Tuesday, July 07, 2020

Andhadhun ( hindi-2018) -சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )




தமிழ்  சினிமா  உலகில்  வித்தியாசமான  செண்ட்டிமெண்ட்   உண்டு. நாயகி விழி ஒளி இழந்தவரா நடிச்ச படங்கள்  ஹிட் , உதா  சிம்ரன் –ன் துள்ளாத மனமும் துள்ளும் , ரேவதி யின் கை கொடுக்கும் கை , ஆனா நாயகன் அதே  ரோல்   பண்ணினா  படம்  ஃபிளாப் , உதா கமலின்  ராஜபார்வை , முரளியின்  இரவு சூரியன், விக்ரம் –ன்  தாண்டவம் ( அட்டர்  ஃபிளாப் ) காசி  ( பாராட்டு  பெற்றது, வசூல்  இல்ல ) சைக்கோ  ஃபிளாப், ராஜூ முருகன் –ன்  குக்கூ ( ஃபிளாப்)

 காரணம்  என்ன?னு  அலசி  ஆராய்ஞ்சா   ஹீரோ வால  பார்க்க முடியாத  படங்களை  எல்லாம்  ஜெனரல் ஆடியன்சால  பார்க்க முடியறதில்லை , ஐ மீன்  திரைக்கதை  டெட்  ஸ்லோ , அதனால   ஓடறதில்லை , ஆனா  ஹிந்தில ஒரு படம்  செம ஸ்பீடா  திரைக்கதை  அமைச்சு  செம  ஹிட்டும் ஆகி  இருக்கு . இத்தனை  நாளா  எப்டி  இந்தப்படத்தை  மிஸ்  பண்ணேன்னே  தெரியல

 ஆர்ட்டிக்கிள் 15  பார்த்த பின் ஆயுஸ்மான் குரானா வின் தீவிர  ரசிகன்  ஆகி அவரோட படங்கள் எல்லாம் சர்ச்  பண்ணிட்டு வந்ததில்  பெரும்பாலான  அவர்  படங்கள் எல்லாமே ஹிட்  தான் , நானா படேகர்  மாதிரி பர்ஃபார்மென்ஸ்லயும் ஆள்  கலக்கல் , பர்சனாலிட்டிலயும்  ஜம் ஜம்

சரி , கதைக்கு  வருவோம்

பார்க்க முடியாத ஹீரோ  ஒரு சூழலில்  ஒரு கொலைக்கு  சாட்சி ஆகிடறாரு. அது  தெரிஞ்சுக்கிட்ட  வில்லனும், வில்லியும் அவரை  என்ன  பண்ணாங்க , பின் என்ன ஆச்சு? என்பதே  திரைக்கதை.



 இந்த  சின்ன கதைக்கருவில் எந்த  அளவுக்கு  விறுவிறுப்பான  திரைக்கதை அமைக்க முடியுமோ அந்த  அளவு   ஸ்பீடா  படம்  பறக்குது.  ஒவ்வொரு  15  நிமிடத்துக்கும்  ஒரு ட்விஸ்ட், நீங்க  கற்பனை  பண்ணிக்கூட  பார்த்திடாத  கோணத்தில்  காட்சிகள்  நகரும் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் , காதல்  தேசம் , படங்களில் நாம்  ரசித்த ஹைட்  ஹீரோயின்  தபுவின்  வில்லித்தனமான  நடிப்பை  மிஸ்  பண்ணிடாதீங்க  மிஸ்  பண்ணிடாதீங்க, நெட்  ஃபிளிக்சில்  கிடைக்குது

சபாஷ்  டைரக்டர்

1      1  இந்தப்படத்துக்கு  நிஜமாவே  பியோனா  வாசிக்கத்தெரிந்த ஒருவர் தான் நாயகன் அப்டினு முடிவு பண்ணாராம், ஹீரோ ஆல்ரெடி  பியானோ  வாசிக்கத்தெரிந்திருந்தாலும்  படத்துக்காக  கத்துக்கிட்டாராம்  , மேலும் மெருகேற்ற

2     2   முதல்  கொலை நடந்த  ஸ்பாட்டில்  ஹீரோ  இருக்கும்போது அந்த  த்ரில்லிங்கை  எந்த  வித ஜெகஜ்ஜால  ம்யூசிக்கும் இல்லாமல்  பார்வையாளர்களுக்கு கடத்திய  விதம்

3   முதல்  கொலையைப்பார்த்த இன்னொரு சாட்சியை கொலை செய்யும்  இடம் , செய்யும் நபர்   அதிர்ச்சி

4  கிட்னி  திருடும்  ஒரு  கும்பலிடம்  நாயகன்  சிக்குவதும்  அவங்களை   இந்த  மர்டர்  ஸ்டோரிக்குள்  இழுத்து  வந்த  லாவகமும்

5  பக்காவான  எடிட்டிங் ,  பிரமாதமான ஒளிப்பதிவு ,பொருத்தமான  இசை , பின்னணி இசை  என  எல்லா டெக்னிக்கல் அம்சங்களையும்  பெஸ்ட் ஆக  தந்த  விதம்



 நச்  டயலாக்ஸ்

1        முற்றுப்பெறாதவை  கூட சில  சமயங்களில்  அழகாக இருக்கக்கூடும், அதை சரி செய்து அந்த  அழகை நாம கெடுத்துடக்கூடாது

2         எல்லாரும்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்  இல்லை

3         தன்னுடைய  இறப்பு செய்தியைக்கேட்டு  தானே அழுத ஆளைக்கேள்விப்பட்டிருக்கியா? அந்த  பாக்கியத்தை  உனக்கு அளிக்கப்போறேன்

லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1 ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ல  குடி  இருக்கும்  தம்பதி,புருசன்  ஊர்ல இல்லை , காலைல  பெங்களூர் போறார், மாலையில் தான் ரிட்டர்ன், அதுக்காக எந்த  குடும்பப்பெண்ணாவது தன் வீட்டுக்கே  கள்ளக்காதலனை  வர் வைப்பாளா?  அபார்ட்மெண்ட்  செக்யூரிட்டி , சிசிடிவி கேமரா , அக்கம் பக்கம் பார்வைகள்  இத்தனை  ரிஸ்க்  இருக்கே?

3  2     வில்லி  ஆல்ரெடி  2 கொலை செஞ்சவள் , தான் அதைக்கண்ட  ( உணர்ந்த )  சாட்சி, தன்னைப்போட்டுத்தள்ளும் அபாயம் உண்டு  என தெரிந்தும்  ஹீரோ மடத்தனமா  அவ  குடுக்கும்  பண்டத்தை  சாப்பிடலாமா?

3   ஹீரோவுக்கு  இப்போ  கண்  தெரியுமா?  தெரியாதா?னு செக்  பண்ண  வில்லி  ஹீரோ முன்    பானத்தில்  விஷம்  கலக்கறா. அதை  எப்படியோ  உணர்ந்த  ஹீரோ அதை  தட்டி  விட்டு கீழே  கவிழ்க்கிறான் , அதை  விட    கப்பை  வாயில்  வைத்து  குடிப்பது போல நடித்து  கசக்கற  மாதிரி  இருக்கே? நீங்க  குடிங்க  பார்ப்போம்  என திருப்பி விட்டிருக்கலாம்

4   4    கிட்னி  திருடும் கும்பலில்  டாக்டர்  ஏன் செல்லை  சைலண்ட்  மோடில்  போடாமல்  ஆபரேசன் பண்ண  ரெடி  ஆகறார்?  அடிக்கடி  ஃபோன்  வந்ததும்  இப்போ ஒரு ஆபரேஷன்ல  இருக்கேன்  என்றதும்  ஹீரோ  உஷார்  ஆகறாரே?

5  ஒரு கோடி ரூபாய்  பணம்   பரிமாற்றம்  நடத்த  வில்லனின்  மனைவியிடம்  தந்து  விடவா  ? என வில்லனே  கேட்கும்போது  அதுக்கு ஒத்துக்கொள்ளாமல்  வில்லனையே  வரச்சொல்வது  என்> ரிஸ்க்  ஆச்சே?>

5      6   முன் பின்  அறிமுகம் இல்லாத  கிட்னி  திருடும்  கும்பலிடம்  ஹீரோ  எப்படி  தன்  பிளானை  முழுவதும்  ஓப்பன் பண்றார்? அப்பப்ப  கட்டளை மட்டும்  இட்டிருக்கலாமே?  ஏ டூ இசட்  ஏன் சொல்லனும்?


7  க்ளைமாக்சில்  வில்லி  காரின்  முன் முயல்  வரும்போது  அவர்  பிரேக் தான் போடனும், ஆள் அரவமே  இல்லாத  காட்டுப்பாதையில்  அவர்  ஏன்  கா ரை    திருப்பறார்?

8  வில்லனின்  மனைவி   தன் கணவனின்  கள்ளக்காதலுக்குக்கு அவன் கூறும் சப்பைக்கட்டை  நம்புவதும்  ஏற்றுக்கொள்வதும் எப்படி?
9  ஒரு பிரபல  சினிமா  ஹீரோ  தனி பங்களாவில்  வசிக்காமல் அபார்ட்மெண்ட்டில் வசிப்பது ஏன்?

10  கள்ளக்காதலில் ஈடுபடும்  சினிமா மாந்தர்கள்  எல்லாபடங்களிலும் மெயின் கேட் , வாசல் கதவு , பெட்ரூம்  கதவு எல்லாத்தையும் திறந்து  வெச்சு  மாட்டிக்குவது ஏன்? சப்போஸ்  பிரசச்னை  வந்தா எஸ்  ஆக  இன்னொரு  கதவு அல்லது  ஜன்னல் என எஸ் ஆக ரெடி  பண்ணிக்க மாட்டாங்களா?

11 
   க்ளைமாக்சில்  வில்லன் படிக்கட்டில்  வராமல்  லிஃப்டில் ஏன் வரனும்?  கீழே  ஒரு லேடி  இருக்கிறாள்  என்பதை  அறிபவர்    லிஃப்டை  ஆஃப்  பண்ணீட்டா  என்ன  பண்ண? என  யூகிக்க மாட்டாரா?

 சி.பி ஃபைனல்  கமெண்ட் – இந்தியாவின்  சிறந்த  க்ரைம் த்ரில்லர்கள்  என  ஒரு லிஸ்ட்  எடுத்தால்  டாப் 5 ல்  இதுவும்  ஒன்று, எனவே  அவசியம்  பார்க்கலாம், ரேட்டிங்   4 / 5    . நெட் ஃபிளிக்ஸ் ல கிடைக்குது

0 comments: