Saturday, June 27, 2020

BULBBUL ( HINDI)-சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)




வாலி படத்துல  வர்ற  மாதிரி  வில்லன் ட்வின்ஸ். ஒரு ஆள்  நார்மல் , இன்னொரு ஆள் மனநிலை பாதிக்கப்பட்ட வர். இது போக  இன்னொரு  தம்பி இருக்கு. இந்தத்தம்பிக்கு 10 வயசுக்குள்ள தான்  இருக்கும்., 30 வயசு ஆன முதல் அண்ணனான  வில்லனுக்கு 10 வயசு சிறுமி கூட பாலியல் விவாகம் நடக்குது. கதை நடக்கும் காலகட்டம் 1880 - 1900 .


 அந்த  சிறுமிக்கு   தன் வயதை ஒத்த    சிறுவனான 3 வது தம்பி தான் கணவன்னு நினைச்சுக்குது. அவன் கூட சகஜமா பேசுது , பழகுது. நாட்கள் நகருது. பருவ வயது வந்ததும் வில்லனுக்கு பொறாமை . தன் தம்பி கூட  க்ளோசா பழகறாளே அப்டினு.. ஆனா தப்பு எதுவும் நடக்கலை . ஹீரோ  அண்ணி  கிட்டே  மரியாதையா தான் பழகறார்.



 ஆனாலும் பொறாமைல வில்லன் ஹீரோவை படிக்க வைக்க வேணும்னே லண்டன் அனுப்பிடறாரு .பின் தன் மனைவியை  சித்ரவதை பண்றாரு, அவரோட  இன்னொரு தம்பி ( ட்வின்ஸ்)   பாலியல்  வன்முறையை நிகழ்த்திடராரு  தன் அண்ணி எனவும் பாராமல் 


 இது  ஒரு பக்கம்  இருக்கட்டும் ,  இன்னொரு கதை , அந்த  ஊர்ல  வரிசையா  கொலைகள் நடக்குது.  கணவனால் சித்ரவதை செய்யப்பட்ட , கணவனின் தம்பியால்  பலாத்காரம் செய்யப்பட்ட  நாயகிக்கு  மருத்துவ சிகிச்சை அளிக்க  ஒரு டாக்டர் வர்றார். அந்த  கொடுமைகளை எல்லாம்  பார்த்துட்டு  அவர் தான்  கொலைகளை  செய்யறார்னு ஊர் மக்கள்  நினைக்கறாங்க, ஏன்னா  கொலை செய்யப்படுவது எல்லாமே  பெண்களை  கொடுமைப்படுத்துபவர்கள்தான் , வில்லன்களான  2  ட்வின்ஸ் அண்ணன்கள்  போக வேற  சில கொடுமைக்காரர்களும்  கொலை செய்யப்படறாங்க 


 நாயகன்  ரிட்டர்ன் வந்து  கொலைகாரனை கண்டுபிடிப்பதுதான்  கதை 


 வில்லனா டூயல் ரோலில்  பிரமாதமா  பண்ணி  இருக்கார் , 

நாயகன் சாத்வீகமான  முகம்

 டாக்டராக  வருபவர்  கச்சிதமான நடிப்பு 


 ஒளிப்பதிவு  , ஆர்ட் டைரக்சன்  இரண்டும்  பிரமாதம் ., குறிப்பாக  காட்டில்  தீ வைக்கப்பட்டு  ஜூவாலை  விட்டு  எரியும் காட்சி கலக்கல் ரகம், இசை  ஓக்கே ரகம் , பிஜிஎம்மில் இன்னும் கலக்கி இருக்கலாம்


 நாயகி சித்திரவதைப்படும்  காட்சி , வன்புனர்வுக்காட்சி  கொடூரம். ஆடியன்சுக்கு அந்த  வலியை வேதனையை நன்கு கடத்தி  இருக்கிறார் இயக்குநர்


நச்   வசனங்கள்


1    பெரிய இடங்கள்ல , பெரிய  பங்களாக்கள்ல  பெரிய  பெரிய  ரக்சியங்கள்  மறைஞ்சு இருக்கும் 


2   என்னம்மா  அது?

 சாரி  , அது பர்சனல்


ஒரு மனைவிக்கு தன் கணவன் சம்பந்தப்பட்ட  விஷயங்கள் தான்  பர்சனலா  இருக்க முடியும், கணவன்  கிட்டேயே மறைக்கிற அளவுக்கு  பர்சனல்னா..


நாயகிக்கு  இழைக்கப்பட்ட  கொடுமைகளுக்குப்பின்   படம் வேகம் எடுக்கிறது, அதுவரை  கொஞ்சம் ஸ்லோ தான்

 அனைவருக்கும் இந்தப்படம் ..... பிடிக்காது

 ரேட்டிங்   3 / 5 

Bulbbul movie cast: Tripti Dimri, Avinash Tiwary, Rahul Bose, Parambrata Chattopadhyay, Paoli Dam, Ruchi Mahajan, Varun Paras Buddhadev
Bulbbul movie director: Anvita Dutt

0 comments: