மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு அப்டினு அறிஞர் அண்ணா சொன்ன சூழல் வேற, நம்ம ஆளுங்க அதுக்கு அர்த்தம் கற்பிச்சது வேற . மற்ற கட்சிகளில் இருந்து நம்ம கட்சிக்கு வரும் ஆட்களை சேர்த்துக்கலாம், தப்பில்லை என்பதுதான் அவர் சொன்ன அர்த்தம், நம்மாளுங்க புரிஞ்சுக்கிட்டது அடுத்தவன் சம்சாரத்தை ஆட்டையைப்போடலாம் தப்பில்லை என நினைச்சுக்கிட்டாங்க , பிறன் மனை நோக்கா பேராண்மை வேணும்னு வள்ளுவர் சொன்னதெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரில போல
பாலைவன ஒட்டகம் கூடாரத்தில் என் தலையை மட்டும் நுழைச்சுக்கறேன்னு கொஞ்சூண்டு இடம் கேட்டுச்சாம், அப்றம் முழுக்க முழுக்க உள்ளே வந்து கூடாரத்தையே ஆக்ரமிச்சுடுச்சாம்.
மேலே சொன்ன இந்த 2 விஷயங்கள் தான் கதைக்கான KNOT.
படத்தோட கதை என்ன? ஹீரோ ஒரு விளம்பர பட டைரக்டர். ஒரு வருசமா வேலை வாய்ப்பே இல்லை . இவர் திறமை தெரிஞ்சவங்க கூட ஒரு காண்ட்ராக்ட்ல சைன் பண்ணச்சொல்லும்போது முதல் 3 மாசம் சம்பளம் இல்லாம வேலை செய்யனும்னு கண்டிஷன் போடறாங்க .இது ஹீரோவுக்கு பிடிக்கலை . இவருக்கு ஒரு மனைவி , ஒரு மகன் உண்டு . பெரிய பங்களாவில் ( அபார்ட்மெண்ட்ல ) குடி இருக்காங்க
கைல இருக்கற சேமிப்பெல்லாம் கரைய ஆரம்பிச்சதும் வீட்டைக்காலி பண்ணிட்டு வேற ஒரு சிறிய வீட்டுக்குப்போறாங்க . வேலைக்காரியையும் நிறுத்தியாச்சு . காலி பண்ணிட்டுப்போகும்போது பழைய வீட்டு சாவி ஒரு செட் இவர் கிட்டே இருக்கு
அவங்க குடி இருந்த பழைய வீட்டுக்கு இன்னொரு ஃபேமிலி வருது. அவங்களும் இவங்களைப்போலவே 3 பேரு . கணவன், மனைவி , மகள் .
பழைய வீட்டில் குடி வந்த ஆள் கூட ஹீரோ வலுவந்தமா ஒரு நட்பை ஏற்படுத்திக்கறாரு . ஒற்றுமையா இருந்த அந்த குடும்பத்தை திட்டம் போட்டு கலைக்கறாரு . இவரோட சதித்திட்டம் நிறைவேறுச்சா? இவரோட பிளான் தெரிஞ்சுக்கிட்ட இவரோட மனைவி என்ன பண்ணாங்க, இத எல்லாம் நெட் ஃபிளிக்சில் காண்க
ஹீரோ நடிப்பு மிக யதார்த்தம். வேலை இல்லாம , கைல காசில்லாம மனைவி , மகன், வேலைக்காரி யாருமே மதிக்கறதில்லை என்ற வேதனையை பிரமாதமா முகத்தில் காட்டி இருக்காரு .கிரிமினல் வேலைகள் செய்யும்போது இவர் முகம் வில்லன் முகம் போல் ஆகிடுது
இவரோட மனைவியின் நடிப்பும் கச்சிதம். மகன் சில சீன்களே வந்தாலும் நல்லா பண்ணி இருக்காரு
இன்னொரு ஜோடில கணவன் சத்யராஜ் மாதிரி ஆஜானுபாகவமான தோற்றம். தான் ஏமாற்ரப்படுகிறோம் என்பது தெரிந்ததும் ஹீரோவிடம் சீறுவது , தன் மனைவியிடம் பம்முவது அருமை
இவரோட மனைவி நடிப்பு சூமார் ரகம் தான் , மகள் அழகு
இந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி கம் தோட்டகாரனாக வருபவர் வில்லனுக்கே வில்லனாக அமைந்து பிளாக் மெயில் பண்ணும் காட்சிகள் செம பரப்ரப்பு
சபாஷ் டைரக்டர்
1 மொத்தம் ஏழே ஏழு முக்கிய கேரக்டர்களை வைத்து சுவராஸ்யமான திரைக்கதை அமைத்த விதம்
2 நான் சொன்ன விஷயம் மனைவிக்கு தெரிய வேண்டாம் என ஹீரோ நண்பரிடம் சொல்லி பின் நண்பரின் மனைவியை தனியே சந்தித்து அவரைக்குழப்பும் காட்சி ஃபெண்டாஸ்டிக்
3 நண்பனிடம் செல் ஃபோனை வாங்கி அவர் ஃபோனில் இருந்து தனக்கு மெசேஜ் அனுப்பி அதை வைத்து அவருக்கே மனைவியிடம் கெட்ட பேர் எடுத்துக்கொடுப்பதும் வில்லனிசம்
4 வில்லனுக்கே வில்லனாக மாறும் செக்யூரிட்டி வைக்கும் டிமாண்ட்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவை . பணம் அவர் டிமாண்ட் அல்ல..
5 க்ளைமாக்சில் ஹீரோவை போலீசில் ஆதாரத்துடன் மாட்டி வைக்கப்போறேன் என மிரட்டும் மனைவியிடம் ஹீரோ பேசும் டயலாக் வெல்டன்
நச் டயலாக்ஸ்
1 இங்கே யாருமே தனிமைல இல்லை. எதா இருந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிச்சுதான் ஆகனும்
2 எந்த ஒரு விஷயத்திலும் நாம் எடுத்து வைக்கும் முதல் அடி ரொம்ப சிரமமாத்தான் இருக்கும்
ம்க்கும், எனக்கு மட்டும் 2 வது, 3 வது அடி எல்லாமே அப்டித்தான் இருக்கு
3 ஒருத்தனை எப்படி அங்கீகரிக்கனும், பாராட்டனும் அப்டினு இந்த சமூகத்துக்கு தெரியறதில்லை
4 குடும்பம் , வெற்றி இந்த இரண்டில் ஒன்று தான் உங்க சாய்ஸ் அப்டின்னா நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க?
நிச்சயம் வெற்றியைத்தான். ஏன்னா தோல்வி அடைஞ்சவனை யாருமே விரும்பறதில்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 பொதுவா ஒரு வீட்டுக்கு புதுசா குடி வர்றவங்க புது போட்டு போட்டுக்குவாங்க , பழைய பூட்டை யூஸ் பண்ண மாட்டாங்க
2 ஹீரோ அந்த புது ஆள் கிட்டே அவன் டீட்டெய்ல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி அவங்க குடும்ப ஃபோட்டோக்களை ஃபோன்ல பார்க்கறார். அதை அவன் கேட்கும்போது இவர் தர்லை . அவனுக்கு ஏன் டவுட் வர்லை? ஃபோன்ல ஏன் ஃபோட்டோ காட்டலை?னு
3 விஷம் கலந்த ஸ்ப்ரே வை நண்பனின் மனைவி யை உபயோகிக்க வைத்து நண்பனை சீரியஸ் நிலைக்கு கொண்டு செல்லும் ஹீரோ அவன் உண்ர்வு வருவது தெரிந்ததும் கழுத்தை அல்லது முகத்த அழுத்தி கொலை செய்ய நினைப்பது ஏன்? போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்ல தெரிஞ்சுடாதா?அதுக்கு பேசாம அந்த ஸ்ப்ரேவையே மறுபடி லைட்டா ஒரு காட்டு காட்டி இருக்கலாமே?
4 ஹீரோ தான் செய்யும் சதி வேலைகளை தன் மனைவி பார்க்கும்படி அசால்ட்டா செய்து சாட்சியை ஏன் உண்டாக்கிக்கறார்?
5 வில்லனுக்கே வில்லனாகும் செக்யூரிட்டி எந்த தைரியத்தில் ஓப்பனாக மிரட்டுகிறார்? முகம் காட்டாமல் மிரட்னாதானே பாதுகாப்பு ?
6 ஒரு ஃபோன் பண்ணிக்கறேன் என நண்பனிடம் ஃபோனை வாங்கும் ஹீரோ மெசேஜ் டைப் பண்ணிட்டு இருக்கார் , நண்பனுக்கு ஏன் டவுட் வர்லை?
5 தன் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஹீரோ வீட்டுக்கு நாமும் போய்ப்பார்க்கலாமே? என அந்த ஜோடி ஏன் கடைசி வரை நினைக்கலை ?
சி.பி. ஃபைனல் கமெண்ட் = பர பர , விறு விறு காட்சிகளை மட்டும் விரும்புவர்களுக்கு இந்தப்படம் பிடிக்க வாய்ப்பு கம்மி, ஆனா நிதானமா செல்லும் திரைக்கதையா இருந்தாலும் பரவாயில்லை , நல்ல சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர்னா ஓக்கே என நினைப்பவர்கள் அவசியம் பார்க்கலாம்
நெட் ஃபிளிக்சில் கிடைக்குது . ரேட்டிங் 3.25 / 5
0 comments:
Post a Comment