்ளே போவோம். ஹீரோக்கு மனைவி , 15
வயசு ல மகன் , 10 வயசுல பொண்ணு . அழகான குடும்பம், நல்ல வேலை
எல்லாம் இருந்தும் நம்ம ஆள் தடம்
மாறிப்போறார் , பஞ்ச வர்ணக்கிளி
மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்
பஞ்சர் ஆன ட்யூப் மாதிரி
இன்னொரு பெண் பக்கம் போவான்
ஆண் அப்டினு ஒரு பழமொழி
இருக்கறதை நிரூபிக்கற மாதிரி
ஹீரோ வேற ஒரு பெண்ணை
திருமணம் செய்ய முடிவெடுக்கறான், அதை தன்
மனைவியிடம் சொல்றான். அப்டியா ? சரி
என ரொம்ப சாதாரணமா சொன்ன மனைவி
சிரிச்ச முகத்தோட சேர்ல
உக்காந்து யோசிச்சவள் ஒரு அசாதாரணமான மன நிலைல
தற்கொலை பண்ணிக்கறா . ஒரு
ஃப்ரேக்சன் ஆஃப் செகண்ட் தான் ,
இதெல்லாம் நடக்கும் , மனித மனம்
விசித்திரமானது
சில நாட்களுக்குப்பின் ஹீரோ
தன் புது மனைவியை தன் முன்னாள்
மனைவிக்கும் தனக்கும் பிறந்த
அந்த 2 குழந்தைகளுக்கும் அறிமுகபப்டுத்தி அவங்களை
ஒரு புது பங்களாவுக்கு
கூட்டிட்டுப்போறான். நம்ம ஊர்லயும் சரி ,
எந்த ஊர்லயும் சரி
சித்திக்கும் சக்களத்தி
வாரிசுகளுக்கும் ஒத்துப்போறதே இல்லை
அவங்க
சரியா பழகலைனு தெரிஞ்சும் ஒரு நாள்
ஹீரோ வேலை விஷயமா 2
நாட்கள் வெளியூர் போக வேண்டி
வருது. அவங்க இருக்கற இடம்
ஒரு பனிப்பிரதேசம் சூழந்த தனி
வீடு , அவ பாதுகாப்புக்கு ஒரு
துப்பாக்கியைக்குடுத்துட்டு ஹீரோ போய்டறார்
சில நாட்களுக்குப்பின் ஹீரோ தன்
புது மனைவியை தன் முன்னாள்
மனைவிக்கும் தனக்கும் பிறந்த
அந்த 2 குழந்தைகளுக்கும் அறிமுகபப்டுத்தி அவங்களை
ஒரு புது பங்களாவுக்கு
கூட்டிட்டுப்போறான். நம்ம ஊர்லயும் சரி ,
எந்த ஊர்லயும் சரி
சித்திக்கும் சக்களத்தி
வாரிசுகளுக்கும் ஒத்துப்போறதே இல்லை
அவங்க
சரியா பழகலைனு தெரிஞ்சும் ஒரு நாள்
ஹீரோ வேலை விஷயமா 2
நாட்கள் வெளியூர் போக வேண்டி
வருது. அவங்க இருக்கற இடம்
ஒரு பனிப்பிரதேசம் சூழந்த தனி
வீடு , அவ பாதுகாப்புக்கு ஒரு
துப்பாக்கியைக்குடுத்துட்டு ஹீரோ போய்டறார்
அந்த 2 நாட்கள்
என்ன நடந்தது ? என்பதுதான்
படத்தோட கதை , மேலே நான்
சொன்ன சம்பவங்கள் எல்லாம் 10
நிமிசத்துல முடிஞ்சிடுது,
மீதி 2 மணி நேரம்
இந்த 3 பேர்தான்
கேரக்டர்ஸ். க்ளைமாக்ஸ் ல ஒரு
ட்விஸ்ட் இருக்கு
இந்தப்பட ப்ரமோ
வில் இது சைக்கலாஜிக்கல் ஹாரர்
ஃபிலிம் எனவும் கோஸ்ட் த்ரில்லர் எனவும்
விளம்பரம்
செய்யப்பட்டிருந்தாலும் இதில் திகில் , பேய் , பிசாசு எதுவும்
கிடையாது படம் கொஞ்சம் ஸ்லோவோதான்
போகுது. இயக்குநர் ஹரி ரசிகர்கள்
இந்தப்படம் பொறுமையா பார்க்கறது
சிரமம் தான் .
சபாஷ்
இயக்குநர்
1 மனமதன்
படத்துல சைக்கோ சிம்பு வுக்கு
அடிக்கடி மூக்குல ரத்தம்
வருமே அது மாதிரி இதுல வர்ற
ஹீரோயினுக்கு அப்டி ஆகும் ,
அதுக்கு மாத்திரை சாப்பிடுவா . அதை வெச்சு ஒரு ட்விஸ்ட்
இருக்கு
2 பனி சூழந்த
அந்தா பிரதேசத்தில் நடக்கும்போது
திடீர்னு பனி உடைஞ்சு ஏரி
மாதிரி பிளக்க ஹீரோயின்
மாட்டுவதும் பின்
தப்பிப்பதும் நல்ல படப்பிடிப்பு , படபடப்பு . படம் பார்க்கும் நமக்கு ஜிலீர்னும் இருக்கும்,
ஜில்லுன்னும் இருக்கும்
3
நாம மூணு
பேரும் ஆல்ரெடி செத்துட்டோம் , இது
தெரியாம அல்லாடிட்டு இருக்கோம்
என சொல்லும் சிறுவன் அதை நிரூபிக்க
தூக்கு போட்டு தொங்கி காட்டுவதும் சாகாமல்
இருப்பதும் திக் திக்
4 ஹீரோ
திரும்பி வந்த பின்
நடக்கும் சம்பவங்கள் எதிர்பாராத
திருப்பம்
நச்
டயலாக்ஸ்
1
பரிசை நான் யார்
கிட்டேயும் எதிர்பார்க்கறதில்லை , எனக்கான
பரிசை எனக்கு நானே வாங்கிக்குவேன்
வழங்கிக்குவேன் ( நமக்கு நாமே திட்டம் இங்கே இருந்துதான் உருவி இருப்பாங்க போல )
2
பூமில்
இருக்கும் எல்லாருமே ஏதோ ஒரு வகைல
பாவிகள் தான்
3
நமக்கான கடவுள்
சொர்க்கத்தில் இருக்கார் அப்டின்னாலும்
அவரை சந்திக்க யாரும் தயாரா
இல்லை
லாஜிக்
மிஸ்டேக்ஸ்
1 1 அம்மா இறந்த
கொஞ்ச நாட்களிலேயே புது
அம்மாவை பழக விடும் முன்பே அனைவரையும்
தனிமையில் விட்டு செல்வது
எந்த அடிபப்டையில் ?
அட்லீஸ்ட் ஒரு வாட்ச் மேன் கூடவா காவலுக்கு
வைக்க மாட்டாங்க? ஆள் வசதியான ஆள்
தான்
2 2 துப்பாகி சுட்டுப்பழக்க
ஹீரோ ஹீரோயின் உடன்
பயிற்சி தரும்போது அவள் அனாயசமாக
சுடுவது கண்டு அவனுக்கு
டவுட் வர்லையா?
3 3 திரைக்கதையில் மகனுக்கு
குடுத்த முக்கியத்துவம் ம்களுக்கு தரப்படவில்லை , ஆளும் நடிப்பும் கூட
சுமார் தான். இன்னும் கேஸ்டிங்கில் கவனம்
செலுத்து இருக்கலாம்
சி.பி
ஃபைனல் கமெண்ட் – இது எல்லாத்தரப்புக்குமான படம்
இல்லை ஸ்லோவான படம் தான் , பெண்களுக்குப்பிடிக்கும் ரேட்டிங் 2. 5 / 5
0 comments:
Post a Comment