ஒரு புதுமுக இயக்குநர் தன் முதல் படத்துலயே வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட் டச் பண்ணது கூட பெரிய விஷயம் இல்லை . படத்தோட ஓப்பனிங்க்ல டைட்டில் கார்டுல தன் பேரைப்போடாம இயக்குநர் கே பாக்யராஜ் பாணில படம் ஓடி 40 நிமிசம் கழிச்சு பிரமாதமான டர்னிங் பாய்ண்ட் வர்றப்போ கெத்தா கதை , திரைக்கதை , வசனம் , இயக்கம்னு தன் பேரைப்போடறார்னா எவ்ளோ தன்னம்பிக்கை இருக்கனும்? சும்மா தியேட்டர்ல பொறி பறந்திருக்கும் இல்ல?
ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . ஒரு விபத்து கேஸ். கார்ல ஒரு பொண்ணு இறந்து கிடக்கு . கார் உருத்தெரியாம சிதைஞ்சு கிடக்கு . நெம்பர் பிளேட் இல்ல, டிக்கில இன்னொரு லேடியோட டெட் பாடி கிடக்கு . அது வேற கேஸ் , இது வேற கேஸ் இந்த இரண்டு கேஸ்க்கும் என்ன சம்பந்தம்? இந்த உருவாக்கப்பட்ட விபத்தின் பின்னணி என்ன? என்பதை ஹீரோ கண்டுபிடிப்பதே கதை
கேட்கும்போது ரொம்ப சாதா கதையா தெரிஞ்சாலும் திரைக்கதை , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எல்லாம் நல்லா வந்திருக்கு.
ஹீரோவா கிஷோர் . நல்ல போலீஸ் கம்பீரம். ஓப்பனிங் ல ஒரு இண்ட்ரோ ஃபைட் , பின் அவர் மனைவியுடன் ஓப்பனிங் டூயட் இந்த இரண்டை மட்டும் கடந்து போய்ட்டா படம் விறு விறுப்பு . விசாரனையில் காட்டும் மிடுக்கு ஆக்சன் , ஃபைட் காட்சியில் கொஞ்ச,ம் கம்மி
ஹீரோயினா , மனைவியா , டாக்டரா ப்ரியாமணி . பருத்தி வீரன் , சாருலதா வில் பிரமாதமான நடிப்பை வழங்கியவருக்கு இது யானை பசிக்கு சோளப்பொறி கதை தான்
இந்த க்ரைம் கதைல ஒரு செண்ட்டிமெண்ட் லவ் ஸ்டோரி யும் இருக்கு , அந்த போர்சன் மட்டும் கொஞ்சம் ஸ்லோவாதான் இருக்கும்
ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் எல்லாம் நல்ல தரம்
அமேசான் பிரைமில் இருக்கு
சபாஷ் டைரக்டர்
1 கமல் - கிரேசி மோகன் கூட்டணில ஆள் மாறாட்டக்காமெடி பல படம் பார்த்திருக்கோம், இது ஒரே பேருள்ள 2 பெண்கள் இவங்களுக்கு நடந்த சம்பவங்கள் , இருவருக்கும் சம்பந்தம் இல்லைன்னாலும் எப்படி கதைல சம்பந்தப்படுத்தப்படுது என்பது ஆச்சரியம்
2 தேவை இல்லாத ஆணி என நான் நினைத்த ஓப்பனிங் ஃபைட் சீனை
க்ளைமாக்சில் கனெக்ட் பண்ணிய விதம்
3 படம் பூரா சம்பந்தம் இல்லாம ஆங்காங்கே வரும் துண்டு துண்டு காட்சிகளை கடைசியில் நியாயப்படுத்திய விதம்
நச் டயலாக்ஸ்
1 நாம யாருக்காவது உதவி செஞ்சா நமக்கு யாராவது உதவி செய்வாங்க . இது ஒரு செயின் மாதிரி
2 சொந்தத்தொழில் செய்யறவனை ஒரு கம்பெனில யார் கிட்டேயோ கை கட்டி வேலை பாருன்னா பார்ப்பானா?
3 டீக்கடை வெச்சிருக்கறதால கேவலமாப்பேசாதீங்க . ஒரு நாட்டோட பிரதமர் , மாநிலத்தோட முதல்வர் டீ கடை வெச்சிருந்து முன்னேறியதை கண் கூடா பார்த்து இருக்கோம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 விஸ்மயா நெ 1 ஒரு ஜாலி பேர் வழி . காதலனுடன் பப்க்கு போவது , ஜாலியா இருப்பது என ஏனோ தானோ கேரக்டரா அவரைக்காட்டிட்டு திடீர்னு காதலனிடம் நான் மாசமா இருக்கேன் , மேரேஜ் பண்ணிக்கோ என கறார் காட்டுவது நம்பும்படி இல்லை .இத்தனைக்கும் அது சின்சியர் லவ் போலவே காட்டலை , ஒப்புக்குச் சப்பாணி லவ் மாதிரி தான் காட்றாங்க
2 பொதுவா மாடர்ன் பொண்ணுங்க மாசம் ஆன 2 வது மாசத்துலயே ஜாக்கிரதை ஆகி கலைக்க முடிவு எடுப்பாங்க அல்லது கல்யாணம் பண்ணுனு பிரச்சனை பண்ணுவாங்க , இவர் 5 வது மாசத்துல தான் பிரச்சனை பண்றார். . காதலனுக்கு டெய்லி சந்திக்கறவர் டவுட் வந்து கலைனு சொல்லவும் இல்லை
3 வாக்குவாதம்., கை கலப்பில் ஒரே ஒரு பளார் ல ஆள் அவுட் என்பது நம்பும்படி இல்லை அவ்ளோ பெரிய அபார்ட்மெண்ட்ல சிசிடிவி கேமரா வை எல்லாம் மிஞ்சி பாடியை காருக்கு கொண்டு போவது நம்பும்படி இல்லை
4 விஸ்மயா நெ 2 தன் அம்மாவை ஒரு சமயத்தில் காப்பாற்றினார் என்பதற்காக அவருக்கு ஒருவர் தன் கிட்னியை தானம் செய்ய முடிவெடுப்பதும் ஓவரா இருக்கு , அதனால நாயகிக்கு அவர் மேல காதல் வருது என்பதெல்லாம் சரி , ஆனா ரொம்ப பழகி அட்டாச்மெண்ட் ஆன பின்புதான் ஒருவர் தன் கிட்னியை தானம் செய்ய முன் வருவார் . ரொம்ப ரிஸ்க் ஆச்சே? ரத்த தானம் மாதிரி அல்ல
5 போதை கும்பல் 4 பேர் ( 2 ஆண் 2 பெண் ) அபார்ட்மெண்ட்டில் ரகளை பண்ணுனதை விஸ்மயா நெ2 போலீசில் புகார் கொடுத்தவர் என்பதற்காக என்னமோ ஜென்ம விரோதி மாதிரி ட்ரீட் பண்ணுவது ஓவர், போலீசின் சந்தேகப்பார்வை தங்கள் பக்கம் திரும்பும் என்பது தெரியாதா?
6 கொரியர் டெலிவரி பொதுவா காலை 10 - மாலை 6 க்குள் முடிஞ்சிடும், நைட் டைம் எப்டி கொரியர் மேன் வர்றார்?
சி.பி ஃபைனல் கமெண்ட் . ஃபேமிலியுடன் பார்க்கத்தகுந்த க்ரைம் த்ரில்லர் தான் , செம ஸ்பீடு எல்லாம் இல்லை . ஆனா பார்க்கலாம் , அமேசான் பிரைம்ல கிடைக்குது ., ரேட்டிங் 3 /. 5
0 comments:
Post a Comment