லீவ் மீ அலோன் அப்டினு அடிக்கடி சிலர் சொல்ல சினிமாவிலோ , நேரிலோ கேட்டிருப்பீங்க, பார்த்திருப்பீங்க . தனிமைல என்னை விட்டாப்போதும் நான் நிம்மதியா இருப்பேன்னு சொல்வாங்க , ஆனா தனிமைல விடப்பட்டா என்னென்ன விபரீதம் நடக்கும்னு பெரும்பாலானோர்க்குத்தெரியாது, சில அட்டெம்ப்ட் சூசையிட் கேஸ்களில் டாக்டர்கள் சொல்வதுண்டு . அவங்களை கொஞ்ச நாள் தனிமைல விடாம பார்த்துக்கோங்க .. அதனால்தான் அந்தக்காலத்துலயே பாட்டு எழுதினாங்க , தனிமையில் இனிமை காண முடியுமா?அப்படி தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணின் நிலை என்ன ஆச்சு? என்பதுதான் கதை
நல்ல வேளை , இந்த சினிமா இதுவரை மிஷ்கின் கண்ணுலயோ , கவுதம் வாசுதேவ் மேனன் கண்லயோ . செல்வராகவன் கண்லயோ படலை , பட்டிருந்தா அட்லீ அவதாரம் எடுத்து சோனியா அகர்வாலை நாயகியாப்போட்டு ஒரு சைக்கோ த்ரில்லர் படம் ரெடி பண்ணி இருப்பாங்க
சின்னக்குழந்தையா இருக்கும்போது அ ஃபார் அம்மா , ஆ ஃபார் ஆடுன்னு சொல்லிக்கொடுத்திருக்காங்க , இதுல வர்ற அம்மா டேபிள் மேல ஒரு மாட்டோட வெட்டப்ப்ட்ட தலையை வெச்சு மனிதனின் கண்ணுக்கும் மாட்டின் கண்ணுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லைனு விளக்கிட்டு இருக்காங்க , அப்பவே நான் உஷார் ஆகி இருந்திருக்கனும், எனக்கு ரெக்கமெண்ட் பண்ண நபர் இந்தப்படம் வேற லெவல்ல இருக்கும்னு பில்டப் குடுத்ததால, சரி துணிஞ்சு பார்ப்போம்னு தொடர்ந்தேன்
ஒரு ஒதுக்குப்புறமான இடம் , ஒரு பங்களா. அம்மாவும் , மகளும் தனியே இருக்காங்க , அப்பா வெளில போய் இருக்கார் , எவனோ ஒருத்தன் வந்து “ மேடம், உங்க வீட்டு பாத்ரூமை யூஸ் பண்ணிக்கவா? கொஞ்சம் அர்ஜெண்ட்னு கேட்கறான், வீட்ல யாரும் இல்லைனு அவனை அனுப்பாம உள்ளே அலோ பண்றாங்க , அவன் என்னடான்னா உள்ளே வந்ததும் சைக்கோ மாதிரி குழந்தையோட அம்மாவை பாத்டப்ல பீஸ் பீஸா வெட்டறான்,அப்பா திரும்பி வந்து அவனை மடக்கறாரு.
அவனை ஒரு சங்கிலில சாரி 4 பெரிய சங்கிலில கட்டி வைக்கறாங்க
.போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லி இருந்தா இது ஒரு குறும்படமா முடிஞ்சிருக்கும், 10 வருசமா அவனுக்கு சாப்பாடு போட்டு வளர்க்கறாங்க . அப்றம் அப்பாவும் ஒரு நாள் செத்துடறாரு
மேலே நான் சொன்ன கொடூரமான சம்பவங்கள் எல்லாம் 10 நிமிசத்துல முடிஞ்சிடுது , மீதி ஒரு மணி நேரத்துக்கும் , மேல நாயகி என்ன செஞ்சா என்பதுதான் அந்த கொடூரமான கதை
நாயகியோட நடிப்பு ரொம்ப நல்லாருந்தது. படத்துல பாராட்டும்படி ரெண்டே அம்சம் தான் , ஒளிப்பதிவு மற்றும் கேமரா கோணங்கள் . டைரக்டர் மணிரத்னத்துக்கே அண்ணனா இருப்பாரு போல மொத்தப்படத்துக்கும் வசனமே ஏ 4 சீட் ல அரை பக்கம் தான்
ஒரே ஆறூதல் என்னான்னா சைக்கோ த்ரில்லர் படங்கள்ல தடக் தடக் ம்யூசிக் போட்டு கொல்வாங்க , அது இல்லை ,
எனக்கு ரெக்கமண்ட் பண்னவரு சொன்னாரு ? வசனத்தால காட்சியை நிரப்புவதை விட பாலு ந்மகேந்திரா மாதிரி காட்சியாலயே கதை சொல்லி இருக்காரு .. ஆனா என்ன கதைனு தான் கடைசி வரை தெரியலை
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 அந்த ஊர்ல போலீஸ் ஸ்டேஷன்னு ஒண்ணு இருக்கா? இல்லையா?
2 அம்மா , அப்பா செத்துடறாங்க , பாப்பா வேலைக்கும் போறதில்லை , வீட்லயேதான் கிடக்குது, பூவாவுக்கு என்ன செய்யுது? ஏது காசு? இது சாப்டறதும் இல்லாம அம்மாவைக்கொன்ன கொலைகாரனுக்கும் தண்டமா 10 வருசமா சோறு போட்டு வளர்த்திட்டு இருக்கு
3 நாயகி வளர்த்தும் குழந்தை ஒரு கட்டத்தில் கட்டிப்போடப்பட்ட பெண்ணைப்பார்த்து அது யார்?என்ன?னு டீட்டெய்ல் கேட்குது. அப்பவாவது நாயகி உஷார் ஆகி மெயின் டோரை லாக் பண்ணி இருக்கலாமில்ல?
4 ஃபிரிட்ஜ்ங்க்றது காய்கறி , பழங்கள் , உப்புமா, சட்னி கெடாம
வெச்சிருக்க யூஸ் பண்றது , நாயகி என்னடான்னா ஹ்யூமன் டெட் பாடி பீஸ் பீஸா வெச்சு அழகு பார்த்துட்டு இருக்கு
சி.பி ஃபைனல் கமெண்ட் - மகா ஜனங்களே ! இது யூ ட்யூப்ல கிடைக்குது, ஒயிட் அண்ட் பிளாக் தான் . வெட்டியா இருக்கறவங்க பாருங்க . ரேட்டிங் 1.5 / 5
0 comments:
Post a Comment