மாநகரம் – சினிமா
விமர்சனம் ( த்ரில்லர் )
மாஸ்டர்
படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் படம் இது,
பார்க்காம மிஸ் பண்ணிட்டேன், இப்போதான் அமேசான் பிரைம்ல பார்த்தேன்,
முதல் காதல் , முதல் முத்தம் , முதல் வேலை லிஸ்ட்டில் ஒரு
நல்ல டைரக்டரின் முதல் படம் என்பதையும்
சேர்த்துக்கலாம், எப்டின்னா கனவுகளோடு
சினி ஃபீல்டுக்கு வர்றவங்க தான்
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்கற படமா அது அமையு,ம்,முற்றிலும் புதுமுகங்களை வெச்சே இந்த கலக்கு
கலக்கி இருக்கார்னா இவர் கிட்டே முதல் நிலை ஹீரோக்கள் படம்
கிடைச்சா எப்டி எல்லாம் கூஸ்பம்ப்
சீன்ஸ் வைப்பார்னு கற்பனை பண்ணி பார்க்க முடியல
படத்தோட ஒன்
லைன் என்ன?
சென்னைக்கு பிழைப்பு தேடி புதுசா வரும் 4
பேர் ஒருவருக்கொருவர் அறிமுகம்
இல்லைன்னாலும் தெரிந்தோ தெரியாமலோ அவங்களுக்கு நிகழும்
சம்பவங்களால் ஒருவருக்கொருவர் தொடர்பு
உள்ளவங்களா ஆகிடறாங்க , பட்டர்ஃபிளை எஃபெக்ட்
உத்தி ,
இதை அப்படியே புரொடியூசர் கிட்டே சொன்னா
சான்ஸ் கொடுப்பாரா? இதோ
சுவராஸ்யமான திரைக்கதை ப்ரமோ...
கிரேசி மோகன்
+ கமல் காம்போ ல ஆள் மாறாட்டக்காமெடி செம ஃபேமஸ்
1990 களில் இந்த ஆள் மாறாட்டக்காமெடியை வெச்சு
ஏகப்பட்ட படங்கள் , காமெடி டிராமாக்கள் வலம்
வந்தன, பிறகு ஓவர் டோஸ் காரணமா அவை வழக்கொழிந்தன.
அந்த ஆள்
மாறாட்ட ஃபார்முலாவை சீரியஸ் டிராக்ல சொல்ல
வர்றார் இயக்குநர்
ஒரு சாதா ரவுடி
கேங் கிட்டே டம்மி பீஸ் ஒண்ணு புதுசா ரவுடி வேலைக்கு சேருது.
முதல் டாஸ்க்கே ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்டை கடத்துவதுதான், ஆள்
மாறாட்டம் ஆகி நகரின் பிரபல ரவுடியின் மகனைக்கடத்திடறார்,
ஆனது ஆகிப்போச்சு , இதை வெச்சு பிளாக்மெயில்
பண்ணி பணம் தேத்தலாம்னு அவங்க ட்ரை பண்றாங்க
இண்ட்டர்வ்யூ
அட்டெண்ட் பண்ற ஹீரோ
நெ1 அதுல பாஸ் ஆகி அன்னைக்கே ஜாயின்
பண்றார்.
சர்ட்டிஃபிகேட்ஸ் எல்லாம் அடுத்த நாள் சப்மிட் பண்ணனும்.
அப்போ இன்னொரு ஆள் மாறாட்டம் நடக்குது,
ஹீரோ நெ2 வை அடிக்கறதுக்குப்பதிலா ஹீரோ
நெ 1 ஐ அடிச்சுடறாங்க
, சர்ட்டிஃபிகேட்டும் மிஸ் ஆகுது
மேலே சொன்ன இந்த 2
ஆள் மாறாட்டத்தால என்னென்ன விளைவுகள் அவர்கள் வாழ்வில் சந்திச்சாங்க என்பது
ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை
இயக்குநரின் திரைக்கதை அறிவு பிரமிக்க வைக்குது.
முதல் 20 நிமிடங்களிலேயே படம்
வேற தளத்தில் செமயா எடுத்திருக்காங்க என்பது தெரிஞ்சிடுது
, முற்றிலும் புது முகங்களை வெச்சு ஒரு
சீட் எட்ஜ் த்ரில்லர் தர எல்லாம் ஒரு
கெத்து வேணும்
ஹீரோ நெ 1 ஆக வருபவர் சாக்லெட் பாய்
தோற்றம் . ஈசியாக மனதில் ப்திகிறார்.
இவர் ஒரு
கட்டத்தில் இயலாமை கோபம் கலந்த பார்வை பார்ப்பது எல்லாம் அழகு
. ஆக்சன் சீக்வன்ஸில் பிஜிஎம் உதவியால் நிற்கிறார்
ஹீரோ நெ
2 காதலியை ரேக்குவது , அவளது தோழியின் உதவி பெறுவது ,
காதலியை
டீஸ் பண்ணவனுக்கு ஆசிட் டெஸ்ட் வைப்பது
,
பஸ்சில் தெனாவெட்டாக ரவுடித்தனம் பண்ணுவது என சராசரி தமிழ்
சினிமா ஹீரோ பண்ணும் அனைத்து சாகசங்களையும்
அசாதாரணமா பண்றார்
ஹீரோயின் தோற்றம் ,
நடிப்பு இரண்டும் சுமார் ரகமே ,
இன்னும் பிரமாதமா பண்ணி இருக்கலாம்,
சில இடங்களில் செயற்கை தட்டுகிறது
சார்லி ஒரு
குணச்சித்திர ரோல் பண்ணி இருக்கார் ,
அருமையான நடிப்பு
மெயின் வில்லனாக
வருபவரை விட அவரது அடியாள் தோற்றம் ,
கெத்து எல்லாம் செம
முனீஷ்காந்த் கலக்கலான் காமெடி ரோல்; பண்ணி இருக்கார் அவரது பாடி லேங்க்வேஜ்
டயலாக் டெலிவரி எல்லாம் அமேசிங்
ஹீரோ நெ 2 வுக்கு
சித்தப்பாவாக வரும்
இன்ஸ்பெக்டர் ரோல் நல்ல
ட்விஸ்ட், நடிப்பும் கச்சிதம்
சபாஷ் இயக்குநர்
1
ஒரு சீன் எனில் ஒரு சிங்கிள் சீன்
கூட போர் என சொல்லவே முடியலை ,
அருமையான திரைக்கதை , பிரமாதமான எடிட்டிங் ,
அற்புதமான பிஜிஎம் என பின்னிப்பெடல் எடுக்கும்
டீம் ஒர்க் கலக்கல்
2
ஒரே நாளில் நடக்கும் கதை என முடிவெடுத்ததே வித்தியாசமான சிந்தனை தான்,
அதற்குத்திரைக்கதை அமைத்த விதம் அருமை
3
ஹீரோ நெ1 -ன் சர்ட்டிஃபிகேட்ஸ் என்ன ஆகுமோ
என பதை பதைக்கும் நேரம் அது ஷிஃப்ட் ஆன விதம் கை
தட்டல் பெறுகிறது
4
கூர்மையான வசனங்கள் படத்தின்
பெரிய பிளஸ்.
வழ வழா கொழ்கொழா வசனங்கள்
எல்லாம் ஒன்று கூட இல்லை
இந்தக்கதை முழுக்க எந்த
ஒரு கேரக்டர்க்கும் பெயர் குறிப்பிடப்படவில்லை ( விதிவிலக்கு அந்த சின்னப்பையன்)
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1
ஆள் மாறாட்டம் முக்கிய
அங்கம் வகிப்பதால் இரு ஆள் மாறாட்டமும் நம்பும்படி இல்லை
, செல்ஃபோனில் ஃபோட்டோ காட்ட வழி
இருக்கும்போது சிவப்பு சட்டை , கட்டம் போட்ட சட்டை அவனைத்
தூக்கனும் என்பதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனம்
2
ஒரு பிரைவேட் ஸ்கூலி ல் கார்
டிரைவர் நேராக
க்ளாஸ் ரூமில் வாசலில் நின்று மாணவனை அழைக்க முடியாது
, ஹெச் எம் ரூமில் வெயிட் பண்ண வைத்து பியூனை அனுப்பி
தான் வர வைப்பார்கள்
3
3
மாணவன் பெரிய இடத்துப்பையன்
என்பதால் ஃபோன் பண்ணி கன்ஃபர்ம்
பண்ணாமல் அனுப்புவது எப்படி?
4
பையனைக்கடத்திட்டதா ரவுடி
ஃபோன்ல சொன்னதும் அதை கன்ஃபர்ம் பண்ன வீடியோ
காலில் பையன் கிட்டே பேசனும்னு அப்பா சொல்லவே
இல்லையே?
நச் டயலாக்ஸ்
1 1 உள்ளூர்ல
வேலை செஞ்சா எவன் மதிக்கிறான்?
2 இங்கே
செய்யற வேலையை சிட்டில செஞ்சா 3 மடங்கு அதிக
சம்பளம் கிடைக்கும், எவ்ளோ செலவாகும், மிச்சம் ஆகும்னு யாரும்
பார்ப்பதில்லை, வெளியூர்ல வேலைன்னாலே கெத்துதான்
3 போலீஸ்ல மாட்டிக்காத
மாதிரி சரக்கு வேணும். அதாவது வாசம் தெரியக்கூடாது
அதுக்கு 4000 ரூபா
ஆகும்
போலீசுக்கே 3000 தான்
செலவு ஆகும்
4 யார்றா இவன்?
மண்ணுள்ளிப்பாம்புக்கு மஞ்சக்காமாலை வந்த மாதிரி இருக்கான்?
சி.பி ஃபைனல் கமெண்ட் –
விறுவிறுப்புக்கு நான் கேரண்டி ,
பார்க்காதவங்க நிச்சயம் பார்க்கவும் , விஜய்
ரசிகர்கள் மாஸ்டர் எப்படி இருக்கும்?
என்பதற்கான ட்ரெய்லராய் இதை பார்த்திடுங்க ரேட்டிங் 3.5 / 5 அமேசான்
பிரைம்ல இருக்கு
Directed by | Lokesh Kanagaraj |
---|---|
Produced by | S. R. Prakashbabu S. R. Prabhu Prabhu Venkatachalam Gopinath Thanga Prabaharan |
Screenplay by | Karthik Yogi Chandru A. Lokesh Kanagaraj |
Story by | Lokesh Kanagaraj |
Starring | Sundeep Kishan Sri Regina Cassandra |
Music by | Javed Riaz |
Cinematography | Selvakumar S. K. |
Edited by | Philomin Raj |
Production
company | |
Distributed by | Potential Studios |
Release date
|
|
Running time
| 137 minutes |
Country | India |
Language | Tamil |
0 comments:
Post a Comment