Monday, June 08, 2020

AWE (தெலுங்கு) - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )2018



நான் ஈ  ஹீரோ நானி  நம்ம ஊர் கமல், பிரகாஷ்ராஜ் மாதிரி நல்ல படங்களை , வித்தியாசமான திரைக்கதைகளை படம் எடுக்கும  தயாரிப்பாளராக மாறி வருவது மகிழ்ச்சி , போன வருடம்  ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் கலக்கிய இப்படம் இப்போ நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது. ,மாறுபட்ட  படங்களை விரும்புகிற , மாமூல் மசாலாக்களை விரும்பாத ஏ செண்ட்டர்  ஆடியன்சுக்கான படம் 


ஒரு ரெஸ்டாரண்ட்ல நாயகி  ஈஷா  அம்மா , அப்பாவோட சாப்பிட வந்திருக்கு, அடிக்கடி ஃபோன்ல மெசேஜ் பண்றதைப்பார்த்து அப்பாவுக்கு டவுட் வந்து “என்னம்மா? உன் ஆளா?”னு சர்வ சாதாரணமா கேட்க அதிர்ச்சி ஆகும் நாயகி அது வந்து... என இழுக்க சில பல சமாளிப்புகளுக்குப்பிறகு அம்மா அப்பா இருவரும் தங்கள் மகளின் காதலன் வருகைக்கு தயார் ஆகறாங்க . வந்தது ஒரு பெண். நித்யா மேனன் இருவருக்கும் அதிர்ச்சி . தன் பால் ஈர்ப்பு கொண்டவரா தங்கள் மகள் என்பது அவங்களுக்கே அப்போதான் தெரியும். இது ஒரு சிறுகதை மாதிரி சொல்லப்பட்டிருக்கு 



சமையல் கலை நிபுணரான ஹீரோ ஒரு ஹோட்டல்ல இண்ட்டர்வ்யூக்கு வர்றார், அங்கே ஆன் த ஸ்பாட் சில சமையலகளை செய்து காட்டனும் . அலாவுதீனும் அற்புத விளக்கும் மாதிரி அங்கே ஒரு தொட்டியில் இருக்கும் அதிசய பேசும் மீன் அவருக்கு உதவி செய்யுது . கிட்டத்தட்ட பெண்கள் ஃபேஸ்புக்கில் போடும் சமையல் குறிப்புப்பதிவு மாதிரி இருந்தாலும் சுவராஸ்யமான எப்பிசோடு  தான் இந்த  போர்சன் 


 கடைசி காலத்தில் தன் பெற்றோர் அருகில் இல்லாததைக்குறையாக நினைக்கும் ஒருவர் டைம் மிஷின் கண்டுபிடித்து  ஃபிளாஸ்பேக்கில் போய் அந்தக்கால கட்டத்தில்  இருக்கும் பெற்றோர் மரணத்தை தடுக்க நினைக்கிறார்.இவருக்கு ஒரு இன்ஸ்டண்ட் காதல் வருது. கூடவே ஒரு திருப்பம் இவர்  10 வருடங்கள் கழித்து எப்படி இருப்பாரோ அவர் இப்பவே வந்து இவரை சந்திக்கிறார்


  தன் பிறந்த நாள் அன்று தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தோடு இருக்கும் நாயகி காஜல் அகர்வால் கையில் துப்பாக்கியோடு வர்றார்



தன் திறமை மீது அளவு கடந்த கர்வம் கொண்ட மேஜிக் கலைஞர் ஒருவரை  இன்னொரு மாஸ்டர் மேஜிக் கலைஞர் தன் திறமையால் அவரை அடக்குகிறார். இதைப்பார்த்து எள்ளிநகையாடும் இன்னொரு மேஜிக் சிறுமி 



கொள்ளையனான தன் காதலனுக்கு அந்த கொள்ளைக்கு உதவியாக இருக்கப்போகும் ஒருத்தி  சந்திக்கும் திகிலான சம்பவங்கள் 

 மேலே சொன்ன 6  வெவ்வெறு கதா பாத்திரங்கள் , சம்பவங்கள் எல்லாமே ஒரே ரெஸ்ட்டாரண்ட்டில் நிகழ்கிறது என்பது இடைவேளை ட்விஸ்ட். இந்த எல்லா கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் இணைக்கும்   புள்ளி என்ன? எனும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்   என்ன? அது சஸ்பென்ஸ்


புதுமுக இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கிய முதல் சினிமா இது. இவர் பல குறும்படங்களை  எடுத்தவர் 

 நம்ம ஊர்லயும் இதுபோல 5 அல்லது 6 குறும்படங்களை தொகுத்து ஒரு படமாக எடுக்கும் முயற்சி நடந்தது , ஆனால் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டே பழக்கப்பட்ட தமிழர்கள் இது போல டிஃபன் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவில்லை . ஆனால்  6 குறும்படங்களுக்கும் ஒரு கனெக்சன் இருந்தால் ஒரே படம் தான் இது என ஏமாற்றும் வித்தை அறிந்தால் ஜெயிக்கலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்


சபாஷ் இயக்குநர் 


1   ஃபயர் ஜோடிகளான நித்யாமேனன், ஈஷா இருவரும் அம்மா   ரோகினி முன் பம்மும் காட்சிகள் அபாரம் , மொத்த படத்திலும் மிக ரசிக்கப்பட்டது இந்த ஃபேமிலி டிராமாவே.  அந்த அதிர்ச்சி கூட நகைச்சுவை பின்னணியில் சொல்லப்பட்டதால் எடுபட்டது 


2   அந்த சமையல் செய்யும் எபிசோட்   குழந்தைகளைக்கவரும் வண்ணம் பேசும் மீன் , பேசும் மரம் என மேஜிக்கல் ரியலிசமாக எடுக்கப்பட்டது பிளஸ். மீன் உயிருக்கு போராடும்போது ஆஸ்துமா பிராப்ளத்தில் தான் மூச்சுவிடப்போராடியது நினைவுக்கு வருவ்து அசத்தல் காட்சி 


3  தேவதர்ஷினியின் மேக்கப் கலக்கல் , அவர் 10 வருடங்களுக்குப்பிந்தைய டைம் ட்ராவலர் நாயகனின் பாத்திரம் என்ற கற்பனை அற்புதம்

4  சின்னப்பெண்ணின்   மேஜிக் முயற்சிகள் அழகு 


திரைக்கதையில் சில ஆலோசனைகள் , சந்தேகங்கள் 


1 சிறுகதைகள் மாதிரி ஒவ்வொரு கேரக்டருக்கும் கதை வடிவமைத்து விட்டு  காஜல் அகர்வாலின் காதல் தோல்வி பற்றி எதுவும் சொல்லாதது ஏமாற்றம் , ஆனால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் ஒரு சால்ஜாப் வைத்திருந்தாலும் இன்னும் விளக்கமாக அவர் போர்சன் காட்டி இருக்கலாம்

2  மேஜிக் நிபுணரான  ஒருவர் இன்னொரு ,மேஜிக் நிபுண்ரின் மாயாஜால வித்தைகளைக்கண்டு பயப்படுவது எப்படி?சாமான்யனுக்கு தெரியாது அது கற்பனை என , இவருக்குமா தெரியாது?

3  இந்தக்கதையில்  ஒரு போலீஸ் கேரக்டர் இல்லாதது  பெரும் குறை 

 நச் வசனங்கள்


1   மேடம், பாஸ்வோர்டு?

 நோ பாஸ்வோர்டு

 ஆனா பாஸ்வோர்டு கேட்குதே?

 ஐ மீன் நோ பாஸ்வோர்டு ஈஸ் த பாஸ்வோர்டு


2   ஆஸ்துமா பேஷண்ட்னு மேடம்க்கு தெரிஞ்சுடாம பார்த்துக்க , ஏனா சமையல் கலைஞருக்கு ஆஸ்துமான்னா வேலை கிடைக்காது 


3      I AM THE  RAPIST

PLS  CORRECT YOUR SPACE

WHAT?

PLS  CORRECT   I AM THERAPIST


4  I AM  FISH   YOU ARE SELFISH  

அனைத்தும் கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜாலங்கள் 




சி.பி கமெண்ட் - இது அனைத்துத்தரப்பினருக்குமான ஜனரஞ்சகமான படம் அல்ல. மாறுபட்ட படங்களை விரும்பிப்பார்ப்பவருக்கான படம் , பெண்களும் பார்க்கலாம் . நீட்டான படம் ., ரேட்டிங் 3.25 / 5 , நெட் ஃபிளிக்சில் கிடைக்குது

0 comments: