Thursday, July 23, 2020

மூடுபனி ( 1980) - சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் )



உலக  அளவில்  சைக்கோ க்ரைம்  த்ரில்லர்  படங்கள்  நிறைய  ஹிட் அடிச்சிருந்தாலும்  தமிழில்  மிகக்குறைவான  படங்களே  ஹிட் ஆனவை. எனக்கு நினைவில்  உள்ள  பட்டியல்   சிகப்பு ரோஜாக்கள் ,விடியும் வரை  காத்திரு, நூறாவது நாள் , ,மூடுபனி , புரியாத புதிர் , மன்மதன் ,காதல்  கொண்டேன்  ராட்சசன்  காளி தாஸ் 


10/10/1978 ல் ரிலீஸ்  ஆன சிகப்பு ரோஜாக்கள்  படத்துல  நத்திங் நத்திங்  நத்திங்  என ஒரே சொல்லை  பல முறை  சொல்லி திகில் ஊட்டிய  சம்பவம் நிகழ்ந்தது 7/9/1990  ல் ரிலிஸ்  ஆன புரியாத  புதிர்  படத்துல  ஐ  நோ ஐ நோ ஐ நோ   என  ரிப்பீட்டாக  37 டைம்  சொல்வது  ரகுவரனின் அசுர நடிப்பில்  வந்தது . அவர்  எத்தனை  டைம்  அப்படி சொல்றார்? என ஒரு போட்டியே வெச்சாங்க . 4/7/2003  ல்  ரிலீஸ் ஆன  செல்வராகவனின்  காதல்  கொண்டேன்  ல திவ்யா  திவ்யா திவ்யா  என ஹீரோ  பாடிக்கொண்டே  போடும் ஃபைட்  சீன்  பிரபலம்/ மேற்சொன்ன  டயலாக்கிற்கு இணையாக  மூடு பனி யில்  தயவு செஞ்சு  வேண்டாம்னு  மட்டும் சொல்லிடாத , ப்ளீஸ்  டோண்ட்  சே  நோ  என்ற ஒரே  டயலாக்கை 15  தடவை  ரிப்பீட்டாக  சொல்லும் சீன்   திகில்  நிறைந்தது

1978 ல்  ராஜேந்திர  குமார் எழுதிய  இதுவும்  ஒரு விடுதலை  தான்  எனும் க்ரைம்   நாவலையும்  1963 ல் ஜான் ஃப்லோஸ்  எழுதிய த  கலெக்டர்  எனும்  நாவலையும்  தழுவி  உரிய  க்ரெடிட்  டைட்டிலில்  கொடுத்து  எடுக்கப்பட்டது , இளையராஜாவின்  100  வது  படம், ஆல்ஃபர்ட் ஹிட்ச்சாக்கின் சைக்கோ ( 1960) படத்தின் சில  காட்சிகள்  இன்ஸ்பிரேஷன்லயும் கொஞ்சம்  எடுக்கப்பட்டது , மைக் மோகன்  அறிமுகம்   ( கோகிலா  கன்னடப்பதிப்பில் அறிமுகம், தமிழில் மூடுபனி யில் அறிமுகம் ) இதில் தான் . ஷோபா   வின் கடைசிப்படம்  . படம்  ரிலீஸ்  ஆகும் முன்பே  தற்கொலை  செய்ததாக  சொல்லப்பட்டாலும் ஷோபாவின் தாயார்  பாலுமகேந்திரா  மீது  குற்றம் சாட்டினார் , ஷோபா 17 வயதே  ஆன மைனர்  பெண்  என்பது  குறிப்பிடத்தக்கது 6/11/1980  தீபாவளி  ரிலீஸ் ஆக வெளிவந்து   200  நாட்கள்  ஓடுன   வெற்றிப்படம் . பாலு மகேந்திராவின்  3 வது  படம் . என் இனிய  பொன் நிலாவே  பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன  பாடல் 


ஹீரோவோட அம்மா , ஹீரோவோட அப்பாவால  ரொம்ப  கொடுமைப்படுத்தப்படறாங்க. அப்பா வீட்டில்  மனைவி , மகன்  இருவரையும் வெச்சுக்கிட்டே  உள்ளே  ரெட் லைட்  அலோ  பண்றாரு. இதனால   ஹீரோக்கு ரெட் லைட் ஏரியா  பொண்ணுங்கன்னாலே  வெறுப்பு.
இது  ஒரு பக்கம்  இருக்கட்டும்


ஹீரோயினோட  தோழி  வெளியூர்ல  இருந்து  இவளைப்பார்க்க  வர்றாரு, வந்த  இடத்தில்  ரெட் லைட்  ஏரியா ஆட்களால்  வசப்டுத்தப்பட்டு   தொழிலுக்கு  உட்படுத்தப்படுகிறாள் . வழக்கமான  ரெட் லைட்  ஏரியா  பொண்ணுனு நினைச்சு  ஹீரோ  இவரையும் போட்டுத்தள்ளிடறாரு


 ஹீரோ ஹீரோயினை  சந்திச்சதும் இவ்ளைக்கல்யாணம்  பண்ணிக்கிட்டா  தன் மன நோய்  சரி ஆகிடும்னு  நினைக்கறார், ப்ரப்போஸ்  பண்றாரு , ஆனா ஹீரோயின் ஒத்துக்கலை .தனக்கு ஆல்ரெடி  லவ்வர்  இருக்கறதா  சொல்றாரு . ஹீரோ ஹீரோயினைக்கடத்தி  ஒரு பங்களாவில் அடைச்சு  வைக்கறாரு . இதுக்குப்பின்  என்ன  நடந்தது  என்பதே  திரைக்கதை 


 ஹீரோவா  பிரதாப் போத்தன் . ஆள்  கொஞ்சம்  லூஸ்  மாதிரி தான் இருப்பார் , நான் சின்னப்பையனா இருக்கும்போது  இவர் நடிச்ச  மீண்டும்  ஒரு காதல்  கதை ல  இவரோட  பைத்திய  நடிப்பைக்கண்டு   எள்ளி நகையாடியது  உண்டு . ஆனா  இவர்  இயக்குநரா  சத்யராஜ்  நடிச்ச  ஜீவா , கமல்  நடிச்ச  வெற்றி விழா  இயக்கம்  கண்டு  மிரண்டுட்டேன் , பக்கா கமர்ஷியல்  டைரக்டர் . 

ஹீரோயினா   ஷோபா . இவரது  முகமே  ஒரு மென்சோக  கவிதை . கடைசி 20 நிமிடங்கள்  கலக்கல்  நடிப்பு 

 பானுச்சந்தர்  கெஸ்ட்  ரோல். மோகன்  கூட நல்லா  பண்ணி  இருந்தார் . காந்திமதி    ரெட் லைட்  ஏரியா  லீடரா  மிரட்டி இருந்தார். இசை  கலக்கல்  ரகம் . பெரும்பாலான  காட்சிகள்  ஊட்டி , குன்னூர் தான் , ஒளிப்பதிவு  பற்றி  சொல்லவே   வேணாம்  , செம 


 நச்  டயலாக்ஸ் 


1    எல்லாரும் என்னைப்பாராட்றாங்க , ஆனா என் மன்சாட்சி  பாராட்டும்படி   நான் எதுவும்  இன்னும்  செய்யலை 


2   உடல்ல  ஒரு வியாதி  வந்து  டாக்டரைப்பார்க்கறோம், அதே  மன வியாதி  வந்தா  டாக்டரைப்பார்க்க்றதில்லை , லூஸ்னு சொல்லிட்டா எனும் சமூக பயம் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1  நாயகி காணாம  போய் 3 நாட்கள் ஆச்சு . இந்த  தகவலை  நாயகியின் அப்பா நாயகியின் காதலனிடம்   தகவலா சொல்லும்போது  அவர்  அலட்டிக்கவே இல்லை  ஏன் முதல்லியே  சொல்லலை  எனவும் கேட்கலை . எங்கயாவது  காதலன்  காதலிக்கு  டெய்லி  ஃபோன் பண்ணாம  இருப்பானா?  நாயகி வீட்ல லேண்ட் லைன் ஃபோன் இருக்கு 


2   நாயகியின்  தோழி  ரெகுலரான  ரெட் லைட்    ஏரியா  பெண் இல்லை , காரில் ஏறீயதும் நாயகனிடம்  என்னைக்காப்பாத்துங்க நான் அப்படிப்பட்ட பெண்  இல்லை என சொல்லி இருக்கலாமே? 


3    கொலை  செய்யறோம்னு முன் ஏற்பாட்டுடன் ஒரு வீட்டுக்கு வரும்  ஹீரோ பைக்கை  அந்த  வீட்டு வாசலிலேயே  நிறுத்துவது ஏன்?  பக்கத்துல  எதுனா ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ் ல நிறுத்துன  பின் இங்கே  வந்தா  பாதுகாப்பு ஆச்சே? 

4  நாயகி  நாயகனை  இரும்பு  சம்ம்ட்டியால் தலைல ஓங்கி  2 போடு போட்டு  ஓடறா. இவரு ரத்தம்  வழிய  துரத்தறாரு. சாத்தியமே  இல்லை . கிறு கிறுனு வந்து  விழுவதுதான்  சரி 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட் - தமிழில்  வந்த  முக்கியமான  க்ரைம்  த்ரில்லர் இதனோட ஒரிஜினல்  ஆன  த கலெக்டர்   இதை  விட நல்லாருக்குமாம், நான் பார்க்கலை . ரேட்டிங்  3 / 5  



0 comments: