ஒரு சாதாரண
கதையை பிரமாதமான திரைக்கதையால் மக்கள் மனசை பிரமிக்க வைக்கும்படி செய்யமுடியுமா?அதுவும் சிரஞ்சீவி மாதிரி
அடிதடி ஹீரோக்கள் உள்ள
ஆந்திராவில்? ஒரு வெற்றிகரமான
சினிமா என்பது திரைக்கதை
அமைப்பைப்பொறுத்து
நிர்ணயிக்கப்படும் என்பது மீண்டும்
நிரூபணம் ஆகி இருக்கிறது
2 கோடி ரூபா பட்ஜெட்டில்
3 வருசமா எடுத்த படம் இது . இசை அமைப்பாளர்
கீரவாணியின் முதல் மகன் ஸ்ரீ சிம்ஹா இதில் நடிகராவும் இரண்டாவது
மகன் காலபைரவா இசை
அமைப்பாளராகவும் இதில் அறிமுகம்
ஐஎம்டிபி ல டாப்250 தரவரிசைப்பட்டியலில் 50-வது
இடத்தைப்பிடித்த படம்
ஒரு ரூம்ல 3 ஃபிரன்ண்ட்ஸ் . அதுல 2 பேரு வேலைக்குப்போறாங்க , ஒரு ஆள் சும்மா தான் இருக்காப்டி . எப்போப்பாரு ரூம்ல உக்காந்து சினிமா பார்க்கறதுதான் வேலை
அமேசான்
மாதிரி ஒரு கம்பெனில ஹீரோவும், அவரது நண்பரும்
டெலிவரி பாய்ஸ் .ஹீரோவுக்கு ஏகப்பட்ட பணத்தேவை இருக்கு , ஆனா சம்பளம் பத்தலை .ஆனா
அவரை மாதிரியே அவர் கூடவே
வேலை பார்க்கும் நண்பன் நல்லா செலவு பண்றார், சம்பளம் கம்மினு புலம்பலை, இன்னா மேட்டர்னு கேட்டா
அவர் ஒரு விஷயம் சொல்றார்.. கஷ்டமர் பணம்
தரும்போது சாமார்த்தியமா ஒரு ஐநூறு
ரூபாய் நோட்டை ஆட்டையைப்போட்டுட்டு நீங்க
கொடுத்த பணத்துல ஐநூறு ரூபா சார்ட்டேஜ் சார், டவுட்னா
எண்ணிப்பாருங்கனு குடுப்பேன், அவங்க வாங்கி எண்ணிப்பார்த்துட்டு இன்னொரு
ஐநூறு ரூபா குடுப்பாங்க , இந்த மாதிரி
டெய்லி 5 கஸ்டமர்ங்க கிட்டே பண்ணா
மாசம் 50,000 - 60,000
ரூபா எக்ஸ்ட்ரா வருமானம்
வரும்கறார்
ஹீரோவும்
அதே மாதிரி பண்ணலாம்னு ஒரு கஸ்டமர்கிட்டே பண்ணப்போக
அது வயசான பாட்டி , ஏமாத்த முடியல . அந்தப்பாட்டி இது
ஏதோ ஏமாத்து வேலைனு கண்டு பிடிச்சுடுது. 2 பேருக்கும்
வாக்குவாதம், பாட்டி
சட்டையைப்பிட்ச்சு உலுக்க அதில் இருந்து
தப்ப ஹீரோ பாட்டியைத்தள்ளி
விட ஆள்
அவுட், ஆக்சுவலா இது ஒரு ஆக்சிடெண்ட்டல்
டெத் தான். திட்டம் போட்டு
செய்த கொலை அல்ல , ஆனா
போலீஸ் இதை நம்புமா?
ரூமுக்கு
வந்து நடந்ததை சொன்ன
ஹீரோ கிட்டே நண்பன்
தடயங்களை எல்லாம் அழிச்ட்டு
வா அப்டிங்க்றான்.இப்போ மறுபடியும் சம்பவம் நடந்த இடத்துக்குப்போனா ஹீரோக்கு
2 ஷாக். இறந்ததா நினைச்ச
பாட்டி உயிரோடதான் இருக்கு , ஆனா
ஒரு போலீசும் , ஒரு ஆணும்,
செத்துக்கிடக்கறாங்க , ஒரு பெண்
மயக்க நிலைல இருக்கு
இந்த
சிக்கல்ல இருந்து ஹீரோ
எப்படி விடுபடுகிறார்? என்பதே மிச்ச மீதி திரைக்கதை. நீங்க நினைச்சே
பார்த்திராத திருப்பங்கள் 15
நிமிசத்துக்கு ஒரு டைம் வந்துட்டுப்போகும்
ஹீரோ, காமெடியன், வில்லன் மூவருக்கும் சம வாய்ப்பு, நல்லா டிச்சிருக்காங்க, பாட்டி , போலீஸ் , அந்த குண்டுப்பெண்,போதைப்பெண்ம் சைடு வில்லன் அனைவர் நடிப்பும் பக்கா
ஒளிப்பதிவு , எடிட்டிங் , பிஜிஎம் , இசை எல்லா தொழில் நுட்ப அம்சங்களும் நீட்
ஹீரோ, காமெடியன், வில்லன் மூவருக்கும் சம வாய்ப்பு, நல்லா டிச்சிருக்காங்க, பாட்டி , போலீஸ் , அந்த குண்டுப்பெண்,போதைப்பெண்ம் சைடு வில்லன் அனைவர் நடிப்பும் பக்கா
ஒளிப்பதிவு , எடிட்டிங் , பிஜிஎம் , இசை எல்லா தொழில் நுட்ப அம்சங்களும் நீட்
சபாஷ்
டைரக்டர்
1
பாட்டி இறக்கறதா காட்டப்படும் சீனில் ரெஸ்ட்
இன் பீஸ் சப் டைட்டில் ஓடுவது
கலக்கல் காமெடி முதல் 45 நிமிடக்காட்சிகளில் சிச்சுவேசன்ல
சிக்குன ஹீரோ கற்பனைல அதே
லொக்கேசன்ல நண்பர்கள் இருவருடன்
டிஸ்கஸ் செய்யும் காட்சிகள்
காமெடிக்கலக்கல்
2
படத்தின் ஊடே வரும்
தெலுங்கு மசாலா சீரியல் செம
கலக்கல் காமெடி . நடு
நெற்றியில் புல்லட் பாய்ந்த
நபர் ஒரு மணி நேரம் உயிரோட இருப்பதும் டயலாக்ஸ்
பேசுவதும் செம
3
டெட் பாடியின் கை விரல்களில் இருந்த
நக இடுக்குகளில் ஆதாரம் சிக்கி
விடக்கூடாது என நெயில்
கட்டரால் நகம் வெட்டுவதற்குப்பதிலாக கோடாலி
எடுப்பது சிரிப்பு
4
எப்போ பாரு வீட்டில்
க்ரைம் த்ரில்லர் படங்களாகப்பார்க்கும் அந்த
சோடாபுட்டி பார்ட்டி ஹீரோவுக்கு
வழங்கும் க்ரைம் ஐடியாக்கள்
சபாஷ் போட வைக்கின்றன
5 பாஸ்போர்ட் என்கொயரி கன்ஃபர்மேஷனுக்காக வரும்
போலீஸ் கொலை செய்யப்படும்
காட்சி அதை டிராமா
ஆக்குவது , அந்தப்பெண் சிக்குவது எல்லாமே எதிர்பாராத
திருப்பங்கள்:
நச்
வசனங்கள்
1
சாரி , அங்க்கிள்..
என்னை
எப்படி நீ அங்க்கிள்னு
கூப்பிடலாம், ? ராஸ்கல்
ஓ., உங்க
பேரு ராஸ்கலா? ஓக்கே சாரி ராஸ்கல்
=================
2
மேடம், வீட்ல
வேற யாரும் இல்லையா?
ஏன்? கொள்ளை
அடிக்கப்போறியா?
===============
3
வீடாக்கு அப்டின்னா?
கஞ்சாயா?
ஓ, ஃபுல் எஞ்சாயா?
================
4
உங்களுக்கு இந்த கதைல
ஒரு பிக் ரோல்
ஓ, நிஜமாவா?
ஆமா, 60 வயசான கேரக்டர்
==============
5
நானும் என் ஃபிரண்டும் கார்ல
போய்க்கிட்டு இருந்தப்ப....
உனக்கு
கார்ல போற ஃபிரண்ட்ஸ்
எல்லாம் இருக்காங்களா?
எல்லாரும்
உன்னை மாதிரியே இருப்பாங்களா?
================
6
அபார்ட்மெண்ட் வாசல்ல
செக்யூரிட்டி இருப்பான், நீ வேகமா
கார்ல கிராஸ் பண்ணு
ஏன்?
மெதுவா போய் பர்மிஷன் கேட்டா நீ
விசிட்டர்னு கண்டுபிடிச்சுடுவான்,
வேகமாப்போனா அபார்ட்மெண்ட்ல குடி
இருக்கறவங்கனு விட்டுடுவான். அபார்ட்மெண்ட்ல
குடி இருக்கறவங்களுக்கு
பர்மிஷன் தேவை இல்லை
லாஜிக்
மிஸ்டேக்ஸ்
1
அந்தப்பாட்டி மல்லாக்க
விழுந்து மயக்கம் ஆவது ஓக்கே , ஆனா
பின் தலையில் அடிபடலை , ஒரு சொட்டு
ரத்தம் கூட வர்லை என்பது எப்படி?
2
ஒரு பெண்
எந்த நம்பிக்கையில் ஹாட்
கேசாக 50 லட்சம் ரூபாயை
ஒரு பேக்கில் போட்டு பப்ளிக்காக
ஒரு அபார்ட்மெண்ட்க்கு வர முடியும்? போலீஸ் கண்ல
மாட்னா அந்தப்பணத்துக்கு என்ன
விளக்கம் தருவார்?
3
தனி ஆளாக
இருக்கும் அந்த போலீஸ் 2 ஆண்கள்
இருக்கும் இடத்தில் எப்படி 30 லட்சம்
ரூபாய் கேட்டு மிரட்ட
முடியும்? போலீஸ் கையில்
ஆயுதம் இல்லை, மற்ற இருவர் கைல ஆயுதம் இருக்கு. அவங்க இடம்
வேற, தனக்கு ஆபத்து என
போலீசால் யூகிக்க முடியாதா? சேஃப்டியாக
அப்போதைக்கு கிளம்பி பிறகு பாதுகாப்பான
இடத்தில் இருந்து மிரட்டுவதுதானே சரி??
4
பங்களா
செக்யூரிட்டி பாத்ரூமில் குளிக்கும்
பெண்ணைப்பார்க்க வைக்கும் ரக்சிய
கேமராவில் தான் சிக்கி இருப்போம் என்று உணர்ந்த வில்லன்
அதை அடைய அல்லது
நீக்க முயற்சிக்கவே இல்லையே?
5
சம்பவம் நடந்த இடத்தில்
இரு வயசுப்பெண்கள் இருந்தும் அங்கே
இருக்கும் வில்லன்கள் யாருமே
அவங்களைப்பெண் என்ற ரீதியில்
தப்பான பார்வை பார்க்கவே இல்லையேர் எப்படி?
சி.பி ஃபைனல் கமெண்ட் -
நீங்க உங்க வாழ்நாளில்
பார்த்த க்ரைம் த்ரில்லர்கள்
டாப் 10 லிஸ்ட் எடுத்தா
அதுல இந்தப்படமும் ஒரு இடம் பெறும் , அந்த
அளவு ஒர்த் , குடும்பத்துடன் பார்க்க
முடியும் கண்ணியமான காட்சிகள்
கொண்ட க்ரைம் த்ரில்லர். ட்விஸ்ட் எல்லாம் வேற
லெவல். ரேட்டிங் 3.75 / 5
Theatrical release poster
| |
Directed by | Ritesh Rana |
---|---|
Produced by | Chiranjeevi (Cherry) Hemalatha |
Written by | Ritesh Rana |
Starring | Sri Simha Naresh Agastya Athulya Chandra Vennela Kishore Satya Brahmaji |
Music by | Kaala Bhairava |
Cinematography | Suresh Sarangam |
Edited by | Karthika Srinivas |
Production
company | |
Release date
|
|
Running time
| 130 minutes |
Country | India |
Language | Telugu |
Budget | ₹2.1 crore[1] |
0 comments:
Post a Comment