அழியாத கோலங்கள் ( 1979)– சினிமா விமர்சனம்
கமல் ரசிகர்களுக்கே அதிகம் தெரியாத 3 சினிமா செய்திகள் இருக்கு 1
Oka Radha Iddaru Krishnulu -(
ஹரே ராதா ஹரே கிருஷ்ணா )19/12/1986 அப்டினு ஒரு தெலுங்குப்படம் செம காமெடி கலக்கல் படம், தமிழிலும் டப் ஆச்சு. அடுத்ததா சாணக்கியன் ( 1/9/1989)அப்டினு ஒரு ரிவஞ்ச் த்ரில்லர் மலையாளப்படம்,, இதுல கமல் அவ்ளோ அழகா இருப்பார் , மேற் சொன்ன 2 படங்களிலுமே ஹீரோ டூயல் (
சாணக்யா வில் 2 கெட்டப் )ரோல் வெளுத்து வாங்கி இருப்பார் , பார்க்காதவங்க பார்த்திடுங்க . 3 வதா பாலுமகேந்திரா இயக்கிய அழியாத கோலங்கள் அப்டினு கல்ட் கிளாசிக் மூவில கெஸ்ட் ரோல்ல வர்றார் , டைட்டிலிலோ, போஸ்டர் டிசைனிலோ கமலைக்காணோம், என்ன உள்ளடி வேலை நடந்ததோ தெரில
ஒவ்வொரு நபருக்கும் பால்ய கால அனுபவங்கள் மறக்க முடியாதவை. நாம செஞ்ச குறும்புகள், சுட்டித்தனங்கள், நட்பு , காதல் , இன்ஃபாக்சுவேஷன் எல்லாமே இந்த டீன் ஏஜ் ல தான் கிடைக்கும். அதுக்குப்பின் அனுபவம் வந்த பின் மேரேஜ் ஆனபின் சம்பாதிக்கும் வாழ்க்கை தொடங்கிய பின் மெஷின் ஆகிடுவோம். அறியாமை தான் இயற்கை கொடுத்த வரம், அந்த அறியாத பருவத்தில் 3 நண்பர்கள் செய்யும் விடலைத்தனாமான கலாட்டாக்கள் தான் இந்த படம்
அந்த கண்ணாடி போட்ட பையன் சுட்டித்தனமான நடிப்பில் அமோக வாக்குகள் பெற்று முன்னணியில் நிற்கிறான். அவனது குறும்புப்பார்வை , பாடி லேங்க்வேஜ் எல்லாமே அற்புதம்
இந்த 3 பசங்களும் டீச்சரை ஹேண்டில் பண்ற விதம் ரசிக்க வைத்தது. நான் சென்னிம்லை ல கொமரப்பா செங்குந்தர்ல படிச்சப்ப பிசிக்ஸ் டீச்சர் தேவி ( இப்போ ஹெ எம் ) வரலாறி மிஸ் வனசுதா , சயின்ஸ் மிஸ் செந்தாமரைச்செல்வி இவங்க ஞாபகம் வந்தது
பொதுவா டீச்சர்ங்க எல்லாருமே மாணவர்களை ஒரே விதமான கோணத்தில் தான் அணுகுவாங்க , நல்லாப்படிக்கற பையன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும். குறும்பு பண்ற மாணவர்களை திட்டினாலும் உள்ளூர ரசிப்பாங்க . லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்சை டீச்சர்களுக்குப்பிடிக்காது .
ஆனா மாணவர்கள் எல்லாருக்கும் டீச்சர் என்றால் ஒரே விதமான பார்வை தான்
இந்தக்கதைல சபல புத்திக்காரரா வெண்ணிற ஆடை மூர்த்தி நல்லா பண்ணி இருக்கார்
இளையராஜா இல்லாமயே ஒரு செம ஹிட் பாட்டு இருக்கு . பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் இதம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . பின்னணி இசை இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.
சபாஷ் டைரக்டர்
1 மூவரில் ஒருவர் தன் முறைப்பெண்ணுடன் க்ளோசாகப்பழகுவதைக்கண்டு மற்ற இருவர் பொறாமைப்படும் காட்சிகள்
2 அந்த மாதிரிப்பெண்ணை தேடிச்செல்லும் மூவரும் வீட்டுக்கு வந்ததும் என்னப்பா வேணும்? என கேட்க கொஞ்சம் தண்ணி குடுங்கக்கா எனக்கேட்டு எஸ் ஆவது கலக்கலான காட்சி , அதைத்தொடர்ந்து வரும் பலூன் காட்சிகள்
3 நீச்சல் பழகாத பையனை தனியே நீர் நிலைக்கு நண்பர்களுடன் அனுப்பாக்கூடாது என்ற மறைமுகமான நீதியை உணர்த்தும் காட்சி
இந்தப்படம் ரிலீஸ் ஆன கால கட்டத்தில் இது ஒரு மாறுபட்ட படைப்பு
Summer of 42 ( 18/4/1971 ) என்ற படத்தின் இன்ஸ்பிரெசன் தான் இது
27/10/2000 ல ரிலீஸ் ஆன இத்தாலி நாடுப்படமான
Malèna கிட்டத்தட்ட இந்தக்கதை தான்
இயக்குநர் ஒரு பேட்டில இந்தப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேசன்ல எடுத்ததுனு சொல்லி இருக்கார்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 கிராமங்களில் சின்ன வயசுலயே நீச்சல் கத்துக்கொடுத்துடுவாங்க . அப்படி இருக்கும்போது ஒரு பையன் நீச்சலே தெரியாதவனாக இருப்பது எப்படி?கூட நெருக்கமாகப்பழகும் மற்ற சிறுவர்கள் நீச்சல் அடிக்கும்போது ஒரு ஆர்வத்தில் இவனும் கத்து இருக்கனுமே? இதே நகரக்கதைன்னா இந்த கேள்வி வராது , ஏன்னா சிட்டில 75% பேருக்கு நீச்சல் தெரியாது
2 வெ . ஆ மூர்த்தி அந்த மாதிரி பெண்ணோட ஓப்பன் ப்ளேஸ் ல காட்டுக்குள்ளே அப்டி இப்டி இருப்பது போல காட்சி அமைப்பு , அதை பசங்க ஒளிந்திருந்து பார்க்கறாங்க , இன்னொரு காட்சில அந்தப்பொண்ணு கஸ்டமரை தன் வீட்டுக்கே வர வைக்குது . ஊர் அறிஞ்ச ரகசியம் இது . பாதுகாப்பா அவர் வீட்டுக்கே போய் இருக்கலாமே?
சி.பி ஃபைனல் கமெண்ட் - 140 நிமிடங்கள் ஓடக்கூடிய சின்னப்படம் தான் , பார்க்காதவங்க பார்த்திடுங்க , யூ ட்யூப் லயே கிடைக்குது . ரேட்டிங் 3 / 5
0 comments:
Post a Comment