Tuesday, June 30, 2020

Kavaludaari ( KANNADAM - சினிமா விமர்சனம் ( இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர்)



ஹீரோ டிராஃபிக் டிபார்ட்மெண்ட்ல  சப் இன்ஸ்பெக்டரா இருக்கார், பல டைம் க்ரைம் பிராஞ்ச்க்கு மாற  ட்ரை பண்றாரு , ஆனா நடக்கலை .ஒரு நாள்   இவரு ட்யூட்டி பார்த்துட்டு இருக்கும்போது  சாலை  விரிவாக்கப்பணில    ஒரு இடத்துல  குழி தோண்டறாங்க , அங்கே  3  எலும்புக்கூடுகள்  கிடைக்குது. இதுல பெரிய  மர்மம் இருக்குனு ஹீரோ நினைக்கறாரு. ஆனா டிபார்ட்மெண்ட் ல ஹையர் ஆஃபீசர்  பெருசா அதை கண்டுக்கலை , அலட்டிக்கலை . ரிப்போர்ட்  வருது . 40 வருடங்களுக்கு முன் காணாமப்போன  ஆர்க்கியாலஜி  டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த  ஒருவரும் அவர் மனைவி , குழந்தை  இவங்க 3 பேரோட  எலும்புகள்  தான் அவை 


 ஹீரோ ஆர்வம்  மேலிட  இந்த கேசை டீல் பண்ண  நினைக்கறாரு , ஆனா  ஹையர் ஆஃபிசர்   இது  க்ரைம் பிராஞ்ச்  பார்த்துக்குவாங்க , நீ உன் வேலையை மட்டும் பாருங்கறாரு   ஆனா  ஹீரோ அதைக்கேட்காம  செல்ஃப் இண்ட்ரெஸ்ட் எடுத்து அந்த  கேசை  துப்பு துலக்கறாரு , பல  அதிர்ச்சிகரமான  உண்மைகள்  வெளி வருது 

மிகக்குறைந்த  பட்ஜெட்ல எடுக்கப்பட்ட  கன்னட படம் 12/4/2019ல்  ரிலீஸ் ஆச்சு, இந்தப்படம்  செம  ஹிட் ஆச்சு . இதை தெலுங்கு , தமிழ்ல ரீமேக் பண்னாங்க , சிபி ராஜ் நடிச்ச கபடதாரி இந்தப்பட  ரீமேக் தான். மலையாளம், ஹிந்தில யும் ரீமேக்கப்படுது. முக்கியமான  காரணம்  திரைக்கதை  பக்காவா அமைஞ்சதுதான்


ஹீரோவா  ரிஷி . நம்மா ஊர் சேரன்  மாதிரி மிக யதார்த்தமான   நடிப்பு . ஓவர் பில்டப்போ ஓவர் ஆக்டிங்க்கோ இல்லை  நாயகி  ஹோம்லி லுக் . லவ் , டூயட் , மொக்கை காமெடி எல்லாம் எதுவும்  கிடையாது


 டீசண்ட்டான  க்ரைம் த்ரில்லர் , அமேசான் பிரைமில்  கிடைக்குது


  சபாஷ் டைரக்டர் 

1   40 வருடங்களுக்கு  முன்  அந்த  கேசை  டீல் பண்ணுன  போலீஸ் ஆஃபீசரை  அணுகுவதும்  அவரை தனக்கு உதவ சம்மதிக்க வைக்கவும்  ஹீரோ எடுக்கும் முயற்சிகள் , தந்திரங்கள்   குட் 


2  நக்கீரன் , ஜூ வி மாதிரி இன்வெஸ்டிகேசன் ஜர்னலிச  மேகசின் ரிப்போர்ட்டர்  அவர்  மகள்  இவர்களுடனான  பாண்டிங்  கதைக்கு  ஸ்பீடு கொடுத்தது 

3    கொலையாளி யார் என்பதை  க்ளைமாக்ஸ்க்கு 40   நிமிடங்கள்  முன்பே  காண்பிச்ட்டாலும்  த்ரில்  குறையாம  திரைக்கதையை அமைச்சது

4  ஹீரோ   கேஸ் சம்பந்தமான  ஃபைலை படிக்கும்போது  ரூமில் 50 பேரைக்காட்டுவதும்  ஒவ்வொரு ஆள் பற்றி தெரிஞ்ச  பின் அவங்க் அந்த ரூமை  விட்டு வெளியேறுவதும்    ஹீரோவின் கற்பனையில்  நமக்கு  ஒரு தெளிவைக்காட்ட  பயன்படுத்தப்பட்ட  அந்த  யுக்தி அபாரம் 


நச்  டயலாக்ஸ்


1  ஒரு கொலைக்கேஸ்ல  இறங்கும்போது  முதல் வேலையா ஏதாவது திருடு  போய் இருக்கா?னுசெக் பண்ணனும்


2   இன்ன தேதி  , இன்ன நேரம்  அப்டினு இறப்பு ந்டைம் குறிச்சு வெச்சு யாருக்கும் வராது 


3   எமர்ஜென்சி  கால கட்டத்தில் தான் ( 1975)   ரவுடிங்க , பொறுக்கிங்க   அரசியலுக்கு வந்தது


4  நாம  ரியாலிட்டியை விட்டு  ரொம்ப தூரம் வந்துட்டோம்னா   தீர்வுகள்  நம்ம கையை விட்டுப்போகுதுனு அர்த்தம்


5  காத்திருத்தல் , பொறுமை  இந்த  இரண்டுமே   போலீஸ்  லைஃப்ல முக்கியமானது


6  சிங்கத்தை நாம நெருங்கும்போதே  அதுக்கு நம்ம  வாசனை  காட்டிக்கொடுத்துடும்


7   பெரிய   பெரிய  கனவுகளோட  இருக்கறவங்களை  நாம  தவறா  வழி நடத்துவது  ஈசி 


8  எப்பவுமே  ஏழைகள்  பெரிய கனவுகளோட தான்  காத்துக்கிட்டு இருப்பாங்க்ச்


9 ரொம்ப   கஷ்டமான  கனவு பிராஜெக்டை  செஞ்சு முடிக்க  குறுக்கு வழி தான் சிறந்ததுனு சிலர் தவறா  நினைக்கறாங்க 


10  நம்ம வாழ்க்கையை விட நம்ம கனவுகள்  பெருசு என்பதால் அதை  டேலி பண்ண நாம கத்துக்கனும்


11  பணக்காரன் ஆகனும்கற சாதா ஆசை மட்டும் தான் எனக்கு இருந்துச்சி, ஆனா பணக்காரன் ஆனதும்  அரசியல்வாதி ஆகனும்னு ஆசை வந்துடுச்சு 


12   யாரும்  தொட முடியாத  உயரத்தை அடையனும்னு  நான்  முடிவு செஞ்சது  யாரும்  நினைச்சுப்பார்க்க முடியாத  வயசுல 


13  கண்னாடியை  உடைக்க  சின்ன கல் போதும்

14   இம்பெர்ஃபெக்டா  இருக்கறதுல யும் ஒரு அழகு  இருக்கு 


15   இந்த சமூகம் நல்லவங்களை ஆதரிக்காதப்ப  சமூக சேவை செய்வதிலும் , நல்லவனா இருப்பதிலும் என்ன பயன் இருக்க முடியும்?  


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  பிரபலமான  புகழின்  உச்சத்தில்  இருக்கும் ஒரு நடிகை   தன்னை  விசாரிக்க  வந்த  போலீஸ் ஆஃபீசரை வலியனா போய் மயக்க நினைபப்து ஏன்? பேசிக் இன்ஸ்டிங்க்ட் ல  ஹீரோயின் அந்த  மாதிரி செஞ்சான்னா அவ மேல  தப்பு இருந்ததால  அதை மறைக்க அப்டி செஞ்சா . நடிகை மேல  தப்பே இல்ல , ஏன் தப்பா நடந்துக்க  ட்ரை பண்றா?


2   மேடையில்  மாநில  முதல்வருக்கு    பானத்தில்  விஷம் கலந்த  கப்பை எல்லாம் அவ்ளோ சர்வசாதாரணமா    எல்லாம்  தந்துட முடியாது , ஏகபப்ட்ட  செக்யூரிட்டி இருக்கும்  


3  க்ளைமாக்ஸ் ல  வில்லனுக்கு  தரப்பட்ட அதே  விஷத்தை தான் இன்னொரு  சின்ன  வில்லனும் தானே சாப்பிட்ட்தா சொல்றான், ஆனா அவன் மட்டும்  முதல்  வில்லனை விட அதிக  நேரம்   உயிரோட  இருப்பது  எப்படி?

4  ஹீரோவான டிராஃபிக் எஸ் ஐ  மேலிட  உத்தரவை  மீறி  இன்வெஸ்டிகேஷன்  பண்றார். ஆனா மேலிடத்துக்கு  அந்த  தகவல்கள்  எதுவுமே தெரியாம்  இருக்கே ? எப்படி?  யாருமே  போட்டுத்தர்லையா?  பொதுவா  எல்லா ஆஃபீஸ்லயும்  ஒருத்தனை போட்டுக்குடுக்க  எட்டப்பன்கள் இருப்பான்களே? 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  பிரமாதமான  படம்  என சிலாகிக்க  முடியாவிட்டாலும் இது ஒரு நல்ல  க்ரைம்  த்ரில்லர்  மூவி என்ற    வகையில்  பார்க்கலாம் . ரேட்டிங்  3 / 5   அமேசான்  பிரைம் ல கிடைக்குது 


Directed byHemanth Rao
Produced byAshwini Puneeth Rajkumar
Screenplay byHemanth Rao
Starring
Music byCharan Raj
CinematographyAdvaitha Gurumurthy
Edited byJagadeesh
Production
company
PRK Productions
Distributed bySri Vajreshwari Combines
Release date
  • April 12, 2019
CountryIndia
LanguageKannada

Monday, June 29, 2020

Mirage (2018) Durante la tormenta (original title)- சினிமா விமர்சனம் (சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் )




 த இன்விசிபிள்  கெஸ்ட்  அப்டிங்கற பிரமாதமான  படத்தை இயக்கியவரின் படம் தான் இது.  ஆல்ரெடி நாம பார்த்த  ரன் லோலா ரன் , 12 பி படங்களை  எல்லாம் ரசிச்சவங்களுக்கு  இந்தப்படம்  பிடிக்கும் . இது ஒரு ஏ செண்ட்டர்  ஃபிலிம்

ஸ்பாய்லர்  அலெர்ட்


முதல்  கதை =   1989 ல  நடந்த  ஒரு சம்பவம் . ஒரு சின்னப்பையன்  வீடியோ கேமரா  முன்னால நின்னு  கிதார் வாசிச்ட்டு அதை ரெக்கார்டு பண்ணிட்டு இருக்கான். அவனோட அம்மா நைட்  ட்யூட்டிக்கு வெளில கிளம்பறாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு பக்கத்து  வீட்ல  ஒரு சத்தம்  கேட்குது. என்னனு பார்க்கப்போனா அந்தப்பையன்  கண் எதிரே பக்கத்து வீட்டு ஆள்  தன் மனைவியை  கொலை பண்றான். அதைப்பார்த்து பயந்து  ஓடி வரும்  பையன்  ரோட்ல ஒரு வண்டி  மோதி இறந்துடறான். பக்கத்து  வீட்டு ஆளை போலீஸ் கைது பண்ணிடறாங்க 


 2 வது  கதை =  சரியா  25 வருடங்கள் கழித்து  அதாவது 2014 ல்  அந்த சின்னப்பையன்  குடி  இருந்த  அதே  வீட்டில்   ஒரு தம்பதி  குடி  வர்றாங்க அவங்களுக்கு  ஒரு பொண்ணு . நாயகி  ஒரு இடத்துல அந்தப்பையனோட  வீடியோ கேமராவை கண்டு பிடிக்கறா. நடந்த சம்பவங்களை தெரிஞ்சுக்கறா . இப்போ நிகழ்காலத்தோட    கடந்த காலம் கனெக்ட் ஆகுது . அதாவது  பழைய   டி வி  மூலமா  நாயகி பேசுவது அந்தப்பையனுக்கும் பையன் பேசுவது நாயகிக்கும் கேட்குது. நீ இப்போ வெளில  போகாதே போனா நீ செத்துடுவே  இந்த மாதிரி ஆகும்னு சொல்லி  எச்சரிக்கறா அந்தப்பையனும்  வெளீல  போகல தப்பிடறான். இப்போதான் ஒரு ட்விஸ்ட் கடந்த  காலத்தை  மாத்துனதால   நிக்ழ் காலத்துல ஒரு மாற்றம். நாயகியோட கணவன் தான் அவளோட கணவன் இல்லைங்கறான். அவளுக்கு குழந்தையே  இல்லைனு  தெரிய வருது


நாயகி  ஒரு நியூரோ சர்ஜன் சில நாட்களுக்கு முன்  ஒரு குழந்தையை  ஆபரேஷன் பண்றப்ப காப்பாத்த முடியாம  போகுது அந்த  துக்கத்துல தான்  இல்யூஷன்  மாதிரி நாயகியா இதை எல்லாம் கற்பனை  பண்ணிக்கறா  அப்டீனு   சொல்றாங்க   ஆனா நாயகி  மீண்டும்  பழைய படி தன் வாழ்க்கை கிடைக்கனும்னு போராடறா

 3வது  கதை  = அந்த பக்கத்து  வீட்டு ஆள் தன் மனைவியைக்கொன்ன கதை ல   இந்த  டைம் ஒரு ட்விஸ்ட். அந்த ஆளுக்கும் பக் வீட்டு ஆண்ட்டிக்கும் ஒரு கனெக்சன் இருக்கு . ஒரு நாள்  மனைவி   ஃபோன் பண்ணி  தான் ஒரு  இடத்துல  மாட்டிக்கிட்டதாவும் இன்னைக்கு நைட்  வீட்டுக்கு வர முடியாது , காலைல தான் வர முடியும் னும்  சொல்றா. அதை நம்பி அவரு  கள்ளக்காதலியை  வீட்டுக்கு வரச்சொல்லிடறாரு . இவங்க 2  பேரும் எசகுபிசகா   இருக்கும்போது  மனைவி  கத்தியோட தாக்க வற்ரா . கை கலப்பு நடக்கும்போது   எதேச்சையா கள்ளக்காதலி மனைவியை குத்திடறா..  பாடியை  ஒரு சூட்கேஸ்ல வெச்சு டிஸ்போஸ்  பண்ணிடறான்  வில்லன்    இதன் பின்  விளைவுகள் என்ன ஆகுது?


 4 வது கதை = தன்  குழந்தை , கணவனை   இழந்த நாயகி இன்ஸ்பெக்டர்  கிட்டே  புகார்  கொடுக்கறா . அந்த  25 வருடங்களுக்கு முன் அவ காப்பாத்துன பையன் தான்  இந்த  இன்ஸ்பெக்டர்னு  தெரிய வருது . இந்த  டைம்   நீ என்னைக்காப்பாத்தனும், அப்போ நான் காப்பாத்துனேன்  , இது உன்  டர்ன்  அப்டினு  சொல்லி  தற்கொலை பண்ணிக்கறா. இந்தக்கதைல  இந்த இன்ஸ்பெக்டரை  தான் லவ் பண்ணி மேரேஜ்  பண்ணி  இருக்கா . போன கதைல  தனக்கு  கணவனாக  இருந்தவன் தனக்கு  துரோகம் பண்ணி வேற ஒரு பொண்ணு கூட கனெக்சன் ல இருந்தவன்னு தெரிஞ்சும்   குழந்தைக்காக தன் பழைய  வாழ்க்கை தான்  வேணும் , டைம் அட்ஜஸ் பண்ணி  அந்த  கால கட்டத்தை  தரனும்னு  வேண்டிக்கறா 


 இந்த 4  கதைகளையும் எப்படி  ஒரு நேர்கோட்டில்,  கொண்டு வர்றாங்க என்பதுதான்  திரைக்கதை 

 அந்த  சின்னப்பையன்  கேரக்டரும் , அதே  பையன்  பெரியவன் ஆனபின் இன்ஸ்பெக்டர் ஆவதும்   நாயகியை லவ் மேரேஜ்  பண்ணுவதும்  அருமையான   காட்சிகள் 

நாயகி  நியூரோ  சர்ஜன் ஆக ஆசைப்பட்ட  சாதா நர்ஸ் , ஆனா  திடீர்னு  தான் எப்போ நியூரோ சர்ஜன் ஆனோம்னே ஞாபகம் இல்லை என்பதும்  நாயகியின் கணவன்  துரோகம் செய்வதை  கண்டு பிடிப்பதும்  புத்திசாலித்தனமான  காட்சி அமைப்புகள்

வில்லனாக நடித்தவர் , கள்ளக்காதலியாக நடித்தவர்  இருவரின் முக பாவனைகளும் அருமை 

2019 ஆம்  ஆண்டின் சிறந்த  விஷூவல்  எஃபக்ட்ஸ்க்கான விருதும் , பெஸ்ட்  சப்போர்ர்டிங் ஆக்ட்ரஸ்க்கான விருதும் பெற்ற படம்  இது 


 சில  குழப்பங்கள் ( எனக்குப்புரியலைனு சொல்லலாம்)


1   1989 ல சின்னப்பையனா  இருப்பவன்  25   வருடங்கள்  கழித்து   தன்னைக்காப்பாற்றிய  பெண்ணையே லவ் மேரேஜ் பண்ணுவது எப்படி? இப்போ அவளுக்கு 50 வயசு இருக்குமே?


2   தனக்கு  துரோகம்  பண்ணின கணவனுடனான  வாழ்க்கை தான் மீண்டும் வேணும்னு நாயகி அடம் பிடிப்பது ஏன்? குழந்தைப்பாசத்துக்காக என்றாலும்   ஏற்றுக்கொள்ள முடியலை



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  தவறுகள்


1   அந்த  சின்னப்பையன்  எதிர்  வீட்டு ஆளான வில்லன்  தன் பக் வீட்டுப்பெண்ணோட எக்ஸ்ட்ரா மேரிட்டல்  லைஃப்  வாழறான் . அவ  குழந்தையோட தனியாதான்  இருக்கா . வில்லனின்  மனைவி  ஃபோன் பண்ணி  இன்னைக்கு  வீட்டுக்கு  வர மாட்டேன்னு  சொன்னதும்  வில்லன் கள்ளக்காதலி வீட்டுக்குப்போவதுதானே சேஃப்டி? அங்கே  வேற  யாரும்  இல்லை , குழந்தை மட்டும் தான் . ஆனா இங்கே மனைவி  வந்தா  டேஞ்சர் . எப்டி அதை  நினைக்கலை ?


2  வில்லனின் மனைவி  திரும்ப  வந்து பார்க்கும்போது தன் கணவனை  இன்னொரு  பெண்ணூடன்  நெருக்கமாக  இருப்பதைக்கண்டு  அதிர்ந்து   கத்தியை எடுத்து தாக்க  வருகிறாள். அவங்க   2  பேரு  , இவ ஒருத்தி . எப்படி சமாளிக்க முடியும்? அப்டினு நினைக்க மாட்டாளா? 


3   முதல் கதைல  கொலை செய்யும்  வில்லன் கைல கத்தியோடயே  வாசல்  வரை வந்து  மாட்டுவானா? 


4  தன் மனைவியின் பாடியை  டிஸ்போஸ்  பண்ண   வில்லன் உபயோகிக்கும்  ஆயுதம்  சவுண்ட்  விட்ட படி இருக்கு . நைட் டைம் ப்வெளீல  சவுண்ட்  கேட்டா டவுட் வரும் என டேப்பில் அல்லது   டிவியில்  ஏதாவது  ப்ரோக்ராம் சவுண்டா  வெச்சு  பின் இந்த  வேலையை  செய்ய மாட்டானா?


5   வில்லன்  தன் கள்ளக்காதலியுடன் வாழும்போது  கொலை செய்யப்பட்ட  தன் மனைவி  உயிருடன் வேற  ஊரில்    இருப்பது போல அலிபி ஏற்படுத்தி  இருப்பதாக  சொல்லப்படுது . போலீஸ்  அதை க்ராஸ்  செக்  பண்ண மாட்டாங்களா?  அட்லீஸ்ட்   ஃபோன் நெம்பர்   வாங்கி கன்ஃபர்ம்  பண்ண மாட்டாங்களா? 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -  த இன்விசிபிள்  கெஸ்ட் படத்தை  அதிகாரப்பூர்வமா பதலா என  ஹிந்தியில்   ரீமேக்  செஞ்ச மாதிரி இந்தப்படத்தையும்  தமிழ், தெலுங்கில்  ரீமேக்க  இருப்பதால் அவசியம்  பார்க்க வேண்டிய   படம்  . , ரேட்டிங்   3. 75  / 5 

Saturday, June 27, 2020

BULBBUL ( HINDI)-சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)




வாலி படத்துல  வர்ற  மாதிரி  வில்லன் ட்வின்ஸ். ஒரு ஆள்  நார்மல் , இன்னொரு ஆள் மனநிலை பாதிக்கப்பட்ட வர். இது போக  இன்னொரு  தம்பி இருக்கு. இந்தத்தம்பிக்கு 10 வயசுக்குள்ள தான்  இருக்கும்., 30 வயசு ஆன முதல் அண்ணனான  வில்லனுக்கு 10 வயசு சிறுமி கூட பாலியல் விவாகம் நடக்குது. கதை நடக்கும் காலகட்டம் 1880 - 1900 .


 அந்த  சிறுமிக்கு   தன் வயதை ஒத்த    சிறுவனான 3 வது தம்பி தான் கணவன்னு நினைச்சுக்குது. அவன் கூட சகஜமா பேசுது , பழகுது. நாட்கள் நகருது. பருவ வயது வந்ததும் வில்லனுக்கு பொறாமை . தன் தம்பி கூட  க்ளோசா பழகறாளே அப்டினு.. ஆனா தப்பு எதுவும் நடக்கலை . ஹீரோ  அண்ணி  கிட்டே  மரியாதையா தான் பழகறார்.



 ஆனாலும் பொறாமைல வில்லன் ஹீரோவை படிக்க வைக்க வேணும்னே லண்டன் அனுப்பிடறாரு .பின் தன் மனைவியை  சித்ரவதை பண்றாரு, அவரோட  இன்னொரு தம்பி ( ட்வின்ஸ்)   பாலியல்  வன்முறையை நிகழ்த்திடராரு  தன் அண்ணி எனவும் பாராமல் 


 இது  ஒரு பக்கம்  இருக்கட்டும் ,  இன்னொரு கதை , அந்த  ஊர்ல  வரிசையா  கொலைகள் நடக்குது.  கணவனால் சித்ரவதை செய்யப்பட்ட , கணவனின் தம்பியால்  பலாத்காரம் செய்யப்பட்ட  நாயகிக்கு  மருத்துவ சிகிச்சை அளிக்க  ஒரு டாக்டர் வர்றார். அந்த  கொடுமைகளை எல்லாம்  பார்த்துட்டு  அவர் தான்  கொலைகளை  செய்யறார்னு ஊர் மக்கள்  நினைக்கறாங்க, ஏன்னா  கொலை செய்யப்படுவது எல்லாமே  பெண்களை  கொடுமைப்படுத்துபவர்கள்தான் , வில்லன்களான  2  ட்வின்ஸ் அண்ணன்கள்  போக வேற  சில கொடுமைக்காரர்களும்  கொலை செய்யப்படறாங்க 


 நாயகன்  ரிட்டர்ன் வந்து  கொலைகாரனை கண்டுபிடிப்பதுதான்  கதை 


 வில்லனா டூயல் ரோலில்  பிரமாதமா  பண்ணி  இருக்கார் , 

நாயகன் சாத்வீகமான  முகம்

 டாக்டராக  வருபவர்  கச்சிதமான நடிப்பு 


 ஒளிப்பதிவு  , ஆர்ட் டைரக்சன்  இரண்டும்  பிரமாதம் ., குறிப்பாக  காட்டில்  தீ வைக்கப்பட்டு  ஜூவாலை  விட்டு  எரியும் காட்சி கலக்கல் ரகம், இசை  ஓக்கே ரகம் , பிஜிஎம்மில் இன்னும் கலக்கி இருக்கலாம்


 நாயகி சித்திரவதைப்படும்  காட்சி , வன்புனர்வுக்காட்சி  கொடூரம். ஆடியன்சுக்கு அந்த  வலியை வேதனையை நன்கு கடத்தி  இருக்கிறார் இயக்குநர்


நச்   வசனங்கள்


1    பெரிய இடங்கள்ல , பெரிய  பங்களாக்கள்ல  பெரிய  பெரிய  ரக்சியங்கள்  மறைஞ்சு இருக்கும் 


2   என்னம்மா  அது?

 சாரி  , அது பர்சனல்


ஒரு மனைவிக்கு தன் கணவன் சம்பந்தப்பட்ட  விஷயங்கள் தான்  பர்சனலா  இருக்க முடியும், கணவன்  கிட்டேயே மறைக்கிற அளவுக்கு  பர்சனல்னா..


நாயகிக்கு  இழைக்கப்பட்ட  கொடுமைகளுக்குப்பின்   படம் வேகம் எடுக்கிறது, அதுவரை  கொஞ்சம் ஸ்லோ தான்

 அனைவருக்கும் இந்தப்படம் ..... பிடிக்காது

 ரேட்டிங்   3 / 5 

Bulbbul movie cast: Tripti Dimri, Avinash Tiwary, Rahul Bose, Parambrata Chattopadhyay, Paoli Dam, Ruchi Mahajan, Varun Paras Buddhadev
Bulbbul movie director: Anvita Dutt

Friday, June 26, 2020

KRISHNA AND HIS LEELA ( TELUGU)- 2020 -சினிமா விமர்சனம் ( டூயல் சிம் ரொமாண்டிக் காமெடி)



ஓப்பனிங் சீன்லயே  ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும்  ஒரு டம்மி ஆர்க்யூமெண்ட்;ல சண்டை வந்து  பிரேக்கப் ஆகிடுது. அடுத்த சீன்லயே ஹீரோ  புலம்ப ஆரம்பிக்கறாரு , ஏதோ பாடாவதிப்படம்   போல அப்டினு நினைக்கும்போது  கதை டேக் ஆஃப் ஆகுது


 ஹீரோ   வேற  ஒரு பொண்ணைப்பார்க்கறார். பார்த்ததுமே லவ் வந்துடுது. ப்ரபோஸ்  பண்றாரு ,  அழகிய பெண்களூக்கு உரித்தான சில பல பிகுகளுக்குப்பின்  காதலுக்கு  ஓக்கே சொல்லிடுது. காதலியிடம்  தன் முதல் காதலி பற்றி  ஓப்பனா சொல்லிடறாரு 


 ஹீரோவுக்கு  பெங்களூர்ல   வேலை  கிடைக்குது. அங்கே  போறதுல  2 வது  காதலிக்கு இஷ்டம் இல்லை . பிரிவு ஒரு காரணம் , பெங்களூர்ல  ஏராளமான  அழகிய பொண்ணுங்க  இருக்காங்க என்பது  இன்னொரு காரணம் 


 எப்டியோ சமாளிச்சு  பெங்களூர்  போற  ஹீரோ அங்கே  தன் முதல்  காதலியை சந்திக்கிறார். ஒரு டான்ஸ்  பிராக்டீஸ்ல  அவர்  கால்  பாத்ம்  ஃபிராக்சட் ஆகி  ரெஸ்ட் எடுக்க வேண்டி  வருது, இவரு அவர்  வீட்டுக்குப்போய் பகல்ல மட்டும்  உதவியா  இருந்துட்டு வர்றார், 

 இப்போ முதல்  காதலி சமாதானம் ஆகிடுது . 2 வது காதலி கோவிச்சுக்குது

 இப்டியே  மாறி மாறி  இவங்க பண்ற   ஊடல்கள் , கூடல்கள்  தான் மிச்ச மீதி திரைக்கதை 

 க்ளைமாக்ஸ்ல  ஹீரோ யார்  கூட சேர்ந்தாரு?  என்பது  ட்விஸ்ட்


 ஹீரோ நடிப்பு  பர்ஃபெக்ட்  ,  ப்ளேபாயா?  நல்லவரா? வில்லனா? என கணிக்க முடியாத   கேரக்டரை அநாயசமா  கண் முன் நிறுத்தறார். 


2 காதலிகளும்  அழகு , நடிப்பு  உடை வடிவமைப்பு  எல்லாவற்றிலும் கனகச்சிதம். 


ஒளிப்பதிவு   , இசை  அழகு .  ஒவ்வொரு  ஃபிரேமிலும்  ஒரு பெண் அல்லது அழகிய பெண்களின்  கூட்டம்  இருப்பது இளைஞர்களைக்கவரும் 




நச்  டயலாக்ஸ் 


1   சேலை கட்டாம  சுடி போட்டிருக்கே?

 எனக்கு சேலை கட்ட தெரியாது


 டெய்லி டிஃபன் பாக்ஸ்ல மட்டும்   வெரைட்டி மீல்ஸ்  வித விதமா  கொண்டு வர்றியே?  இதை  பழகிக்க கூடாதா? 

2   மரியாதை  தெரியாத பசங்களோட நான் பழக்றதில்லை 


 சாரி , அன்னைக்கு நான் தண்ணி அடிச்சிருந்தேன்

 ஓஹோ, உன் அம்மா கிட்டேக்கூட அப்படித்தான் பேசுவியா? 


3  லைஃப்ல கோல் அச்சீவ் பண்ணனும்னா அவாய்டு கேர்ள்ஸ்



4  நான்  எதிர்பார்க்கிற எந்த விதமான குவாலிட்டிஸும்  உன் கிட்டே இல்லை, ஆனாலும் உன்னைப்பிடிக்குது, ஏன்னு தெரில


5   எனக்காக  தம் அடிக்கறதை  விட்டுடுவியா?
ம்ஹூம் ,முடியாது

 நல்ல வேளை , எஸ்னு  சொல்லி இருந்தா உன் மீது நம்பிக்கை வந்திருக்காது


6   நான்  உன் கிட்டே  1  கேட்கலாமா?  எப்போ  உனக்கு நான் கிஸ் பண்ணலாம்?

 எப்போ  என் கிட்டே பர்மிஷன்  கேட்கறதை  நிறுத்தறியோ அப்போ

 ( தியேட்டரா  இருந்தா இந்த சீனுக்கு அப்ளாஸ் அள்ளி இருக்கும் ) 


7   எனக்கு ஆம்பளைங்க  கிட்டே ஒண்ணு  மட்டும்  புரியல . ஒருத்தர் எப்படி அடிக்கடி லவ்ல விழ முடியும் அதுவும் வெவ்வேற ஆள் கிட்டே?


8   வாவ்.. எப்போ  இருந்து  உன் கிட்டே  இவ்ளோ ,மெச்சூரிட்டி  வந்தது?

  நீ என்னை ஏமாத்திட்டுப்போனதுல இருந்து 


9 உனக்குப்பிடிச்ச  வேலையை  பண்ணு , டெய்லி புதுசா ஏதாவது பண்ணிட்டே  இரு . இந்த இரண்டும்  உன்னை வாழ்வில் உயர்த்தும் 


10 அப்டி ஆகனும், இப்டி ஆகனும்னு எந்தவிதமான லட்சியமோ, குறீக்கோளோ ,கோலோ ( GOAL) இல்லாத சராசரி பெண் நான், ஹோம் மேக்கரா இருந்தா  போதாதா? 


11    லவ்வும்  , மேரேஜூம் ஒருவர் வாழ்வில் ஒரு டைம் தான் வரனும்னு கட்டாயம் ஒண்ணும் இல்லை, ஆனா அப்டி இருந்தா நல்லாருக்கும்    


12   ரெண்டு  பொண்ணுங்களை  லவ் பண்ணுறது விதியை  வலியனா  வம்புச்சண்டைக்கு இழுக்கற   மாதிரி




லாஜிக் மிஸ்டேக்ஸ் 


1   காதலியை சந்திக்க  ஊர்ல்  இருந்து வர்ற  ஹீரோ  தன் செல் ஃபோன் கேலரியை களீன்  பண்ணிட்டு  வர மாட்டாரா? இப்டியா  ஈசியா  மாட்டுவாரு?


2   தான்  வேலையை  விட்ட  விஷயத்தை அம்மாவுக்கு  ஃபோன் பண்ணி சொல்லும் ஹீரோ  அந்த  மேட்டரை  காதலி கிட்டே  சொல்லிடாதம்மா அப்டினு சொல்லி இருக்கலாம் , அல்லது காதலியிடமும் வேலை போன விஷயத்தை  சொல்லி இருக்கலாம், அல்லது அம்மா கிட்டேயும் சொல்லாம  இருந்திருக்கலாம், இந்த   3 ஆப்சனையும் விட்டுட்டு   ஈசியா  மாட்டுவது எப்படி? 


சி.பி . ஃபைனல்   கமெண்ட் =பெண்களிடம் எப்படி எல்லாம்  ஜாலியா பேசி  ஏமாற்றலாம் என ஆண்கள்  பார்த்து கத்துக்கலாம். ஆண்கள் எப்படி எல்லாம் ஏமாத்துவாங்க என்பதை பெண்கள்  பார்த்து தெரிஞ்சுக்கலாம்படம்  ஜாலியாப்போகுது . முரட்டு   சிங்கிள் சிங்கங்கள் படம் பார்ப்பதை தவிர்க்கவும் 



KAPPELA ( மலையாளம்) 2020 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் த்ரில்லர்)

What are the best Malayalam movies in 2020? - Quora

இந்தப்படம் பார்த்த பலரும்  முதல்  20 நிமிடங்கள் பார்த்துட்டு  12 / 7 /1996ல்  ரிலீஸ் ஆன காதல்  கோட்டை , 12/2/1997 ல்  ரிலீஸ் ஆன காலமெல்லாம் காதல் வாழ்க  டைப்பில்  நாயகனும் நாயகியும்  பார்க்காமயே காதலிக்கும் கதை அப்டினு நினைச்ட்டாங்களாம். நான்  கூட இடைவேளை  ட்விஸ்ட்டா   20/4/2003 ல் ரிலீஸ் ஆன  புன்னகை பூவே  டைப்பில்   இருக்கும் போல என  தவறாக கணித்து விட்டேன் , ஆனா சாதாரண லவ் ஸ்டோரியா  ஆரம்பிச்ச  கதை த்ரில்லர் மூவியா இடைவேளைக்குப்பின் தான்  பறக்குது திரைக்கதை

படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால நாயகியா நடிச்ச அன்னாபென்( டாஸ்டிக்) பற்றி பார்த்துடுவோம்.மோஸ்ட் அண்டர் ரேட்டட் ஹீரோயின் ஆஃப் இண்டியன் சினிமா யார்?னு யாராவது உங்க கிட்டே கேட்டா  கண்ணை மூடிக்கிட்டு அன்னா பென் அப்டினு சொல்லிடுங்க . பிரமாதமான ஆக்டிங் , சின்ன சின்ன  சீன்களில் கூட க்யூட் எக்ஸ்பிரசன் தரும் குட்டி தேவதை . ஆடை விஷயத்தில் நம்ம ஊர் நதியா , ரேவதி , சுஹாசினி மாதிரி கண்ணியம் காப்பவர் , இவர் நடித்த கும்பாளிங்கி நைட்ஸ் சக்கை போடு போட்டது , இவர் நாயகியாக  மெயின்  ரோலில்  முழுக்க முழுக்க இவர் நடிப்பை மட்டுமே நம்பி வெளி வந்த த்ரில்லர்  மூவியான  ஹெலன் ( குவாரண்ட்டைன் த்ரில்லர் )  பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது 

சரி , படத்தோட  கதை என்ன?  நாயகியோட அம்மா ஒரு டெய்லர்  கஸ்டமருக்கு  ஃபோன் போட்டு ஜாக்கெட் அளவு  கேட்கையில் ராங் நெம்பர்  போய்டுது. ஆட்டோ  டிரைவரான  ஹீரோ அட்டெண்ட் பண்றார்.  அதுக்குப்பின்  அடிக்கடி பேசி  அந்த  நெருக்கம் காதலா மாறுது. வீட்ல  மாப்ளை  பார்க்க ஆரம்பிச்ட்டாங்க . வீட்ல லவ் மேட்டரை  சொல்லலாம்னா நாயகனை இன்னும்  நேர்லயே பார்க்காம எப்படி? நேர்ல மீட் பண்ண முடிவெடுத்து  கோழிக்கோடு பஸ் ஸ்டேண்ட்  தான் மீட்டிங்  பாய்ண்ட்னு முடிவு  பண்ணிடறாங்க . குறிப்பிட்ட நாளில்   கோழிக்கோடு பஸ்ஸ்டேண்டில்   இருவரும்  வந்து  இறங்கும்போது  ஹீரோ  செல்ஃபோன்  எவனாலோ பிக் பாக்கெட் அடிக்கப்பட்டு  வில்லன்  கைல வந்து  சேர்ந்துடுது 


இதுவரை சாதாரண படமா  ட்ராவல்  பண்ணிட்டு இருந்த படம்  இதுக்குப்பின் தான்  திரைக்கதை ல  வித்தை காட்டுது, வில்லன்  என்ன செஞ்சான்?  ஹீரோயின்   வில்லனிடம்  ஏமாந்தாரா? ஹீரோ ஹீரோயின்  சேர்ந்தாங்களா? இல்லையா?  என்பதை எல்லாம்  நெட்  ஃபிளிக்சில் காண்க   கடைசி  30 நிமிடங்கள்   வேற  லெவல் 


ஹீரோவா  கும்பாளிங்கி நைட்ஸ் பட  ஹீரோதான்  இதிலும்  ஹீரோ , அப்பாவி  முகம்  காட்டும்  இவர் மிக சுலபமாக  மனதில்   பதிகிறார், காதலியை  சந்திக்கும் டைமில்  ஒரு  எமர்ஜென்சி  கேஸ் வர ஆட்டோவில் அழைத்து செல்லும்  காட்சியில்  மதிப்பில்  உயர்கிறார்

  ஹீரோயினா அன்னாபென்.  ஒரு  பெரிய  ஜவுளிக்கடை  சுவர்  ஓவிய விளம்பரத்தில் தன் படம்  உபயோகப்படுத்தப்பட்டிருக்கறதைப்பார்த்து   வெட்கப்பெருமிதம்  காட்டும்  சீன் ஸ்மார்ட் . அப்போது  உடன் வரும்  தோழிகளோடு ஒரு நடை  நடந்து  வருகிறாரே? அருமை . இருவர்  படத்தில்  ஐஸ்வர்யா ராய்   ஒரு அகம்பாவ நடை பயில்வாரே அதற்கு ஜஸ்ட் ஆப்போசிட்

 பின் பாதியில்  கான்வோ வில் மங்களாபுரம்  பேர்  கேட்டதும் நொடியில் அவர் முகம் மாறுவதும்  பின் முகம் இறுகுவதும்  பின்னி பெடல் எடுக்கும் நடிப்பு 


 காதலனுடன்  டெலிஃபோனில்  உரையாடும்போது , அம்மாவுக்கு  டிமிக்கி குடுக்கும்போது  என அவர்  முக பாவனைக்குவியல்களின்  பட்டியலை அடுக்கிட்டே போகலாம், இதெல்லாம் உனக்கு அடுக்குமா?னு யாரும்  கேட்கும் அபாயம் இருப்பதால் அன்னாபென்  புராணத்தை  முடிச்சுடுவோம் .


 வில்லன்  ஓப்பனிங்  சீன்  கலக்கல் , பெட்டிக்கடையில் ரவுடித்தனம்  பண்ணும்போது  இவரும்  மல்லுக்கட்டுவது   செம . இவருக்கும் ஒரு காதலி  இருப்பதும் அவருடனான  உரையாடல்களும் மிக யதார்த்தம் 

படத்தில்  வசனங்களுக்கு  பெரிய  முக்கியத்துவம் தராததற்கு  இயக்குநரிடம்  இருந்த  ஒரே நம்பிக்கை  பின் பாதி  ஜெட்  வேக  திரைக்கதை  படத்தை காப்பாற்றிடும்  என்பதே 


சபாஷ்  டைரக்டர்


 1  ஹீரோ  ஹீரோயினை  சுற்றியே நகரும்  கதையில் வில்லன் வந்ததும் டக்னு அவருக்கு  ஒரு ஃபிளாஸ்பேக்  குடுத்து அவர்  கதையை சொல்ல  ஆரம்பிப்பது 


 2   ஹீரோயினை  பெண் பார்க்க  வரும் மாப்பிள்ளையின் அம்மா  ஹீரோயின்  வீட்டுக்குள்  நுழையும்போதே  காட்டும்  வில்லித்தன்ம்


3    கதைக்களமான  கேரளா - ராகுல்  தொகுதி  வைய நாடு அழகு  கேமராவால்  படைக்கப்பட்ட விதம் அருமை 

4  மொகம்மது முஸ்தபாவின் இயக்கத்திம்  முன் பாதி  ரொமாண்டிக் மியூசிக்கல்  கலக்கல்  பின் பாதியில்   ஸ்பீடு  இசை, பிஜிஎம்  


5  வில்லனின் கேரக்டர்  ஸ்கெட்ச்  அபாரம் 


6  ஒளிப்பதிவு , இசை  எடிட்டிங்  போன்ற   தொழில்  நுட்பங்கள்  அருமை 





லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  நாயகியை    சிவப்பு விளக்கு பகுதியில் விற்க  முடிவெடுக்கும்  வில்லன்  மடத்தனமாக  அவர் முன் அப்படி ஓப்பனாக  பேசுவாரா? 

2  அந்த  புரோக்கர்  லேடி   நாயகி  முன்பே   வில்லனிடம்  கச முச என  கமெண்ட்  அடிப்பது  உறுத்தல் 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட்  =   பெண்களுக்கான  விழிப்புணர்வுப்படம் , மிஸ்  பண்ணாம  பார்த்துடுங்க , த்ரில்லர்  மூவி  ரசிகர்களும்  மிஸ்  பண்ணிடாதீங்க ,  ரேட்டிங் -  3 / 5 

Thursday, June 25, 2020

THE OCCUPANT -2020-SPANISH -சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )




மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு அப்டினு அறிஞர் அண்ணா சொன்ன சூழல் வேற, நம்ம ஆளுங்க அதுக்கு அர்த்தம்  கற்பிச்சது வேற . மற்ற கட்சிகளில் இருந்து நம்ம கட்சிக்கு வரும் ஆட்களை சேர்த்துக்கலாம், தப்பில்லை என்பதுதான் அவர் சொன்ன அர்த்தம், நம்மாளுங்க புரிஞ்சுக்கிட்டது அடுத்தவன் சம்சாரத்தை ஆட்டையைப்போடலாம் தப்பில்லை  என நினைச்சுக்கிட்டாங்க , பிறன் மனை நோக்கா பேராண்மை வேணும்னு வள்ளுவர் சொன்னதெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரில போல 

பாலைவன ஒட்டகம் கூடாரத்தில்    என் தலையை மட்டும் நுழைச்சுக்கறேன்னு கொஞ்சூண்டு இடம் கேட்டுச்சாம், அப்றம் முழுக்க முழுக்க   உள்ளே வந்து கூடாரத்தையே ஆக்ரமிச்சுடுச்சாம். 

 மேலே சொன்ன இந்த 2 விஷயங்கள் தான்   கதைக்கான  KNOT.

 படத்தோட  கதை என்ன?  ஹீரோ ஒரு விளம்பர பட டைரக்டர். ஒரு வருசமா  வேலை வாய்ப்பே  இல்லை . இவர் திறமை தெரிஞ்சவங்க கூட ஒரு காண்ட்ராக்ட்ல சைன் பண்ணச்சொல்லும்போது முதல் 3 மாசம் சம்பளம்  இல்லாம வேலை செய்யனும்னு கண்டிஷன்  போடறாங்க .இது ஹீரோவுக்கு பிடிக்கலை . இவருக்கு  ஒரு மனைவி , ஒரு மகன்  உண்டு . பெரிய  பங்களாவில் ( அபார்ட்மெண்ட்ல )  குடி இருக்காங்க


 கைல இருக்கற  சேமிப்பெல்லாம்  கரைய ஆரம்பிச்சதும்  வீட்டைக்காலி பண்ணிட்டு வேற ஒரு சிறிய வீட்டுக்குப்போறாங்க . வேலைக்காரியையும் நிறுத்தியாச்சு . காலி பண்ணிட்டுப்போகும்போது பழைய  வீட்டு சாவி  ஒரு செட்  இவர்  கிட்டே  இருக்கு 

அவங்க குடி இருந்த பழைய வீட்டுக்கு இன்னொரு ஃபேமிலி வருது. அவங்களும்  இவங்களைப்போலவே  3 பேரு .  கணவன், மனைவி , மகள் .


பழைய வீட்டில்  குடி வந்த ஆள்  கூட ஹீரோ வலுவந்தமா  ஒரு நட்பை ஏற்படுத்திக்கறாரு   . ஒற்றுமையா  இருந்த அந்த  குடும்பத்தை திட்டம் போட்டு  கலைக்கறாரு . இவரோட சதித்திட்டம்  நிறைவேறுச்சா? இவரோட பிளான்  தெரிஞ்சுக்கிட்ட இவரோட மனைவி என்ன பண்ணாங்க, இத  எல்லாம் நெட் ஃபிளிக்சில் காண்க 


ஹீரோ நடிப்பு  மிக யதார்த்தம். வேலை இல்லாம , கைல காசில்லாம  மனைவி , மகன், வேலைக்காரி   யாருமே  மதிக்கறதில்லை என்ற  வேதனையை பிரமாதமா  முகத்தில் காட்டி இருக்காரு .கிரிமினல்  வேலைகள் செய்யும்போது  இவர் முகம் வில்லன் முகம் போல் ஆகிடுது

இவரோட மனைவியின் நடிப்பும் கச்சிதம். மகன்  சில சீன்களே  வந்தாலும் நல்லா பண்ணி இருக்காரு


 இன்னொரு ஜோடில  கணவன் சத்யராஜ் மாதிரி ஆஜானுபாகவமான தோற்றம். தான் ஏமாற்ரப்படுகிறோம் என்பது  தெரிந்ததும்  ஹீரோவிடம்  சீறுவது , தன் மனைவியிடம்  பம்முவது   அருமை 

 இவரோட மனைவி நடிப்பு சூமார்  ரகம் தான் , மகள்  அழகு 


இந்த அபார்ட்மெண்ட்  செக்யூரிட்டி  கம் தோட்டகாரனாக வருபவர்  வில்லனுக்கே வில்லனாக அமைந்து பிளாக் மெயில் பண்ணும்  காட்சிகள்  செம பரப்ரப்பு


சபாஷ்  டைரக்டர் 


1   மொத்தம் ஏழே ஏழு  முக்கிய கேரக்டர்களை  வைத்து  சுவராஸ்யமான  திரைக்கதை அமைத்த  விதம்

2   நான் சொன்ன விஷயம் மனைவிக்கு தெரிய வேண்டாம் என ஹீரோ நண்பரிடம் சொல்லி பின் நண்பரின் மனைவியை தனியே சந்தித்து  அவரைக்குழப்பும்  காட்சி  ஃபெண்டாஸ்டிக் 


3   நண்பனிடம்  செல் ஃபோனை  வாங்கி அவர் ஃபோனில் இருந்து  தனக்கு  மெசேஜ் அனுப்பி  அதை வைத்து  அவருக்கே மனைவியிடம்  கெட்ட பேர் எடுத்துக்கொடுப்பதும்  வில்லனிசம் 

4   வில்லனுக்கே  வில்லனாக மாறும் செக்யூரிட்டி   வைக்கும்  டிமாண்ட்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவை . பணம்  அவர்  டிமாண்ட்  அல்ல.. 

5  க்ளைமாக்சில்  ஹீரோவை போலீசில் ஆதாரத்துடன் மாட்டி வைக்கப்போறேன் என  மிரட்டும் மனைவியிடம்  ஹீரோ பேசும் டயலாக்  வெல்டன்



நச்  டயலாக்ஸ்  

1  இங்கே  யாருமே  தனிமைல இல்லை. எதா இருந்தாலும் அதை  எதிர்கொண்டு ஜெயிச்சுதான் ஆகனும்

2   எந்த  ஒரு விஷயத்திலும் நாம்  எடுத்து  வைக்கும் முதல் அடி  ரொம்ப  சிரமமாத்தான்  இருக்கும் 


ம்க்கும், எனக்கு மட்டும் 2 வது, 3 வது அடி எல்லாமே  அப்டித்தான்  இருக்கு


3  ஒருத்தனை  எப்படி  அங்கீகரிக்கனும், பாராட்டனும் அப்டினு இந்த சமூகத்துக்கு தெரியறதில்லை


4   குடும்பம் , வெற்றி  இந்த இரண்டில் ஒன்று தான் உங்க சாய்ஸ் அப்டின்னா நீங்க எதை தேர்ந்தெடுப்பீங்க?

 நிச்சயம் வெற்றியைத்தான். ஏன்னா   தோல்வி அடைஞ்சவனை  யாருமே விரும்பறதில்லை 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   பொதுவா  ஒரு வீட்டுக்கு  புதுசா  குடி வர்றவங்க  புது போட்டு  போட்டுக்குவாங்க , பழைய  பூட்டை யூஸ்  பண்ண மாட்டாங்க 


2  ஹீரோ  அந்த  புது ஆள்  கிட்டே அவன் டீட்டெய்ல்ஸ்  எல்லாம் கலெக்ட்  பண்ணி   அவங்க  குடும்ப  ஃபோட்டோக்களை  ஃபோன்ல பார்க்கறார். அதை அவன் கேட்கும்போது இவர்   தர்லை . அவனுக்கு ஏன்  டவுட் வர்லை?  ஃபோன்ல ஏன் ஃபோட்டோ  காட்டலை?னு


3    விஷம் கலந்த ஸ்ப்ரே  வை  நண்பனின்  மனைவி யை  உபயோகிக்க வைத்து நண்பனை  சீரியஸ்  நிலைக்கு  கொண்டு செல்லும்  ஹீரோ   அவன்  உண்ர்வு  வருவது தெரிந்ததும்  கழுத்தை அல்லது முகத்த  அழுத்தி  கொலை  செய்ய  நினைப்பது ஏன்? போஸ்ட் மார்ட்டம்  ரிபோர்ட்ல  தெரிஞ்சுடாதா?அதுக்கு பேசாம  அந்த ஸ்ப்ரேவையே மறுபடி லைட்டா  ஒரு காட்டு  காட்டி இருக்கலாமே? 

4    ஹீரோ  தான் செய்யும் சதி  வேலைகளை  தன் மனைவி  பார்க்கும்படி அசால்ட்டா செய்து  சாட்சியை  ஏன் உண்டாக்கிக்கறார்?


5  வில்லனுக்கே வில்லனாகும் செக்யூரிட்டி  எந்த  தைரியத்தில் ஓப்பனாக  மிரட்டுகிறார்? முகம் காட்டாமல்  மிரட்னாதானே  பாதுகாப்பு ?


6   ஒரு ஃபோன் பண்ணிக்கறேன் என நண்பனிடம்  ஃபோனை  வாங்கும் ஹீரோ மெசேஜ் டைப்  பண்ணிட்டு இருக்கார் , நண்பனுக்கு  ஏன் டவுட் வர்லை? 

5   தன் வீட்டுக்கு அடிக்கடி  வரும் ஹீரோ வீட்டுக்கு நாமும்  போய்ப்பார்க்கலாமே?  என அந்த  ஜோடி ஏன் கடைசி வரை  நினைக்கலை ?




சி.பி.  ஃபைனல் கமெண்ட் =  பர பர  , விறு விறு   காட்சிகளை மட்டும் விரும்புவர்களுக்கு   இந்தப்படம்  பிடிக்க வாய்ப்பு கம்மி, ஆனா  நிதானமா  செல்லும் திரைக்கதையா இருந்தாலும் பரவாயில்லை , நல்ல சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர்னா  ஓக்கே என நினைப்பவர்கள் அவசியம்  பார்க்கலாம்

 நெட் ஃபிளிக்சில் கிடைக்குது . ரேட்டிங்   3.25  / 5 

Wednesday, June 24, 2020

MANU ( TELUGU) 2018 - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )




பொதுவா சினிமாவுக்கு விமர்சனம் எழுதறவங்க 2  வகை . கதை என்ன?னு சொல்லாம  படத்தின்  பிளஸ் , மைனஸ்களை  பட்டியலிட்டு  பார்க்கலாமா? வேண்டாமா?  என ஃபைனல் கமெண்ட்  குடுக்கறவங்க  முதல் வகை.இவங்களுக்குதான் அதிக மரியாதை .  கதை , திரைக்கதை ., வசனம் உட்பட எல்லாத்தையும் அவுட் பண்ணி படம் பார்க்கும் சுவராஸ்யத்தை  தருபவர்கள் / கெடுப்பவர்கள்   அடுத்த வகை .  நான் எப்பவும் 2 வது வகைதான். ஆனா இந்தப்படத்துக்கு மட்டும்  முதல் வகைல  சேர விரும்பறேன்

ஏன்னா இந்தப்படத்தோட பிரமாதமான திரைக்கதை, எடிட்டிங்  ஸ்டைலை நீங்க அனுபவிக்கனும்னா படத்தோட  ஒன் லைன்  என்ன? என்பதை  தெரியாமல்  பார்த்தாதான் சுவராஸ்யம்

 தமிழ்ல இதை ரீமேக் பண்ணினா தனுஷ் , அல்லது சிம்பு  பொருத்தமா இருப்பாங்க 

முதல் 50  நிமிடங்கள் படம் பார்த்துட்டு  இந்த சீன் நல்லாலை , இது தேவையே இல்லாத ஆணி அப்டினு ஒரு சீன்  கூட நீங்க சொல்லிட முடியாது , அதே சமயம்  இந்தப்படத்தோட கதை என்னவா இருக்கும்? அப்டினு யூகிக்கவும் முடியாது . அதுதான் இயக்குநரின் சாமார்த்தியம்/


 அடுத்த 60  நிமிடங்கள் படம் பார்த்ததும்  கதை எதை நோக்கிப்போகுதுனு ஓரளவு  யூகிக்க முடிஞ்சாலும் இதுக்கான க்ளைமாக்ஸ் என்னவா இருக்கும்?   என  யோசிக்க வைக்கும்


மொத்தம்  ஓடும் 3 மணி நேரப்படத்துல  இயக்குநரே  தான்  எடிட்டிங் ஒர்க்கையும் பார்த்திருக்கிறார்  என்பதால்   மிகப்பிரமாதமான  கட்டிங்க் ஒட்டிங்


படத்தோட  இசை அருமை . ஒளிப்பதிவும்  குட் . படம் பூரா வரும் ஒரு தீம் ம்யூசிக்  ரொம்பவே ரசிக்க வெச்சுது

சபாஷ் டைரக்டர்


1  தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமல் ஒரு பெஞ்ச் ஃபைட் பண்ணுவார். இதுவரை  வந்த தமிழ் சினிமாக்களில் அப்படி ஒரு ஃபைட்  இதுவரை வந்ததில்லை. அது போல  இதில்  ஒரு ஃபைட் சீன் இருக்கு . சுத்தியல், ஆணி , டேபிள்  ஃபைட்.,  ரொம்ப ஸ்டைலிஷா  இருக்கும் 


2  ஹீரோயினை கவர்வதற்காக  அவரோட சொந்தங்களுக்கு  ஹீரோ உதவும் காட்சிகளைப்பார்த்திருக்கோம். ஆனா ஹீரோயினோட அப்பானு தெரியாமயே  ஹீரோ உதவுவார்.  கடைசி வரை அந்த  உதவி பற்றி  ஹீரோயினுக்கு  தெரிஞ்சிருக்காது 


3  ஒரு பிரமாதமான எடிட்டிங்  திறமையால  கட் பண்ணி கட் பண்ணி  மாற்றி மாற்றி கதை சொன்னதால  இது பிரமாதமா பேசப்படும் படமா ஆகி இருக்கு. இதே கதையை  ஒரு டைரக்டர்  கிட்டே கொடுத்து  எந்த  டெக்னிக்கும் இல்லாம நேரடியா  கதை சொல்லனும்னு டாஸ்க்  கொடுத்தா  இது சராசரிப்படம் ஆகி இருக்கும் 


4 ஹீரோ  ஒரு  ஓவியர்  என்பதையும்  ஹீரோயின் ஒரு  சயின்ஸ் ஸ்டூடண்ட் என்பதையும் எந்த அளவு திரைக்கதைல யூஸ் பண்ணிக்கிட்டாங்க என்பது  பிரமிப்பு




 நச்  வசனங்கள்



1   பொண்ணுங்க எப்பவுமே  ஷார்ட் டெம்ப்பர் வகையறாக்கள்  தான்


2  இந்த ,மாதிரி முட்டாள்தனத்தை கற்பனைல  மட்டும் தான்  என்னால செய்ய முடியும்


3  ஒவ்வொரு கலரும் ஒவ்வொருவருவருக்கு  பிடிக்கும், ஒருவருக்கு பிடிக்கும்  கலரை  வெச்சு  அவங்க  குணத்தை  சொல்ல  முடியும்


4  ஜெயிக்கறமோ , தோக்கறமோ போட்டில பங்கெடுக்கனும்

5   பிரச்சனைகளுக்கான  தீர்வைக்கண்டறிவதுதான் என்னோட பயத்தைப்போக்கிக்கொள்ள உதவுது 

6 ந்  அடிப்படைல நான் ஒரு நார்ட்டிஸ்ட்  என்பதால் சின்ன சின்ன விஷயங்கள்  எல்லாம் என் கவனத்தைக்கவரும்


7   என்  முகத்தைக்காட்டலைனு என் மேல  உங்களுக்கு கோபம் வர்ல?


 நம் முகத்தில் இருக்கும் கண்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பாத்துக்கிட்டதில்லை, ஆனாலும் ஒற்றுமையாதானே கண்ணீர்  விடுது?


8   உங்க பேரு மானு, அதுக்கு என்ன அர்த்தம்  தெரியுமா? 

 சஸ்பென்ஸ் ஆஃப்  லைஃப்

லாஜிக் மிஸ்டேக்ஸ்னு நினைச்ச சில  விஷயங்கள் எல்லாம்  பின் பாதில அர்த்தம்  இல்லாம  போய்டுது.


  சி.பி. ஃபைனல் கமெண்ட் -  கூகுள் சர்ச் பண்ணி  இந்தப்படத்தோட   கதை என்ன? என்பதை  அறியாமல் படம் பார்த்தால் ஒரு சுவராஸ்யமான சஸ்பெ ன்ஸ்  த்ரில்லரைப்பார்த்த திருப்தி கிடைக்கும் 

 ரேட்டிங் - 3/ 5 

Tuesday, June 23, 2020

சீதக்காதி - சினிமா விமர்சனம்



நம்ம ஜனங்க கிட்டே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. வாழும் காலத்தில்  ஒரு சாதனையாளனை , சிறந்த  படைப்பாளியை , நல்ல தலைவனைககண்டுக்க மாட்டாங்க . அவர்  இறந்த  பின் தான் அநியாயத்துக்குக்கொண்டாடுவாங்க . இன்னொரு கோணத்தில்  சொல்லனும்னா கமலின் அன்பே சிவம், குணா மாதிரி படங்களை  ரிலீஸ் டைம்ல பார்க்காம அதை ஃபெய்லியர் ஆக்கிட்டு 20 வருடங்கள் கழித்து  டி வி ல பார்த்து அடடே, செம படமா இருக்கே? இது ஏன் ஓடலை?னு நம்ம கிட்டேயே கேள்வி கேட்பாங்க . அந்த மாதிரி தான் வாழும் காலத்தில் கண்டுக்கப்படாத  அல்லது மக்களால் கொண்டாடப்படாத  ஒரு கலைஞன் பற்றிய கதை 

அய்யா ஆதிமூலம் ஒரு நாடக நடிகர்  அந்தக்காலத்துல  இருந்து நாடகத்தில் நடிச்ட்டு வர்றார். சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லாதவர்/ முன்பு மாதிரி நாடகங்களுக்கு பொது மக்களிடம் வரவேற்பு இல்லை , கொஞ்சம் கொஞ்சமா நாடகக்கலை அழிஞ்சிட்டு  வருவதை கண்கூடாகக்கண்டு  மனம் வருந்துகிறார்

 பர்சனல் லைஃப்லயும் ஒரு பிராப்ளம் , மகள் வயிற்றுப்பேரனுக்கு  ஒரு ஆபரேசன் பண்ணனும், கைல பணம் இல்லை , இந்த வருத்தங்கள்ல அவர் மேடைல நாடகத்துல நடிச்ட்டு இருக்கும்போதே  உயிர் துறக்கிறார்


உடலால் தான் அவர் இறப்பை சந்திக்கிறார். உணர்வால் உயிரோடதான் இருக்கார். அவரோட ஆன்மா அங்கேதான் சுத்திட்டு  இருக்கு . மேடை நாடகம் நடக்கும்போது  யாராவது ஒரு நடிகர் உடலில் புகுந்து  அருமையா நடிக்க வெச்சு  கலக்கறார்


 அப்போ அந்த நாடகக்குழுவில் இருக்கும் ஒருவருக்கு சினிமா   வாய்ப்பு வருது.  ஷூட்டிங் ல ஆதிமூலம் அய்யாவின் ஆன்மா  அவரது உடலில்  புகுந்து  பிரமாதமா நடிச்சு பேர்  வாங்கித்தருது. இந்த விஷயம் மக்களிடையே பரவி அவரது ஆன்மா நடிக்கும் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட படங்களுக்கு நல்ல மார்க்கெட்  கிடைக்குது


புகழின்  உச்சிக்குப்போன  ஹீரோ அய்யா ஆதிமூலத்தின் தயவால் தான்  தான் இந்த நிலைக்கு வந்தோம் என்பதை  மறந்து ஆணவத்தால்  மாமூல் மசாலா படத்தில் நடிக்க ஆரம்பிக்கறார். அதுக்குப்பின் என்ன ஆச்சு  என்பதே கதை 

ஹீரோவா விஜய் சேதுபதி. முதல் 37 நிமிடங்கள் மட்டுமே இவரது போர்சன், கி, ராஜ நாராயணன்  கெட்டப் இவருக்கு , சிட்டிஜன்  அஜித்க்கு மேக்கப் எடுபடாதது  போல இதிலும் சில காட்சிகளில் ஒப்பனை  சுமார்  ரகமே 


இவர்  வ்ரும் காட்சிகள்  மிக மெதுவாக நகர்வதும்  ஒரு பின்னடைவு தான் 

 அவரது  இறப்புக்குப்பின் கதை  வேகம் எடுக்கிறது . மவுலியின்  அனுபவம்  மிக்க நடிப்பு கை கொடுக்குது 

 ஷூட்டிங்  ஸ்பாட்டில்  ஆதிமூலம்  ஆன்மா வராத  காட்சிகளில் நடிகர்  நடிப்பு  வராமல் பம்முவது கலக்கலான காட்சிகள் , ஒரே ஷாட்  2 நிமிச வசனம்  கூ ட நடிக்க முடியாமல்  தடுமாறுவது   அருமை. 10 டேக்குகளிலும்  10 விதமான நடிப்பை வழங்குவது  சபாஷ் 


 ஸ்வாதி முத்யம் ( சிப்பிக்குள் முத்து)படத்தில் நாயகன் கமல் கதைப்படி நடனம் ஆடத்தெரியாதவர் , ஆனால்  முறைப்படி நடனம் கற்றவர் . நடனம்  தெரியாதவர் ஆடுவது போல அவர் ஆடும்போது  தியேட்டரில்  விசில் பறக்கும். அந்த  மேஜிக்  தான் இங்கே நிகழ்ந்திருக்க  வேண்டும், ஆனால்  ஆல்ரெடி ஜனங்களால் அறியப்பட்ட நல்ல நடிகர் இதில் நடித்திருந்தால் சிறப்பாக  இருந்திருக்கும், புதுன்முகம் என்பதால்  எடுபடலை போல 

க்ளைமாக்சில்   இன்னொரு நடிகர்  கோர்ட்டில்  நடித்து தன்னை ப்ரூஃப் பண்ண வேண்டிய காட்சியில் நடிக்க முடியாமல்  தடுமாறுவதும் அருமை. 


க்ளைமேக்ஸ்  கன கச்சிதம்


 சபாஷ் இயக்குநர்


1  போஸ்டர் டிசைன்களிலும் , மார்க்கெட்டிங்க்களிலும், ப்ரமோக்களிலும்  விஜய் சேதுபதிதான்  ஹீரோ என்பதை நம்ப வைத்த சாமார்த்தியம் 


2  கோர்ட்  காட்சிகளில்; இயக்குநர் மகேந்திரன் ஜட்ஜ் ஆக வரும் காட்சிகள் சுவராஸ்யம், மிக இயல்பான நடிப்பு அவருடையது 


3  நாடக காட்சிகளில் 1948  லவகுசா  1985 , 1970 , 2013  அவுரங்க சீப் என தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகக்கட்சிகள்  அருமை 


நச்   வசனங்கள்


1   ஜனங்க முன்னாடி நின்னு நடிக்கறப்போ பாராட்டோ , திட்டோ உடனே கிடைச்சுடுது, மனநிறைவு இது


2  அரசாங்கத்துக்குப்பிடிக்காத ஆட்களுக்கு ஏன் உதவி செஞ்சீங்க?

 எனக்குப்பிடிச்சிருக்கே? 


3   நமக்காகத்தான் அரசாங்கம், அரசாங்கத்துக்காக நாம இல்லை 


4  இமயத்தின்  உச்சியில்  இருந்து பார்க்கும்போது கண்ணுக்குத்தெரிவது எல்லாம் பள்ளத்தாக்குகள் \


5    வரும்போது வெறும் கையுடன்  வந்தோம், போகும்போது பாவ மூட்டைகளுடன்  போறோம்


6  மனிதர்களைக்கொலை பண்ரது மட்டும் கொலை இல்லை, உண்ர்ச்சிகளைக்கொலை  பண்றதும்  கொலை தான்


7  நீங்க சொல்லிக்குடுத்த மாதீர் பண்ணிடவா?

 நான் சொல்றதைப்பண்ண  நீ எதுக்கு ,?  நீயா பண்ணு 


 லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  விஜய் சேதுபதிதான் ஹீரோ என்பது  போல ப்ரமோ பண்ணுனது  ஓப்பனிங் ஆடியன்சை வரவழைத்த வகையில் பலம் எனில் வந்த ஆடியன்சை ஏமாற்றம் பெற வைத்த விதத்தில் பலவீனமே . 


2  பொதுவாக 45   வயதில் வழுக்கை விழ ஆரம்பித்து விடும், முடியும் உதிரத்தொடங்கும்., ஆனா  ஹீரோவுக்கு 60 வயதாகியும் இந்த இரண்டு சம்பவங்களும் நடக்கவே இல்லை முழுசா நரைச்ச முடி ஆனா அவளோ அடர்த்தி  சாத்தியமே  இல்லை 


 3 இயக்குநர்  மவுலி  மிக்க திறமை மிக்க ஒரு நடிகர். காமெடி டயலாக் டெலிவரியில் கலக்கியவர் , அவ்ளோ அனுபவம்  மிக்க ஒரு நடிகர்  படம் பூரா  ஒரே மாதிரி    சோக  முக பாவத்தை  டெம்ப்ளேட்டாக  வைத்திருப்பது ஏனோ? 


4  க்ளைமாக்ஸ்  கோர்ட்  சீன்கள்  அந்த  நடிகர்  அவர் இஷ்டத்துக்கு  அனைவரையும் அவமானப்படுத்துவது அபத்தம். அப்டி எல்லாம்  கோர்ட்ல பேசவே முடியாது


5  பாட்ஷா , விஸ்வரூபம்  மாதிரி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன்கள் வைத்திருக்கலாம், அதாவது நடிப்பே வராத நடிகர்  தானா நடிக்கும்போது எப்டி நடிச்சார்? சொதப்பினார்? என்பதையும்  ஆதிமூலம் அய்யா ஆன்மா  புகுந்தபின் எப்படி கலக்கினார்  என்பதையும்  ஒரு சேரக்காட்டி இருந்தால்  அரங்கம் அதிர்ந்திருக்கும், ஏனோ அப்டி சீனே வைக்கலை , மிஸ்  பண்ணிட்டாங்க 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -   விஜய் சேதுபதி படம் பார்க்கறோம்னு நினைக்காம  ஒரு நல்ல படம் பார்க்கறோம்னு நினைச்சுப்பார்த்தா  இந்தப்படம் பலருக்கும் பிடிக்கும் , ரேட்டிங்  3 / 5 

டைட்டில்  விளக்கம்


செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பறைசாற்றும். இவரின் சிறப்பே, வறுமையில் வாடுவோர், செல்வர், புலவர்கள்,பாமரர் போன்ற அனைவருக்கும் -சாதி,மதம், இனம் பாராது வந்தோர்க்கெல்லாம்- இல்லையென்னாமல் வாரிவாரி வழங்கியமையே.

அப்படிப்பட்ட  சீதக்காதி போல தான் இறந்த பின்னும் தன் குடும்பத்துக்கு பொருளையும், தன் நாடகக்குழுவுக்கு நடிப்பையும் வழங்கினார்  என்பதால் இந்த டைட்டில் 

Monday, June 22, 2020

CHOLA ( SHADOW OF H2O)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

22.11.1984 ல ஆர் சி சக்தி இயக்கத்தில் வெளி வந்த சிறை படம் செம ஹிட். அனுராதா ரமணன் எழுதிய  சிறுகதைக்கு  தகுந்த திரைக்கதை எழுதி இருப்பார் இயக்குநர். தன்னை வன்புணர்வு  செய்தவனையே போராடி  மணம் முடிக்கும் நாயகியின் கதை. பொதுவா  ஒரு பெண்ணை வன் புணர்வு செய்பவன் சமுதாயத்தால் , சட்டத்தால் தண்டிக்கப்படனும்.அப்போதான் அது போன்ற கொடுஞ்செயல்கள்  பின் நடைபெற  சாத்தியங்கள்  குறையும். ஒரு பெண்ணை  கொடுமைக்கு உள்ளாக்கினால் அவளை திரும்ணம் செய்து கொள்ளலாம்   எனும் எண்ணம் வளர்ந்தால் பல தீய விளைவுகல்  உண்டாகும்


கிட்டத்தட்ட அதே கதைக்கரு ஆனால் வேற திரைக்கதை என வந்த படம்  14/4/1989  ரிலீஸ் ஆனா இரா பார்த்திபனின்   புதிய பாதை . தன்னை வன்புணர்வு செய்த நாயகன் வீட்டு எதிரே குடி வந்து கொஞ்சம் கொஞ்சமா அவன் மனதை மாற்றி   திருமணம் செய்து  கொள்ளும்  ஒரு பெண்ணின்  கதை . இது அதிரி புதிரி ஹிட் ஆனது நக்கலான வசனங்கள் , அற்புதமான நடிப்பு என பல பிளஸ்கள்  இருந்தன. 

இந்த இரண்டு படங்களுக்கும் முன்னோடியாக  14/8/1982ல் ரிலீஸ் ஆன சகலகலா வல்லவன் பிளாக் பஸ்டர் ஹிட்  நாயகனின் தங்கையை வன்புணர்வு  செய்த  வில்லனை பழி வாங்க நாயகன் கிராமத்து கெட்டப்ல இருந்து நகரத்து  கெட்டப்பில் மாறி வில்லனின்  தங்கையை  காதலித்து மணப்பதும் தன் தங்கைக்கு மாறு வேடம் (!!!) அணிவித்து   வில்லனுக்கு மணம்  முடித்து வைப்பார் , கமலின்  இந்தப்பட வசூலை  இதுவரை வேறு எந்த கமல் படமும்  முறியடிக்கவில்லை 


 தமிழ் சினிமாவுக்கு இவ்வகைப்படங்கள் புதுசல்ல , எம் ஜி யார் , சிவாஜி காலத்திலேயே நடை  முறையில்  இருந்ததுதான், ஆனா கிளைக்கதையா வரும். நாயகனின் சகோதரியை வில்லன்  வன் புணர்வு  செய்திருப்பான். போலீசில்  புகார் அளித்து வில்லனுக்கு ஜெயில் தண்டனை வாங்கித்தராமல்  நாயகன்  போராடி  வில்லனுக்கே மணம்  முடிப்பார்


6.12.2019 ல்  ரிலீஸ் ஆன CHOLA ( SHADOW  OF H2O)-மலையாளம்  விமர்சகர்களால்  மிகவும் கொண்டடப்பட்டு கேரள மீடியாக்களில் பரபரப்பாக  விவாதிக்கப்பட்ட  இப்படத்தைப்பற்றிப்பார்ப்போம் 


கேரளாவில் உள்ள  ஒரு கிராமம். அங்கே  இருக்கும் ஒரு இளம் காதல்  ஜோடி  ஒரு நாள் கட் அடிச்ட்டு நகரத்தை சுத்திப்பார்க்க வர்றாங்க பொதுவா  இது மாதிரி கிளம்பும் காதலர்கள்  தனிமைல தான் இருக்க விரும்புவாங்க . கிளம்பறதும் தனிமைக்காகத்தான் , ஆனா இதுல நாயகனின்   முதலாளியுடன் அவரது  ஜீப்லயே  போறாங்க . அப்படி  ஒரு முடிவை காதலன் ஏன் எடுத்தான் என்பதற்கு பதில்  இல்லை . 


ஒரு நாள் ப்ரோக்ராம் தான் இது. காலை 6 மணிக்கே கிளம்பறாங்க.  என்ன பொய் சொல்லிட்டு அவ்ளோ வெள்ளென நாயகி கிளம்புனா  ? என்பதற்கும் பதில் இல்லை .ஸ்பெஷல் கிளாஸ்னு பொய் சொன்னாக்கூட 8 மணி தான் சரியான டைமா இருக்கும் 


3 பேரும்  ஜீப்ல்  போறாங்க.கடல்ல காதல்  ஜோடி குளிக்குது. பின் டிரஸ்  மாற்ற   ஒரு ஓரமா மறைவில் வண்டியை நிறுத்த  நாயகன் கேட்க  ஓனர் என்னடான்னா  ஒரு பாடாவதி லாட்ஜூக்கு கூட்டிட்டுப்போறார். .


நாயகன்  கிட்டே   பணம்  கொடுத்து  கடைல போய் சரக்கு வாங்கிட்டு வா அப்டினு அனுப்பறார். அந்த  லூசுக்காதலன்  ஏன் ஜீப்ல தானே வந்தோம்? ஆன் த வே ஏன் வாங்கலை?னு கேட்டிருக்கலாம், கேட்கல . 


 காதலியையும் முதலாளியையும் ரூம்ல விட்டுட்டு கடைக்குப்போறான், அந்த  கேப்ல  ஓனர் நாயகியை  வன் புணர்வு  செய்து விடுகிறார். 

திரும்பி  வந்த  காதலன்  என்ன முடிவெடுத்தான்?  வில்லன்  எப்படி  டீல் பண்ணினான்? நாயகியின்  முடிவு என்ன? இந்த மூன்றுக்குமான  கேள்விகளுக்கு  நீங்க கற்பனையே பண்ணிப்பார்க்க முடியாத ஒரு புது திரைக்கதையை  முன் வைக்கறாங்க 




வில்லனா , முதலாளியா  ஜோசப் பட ஹீரோ  ஜோஜூ ஜார்ஜ் அருமையான நடிப்பு , உடல் மொழி . வழி  எங்கும் சிணுங்கிக்கொண்டே வரும் நாயகியை  மிரட்ட மறைமுகமாக   நாயகனை கண்டித்துக்கொண்டே  இருப்பது சுவராஸ்யம்


 நாயகியா  நிமிஷா சசாயன் பிரமாதமான நடிப்பு , நாம தனியா பஸ்ல போலாம், இவரு கூட வேனாம் என  மருகுவதும்  , எப்போதும்  டென்சனாக இருப்பதும்  விழிகளில் , உடல் மொழியில்  பதட்டத்தைக்கொண்டு வருவதும் கலக்கலான   நடிப்பு 


காதலனாக   அகில்  விஸ்வநாத்  கேரக்டர்  ஸ்கெட்சில்  இயக்குநர் சொதப்பி  இருப்பதால் அவர் மீது வர வேண்டிய பரிதாபம் வராமல் எரிச்சல்  தான் வருது


 சபாஷ்  இயக்குநர்


1 லொக்கேஷன்  செலக்‌ஷன் , ஒளிப்பதிவு  இரண்டும் தான் படத்தின் மிகப்பெரிய  பிளஸ். அட்டகாசமான  அருவி , ஆறு  சூழலை  அழகிய விதத்தில் ரசனையாக படம் பிடித்த  ஒளிப்பதிவாளருக்கு  ஒரு ஷொட்டு  . பனி படர்ந்த காலைப்பொழுது , மழையின் குளிர்ச்சி  எல்லாவற்ரையும்  உணர வைத்த  கேம்ரா அபாரம்


2   நாயகி  நிமிஷாவின்  நடிப்பு , அவரது இளமை  படத்தின் மற்றும் ஒரு பிளஸ். பின் பாதி திரைக்கதை , நாயகி எடுக்கும்  முடிவு , க்ளைமாக்ஸ்   அனைத்தும்  மாறுபட்டது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்   , இயக்குநரிடம் சில கேள்விகள்


1  ஒரு  ஓனரிடம்  வேலை செய்யறவனுக்கு  அவரோட  கேர்க்டர்  எப்டி? ஆள் என்ன டைப்? பெண்கள் விஷயத்தில்  எப்படிப்பட்டவர்? என்பது  நிச்சயமாக  தெரிஞ்சிருக்கும். அப்டி  இருந்தும்  எந்த நம்பிக்கையின் அடிப்படையில்  காதலியை தனிமையில்  விட்டுட்டு போறார்? ஜீப் பயணத்துக்கு எப்படி  ஒத்துக்கிட்டார்? முதல்ல  லவ் ஜோடிகள்  போடும் திட்டம் முதலாளிக்கு  எப்படி  தெரிஞ்சுது?அவர்  ஏன் கூட வர்றார்?

2 காதலன்  கடைக்குப்போகும்போது  காதலி நான் தனிமைல   ஓனர் கூட இருக்க மாட்டேன், உங்க கூட நானும் வர்றேன்னு அடம் பிடிச்சிருக்கலாமே? அப்டி ஏதும் செய்யலை 


3  பாத்ரூம் ல் நாயகி  கதவை  தாழ் போட்டுட்டு உள்ளேயே  இருந்திருக்கலாம். கதவை  வில்லன் உடைக்க வழி இல்லை , சத்தம்  கேட்டா லாட்ஜ் ஓனர், மேனேஜர் யாராவது என்ன ஏது -னு கேட்டு வருவாங்க ,  ஆனா நாயகி   அப்டி செய்யலை 


4   வில்லன் நாயகனை விட  2 மடங்கு  உடல் எடை , உடல் பலம்  கொண்டவர் , எதிர்க்கும் நாயகனை வில்லன் லெஃப்ட் ஹேண்ட்ல  டீல் பண்றார். ஆனா க்ளைமாக்ஸ்ல மட்டும் நாயகன்  வீறு ல்கொண்டு  எழுவதும்  ,தாக்குவதும் நம்பும்படி இல்லை 


பெற்றோரை நம்பு , வேறு யாரையும் எக்காலத்திலும் எந்த  சூழலையும் நம்பாதே எனும் கருத்தை  சொல்லும்  படம்  என்ற அளவில்  பாராட்டலாம். ரேட்டிங்   2.75  / 5 , அமேசான் பிரைமில்  கிடைக்குது

Saturday, June 20, 2020

VRITHRA ( KANNADA MOVIE) - சினிமா விமர்சனம் ( இன்வெஸ்டிகேஷன் க்ரைம் த்ரில்லர் )



ஃபேஸ்புக்ல  பிரபலமான 2 ரைட்டர்ஸ் இருந்தாங்க . ஒரு நாள்   ஒருத்தர் இன்னொருத்தரைத்தாக்கி  ஒரு சர்ச்சைக்குரிய பதிவு போட்டாரு. அது பரபரப்பா பேசப்பட்டு வைரல் ஆச்சு . எங்கே பார்த்தாலும் இதே பேச்சு. 4 நாட்கள் கழிச்சு இவரு அவருக்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவு போட்டாரு . அதை விட இது காரசாரமா இருந்தது . இதுவும் ஹிட் ஆகிடுச்சு . இரு தரப்பு ஆட்களின் வாசகர்களும் கமெண்ட்ஸ்ல மாறி மாறி   சண்டை போட்டுக்கிட்டாங்க . மாலைமலர் ல கூட இது நியூஸா வந்துச்சு 


3 நாட்கள் கழிச்சு  அந்த 2 ரைட்டர்சும் ஒண்ணா தண்ணி அடிச்ட்டு  சலம்பல் பண்ணிட்டு இருந்ததை சிலர் பார்த்து அதை வீடியோ எடுத்து பதிவு போட்டாங்க . விசாரிச்சா எல்லாமே டிராமா தான் அப்டின்னும் ஒரு பப்ளிசிட்டிக்குத்தான் இப்டி செஞ்சதாவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாங்க கடைசில வடிவேல் காமெடி மாதிரி ஆகிப்போச்சு . என் குடும்பத்தை அவன் கேவலமாப்பேசுவான், அவன் குடும்பத்தை நான் கேவலமாப்பேசுவேன் கணக்கா.. 

 சரி , நம்ம விமர்சனத்துக்குள்ளே போவோம் . ஒரு பெரிய அபார்ட்மெண்ட்ல ஒரு செக்யூரிட்டி செத்துக்கிடக்கறாரு . தூக்குப்போட்டு தற்கொலை . 


 நம்ம ஹீரோயின் க்ரைம் பிராஞ்ச் ல ஒர்க் பண்ணுது. இதுதான் அவரோட முதல் கேஸ். அதனால ரொம்ப   நுணுக்கமா இந்த கேசை விசாரணை பண்ணுது. இது தற்கொலை இல்லை , கொலை தான்னு ஹையர் ஆஃபீசர் கிட்டே  ரிப்போர்ட் கொடுக்குது. அவரு அட ஏம்மா கேசை க்ளோஸ் பண்ணாம  இழுத்துட்டுப்போறே?ங்கறாரு


 அபார்ட்,மெண்ட்  ஓனரை விசாரிக்கப்போறாரு. அப்போ எதேச்சையா அந்த ஓனரோட  மகள்  கடத்தப்பட்டிருக்கா அப்டினு தெரியுது. அபார்ட்மெண்ட் ல தற்கொலை செஞ்சதா சொல்லப்படும் செக்யூரிட்டி யின் மரணம் , ஓனரின் மகள் கிட்நாப் கேஸ்  இந்த இரண்டுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கறதா  நினைச்சு கேசை இன்வெஸ்டிகேட் பண்றாரு .அதுதான் மிச்ச மீதி திரைக்கதை 


நித்ய ஸ்ரீ தான் நாயகி . கம்பீரமான தோற்ரம் என்றாலும் அவரிடம்  ஒரு விஜயசாந்தி ( வைஜெயந்தி ஐபிஎஸ்) , ரம்யா கிருஷ்ணன் ( படையப்பா, பாகுபலி)  இவங்க கிட்டே இருந்த தோரணை மிஸ்சிங் . அவரோட முக அழகு கம்பீரத்தை மறைக்குது. அதுவும் நல்லதுக்குதான். அவரோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் ரொம்பவே அழகு


கடத்தப்பட்ட பொண்ணோட அம்மாவா வருபவர் நல்ல நடிப்பு . அவருக்கு பிபி அதிகமாகி  தன் நிலை இழக்கும் காட்சிகளில் எல்லாம் தத்ரூபமான நடிப்பு 

 அப்பாவாக வருபவர்  இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் . 

லோ பட்ஜெட் படமாக இருந்தாலும் ஒளிப்பதிவு தரமா இருக்கு . எடிட்டிங்  கச்சிதம் . பின்னணி இசை   நல்லாருந்தது , இன்னும்  பெட்டரா  பண்ணி இருக்கலாம் . 

 க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதிர்பாராதது. ஆடியன்ஸ்  யூகிக்காத ஆளை குற்றவாளியாகக்காட்டி அதை நம்ப வைப்பதில் தான்  ஒரு இயக்குநரின் வெற்றி இருக்கிறது. அந்த வகையில்  இது அவருக்கு ஒரு வெற்றிப்படமே 


சபாஷ் இயக்குநர்


1  ஹீரோயின் டென்சனா இருக்கும்போது எல்லாம்  தன் மாமாவோடு செஸ்  விளையாடுவார்  என்பது புதுசா இருந்தது. ஏன்னா செஸ்சே  ஒரு தலைவலி கேம் தான் . யோசிக்கும்போது டென்சன் ஆகும்.,


2 வில்லனின் அடியாள்   கேரக்டர் ஸ்கெட்ச் கன கச்சிதம்,  மவுத் கேன்சர் வந்த பின்பும் அவரால் பீடியை வாயில் வைத்தால் தான் ( குடிக்க தேவை இல்லை)  பேசவே முடியும் என விளக்குவது  ஆச்சரியமான  தகவல் 


3  போலீஸ் , கிட்நாப் பண்ண ஆள் இருவருக்கான சேசிங் சீனில்  கிட்நாப்பரை மிஸ்  செய்த போலீஸ்  அங்கே இருக்கும் சிறுவர்களிடம் ஏம்ப்பா சிரிக்கறீங்க? என கேட்கும்போது ஒளிந்து இருக்கும் கிட்நாப்பரை காட்டிக்கொடுப்பது  நகைக்க வைத்தது 

4  குற்றவாளிகள்   திருடப்பட்ட மொபைல் ஃபோனில் இருந்து பேசறாங்க அல்லது ஹாக் பண்ணப்பட்ட நெம்பரில் இருந்து பேசறாங்க என்பதும் அதைத்தொடர்ந்து   வரும்  சைபர்  க்ரைம் சமாச்சாரங்கள் ரசிக்க வைத்தது



நச் டயலாக்ஸ் 


1  நமக்கு சாதாரணமா  தோணும் விஷயம் சம்பந்தப்பட்டவங்களுக்கு  பெருசா தோணும் / முக்கியமானதாத்தோணும்


2  நம்ம பர்சனல் லைஃபையும் , ப்ரொஃபஷனல் லைஃபையும்  போட்டுக்குழப்பிக்கக்கூடாது , இது தனி அது தனி  ரெண்டையும் பேலன்ஸ் பண்ணிக்கனும், இல்லைன்னா சிரமம் தான் 


3 ஒவ்வொரு டைம்லயும் செஸ்ல என்னை ஜெயிச்சுடறே, ஆனா கேஸ்ல ஏன் ஜெயிக்க முடியல ?


 உங்க மூவ் என்ன?னு எனக்கு அத்துபடி , ஆனா குற்றவாளி மூவ் என்னனு தெரியல, அவ்வளவு ஏன்? குற்றவாளியே  யார்னு தெரியல 



4   ரவுண்ட்  ராபின் அப்டினு செஸ் ல ஒரு கேம் இருக்கு. குறிப்பிட்ட அந்த  பொசிஷன்ல உன் கிட்டே 10 வெவ்வேற பிளேயர்ஸ்  விளையாடுவாஙக் . 10 வெவ்வேற  மூவ் கொடுப்பாங்க . நல்லா ட்ரெய்ன் ஆகிடுவே... 

5   சுயநலம் என்பது மனித இயற்கை . சுயநலம் இல்லாதவங்க யாருமே இல்லை , அம்மா பால் தருவது குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க , சுயநலம் இல்லாம எதுவும் இல்ல .

6  சிலரோட சுயநலங்களால அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் நல்லதும் நடந்திருக்கு. சில டைம் கெட்டதும் நடக்கும்


7   என் கிட்டே குற்ற உணர்ச்சி எதுவும் இல்லைனு சொல்றவன் தன்னிலை விளக்கம் கொடுத்துட்டு இருக்க மாட்டான்


லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   பொதுவா ஒரு போலீஸோ , செக்யூரிட்டியோ , வாட்ச்மேனோ இந்த மாதிரி காவல் பணில இருக்கறவங்க ட்யூட்டி டைம்ல தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க . இந்த பேசிக் நாலெட்ஜ் கூட இல்லாம இன்ஸ்பெக்டர் பேசுவது அபத்தம்


2  ஹீரோயின் ஒரு விசாரணைக்காக  டாஸ்மாக் பாருக்கு தனியா போகுது. என்ன தைரியத்துல? அத்தனை பேரும் பொறுக்கிப்பசங்க , குடிகாரங்க , துனைக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை கூட்டிட்டுப்போகல ஏன்?


3   குற்றவாளியோட  ஃபோட்டோ ஹீரோயின் ஃபோன்ல  கேலரில இருக்கு . ஒரு ஆஃபீஸ்க்கு விசாரிக்க வந்தவர்  அவர் ஃபோனை   சர்க்குலர்  ஃபைல் அனுப்பற மாதிரி ரவுண்ட்ஸ் விடறாரு , இது ரிஸ்க் ஆச்சே? அதுக்கு அங்கே ஒர்க் பண்ற ஒருவரோட செல்  ஃபோனுக்கு அந்த  ஃபோட்டோவை ஃபார்வார்டு பண்ணினா போதாதா?

4   அபார்ட்மெண்ட்  ஓனர்  ஒரு பெரும்புள்ளி , அரசியல்  செல்வாக்கு இருக்கலாம்.,அதனால விசாரிக்க போக வேணாம்னு ஹையர் ஆஃபீசர் சொல்லியும் கேட்காம  போகும்  ஹீரோயின் அப்பவே அதே ஸ்பாட்ல இருந்து  ஃபோன் பண்ணி இன்ஸ்பெக்டரை ஸ்பாட்க்கு வரச்சொல்றார். அவரும் எதுவும் கேட்கல 

5  அவ்ளோ பெரிய புள்ளி யை பார்க்க அவர் பங்களாவுக்குப்போகும்  நாயகிக்கு அவர் தன் கையால்  டீ போட்டு அவரே கொண்டு வர்றார். வீட்ல வேலைக்காரங்க இருக்க மாட்டாங்களா?   அவ்ளோ பெரிய தொழில் அதிபர்  சாதாரண எஸ் ஐ க்கு அவ்ளோ மரியாதை தருவாரா?


பொதுவா கிட்நாப் கேஸ்ல  பேரம் பேசும்போது கடத்தப்பட நபரை  ஃபோன்ல பேச வெச்சு  கன்ஃபர்ம் பண்ணுவாங்க . இங்கே அது  நடக்கலை , ஏன்? 


7  கிட் நாப் மேட்டர்  தெரிஞ்ச  வேற ஒரு ஆள் டபுள் கேம் ஆடறான்னு கண்டு பிடிக்கும் நாயகி  அதை முறியடிக்க எந்த ஸ்டெப்பும் எடுக்கலை யே?

சி.பி கமெண்ட் =  தெளிவான திரைக்கதை , நாயகியின் அழகு, நல்ல நடிப்பு இந்த 3 அம்சங்களும் போதும் என நினைப்பவர்கள் இந்த க்ரைம் த்ரில்லரை ரசிக்கலாம் . ரேட்டிங்   3/ 5  . அமேசான் பிரைமில் கிடைக்குது