Saturday, July 11, 2020

NANI'S GANG LEADER ( தெலுங்கு)-சினிமா விமர்சனம் ( காமெடி + ரிவஞ்ச் த்ரில்லர் )


NANI'S GANG LEADER ( தெலுங்கு) -சினிமா விமர்சனம்காமெடிரிவஞ்ச் த்ரில்லர்

பென்சில் பார்த்த சாரதினு  ஒரு ரைட்டர், இவரு  எப்படிப்பட்ட ஆள் தெரியுமா?10  வெவ்வேற  ஃபாரீன்  மூவிஸ்  பார்த்து  அதை வெச்சு  ஒரு நாவல்  எழுதிடுவாரு. த்ரில்லர் நாவல் தான் . ஒரே படத்தை  காப்பி அடிச்சா  கண்டுபிடிச்சுடுவாங்களே? அதனால 10  படங்கள்ல  இருந்து தலாசீன்கள் சுட்டு  ஒரு  நாவல்  ரெடி  பண்ணிடுவாருஅட்லி, ஆர்  முருகதாஸ் , மதுரை  முத்து , ஈரோடு  மகேஷ்  அரவக்குறிச்சிப்பட்டி எம்  அசோக் ராஜா , விழுப்புரம்  கே இந்து குமரப்பன்  இவங்க எல்லாருமே  அடுத்தவங்க  படைப்பை  ஆட்டையைப்போட்டு  தன்  படைப்பு  மாதிரி  காட்டி   பேர்  வாங்கிட்டாங்க  இல்லையாஅது  மாதிரி  இவரும்  இதுவரை  30 நாவல்  எழுதி  முடிச்ட்டார், எல்லாமே செம ஹிட்


நாடு போற்றும்  கார்  ரேஸ் வீரர்  ஆகனும்னு ஆசைல  இப்போதைக்கு ஆம்புலன்ஸ்  டிரைவரா  சேர்ந்து  பிற்காலத்துல  நம்ம லட்சியம் நோக்கி  பயணிப்போம்னு நினைக்கற  ஒரு ஆளு 


முன் பின்  குற்றங்களில்  ஈடுபடாத , எந்த  விதமான  கிரிமினல்  ரெக்கார்டும்  இல்லாதபேர் சேர்ந்து   ஒரு பேங்க்கை  திறமையா   கொள்ளை  அடிச்சு  300  கோடி ரூபா  ஆட்டையைப்போட்டுடறாங்க .6  பேர்ல  ஒருத்தன் மீதி 5 பேரையும்  போட்டுத்தள்ளிட்டு பணத்தோட எஸ்  ஆகிடறான்,    பாதிக்கப்பட்ட அந்த  5 பேரோட வீட்ல  இருந்தும்  தலா ஒரு ஆள் ( அம்மா, அக்கா, மனைவி , மகள் , காதலி இப்டிசேர்ந்து  அந்த  6 வது ஆளை  பழி வாங்கனும்னு  நினைக்கறாங்க 


 மேலே  சொன்ன  3 பேராவும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே  இல்லாம  இருக்காஇதை எப்படி சம்பந்தப்படுத்தறாங்க   என்பதுதான்  திரைக்கதை 

 நான்    நானி  நடிச்ச  அல்லது  தயாரிச்ச  படங்கள்  எல்லாமே  ஃபேமிலி ஆடியன்சை  டார்கெட்  பண்ணி  எடுக்கப்பட்டவை. அதனாலயோ என்னவோ  இந்த  த்ரில்லர்  மூவியையும்  காமெடி , ஃபேமிலி செண்ட்டிமெண்ட்ஸ்  கலந்து  கொடுத்து  அங்கே  செம  ஹிட் ஆக்கிட்டாங்க , முதலீட்டைப்போல்  1 மடங்கு   லாபமாம்


ஹீரோவா  நானி ஓப்பனிங்   சீன்ல  இருந்தே  காமெடி  ஸ்கோர் பண்றார். அந்த சின்னப்பொண்ணு  கூட பாடல்  காட்சிலயும் சரி , பிறந்த  நாள்  கொண்டாட்டத்துலயும் சரி , ஒவ்வொரு பில்டிங்க்லயும் மாடி  ஏறும்போது  பாட்டியை  அலேக்கா  தூக்கிட்டுப்போகும் லாவகத்துலயும் சரி , நல்லா பண்ணி இருக்கார் . நாயகி  கூட  ரொமான்ஸ்  பண்றதுல கூட ஒரு ஜெண்டில்மேன் தனம் . இதுதான்  லேடீஸ் ஆடியன்சை  கவரக்காரணம் 

ஹீரோயினுக்கு  அதிக  வேலை  இல்லை . அந்த  சின்னப்பாப்பா  கொள்ளை அழகு , நடிகை  லட்சுமி  பாட்டி  ரோலில்  காமெடி , செண்ட்டிமெண்ட்னு கலந்து  அடிக்கிறார். சம்சாரம்  அது மின்சாரம் , சிறை  போன்ற  படங்களில்   பின்னி  எடுத்திருந்தார் , எல்லாம் காலத்தின் கோலம் 

வில்லன் ரோலுக்கு நல்ல  முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டிருக்கு , தனி  ஒருவன் அர்விந்த்சாமி  மாதிரி  , மங்காத்தா அஜித்  மாதிரி ஸ்டைலிஷ்  வில்ல்னா  காட்டி  இருக்கலாம்,, மிஸ்  பண்ணிட்டாங்கஇந்தபப்டத்தை  தமிழ்ல  ரீமேக்கினா அஜித்  கரெக்டா  இருப்பார் , நானி ரோலுக்கு விஜய் 


 ஒளிப்பதிவு  . இசை  எல்லாம்  ஓக்கே ரகம் , திரைக்கதையில்  முதல்  பாதி காமெடியாகவும்பின் பாதி   பழி  வாங்கும்  படலமாகவும்  அமைக்கப்பட்டிருக்கு , போர்  அடிக்கலை 



சபாஷ்  டைரக்டர் 

1    பேங்க்  கொள்ளை  சீன்  ஹாலிவுட்  படங்களின்  தரத்தில்  இருக்கு . ஓப்பனிங்  சீனே  அதை  வெச்ச ஐடியா  அருமை 


ஹீரோவுக்கான  ஓப்பனிங்  சீனில்  படம்  பார்த்து  சீன் சுடுதல்  காட்சி  கலக்கல் காமெடி . அதே  போல போலி  ஆஃபீசராக   14  மாடி  பில்டிங்க்களின்  விபரம்  சேகரிக்கும் காட்சி   சிரிப்பு  சர  வெடி 


3    பேங்க் கொள்ளை  நடந்த  பின் போலீசே  யோசிக்காத  கோணத்தில்  ஹீரோ  யோசித்து இதே  போல 14   மாடி  பில்டிங்கில்  ட்ரையல் பார்த்து  பிராக்ட்டீஆஸ் பண்ணி  இருப்பாங்க  என  யூகிப்பது  செம  சீன் 

சிசிடிவி  ஃபுட்டேஜ்கள்  கலெக்ட்  பண்ண  ஹீரோயினை  கிளாமராக  போய்  ட்ரை  பண்ணச்சொல்வதும் அங்கே  நடக்கும்கே(GAY) ஷூவலான  விஷயங்களும்   கண்ணியமான      ரகக்காமெடி . இந்த  சீன்ல எஸ்  ஜே சூர்யா   பண்ணி  இருந்தா டபுள்  படம்  ஆக்கி இருப்பார். பின் நாயகிக்குப்பதிலா  நாயகன்  போய்  அவனை மயக்குவது  ரகளையான காட்சிகள் 

வில்லனைப்பேட்டி  எடுக்கும்போது  கேட்கப்படும்  கேள்விகளுக்கு  வில்லன் ஃபிளாஸ்பேக்கில்  தான் செய்த  தவறுகளை  , கொலையை நினைத்துப்பார்ப்பது  நல்ல  யுக்தி


 நச்  டயலாக்ஸ் 


 1  பயிற்சிதான் சாதாரண  மனிதனை  சாதனை  மனிதன் ஆக்கும் 

2   பர்ஃபெக்சன் க்கு  டைமிங்  ரொம்ப  முக்கியம் 


3   உலகத்துலயே  சக்தி  வாய்ந்த  , நம்பகத்தன்மை  வாய்ந்த  ஆயுதம்  எது  தெரியுமாபெண்  தான் , பெண்ணை  வெச்சு  பெண்னை  ஆயுதமா வெச்சு  பலர்  ஜெயிச்சிருக்காங்க 


வேகம்கறது  ந் ரத்தத்துலயே  கலந்திருக்கு , என் ரேஸ் லட்சியத்துக்கு  அது உதவுது . நான்  என் அம்மா வயித்துல  இருந்து  7 வது  மாசமே  வெளில  வந்துட்டேன்னா என் வேகம்  எப்டி  இருக்கும்னு பாரு 


5   மோசமான வங்களை அடையாளம்  காண்பது எளிது , நைட்  டைம்ல ஊர் சுத்திட்டு  இருப்பாங்க 

பழிக்குப்பழி  வாங்கும் உணர்வும்  சிகரெட்  பிடிக்கும்  பழக்கமும் ஒண்ணுதான், இரண்டுமே ஆரோக்யத்துக்குக்கேடு 



லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில ஆலோசனைகள் 


1  
கொள்ளை  அடிக்கப்பட்ட  பணத்தை ( 300 கோடி) தன்  வீட்டில் அல்லது  தன் கண் பார்வைல  படும் அருகாமை  இடத்துல  வைக்காம   எங்கோ  ஒரு இடத்துல  வில்லன்  வைப்பது  நம்ப  முடியலை , ஏதோ  அவசரத்துக்கு  ஒப்ரு நாள்  , 2 நாள்னா  ஓக்கே , பல  மாதங்கள்  அப்டி  வைப்பது   ரிஸ்க்  ஆச்சே


வில்லனுக்கு  இவங்க  6 பேரும்  யார்னே தெரியாது , இவங்களா  அடையாளம் காட்டிட்டு பின் இவங்க அவனுக்கு பயந்து  ஓடுவது  தேவை இல்லாதது 

வில்லன்  ஒரு கொலை  செய்து  அதன் மூலம்  கொலை செய்யப்பட்ட  நபரின்  இன்சூரன்ஸ்  தொகை  பெறுவது  போல்  காட்சி  வருது . . அவ்ளோ  ஈசியா எல்லாம் இன்ஸூரன்ஸ்  தொகையை  வாங்கிட  முடியாது , போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்ல  தெரிஞ்சிடுமே

4   க்ளைமாக்ஸ்    எக்ஸ்ட்ரா  ட்விஸ்ட்டா  லட்சுமி  300  கோடியோட  எஸ்  ஆவது  போல்  காட்டிட்டு  பின்  அவர்  அனாதை  ஆசிரமங்களுக்கு டொனேசனா கொடுத்தார்  என்பதெல்லாம்  தேவை இல்லாதது


பேன்  கார்டு  இல்லாமல்  300  கோடி எல்லாம்  டொனேசன் ஆக வரவு  வைக்க முடியாது 

சி.பி  ஃபைனல்  கமெண்ட் ஜாலியான  காமெடி  சப்ஜெக்ட்  ரிலாக்ஸா  பார்க்க ஆசைப்படுபவர்கள்  பார்க்கலாம் , ஃபேமில்கியோட பார்க்கலாம், நெட் ஃபிளிக்சில்   கிடைக்குது . ரேட்டிங்  2.75  / 5  , 9/5/1991 ல் ரிலீஸ்  ஆன  சிரஞ்சீவியின்  கேங்க்ஸ்டார் படக்கதை  வேற , இது வேற  , பயப்பட வேணாம்


0 comments: